’லைக்ஸ் வரவில்லையெனில் 15-வது மாடியிலிருந&#302

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,634
Likes
22,659
Location
Germany
நாராயன் நாராயன் - ரீ ட்வீட் செய்து சிக்கலில் மாட்டிய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்

1524654468114.png


ராஜஸ்தான், குஜராத் என பல மாநிலங்களில் ஆசிரமங்களை நடத்தி வந்த ஆசாராம் பாபு சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் இன்று குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார். இதனை அடுத்து, பத்திரிக்கையாளர் ப்ரதிக் சின்ஹா என்பவர், பிரதமர் மோடியுடன் ஆசாராம் பாபு இருக்கும் பழைய வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) ட்விட்டர் பக்கத்தில் பிரதிக் சின்ஹாவின் பதிவு ‘நாராயன் நாராயன்’ என்ற தலைப்புடன் பகிரப்பட்டிருந்தது. இதனை கண்ட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். இதற்கு பலரும் கிண்டலாக பதில்களையும் அளித்தனர்.

சிறிது நேரத்திற்கு பின்னர் ஐ.சி.சி ட்விட்டர் பதிவு நீக்கப்பட்டது. ட்விட்டர் கணக்கை கையாளும் நபர் தவறாக அந்த வீடியோ பதிவை பகிர்ந்து இருக்கலாம் என எண்ணிக்கொண்டாலும், ஐசிசி தரப்பில் எந்த விளக்கமும் இதுவரை அளிக்கப்படவில்லை.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,634
Likes
22,659
Location
Germany
சிங்கக்கூண்டுக்குள் புகுந்து உயிர்பிழைத்த அதிசய மனிதர்

1525406335132.png

ஆப்பிரிக்காவில் உள்ள வனவிலங்கு காப்பகத்தில் உள்ள சிங்கம் ஒன்று தனது கூண்டில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தது. அப்போது கூண்டிற்குள் ஏதோ துர்நாற்றம் வீசியது. அதனை சோதனை செய்ய வனவிலங்கு காப்பகம் உரிமையாளர் உள்ளே சென்று பார்த்துள்ளார். அவரை பார்த்ததும் சிங்கம் வேறு பக்கம் நடந்து சென்றது. இதனால் அவர் தைரியமாக உள்ளே சென்றார். திடீரென சிங்கம் அவரை நோக்கி வேகமாக வந்தது.

இதனை பார்த்த அவர் கூண்டிலிருந்து வெளியேற முயன்றார். ஆனால் சிங்கம் அவரை கூண்டிற்குள் இழுத்து தாக்கியது. இதில் அவர் படுகாயமடைந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த காப்பகத்தின் காவலர்கள் துப்பாக்கியால் மேலே நோக்கி சுட்டு சிங்கத்தை விரட்டினர்.

இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. படுகாயமடைந்தவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிங்கத்தின் குகைக்குள் புகுந்த உயிருடன் வெளிவந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

<iframe width="560" height="315" src="
" frameborder="0" allow="autoplay; encrypted-media" allowfullscreen></iframe>
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.