’லைக்ஸ் வரவில்லையெனில் 15-வது மாடியிலிருந&#302

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
549
Location
chennai
தெரு கிரிக்கெட் போட்டிக்கு மூன்றாவது நடுவராக மாறிய ஐசிசி - வைரலாகும் வீடியோ

1527072116082.png

கிரிக்கெட் என்பது நகரங்களில் மட்டும் அல்ல கிராமங்களிலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாடும் விளையாட்டு. எங்கு சென்றாலும் தெருக்களில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுவர். பெரிய பெரிய கிரிக்கெட் ஜாம்பவான்களின் கிரிக்கெட் கனவு தெரு கிரிக்கெட் போட்டியில் இருந்து தான் தொடர்கிறது.

அதேபோல் பாகிஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வித்தியாசமான பிரச்சனை எழுந்துள்ளது. அதற்கு தீர்வு காண பாகிஸ்தான் வாலிபர் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் உதவியை நாடியுள்ளது. இதுகுறித்து அவர் வீடியோ ஒன்றை அனுப்பினார்.

அந்த வீடியோவில் ஒரு வாலிபர் பேட்டிங் செய்துக்கொண்டிருந்தார். அப்போது அவர் அடித்த பந்து அருகில் உள்ள கல்லில் பட்டு திரும்பி வந்து ஸ்டெம்ப் மீது பட்டது. அவரை அவுட் என அனைவரும் அறிவித்தனர். இதனை அவர் ஏற்கவில்லை. இதனால் வந்த சந்தேகத்தை தீர்க்க அவர் ஐசிசி-யின் உதவியை நாடியுள்ளார்.

இந்நிலையில், தெரு கிரிக்கெட் போட்டிக்கு மூன்றாவது நடுவராக மாறிய ஐசிசி அவரின் சந்தேகத்தை தீர்த்து வைத்துள்ளது. அது குறித்த தனது அதிகாரப்பூர்வ டுவிட்டரில், 'கம்சா என்ற விசிறி இந்த வீடியோவை அனுப்பி, விதிமுறை குறித்து கேள்வி அனுப்பினார். இந்த போட்டியில் பேட்ஸ்மேன் துரதிஷ்டவசமாக அவுட் ஆனார். அதனை 32.1 ம் எண் விதி உறுதி செய்கிறது' எனக்குறிப்பிட்டிருந்தது.

ஐசிசி-யிடம் நியாயம் கேட்டு வாலிபர் அனுப்பிய வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவிவருகிறது. #ICC #pakistanfanvideo

<iframe width="560" height="315" src="
" frameborder="0" allow="autoplay; encrypted-media" allowfullscreen></iframe>
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.