ஹேண்ட் ட்ரையரில் உலர்த்தியால் வருமா உபத&

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
உலர்த்தியால் வருமா உபத்திரவம்?

மால்கள் மற்றும் திரையரங்கக் கழிவறைகளில் ஈரமான கைகளை உலர்த்த ஹேண்ட் ட்ரையர் பயன்படுத்தப்படுகிறதே... வெப்பமான காற்றின் மூலம் கையை
உலர்த்துவதால் சருமம் தொடர்பாக ஏதேனும் பிரச்னைகள் வர வாய்ப்பிருக்கிறதா?


ஐயம் தீர்க்கிறார் சரும மருத்துவர் வானதி திருநாவுக்கரசு... ‘‘ஹேண்ட் ட்ரையரில் காற்றில் கலந்திருக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களை வடிகட்டி தூய்மையான காற்றை வழங்குவதற்காக ஃபில்டர் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த ஃபில்டரின் தாங்கும் திறன் இரண்டு வார காலம் என்பதால் இரு வாரங்களுக்கொரு முறை
ஃபில்டரை மாற்றியே தீர வேண்டும்.

இல்லையென்றால் ஹேண்ட் ட்ரையரில் வடிகட்டி வைக்கப்பட்டிருக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் ஈரப்பதமான நமது கைகளைத் தாக்கும். சாதாரண தாக்குதலை விட ஹேண்ட் ட்ரையரில் இருந்து வெளிவரும் பாக்டீரியா, வைரஸ் தாக்குதல் 257 சதவிகிதம் அதிகமாக
இருக்கும். அமெரிக்காவில் உள்ள பள்ளியொன்றில் ‘இன்ஃப்ளூயன்ஸா’ கிருமித் தொற்று அதிகரித்தது.

அதன் பின் மேற்கொண்ட ஆய்வில் ஹேண்ட் ட்ரையர்தான் இதற்குக் காரணம் எனக் கண்டறிந்து டிஷ்யூ பேப்பர் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். ஹேண்ட் ட்ரையரின் ஃபில்டர் 2 வாரங்களுக்கொரு முறை மாற்றப்பட வேண்டும் என்பது நமது நடைமுறையில் சாத்தியமற்றது. ஈரத்தில் கிருமிகள் வேகமாகப் பரவும் என்பதால் சுத்தமான துண்டு மற்றும் டிஷ்யூ பயன்படுத்துவதே சிறந்தது. மேலும் சூடான காற்று தொடர்ந்து படும்போது சருமத்தின் ஈரப்பதம் வறண்டு போகும் Xerosis எனும் நிலை ஏற்படும்.’’
 

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#2
Re: ஹேண்ட் ட்ரையரில் உலர்த்தியால் வருமா உப&#29

:rolleyes: thanks for the info sis
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.