10 Valuable tips for Birth Partners!!!

nlakshmi

Minister's of Penmai
Joined
May 21, 2011
Messages
2,787
Likes
3,821
Location
US
#1
இப்பொழுதெல்லாம் பிரசவத்தின் பொழுது மனைவியின் கூடவே இருந்து பிரசவ நேரத்தின் பொழுது உதவுவது கணவன் மார்களே.. மனைவியும் அதையே பெரிதாக விரும்புகிறாள்.
அந்த நேரத்தில் துணை இருக்கும் நபர்(கணவன்,தாய், தங்கை, அக்கா,மாமியார்)இப்படி யாராக இருந்தாலும் கடைபிடிக்க வேண்டிய பத்து ஆலோசனைகள்.


பிரசவ காலத்தில் தாயாக போகும் பெண்ணுடன் சேர்ந்து பயணிக்க போகும் துணைக்கு இப்பொழுதெல்லாம் மருத்துவமனையிலேயே பல பிரசவ கால வகுப்புகள் எடுக்க படுகின்றன. அதன் மூலம் பயனடையலாம்.


கேள்வி கேளுங்கள்:
எப்பொழுதுமே, மருத்துவரோ அல்லது பகுதி மருத்துவரோ உங்கள் மனைவிக்கு சோதனைகள் செய்யும் பொழுது அந்த சோதனை எதற்கு என்று அறிதல் அவசியம். பிரசவத்திற்காக உங்கள் மனைவி மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருக்கும் பொழுது அவள் சார்பாக நீங்கள் மருத்துவரிடம் கேள்வி கேட்ட்க வேண்டும். உங்கள் மனைவிக்கு இந்த பரிசோதனை இந்த நேரத்தில் எதற்கு என்று அறிந்து கொண்டு இது இப்பொழுது தேவையா இல்லை கொஞ்சம் தள்ளி போடலாமா என்று அறியலாம்.
உங்கள் தேவையை நீங்கள் நன்கு அறிய வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் மருத்துவமனையில் எந்த வித வசதிகளை நீங்கள் பயன் படுத்தி கொள்ளலாம் என்று பார்த்து வைத்து கொள்ளுங்கள். பிரசவதிருக்கு பிறகு தனி அறை வேண்டும் என்றால் அதற்க்கு என்ன வழி முறை என்று அறிந்து செயல் படுங்கள்.


உங்களுக்கும் அத்தியாவசிய பொருட்கள் தேவை:
மருத்துவமனையில் உங்கள் மனைவியை சேர்த்து விட்டு உங்கள் குழந்தையின் வரவுக்காக காத்திருக்க வேண்டும். சினிமாவில் வருவதுபோல உடனே பிரசவம் ஆகி விடாது.. முதல் குழந்தைஎனில் குறைந்தது 16 -48 hrs ஆகலாம். அதனால் நீங்கள் உங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், மாற்று உடைகள், உங்களுக்கு எளிதாக இருக்க கூடிய காலணிகள். என்று எடுத்து வைத்து கொள்ளுங்கள்.


வருமுன் அறிதல்:
பிரசவ வகுப்புகளில் கற்று தரும் மூச்சு பயிற்சி உபயோக படுகின்றதோ இல்லையோ, அங்கே தெரிந்து பிரசவத்தை பற்றி ஆதி முதல் அந்தம் வரை தெரிந்து கொண்டது மிகவும் உபயோகமாக இருக்கும். இந்த வகுப்புகள் மிகவும் முக்கியம். கடைசி நிமிடத்தில் பிரசவ புத்தகங்களை புரட்டுதல் இங்கு உபயோகபடாது. இந்த வகுப்புகளில் உங்களுக்கு பிரசவத்தை பற்றி அணைத்து விவரங்களையும் பகிர்ந்து கொள்வார்கள். மற்றும் அங்கு வரும் வேறு பிரசவ துணிகளும் எப்படி இதை கை ஆள எண்ணி இருகிறார்கள் என்று அறிந்து கொள்ளலாம்.


கொஞ்சம் வளைந்து கொடுங்கள்:
சில பெண்களுக்கு கடை பிடிக்க படும் பிரசவ கால யுக்திகள், உங்கள் மனைவிக்கு உபயோக படாமல் போக வாய்ப்பிருக்கிறது. அதனால் திறந்த மனபான்மையுடன் இருங்கள். உங்கள் மனைவிக்கு எது ஏதுவாக உள்ளதோ அதை பற்றி கொண்டு மற்றதை விட்டு விட தயாராக இருங்கள். இல்லை அவர்கள் அப்படி சொன்னார்களே இப்படி சொன்னார்களே என்று kulambaamal உங்கள் மனைவியின் வசதியை பொருத்து, ஆசையை மனதில் வைத்துகொண்டு எதை வைப்பது எதை விடுவது என்று முடிவு எடுங்கள்.


கவனத்தை மாற்ற வழியை கண்டு பிடிங்கள்:
பிரசவம் என்பது மிகவும் நீளமான, கஷ்டமான வேலை. உங்கள் மனைவியின் இடுப்பு வழியின் பொழுது அவர்கள் கவனத்தை மாற்ற எதாவது யுக்தியை கையாளுங்கள். அது மூச்சு பயிற்சியாகவோ, விட்டதில் தொங்கும் பேன் ஆகவோ, உங்கள் குடும்ப படங்களாகவோ, உங்கள் மொக்கை நகைச்சுவையாகவோ இருக்கலாம்.( உங்கள் மனைவி வழியில் உங்கள் மொக்கையை தாங்க முடியாமல் உங்களை கண்ணா பின்னவென்று திட்ட கூட செய்வார்கள். அதெல்லாம் உங்கள் சாமர்த்தியம்:))
இந்த கவன மாற்றம் அவர்கள் இனிமேல் முடியாது என்று என்னும் பொழுது மிகவும் உதவும்.
 

nlakshmi

Minister's of Penmai
Joined
May 21, 2011
Messages
2,787
Likes
3,821
Location
US
#2
உங்களால் என்ன முடியும் என்று அறியுங்கள்:
பிரசவ அறையில் மிகவும் விறுவிறுப்பாக செயல் பட்டு கொண்டு இருக்கும். அங்கு நீங்கள் அந்த வேளையில் எதில் பங்கு கொள்ள போகிறீர்கள் என்று முடிவு செய்து கொள்ளுங்கள். உங்கள் மனைவிக்கு உதவி செய்யா போகிறீர்களா? அல்லது குழந்தையின் தொப்புள் கோடியை வெட்ட உங்கள் மருத்துவர் அனுமதி கொடுத்தால் அதை செய்ய போகிறீர்களா? என்று யோசித்து வைத்து கொள்ளுங்கள். சில கணவன் மார்கள் பிரசவ அறைக்குள் சென்று அந்த சூழநிலையை தாக்கு பிடிக்க முடியாமல் மயங்கியும் விழுந்து இருகிறார்கள். அதனால் உங்களால் என்ன முடியும் என்று அறிந்து கொள்ளுங்கள்.

உங்கள் மனைவியின் சப்போர்டாக இருங்கள்:
பிரசவ அறையில் எத்தனையோ திறமைவாய்ந்தவர்கள் இருப்பார்கள். அனால் உங்கள் மனைவிக்கு உங்களின் துணை தான் மிகவும் முக்கியம். அவர்கள் என்ன வேண்டினாலும் அதை உடனே செய்து முடிக்க கூடிய நபராக இருக்க முயலுங்கள். உங்களின் குடும்ப நபர்களிடம் என் உங்கள் மனைவி உங்களின் துணையை நாடுகிறார்கள், எதற்கு உங்களுடன் இருக்க விரும்பிகிறார்கள் என்று எடுத்து கூறுங்கள். அவர்களுக்கு உடல் பலத்தையும், மன பலத்தையும் தந்து அவர்களுக்கு உற்ற துணையாக இருங்கள்.


நிலைமையை உங்கள் கையில் எடுத்து கொள்ள தயாராக இருங்கள்:
உங்கள் மனைவிக்கும் உங்களுக்கும் தான் உண்மையில் என்ன வேண்டும் என்று தெரியும். ஆனால் பிரசவ வலியின் காரணமாக அவர்கள் முடிவெடுக்கும் நிலையில் இல்லாமல் இருக்கலாம். அந்த நேரத்தில் நீங்கள் முன்வந்து சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி முடிவு எடுக்க தயாராக இருங்கள்.
மருத்துவர் சில நேரத்தில் இது தேவை என்று எடுத்து கூறுவார் . அனால் உங்கள் மனைவி அதை யோசிக்கும் நிலையில் இருக்க மாட்டார்கள். அந்த நேரம் அந்த விவரங்களை நீங்கள் அறிந்து அவர்கள் சார்பாக முடிவு எடுக்க தயாரக இருங்கள்.


பொறுமை மிகவும் அவசியம்:

சினிமாவில் காண்பிப்பது போல பிரசவம் மருத்துவமனை சென்றவுடன் அல்லது வலி எடுத்த வுடன் நடக்காது. அதனால் பொறுமை மிகவும் அவசியம். பிரசவ வலியின் ஆரம்ப கட்டத்தை உங்கள் வீட்டிலேயே களிக்கலாம். ஒரு நல்ல படம் பார்த்து, அல்லது நல்ல பாடு கேட்டு,. அல்லது ஒரு சிறு நடை சென்று களிக்கலாம். மற்றும் பிரசவ வலி பதிவு செய்வது அவசியம். பிரசவ வலி மிகவும் அருகருகே வர ஆரம்பித்தால் மருத்துவ மனை செல்ல நேரம் வந்து விட்டது என்று அர்த்தம்.


உங்களின் துணை உற்ற துணை :
பிரசவ காலத்தில் தாயக போகும் பெண்ணிற்கு துணை மிகவும் அவசியம். அது அவர்களின் நம்பிக்கையை அதிக படுத்தும். அதனால் நீங்கள் அங்கே இருந்தாலே அவர்களுக்கு யானை பலம் வந்து விடும். பிரசவ துணையாக இப்பொழுது கணவன் மார்களே இருகிறார்கள். அனால் அது யாராக இருந்தாலும்(அம்மா, அக்கா, மாமியார்,தங்கை,தோழி) பிரசவிக்க போகும் தாய்மார்களுக்கு உறுதுணையாக இருத்தல் அவசியம். நீங்கள் பெரிய வேலை எல்லாம் செய்ய வேண்டும் என்று இல்லை.. நீங்கள் அங்கே நின்றாலே போதும் அதுவே அவர்களுக்கு பலம்.
 
Last edited:

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.