10 Steps to Speed Weight Loss

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
19,431
Likes
4,439
Location
India
#21
தொப்பையை மறைக்காதீர்கள்! குறையுங்கள்! இதோ எளிய வழிமுறைகள்!


பொதுவாகவே குறிப்பிட்ட வயதுக்கு பிறகு அனைவருக்கும் உடல் எடை கூடும். சிலருக்கு உடலில் மற்ற பாகங்களை விட வயிறு பகுதியில் மட்டும் அதிக எடை கூடும். வயிற்றில் வாயு மற்றும் கொழுப்பு அதிகம் சேருவதால்தான் வயிறு பெருத்து தொப்பையாக காணப்படுகிறது. இதிலிருந்து விடுபட, தொப்பையை குறைக்க சில பழங்கள் உதவுகிறது. அவை என்னவென்று பார்ப்போம்:

இஞ்சி,எலுமிச்சை சாறு: தினமும் இஞ்சி போட்டு கொதிக்க வைத்த வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சைச் சாறு கலந்து சர்க்கரைக்கு பதில் தேன் கலந்து குடித்து வர, ஒரே வாரத்தில் உடல் எடை குறைவதை காண்பீர்கள். இதிலுள்ள சிட்ரிக் அமிலம், மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்த விட்டமின் 'சி' கொழுப்பை வேகமாக கரைக்கும்.அன்னாசிப் பழம்: உடல் எடையை வேகமாக குறைப்பதற்கு மிகச் சிறந்த பழங்களில் அன்னாசி முக்கியமானது. இதிலுள்ள ப்ரோமைலைன் கொழுப்பை வேகமாக குறைக்கிறது. ஜீரண சக்தியை அதிகமாக்கும். அன்னாசி கலோரி மற்றும் கொழுப்பை உடனுக்குடன் எரிப்பதால் உடல் எடை குறைய ஆரம்பிக்கும். அன்னாசிப் பழம் சூட்டைத் தரும், அதனால் அளவாகத்தான் சாப்பிட வேண்டும்.தக்காளி: கொழுப்பை கரைப்பதில் தக்காளிக்கு ஈடு கிடையாது என சொல்லலாம். தக்காளி துரிதமாகவும் செயல்படும். இதிலுள்ள லைகோபீன் வேகமாக மெட்டபாலிசத்தை தூண்டுகிறது. இதனால் கொழுப்பு சேமிக்காமல் எரிக்கப்படுகிறது. எனவே, தக்காளியை ஜூஸாகவோ அல்லது சூப்பாகவோ எடுத்துக் கொண்டால் நல்ல பலன் தெரியும்.


திராட்சை: உடலில் உள்ள கொழுப்பை கரைப்பதில் திராட்சை சிறந்த பலனைத் தருகிறது. திராட்சையில் உள்ள கார்போஹைட்ரேட் எனர்ஜியை தருகிறது. காலை உணவுடன் ஒரு கப் திராட்சை எடுத்துக் கொண்டால், இவை மற்ற உணவுகளையும் எளிதாக செரிக்கச் செய்திடும்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
19,431
Likes
4,439
Location
India
#22
தொப்பை கரைய !!


ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்மளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.

இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும்.


இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,727
Likes
22,676
Location
Germany
#23
உடல் இளைக்க வேண்டுமா?
ஓட்ஸ் டயட் இட்லி

தேவையான பொருள்கள்:
சம்பா கோதுமை ரவை - ஒரு கிண்ணம்
ஓட்ஸ் - அரை கிண்ணம்
உப்பு - தேவையான அளவு
புளித்த தயிர் - ஒரு தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
கடலை பருப்பு - அரை தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய இஞ்சி - அரை தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - அரை தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
எண்ணெய் - 2 தேக்கரண்டி
முந்திரி - தேவையான அளவு


செய்முறை:
  • மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும். ஓட்ஸ் மிக்ஸியில் போட்டு அரைத்து பொடி செய்துக் கொள்ளவும்.
  • பொடித்த ஓட்ஸ் ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அதனுடன் ஒரு கப் கோதுமை ரவை, புளித்த தயிர் சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு, சிறிது தண்ணீரும் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
  • கரைத்த மாவுடன் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  • பிறகு இட்லி தட்டில் ஊற்றி முந்திரியை வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
  • சுவையான ஓட்ஸ் டயட் இட்லி தயார்.
  • இதை தேங்காய் மற்றும் கொத்தமல்லி சட்னியுடன் சூடாக சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,727
Likes
22,676
Location
Germany
#24
5 ways to not gain back

Pump up: Lifting weights is one of the best gifts you can give yourself. It helps you build muscle, lose fat and keeps you away from all sorts of medical issues. Plus, it makes you look good.
Be active: Apart from working out on a regular basis, try and be active throughout the day. Sit instead of lying down, stand instead of sitting and if you work in an office setting, take a 5-minute break every hour and go for a walk.Choose workouts you love: Weight training is not everyone’s cup of tea. So, you don’t have to do it for 6 days a week, you can mix it up with activities that you enjoy doing, be it dancing, going on a hike, CrossFit etc. You can weight train for 3 days and do the activities that you enjoy for rest of the week.Eat more protein: Keeping your protein levels up along with weight training helps you build muscle which ups the BMR. This will help you stay leaner while eating more food than you would, if you’re not muscular. So, incorporate more protein in your diet.Treat yourself: An occasional treat or a slip up won’t make you fat, just like one single day at the gym or one “healthy meal” won’t make you fit. So, go ahead and treat yourself once in a while without feeling guilty about it. Enjoy the foods that you like to eat in moderation.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
19,431
Likes
4,439
Location
India
#25
கொழுப்பை கரைக்கும் கொள்ளு குழிப்பணியாரம்

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் உணவில் கொளளுவை சேர்த்து கொள்வது நல்லது.

தேவையான பொருட்கள் :

கொள்ளு - அரை கப்,

புழுங்கல் அரிசி - 1 கப்,
பச்சரிசி - கால் கப்,
வெந்தயம் - அரை டீஸ்பூன்,
பச்சைமிளகாய் - 2,
வெள்ளை எள் - சிறிது,
கொத்தமல்லி - தேவையான அளவு,
உப்பு, நல்லெண்ணெய் - தேவைக்கு.செய்முறை :

ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வெள்ளை எள்ளை வெறும் கடாயில் போட்டு வறுத்து வைக்கவும்.

கொள்ளு, புழுங்கல் அரிசி, பச்சரிசி, வெந்தயம் சேர்த்து 4 மணி நேரம் ஊறவைக்கவும்.

அனைத்தும் நன்கு ஊறியதும் கிரைண்டரில் போட்டு அரைத்து உப்பு, வறுத்த எள் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து புளிக் விடவும்.

சற்று புளித்தவுடன் அதில் பச்சைமிளகாய், கொத்தமல்லி சேர்த்து கலந்து கொள்ளவும்.

குழிப்பணியாரச் சட்டியை அடுப்பில் வைத்து சூடானதும் நல்லெண்ணெய் விட்டு மாவை ஊற்றி இருபுறமும் வேகவைத்து எடுத்து பரிமாறவும்..

சூப்பரான கொள்ளு குழிப்பணியாரம் ரெடி.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.