“8” ல் நடந்து பாருங்கள்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
இந்த “8” ல் நடந்து பாருங்கள் நோயில்லாமல் வாழலாம் வாருங்கள்

காலையில் நடைபயிற்சி உடலுக்கு மிக ஆரோக்கியமான உடற்பயிற்சி. நடைபயிற்சியின் போது நாம் மூச்சு பயிற்சியும் இலகுவான யோகா உடற்பயிற்சி செய்தால் போதும். ஆனால் நடைமுறை வாழ்க்கையில் நடைபயிற்சியின் போது உடன் வருபவர்களுடன் உரையாடிக்கொண்டும், செல்போனில் பேசிக்கொண்டும் நடக்கும் பழக்கம் அதிகமாக இருக்கிறது. அதனால் மனஒருமைப்பாடும் சரியான மூச்சுபயிற்சியும் இல்லாமல் நடைபயிற்சியின் முழு பலனும் நமக்கு கிடைப்பதில்லை.

நடைபயிற்சியில் சாதாரணமாக நேராக நடந்து செல்வதைவிட "8 வடிவ நடைபயிற்சி" மிகவும் சிறந்தது. உடல் நலனை அற்புதமாக செயல்படுத்துகிறது. அந்த காலத்திலேயே யோகிகளும் சித்தர்களும் இந்த நடைபயிற்சியை மிகவும் சிறந்ததாக கூறியுள்ளனர். இந்த 8 வடிவ நடைபயிற்சியை தினமும் குறைந்தது 15-30 நிமிடங்கள் செய்துவந்தால் உடல் நலம் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.

நாம் இந்த “8” வடிவத்தை நமது வாகனம் ஓட்டுனர் உரிமம் (Driving License) வாங்கும்போது தான், நினைத்து பார்க்கிறோம். வாகனத்தை “8” வடிவத்தில் சரியாக ஓட்டினால் மட்டுமே நமக்கு வாகனம் ஓட்ட உரிமம் (Driving License) கிடைக்கிறது. ஆனால் நாம் இந்த “8” வடிவத்தில் தினமும் நடைபயிற்சி செய்தால் உடலுக்கு சக்தியும் ஆரோக்கியமும் கிடைக்கிறது.

நாம் இந்த “8” வடிவ நடைபயிற்சியை எப்படி செய்வது அதனால் ஏற்படும் நன்மைகள் என்ன என்று பார்ப்போம்.

“8” வடிவ நடைபயிற்சி முறை:
ஒரு அறையில் அல்லது வெட்டவெளியில், கிழக்கு மேற்காக கோடு வரைந்து, 10 அடியில், வடக்கு தெற்காக "எட்டு' எண் எழுத வேண்டும். அதன் மேல், தொடர்ந்து 15 நிமிடம் தெற்கில் இருந்து வடக்கு நோக்கியும் பின் 15 நிமிடம் வடக்கில் இருந்து தெற்கு நோக்கியும் ( clockwise and anticlockwise) மாறி மாறி நடக்க வேண்டும். நடைபயிற்சியின் போது நிதானமாக மூச்சுபயிற்சி செய்யவேண்டும். பயிற்சியின் முடிவில், உள்ளிழுக்கப்பட்ட முழு மூச்சுக் காற்றையும் உணரலாம். இடைப்பட்ட நேரத்தில் மார்புச்சளியை தானாகவே வெளியே உமிழ்வதாலோ அல்லது கரைந்து இருப்பதையோ உணரலாம் நடைபயிற்சி முடிந்ததும் எளிமையான யோகா பயிற்சி செய்வது நல்லது. இந்த “8” நடைபயிற்சியின் போது நாம் இந்த “8” வரைந்துள்ள கோட்டையே மிகவும் கவனமுடன் பார்த்துக்கொண்டு நடப்பதால் நண்பர்களிடம் பேசிக்கொண்டும் மொபைலில் பேசிக்கொண்டும் செல்லும் வாய்ப்பு இல்லை. நடக்கும்போது நன்றாக கைகளை வீசி நடக்கவேண்டும்.

நடைபயிற்சி காலையிலும் மாலையிலும் உணவு சாப்பிடுவதற்கு முன் செய்யவேண்டும்(empty stomach).

நமது கையின் உள்ளங்கை பாகத்திலும் காலின் உள் பாதத்திலும் நமது உடல் உள் உறுப்புகளின் பிரதிபலிப்பு புள்ளிகள் இருக்கின்றன.( படத்தில் பார்க்கலாம்) நாம் நடக்கும்போது கால் பாதத்தில் ஏற்படும் அழுத்தத்தால் அந்த உறுப்புகள் அனைத்தும் நன்றாக செயல்படுகின்றன. அதனால் அந்த உறுப்புகளினால் ஏற்படும் நோய்கள் நீங்குகின்றன. நமது நோய்கள் அனைத்தும் நீங்கி நலம் பெருகின்றோம்

“8” வடிவ நடைபயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்:

குதிகால் முதல் உச்சந்தலை வரை பயன் பெறுகிறது.

குளிர்ச்சியால் ஏற்படும் தலைவலி, மலச்சிக்கல் தீரும்.

உடலினுள் செல்லும் ஐந்து கிலோ பிராண வாயுவால் உடல் சக்தி பெறுகிறது.
குடலிறக்க நோயும் இதனால் குணமாகும்.

இந்த நடைபயிற்சியின் போது உடல் உறுப்புகள் அனைத்தும் ( உம்: இடுப்பு கால்கள் ) வளைந்து கொடுக்கின்றன. இதனால் வெளி உறுப்புகளும் உள் உறுப்புகளும் நல்ல செயல்திறனுடன் விளங்குகிறது. இந்த நடைபயிற்சியின் முடிவில் சில தினங்களிலேயே வெகு நாட்களாக இருந்து வரும் மூச்சுவிடுவதில் சிரமம், மூக்கில் அடைப்பு சரியாகி நன்றாக மூச்சு விட முடியும்.
இருமல் மற்றும் சைனஸ் நோய் நீங்கும்.

அதிகமாக ஆக்ஸிஜன் நடைபயிற்சியின் போது உள்ளே செல்வதால் நுரையிரலில் இருக்கும் சளி நீங்கும், உடல் சக்தியுடன் இருக்கும்.
செரிமான கோளாறுகள், தைராய்டு நோய், உடல் பருமன், கை கால் மூட்டு வலிகள், நீங்கும்.

இது சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். ஒரு வருடம் தொடர்ந்து தினமும் இந்த நடைபயிற்சியை அரை மணிநேரம் செய்து வந்தால் சர்க்கரை நோய் தொந்தரவுகள் முழுமையாக நீங்கும்.

கண் பார்வை நன்றாக இருக்கும். இந்த “8” கோட்டையே பார்த்துக்கொண்டு நடப்பதால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கும்.

இரத்த அழுத்த நோய் நீங்கும். காது கோளாறுகள் நீங்கும்.

தினமும் அரை மணி நேரம் இந்த நடைபயிற்சி செய்தால் மூட்டு வலி கால் பாத வெடிப்பு நீங்கும்.

வயதானவர்கள் மற்றவர்கள் உதவியுடன் நடப்பது நல்லது.

தோள்பட்டை வலி, கழுத்துவலி, முதுகு வலி, கால் வலி, கை கால் வாத நோய்கள், மன அழுத்தம், ஒற்றை தலைவலி, ஆஸ்துமா, ஸைனஸ், மூலநோய், நரம்பு தளர்ச்சி, தூக்கமின்மை, இருதய நோய், சிறுநீரக நோய்கள் நீங்கும்..

தினமும் ஒழுங்காக இந்த நடைபயிற்சி செய்தால் வயதானவர்களும் இளைஞர்களாக ஆரோக்கியத்துடன் இருக்கலாம்.

நடைபயிற்சியை விட நான்கு மடங்கு இது சிறந்தது.

இந்த “8” நடைபயிற்சியை தினமும் குறைந்தது அரை மணிநேரம் முறைப்படி செய்து நோயில்லாமல் வாழ்க நலமுடன்.
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.