ஹோட்டலில் சாப்பிட போறீங்களா....??-Read this before eating in the Hotels

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,102
Likes
107,009
Location
Atlanta, U.S
#1நம்ம ஊர் ஹோட்டல்களில் எப்படி எல்லாம் டுபாக்கூர் வேலை நடக்குது என்று அந்தக் கடைக்காரர்களிடமே போட்டு வாங்கிய தகவல்கள்...!


இட்லி:
**********

பொதுவா இட்லி மெத்துனு இருக்கணும்னா, ஒரு டம்ளர் இட்லி அரிசிக்கு கால் டம்ளர் உளுந்து தேவை. இரண்டையும் தனித்தனியா ஊறவெச்சு, தனித்தனியாதான் அரைக்கணும். அஞ்சு மணி நேரம் புளிக்கவெச்சு, சுட்டீங்கன்னா பஞ்சு மாதிரி இட்லி தயார். ஆனா, என்ன நடக்குது இங்க? கடை இட்லி அரிசி கால் பங்கு, ரேசன் அரிசி முக்கால் பங்கு, உளுந்து கால் பங்கு, ஜவ்வரிசி முக்கால் பங்கு, நைட்டு ஊறவெச்ச பழைய சாதம் கொஞ்சம், சோடா உப்பு எக்கச்சக்கமா... எல்லாத்தையும் அரைச்சு, மூணு மணி நேரம் வெயில்ல வெச்சுட்டு எடுத்து சுட்டால், கும்முன்னு குஷ்பு இட்லி தயார். அந்த இட்லியும் மீந்துருச்சின்னா, அப்பவும் பிரச்னை இல்லை. அடுத்த நாள் அரைக்கிற மாவுல மீந்துபோன இட்லியைப் போட்டு அரைச்சிடுவாங்க!சோறு:
**********

தரமான சோறுன்னா, சோத்துப் பருக்கையை விரலில் வெச்சு மசிச்சா மை மாதிரி மசியணும். அப்பதான் அது வயித்துக்கு ஒண்ணும் செய்யாது. அப்படி இருந்தா கஸ்டமர்ஸ் நிறைய சாப்பிடுவாங்களே... அதுக்காகத்தான் பெரும்பாலான ஹோட்டல்ல முக்காப் பதத்துல சாதத்தை எடுத்துடுவாங்க. சாதம் பளிச்சுனு வெண்மையா இருக்கவும், லேட் ஆனாலும் காய்ஞ்சு போகாமல் இருக்கவும் சாதம் வேகும்போதே சுண்ணாம்புக் கல்லைத் துணியில் கட்டி சாதத்தில் போட்டுடுவாங்க. அன்லிமிட்டட்னு அகலமா போர்டுல எழுதி இருந்தாலும், இந்தச் சோற்றைக் குறிப்பிட்ட அளவுக்கு மேல நீங்க சாப்பிடவே முடியாது!புரோட்டா:
****************

பல ரோட்டுக் கடை ஹோட்டல்கள்ல மைதா மாவோட சோடா உப்பு கலந்து, அதுல கழிவு டால்டாவை ஒரு பங்கு மாவுக்குக் கால் பங்கு டால்டா கணக்குல (ஹோட்டலுக்குன்னே விக்கிற மலிவு விலை டால்டா!) கலந்து அடிச்சு அரை மணி நேரத்துல புரோட்டா சுடுவாங்க. புரோட்டா சும்மா பூ கணக்கா பொலபொலன்னு உதிரும். ஆனா, அத்தனையும் போங்கு புரோட்டா!சால்னா :
***************
சிக்கன் கடையில் பொதுவா நாம கொழுப்பு, ஈரல், குடல், தலை, தோல், இதெல்லாம் வாங்க மாட்டோம். அதேபோல மட்டன் கடையில குடலோட சேர்ந்து இருக்கிற ஒட்டுக்கொழுப்பு, ஒட்டுக்குடல் வாங்க மாட்டோம். இதை எல்லாம் தூக்கிப்போடாம ஓரமாக் குவிச்சுவெச்சிருப்பாங்க. பழக்கமான கடைக்காரரா இருந்தா விசாரிச்சுப் பாருங்க. 'ஹோட்டல்காரங்க மொத்தமா வாங்கிட்டுப் போயிடுவாங்க’னு அவரும் யதார்த்தமா சொல்லிடுவார். அரைக் கிலோ கறியோட இதை எல்லாத்தையும் ஒட்டு மொத்தமாப் போட்டு தூக்கலா கறி மசாலா, மிளகாய்த் தூள், கொத்தமல்லித்தூள், கொஞ்சம் மரத்தூள் அல்லது குதிரை சாணத்தூள் கலந்து, அஞ்சு ஸ்பூன் அஜினாமோட்டா கலந்து கொதிக்கவெச்சா அரை அண்டா நிறைய திக்கான சால்னா ரெடி!
ஒரு முக்கியமான எச்சரிக்கைங்க...
******************************************************

தலையே போனாலும் சரி, (ரோட்டுக்)கடைகள்ல தலைக்கறி மட்டும் சாப்பிடாதீங்க. பொதுவாகவே செம்மறி ஆட்டோட தலையில புழுக்கள் இருக்கும். இது இயற்கையான விஷயம்தான். வீடுகளுக்கு வாங்குறப்ப பெரும்பாலும் வெள்ளாட்டுத் தலை தான் வாங்குவோம். செம்மறி ஆட்டுத் தலை வாங்கினாலும் கடைக்காரரு நம்ம கண்ணுல படாம தலையைக் கொதிக்கிற தண்ணில போட்டுட்டு, அப்புறம் அதை எடுத்து தரையில தட்டோ தட்டுன்னு தட்டி புழுவை எல்லாத்தையும் கொட்டிட்டுதான் மேலேயே எடுத்து வைப்பாங்க. அதை வீட்டுக்கு வாங்கிட்டுப்போய் நல்லா சுத்தம் பண்ணி சாப்பிடுவோம். ஆனா, மொத்தமா ஹோட்டலுக்கு விக்கிறப்ப எல்லாம் செம்மறி ஆட்டுத் தலையை இப்படி சுத்தம் பண்ண மாட்டாங்க. அப்படியே கைமாதான்.


எல்லாத்தையும்விட முக்கியம், ஹோட்டல்களுக்கு சப்ளை செய்யறதுக்குனே பஜாரில் மளிகைப் பொருட்கள் குறைஞ்ச விலைக்கு கிடைக்குது. எல்லாமே கலப் படம். பாலீஷ் செய்யப்பட்ட இலவச ரேசன் அரிசியோட பொன்னி அரிசி கலந்து விக்கிறாங்க. உடைஞ்ச கழிவுப் பருப்பு, கேசரிப் பருப்பைத் துவரம் பருப்புடன் கலக்கிறாங்க. மிளகாய்த் தூள், கொத்தமல்லித் தூள், டீத்தூளோட மரத் தூள், குதிரை சாணத்தையும் கலக் கிறது எல்லாம் சகஜமப்பா. நெய், எண்ணெய் வகைகளோட பன்றி, மாட்டுக் கொழுப்பு, வனஸ்பதி மற்றும் நாள்பட்ட கழிவு எண்ணெயையும் கலப்பாங்க.சாதாரண ஹோட்டல் களிலும் கையேந்தி பவன் களிலேயுமே இப்படின்னா டாஸ்மாக் பார் பத்திச் சொல்லவே வேணாம். அதிலும் குறிப்பா, சென்னை பேச்சுலர் பாய்ஸ் ரொம்பக் கவனமா இருக் கணும்!
 

saveetha1982

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 16, 2014
Messages
7,552
Likes
21,853
Location
Chennai
#2
தேனு... கண்டிப்பாக எல்லாரும் படிக்க வேண்டிய ஒரு பதிவு... பயனுள்ள பகிர்வு... இதை பார்த்து ஹோட்டல் போறதை நிறுத்திக்கணும்... வெளியூரில் இருந்து வந்து வேலை செய்யும் திருமணமாகாத ஆண்கள் விலை மலிவாய் இருக்கிறதே என்று இப்படி கடைகளில் தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர்...
 

lathabaiju

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jun 6, 2011
Messages
3,730
Likes
9,411
Location
Tirupur
#3
happaa Thenu,

padikkumpothe vayithai kalakkuthe...

nalla pathivu paa...

Hotelil saappidaravanga kandippaa yosippaanga...
 

Priyathozhi

Friends's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 11, 2011
Messages
453
Likes
635
Location
coimbatore
#4
Thank you for your valuable sharing friend
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#5
Thanks for the caution, Thenu.
 
Joined
Dec 24, 2014
Messages
36
Likes
48
Location
sattur
#6
Thanks for sharing......
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,102
Likes
107,009
Location
Atlanta, U.S
#7
தேனு... கண்டிப்பாக எல்லாரும் படிக்க வேண்டிய ஒரு பதிவு... பயனுள்ள பகிர்வு... இதை பார்த்து ஹோட்டல் போறதை நிறுத்திக்கணும்... வெளியூரில் இருந்து வந்து வேலை செய்யும் திருமணமாகாத ஆண்கள் விலை மலிவாய் இருக்கிறதே என்று இப்படி கடைகளில் தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர்...


உண்மை தான் சவி....
என்னதான் இருந்தாலும்... அந்த ஹோட்டல் உணவின் சுவை நம்மை கட்டி இழுத்து விடுகிறது... போக கூடாதுன்னு நினைச்சாலும்..., ஒரு நாள் தானே, என்ன ஆக போகிறதுன்னு நினைச்சுக்கிட்டு போறவர்கள் தான் அதிகம்...!!

ஆனா இதையெல்லாம் படிச்ச பிறகு... கண்டிப்பா ஹோட்டல் போவதை நிறுத்தணும் or குறைத்துக் கொள்ளா வேண்டும்.
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,102
Likes
107,009
Location
Atlanta, U.S
#8
happaa Thenu,

padikkumpothe vayithai kalakkuthe...

nalla pathivu paa...

Hotelil saappidaravanga kandippaa yosippaanga...


தேங்க்ஸ் லதா...

ஹாஹா...... படிக்கும்போதே வயித்தை கலக்குதா....!! அப்போ சாப்பிட்டா.....!!

எல்லாருக்கும் விழிப்புணர்வு வரட்டும்னு தான் இந்த பதிவை போட்டேன்... !
 

srathi

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 28, 2011
Messages
1,445
Likes
1,938
Location
singapore
#9
hi thenu
nalla pathivu. neenga sonathu ellam unmai thaan aanalu cila makkal hotel virumbiga thaan irukanga.
thanks for useful info
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,102
Likes
107,009
Location
Atlanta, U.S
#10
hi thenu
nalla pathivu. neenga sonathu ellam unmai thaan aanalu cila makkal hotel virumbiga thaan irukanga.
thanks for useful info


ஆமா ரதி.... என்ன இருந்தாலும் ஹோட்டல் சுவை தனி தானே...!!
அதனால் தான் கண்ட்ரோல் பண்ண முடியவில்லை.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.