12 ராசிகளுக்கான திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,227
Likes
543
Location
chennai
#1
1524750154128.png

உறவுகள் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானவை. கணவன் மனைவி உறவில் பல்வேறு இடர்பாடுகள் தொடரும்போது, சிலர் எவ்வளவு முயன்றும் அந்த உறவை தொடர முடியாமல் போகிறது. ஒரு தனி நபர் அனுபவிக்கும் எல்லா ஏற்றத்தாழ்வுகளுக்கும் அவருடைய ஜென்ம ராசி காரணமாக இருக்கும். அதே போல் அவருடைய உறவில் விரிசல் ஏற்படவும், இந்த ராசி தான் காரணம். உங்கள் ராசியின்படி உங்களுடைய உறவில் விரிசல் உண்டாவதற்கான காரணங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்.

மேஷம்

நீங்கள் அடுத்தடுத்து சாகசத்தை தேடி ஓடும் நபர். நீங்கள் வேலை இல்லாமல் வெட்டியாக இருப்பதை வெறுப்பீர்கள். வாழ்க்கையின் எல்லா இடத்திலும் நீங்கள் இருப்பவர். இதையே நீங்கள் உங்கள் உறவிலும் முயற்சிப்பீர்கள். உங்கள் எதிர்பார்ப்புகள் அல்லது கனவுகளை உங்கள் துணைவர் பூர்த்தி செய்யவில்லை என்றால் அவர் மீதும் உங்களுக்கு சலிப்பு ஏற்படும். உங்கள் துணைவரும் சாகச குணத்தோடு இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பதால் உங்கள் உறவில் விரிசல் ஏற்படும். சில நேரம் நீங்கள் விரும்பும் ஒருவருடன் உங்கள் பொழுதைக் கழிப்பதே ஒரு சாகசமாக இருக்கும்.

ரிஷபம்

கடந்த காலத்தைப பற்றி நினைத்துக் கொண்டிருப்பதே உங்கள் கவலை ஆகும். கடந்த காலத்தில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் உங்கள் துணைவரை கஷ்டப்படுத்த நினைக்கிறீர்கள். இதனால் உங்கள் உறவு பாதிப்புக்கு உள்ளாகிறது. வீணான செயல்களில் காலம் கடத்தி, அமைதியான வாழ்க்கையில் சலனத்தை உண்டாக்குகிறீர்கள்.

மிதுனம்

உங்கள் மனது மாறிக் கொண்டே இருக்கும். ஒரு குறிப்பிட்ட விஷயத்தின் மீது உங்கள் பார்வையை செலுத்துவது உங்களுக்கு கடினமாக இருக்கும். இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது உங்களுக்கு முற்றிலும் பொருந்தும். இதனால் மட்டுமே உங்கள் உறவு பாதிக்கப்படுகிறது. இதை விட சிறந்த ஒருவர் இருக்கிறார் என்ற எண்ணத்தை நீங்கள் கைவிடும்போது தான் உங்களுக்கு நல்ல காதல் வாழ்க்கை கிடைக்கும். இந்த நிமிடம் உங்கள் கையில் இருப்பதின் மேல் உங்கள் பார்வை இருக்கட்டும். இந்த் நிமிடத்தை சந்தோஷமாக அனுபவியுங்கள்.

கடகம்

உங்கள் கட்டுப்பாடு உங்கள் உறவின் மேல் இருக்க வேண்டும். எப்போதுமே உங்கள் துணைவரை துளைத்துக் கொண்டே இருப்பீர்கள். உங்கள் துணைவரைப் பற்றி எல்லா சிறு தகவல் கூட தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பீர்கள். எல்லா நேரத்திலும் அவருடன் ஆழ்ந்த தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்று எண்ணுவீர்கள். உங்கள் துணையுடன் ஒரு ஆழ்ந்த தொடர்பு இருக்க வேண்டும் என்று என்னும் நீங்கள் ஒரு ஆழ்ந்த சிந்தனையாளர். உங்கள் துணைவர் தானாக மூச்சு விட சிறிது நேரம் கொடுங்கள். அதன்பிறகு அவரே உங்கள் பின்னால் வருவார்.

சிம்மம்

நீங்கள் சொல்லும்படி தான் எல்லாம் நடக்க வேண்டும் என்ற உங்கள் விருப்பதால் மட்டுமே உங்கள் உறவில் சிக்கல் எழுகிறது. உங்கள் யோசனைகளை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருப்பீர்கள். உங்களைச் சார்ந்தவர்கள் உங்கள் யோசனைப்படி தான் நடக்க வேண்டும் என்று விரும்புவீர்கள். இல்லையேல், நிலைமை மோசமாகி விடும். உறவுகளுக்கு இடையில் ஒத்துப் போவது எப்படி என்பதை நீங்கள் கற்றுக் கொள்ளாமல் இருந்தால், ஒருநாள் உங்களிடம் எதுவுமே இருக்காது.

கன்னி

வாழ்க்கையில் சின்னச் சின்ன விஷயங்களுக்கு நீங்கள் மனமுடைந்து விடுவீர்கள். எளிதில் பயனிக்கமுடியாததாக உங்கள் அணுகுமுறை இருக்கும். உங்கள் எதிர்மறை குணத்தால் உங்கள் துணைவர் உங்கள் மீது குறை கூறலாம். உங்களுடைய எதிர்மறைக் குணம் தான் உங்கள் உறவு கெடுவதற்கு காரணமாக உள்ளது. நீங்கள் சந்தோஷமாக இல்லாதவரை, உங்களால், வேறு யாருடனும் சந்தோஷமாக இருக்க முடியாது என்பதை உணர்ந்து நேர்மறை எண்ணத்தை மனதில் விதைத்து சந்தோஷமாக இருக்க முயற்சி செய்யுங்கள்.துலாம்

நீங்கள் மிகவும் மென்மையானர் என்பதை சொல்லி அதற்காக உங்களை பாராட்டியே ஆக வேண்டும். சில நேரங்களில் மிகவும் உணர்ச்சி வசப்படக் கூடியவராகவும் இருப்பீர்கள். உங்களை யாரவது கேலி செய்தால் கூட நீங்கள் வேதனைப்படுவீர்கள். உங்கள் உணர்ச்சிவசப்படக் கூடிய குணம் மட்டுமே உங்கள் உறவின் எதிரி. தேவையற்ற இடத்தில் இந்த குணம் சண்டையை இழுத்து விடுகிறது. எப்போதுமே நீங்கள் தாக்கப்படுவதாக எடுத்துக் கொள்வீர்கள். எல்லா நேரத்திலும் உறவுகளை கடினமாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்பதை நீங்கள் உணர்ந்து கொள்வது நல்லது.

விருச்சிகம்

அடுத்தவர் முகத்தில் அடிப்பது போல் இருக்கும் உங்கள் குணம், யாரையும் உங்களிடம் நெருங்க விடுவதில்லை. நீங்கள் மற்றவரிடம் விரைந்து பழக வேண்டும் . உங்கள் துணைவரை உங்களுக்கு புரிய வைக்க எந்த ஒரு வாய்ப்பையும் நீங்கள் வழங்குவதில்லை. அப்படி வாய்ப்பை வழங்கினாலும், அதனை அவர் பயன்படுத்தும் வரை காத்திருக்காமல் எரிச்சல் அடைவது உங்கள் பண்பு. ஒரு தனி நபராக நீங்கள் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால், காதல் வாழ்க்கை என்பது இன்னும் பல நாடகங்களைக் கொண்டது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

தனுசு

நீங்கள் வாழ்க்கையை அனுபவிக்க பிறந்தவர்கள். நீங்கள் எல்லாவற்றையும் முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்று விரும்புவீர்கள். குறிப்பாக உங்கள் ரொமாண்டிக் தருணங்களை. உங்கள் துணை உங்களுக்கு ஏற்றவராக இல்லை என்ற நினைப்பால் உங்கள் உறவில் விரிசல் உண்டாகும். நடக்க முடியாத செயல்களை நினைத்துக் கொண்டு , இன்றைய வாழ்கையை நீங்கள் இழந்து கொண்டு இருப்பீர்கள்.

மகரம்

உங்கள் உணர்வுகளை அடக்கத் தெரிந்தவர் நீங்கள். உங்களிச் சுற்றி ஒரு சுவரை எழுப்பிக் கொண்டு இருப்பீர்கள். இதனால் உங்கள் ஆழ் மனதில் உள்ளவற்றை எவராலும் அறிந்து கொள்ள முடியாது. இப்படி செய்வதால் உங்களை யாரும் வேதனைப் படுத்த முடியாது என்று நினைக்கிறீர்கள். ஆனால் மறுபுறம், நீங்கள் வெளிப்படையாக இல்லாத காரணத்தால் உங்கள் உறவில் சிக்கல் ஏற்படுகிறது. எந்த ஒரு விஷயத்தையும் உங்களிடம் இருந்து வெளிக்கொணர உங்கள் துணைவர் மிகவும் கஷ்டப்பட வேண்டியதாக இருக்கும். இதனால் அவரிடம் நீங்கள் பல விடயங்களை மறைக்க நேரலாம்.

கும்பம்

உங்களுடைய அஜாக்கிரதையான குணத்தால் உங்கள் உறவுகள் பாதிக்கப்படுகிறது. நீங்கள் உங்கள் துணைவரை அதிகம் நேசிப்பீர்கள் . ஆனால் அதனை வெளியில் காட்டத் தெரியாது. உறவுகளை வளர்ப்பதில் நீங்கள் ஒரு பெரிய சோம்பேறி, சரியான காலத்தில் உறவின் முக்கியத்துவத்தை உங்களால் புரிய வைக்க முடியாது. ஆனால் இவற்றை சரியாக திட்டமிட வேண்டும் என்று நீங்கள் நினைப்பீர்கள். உறவுகளை வளர்ப்பதில் தனி பயிற்சி அவசியம். என்பதை நீங்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.

மீனம்

கலகலப்பாக இருப்பது வாழ்க்கையில் எல்லா நேரத்திலும் சாத்தியப்படாது. உங்கள் கலகலப்பான குணம் உங்கள் துணைவருக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கலாம். எல்லோரிடமும் அரட்டை அடிக்கும் சுபாவம் உள்ளவராக நீங்கள் இருப்பீர்கள். இது ஒரு நல்ல குணமாக இருந்தாலும், அளவுக்கு மீறும்போது குழப்பத்தை உண்டாக்கும். இதனால் ஏற்படும் கவனக்குறைவால் உங்கள் உறவில் விரிசல் உண்டாகலாம். இவ்வளவு வெளிப்படையாக இருப்பதை உங்கள் துணைவர் விரும்பாமல் இருக்கலாம்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,042
Likes
3,158
Location
India
#2
செவ்வாய் பகவானுக்குரியவை

1526018611007.png
காரகம் - சகோதரம்

தேவதை - சுப்பிரமணியர்

தானியம் - துவரை

உலோகம் - செம்பு

நிறம் - சிவப்பு

குணம் - ராஜஸம்

சுபாவம் - குரூரர்

சுவை - துவர்ப்பு

திக்கு - தெற்கு

உடல் அங்கம் - தலை

தாது - மஜ்ஜை

நோய் - பித்தம்

பஞ்சபூதம் - நெருப்பு

பார்வை நிலை - தான் நின்ற ராசியில் இருந்து 4,7,8 இடங் களின் முழு பார்வை. 3, 10-ம் இடங்களின் மீது கால்பங்கு பார்வை, 5, 9 ஆகிய இடங்களின் மீது அரை பங்கு பார்வை பார்ப்பார்.

பாலினம் - ஆண்

உபகிரகம் - தூமன் சுரேசன்

ஆட்சி ராசி - மேஷம்,

உச்ச ராசி - மகரம்

மூலத்திரிகோண ராசி - மேஷம்

நட்பு ராசி - சிம்மம், தனுசு, மீனம்

சமமான ராசி - ரிஷபம், துலாம், கும்பம்

பகை ராசி - மிதுனம், கன்னி

நீச்ச ராசி - கடகம்

திசை ஆண்டுகள் - ஏழு ஆண்டுகள்

ஒரு ராசியில் சஞ்சரிக்கும் காலம் - ஒன்றரை மாதம்

நட்பு கிரகங்கள் - சூரியன், சந்திரன், குரு

சமமான கிரகங்கள் - சுக்ரன், சனி

பகை கிரகங்கள் - புதன், ராகு

அதிக பகையான கிரகம் - புதன்

இதர பெயர்கள் - அங்காரகன், உதிரன், குஜன், ஆரல், சேய், மங்கலம், நிலமகன்

நட்சத்திரங்கள் - மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,819
Likes
20,780
Location
Germany
#3
ராசிப்படி குலதெய்வம் - அறிந்து கொள்வது எப்படி

1526049568217.png

ராசி - குலதெய்வம்

மேஷம் - மதுரைவீரன்
ரிஷபம் - ஐயனார்
மிதுனம் - காளியம்மன்
கடகம் - கருப்பன்னசாமி
சிம்மம் - வீரபத்திரன்
கன்னி - அங்காளம்மன்
துலாம் - முனீஸ்வரன்
விருச்சிகம் - பெரியாச்சி
தனுசு - மதுரைவீரன்
மகரம்- - ஐயனார்
கும்பம் - காளியம்மன
மீனம் - மதுரைவீரன்
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,042
Likes
3,158
Location
India
#4
சந்திரனுடன் மற்ற கிரகங்கள் சேர்வதால் அடைகின்ற பலாபலன்கள்!


சந்திரனுடன் மற்ற கிரகங்கள் சேர்ந்தால் கிடைக்கும் பலாபலன்கள் என்ன என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

1 ஒருவரின் ஜாதகத்தில் சந்திரனுடன், சனிபகவான் இணைந்திருந்தால் ஜாதகர், நல்ல சிறப்பான வசதிகளைப் பெற்றிருத்தல், ஆனால் மனஅமைதிக்கு பங்கம் ஏற்படல் தொழில்/வியாபாரம்/உத்தியோகம் மூலம் நிறையச் சம்பாதிப்பார்கள். இருப்பினும் மனதில் மகிழ்ச்சி இருக்காது. குடும்பத்தில் கருத்துவேறுபாடுகள் இருந்துவரும், பலவித வியாதிகளால் கஷ்டப்படுதல் ஆகியவை அடையப்பெறுவர் என்பதாகும்.

2 ஒருவரின் ஜாதகத்தில் சந்திரனுடன் இராகு இணைந்திருந்தால் ஜாதகர் வருவாய்க்கு மிஞ்சிய செலவுகள் வாங்கிய கடன்களைத் திருப்பிக் கொடுக்க இயலாதநிலை, பலவித வியாதிகளால் கஷ்டப்படுதல், பூர்வீகச் சொத்துக்கள் சம்பந்தமாக விவகாரங்களும், வழக்குகளும் ஏற்படுதல், அதனால் அதிகப்படியான பொருள்விரயம் ஆகுதல் ஆகியவை அடையப்பெறுவர் என்பதாகும்.

3 ஒருவரின் ஜாதகத்தில் சந்திரனுடன் கேது இணைந்திருந்தால் ஜாதகர் தொழில்/வியாபாரம்/உத்தியோகம் பலவிதமான நெருக்கடிகள் ஏற்படல் எதிர்பார்க்கும் லாபம் இருக்காது,

உறவினர்கள்/நண்பர்களிடையே பகை ஏற்பட்டு அனைத்துக் காரியங்களிலும் விரோதமாகச் செயல்படுதல், பூர்வீகச் சொத்துக்கள் அடையப்பெற்றாலும் அவற்றினால் ஏற்படுகின்ற பலாபலன்களை அனுபவிக்க இயலாத நிலை, ஆகியவை அடையப்பெறுவர் என்பதாகும்.

4 செவ்வாய்/அங்காரகன்: செவ்வாய், நெருப்பு/தம்பி, தங்கைகள், உடல் வலிமை, எலும்பின் நடுவிலுள்ள தாது, இரத்தம், வஞ்சம், வைராக்கியம், பொய் பேசுதல், மற்றவர்களின் மனம் புண்படும் வகையில் பேசுதல் ஆகியவற்றிற்கு அதிபதியாக விளங்குகிறார். மேலும், செவ்வாய் உடலில் காயங்கள், கடுமையான புண்களை உண்டாக்குதால், உற்சாகத்தைக் கொடுத்து வீரசாகஸங்களைச் செய்ய வைத்தல், உறவினர்களை பகைவர்களாக்குதல், மனதில் குளுரக் குணத்தை ஏற்படுத்துதல், செல்வச் செழிப்பு, பித்த நோய்களை ஏற்படுத்தல் ஆகியவை அடையப்பெறுவர்.
செவ்வாய் ஆதிக்கம் பெற்ற மனிதர்களுக்கு அதிர்ஷ்டநிறம் சிவப்பு, அதிர்ஷ்டம் தரும் கல்-பவழம், அதிர்ஷ்டம் தரும் மலர்-செண்பகம், தானியம்-துவரை, உலோகம்-செம்பு, மரம்-கருங்காலி, திசை-தெற்கு, சுவை-உறைப்பு, செவ்வாய் ராசியைக் கடக்கும் காலம்: 1 1/2 மாதங்கள்.

5. ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாயுடன் சூரியன் இணைந்திருந்தால் ஜாதகர், மிகவும் யோகமான பலன்களை அடைவர். தொழில்/வியாபாரம்/உத்தியோகத்தில் சிறப்படைவர்/நிறைய லாபம் பெறுவர். பொன்/பொருள்/ஆபரணங்கள்/சொத்துக்கள் சேர்க்கை மற்றும் வாகன வசதி அடைதல், தமது செல்வாக்கைப் பயன்படுத்திப் பலவித கடினமான காரியங்களை மிகவும் எளிதாகச் சாதித்துக்கொள்ளுதல் ஆகியவை அடையப்பெறுவர் என்பதாகும்.

6 ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாயுடன் சந்திரன் இணைந்திருந்தால் ஜாதகர் மிகவும் அதிர்ஷ்டமான பலன்களை அடைவர். தமது வாழ்நாளில் கடைசி வரை செல்வச் செழிப்புடன்/செல்வாக்குடனும்/பூர்வீகச் சொத்துக்களுடனும் வாழ்வர். உயர்ந்த அதிகாரம் செய்யக்கூடிய பதவிகளை அடைவர். மிக்க தெய்வபக்தி அடையப்பெற்றிருப்பர் என்பதாகும்.

7 ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாயுடன் புதன் இணைந்திருந்தால் ஜாதகர் மிகவும் சிறப்பான பலன்களை அடைவர். தொழில்/வியாபாரம்/உத்தியோகத்தில் எதிர்பார்த்ததைவிட அதிக லாபம் அடைவர் இவர்கள் பல சாதனைகளைச் செய்து பலருடைய பாராட்டைப்பெறுவர். மேற்கண்ட கிரகங்கள் மிதுனம் அல்லது கன்னி ராசியில் இணைந்திருந்தால் ஜாதகர் ராஜபோக வாழ்க்கையை அடையப்பெறுவர் என்பதாகும்.

8 ஜாதகத்தில் செவ்வாயுடன் குருபகவான் இணைந்திருந்தால் ஜாதகர் மிகவும் சிறப்பான வருவாய் அடைவர் மற்றும் பொன் பொருள்/ஆபரணங்கள்/சொத்துக்கள் சேர்க்கை, வாகன யோகம் மிகவும் மகிழ்ச்சிகரமான நிம்மதியான குடும்ப வாழ்க்கை அடையப்பெறல், தாராளமாக தானம்/தர்மங்கள் செய்தல் ஆகியவை அடையப்பெறுவர். இருப்பினும் லக்னத்திற்கு 7-ம் இல்லத்தில் குருபகவான் அமையப்பெற்றால் ஜாதகருக்கு திருமணம் நடைபெறுவது மிகவும் கடினமாகும்.

9 ஒருவரின் ஜாகதத்தில் செவ்வாயுடன் சுக்கிரன் இணைந்திருந்தால், ஜாதகர் பொதுவாக கலப்புத் திருமணம் நடைபெறல் ஆனால் மணவாழ்க்கை நிறைவாகயிருக்கும். உடன் பிறந்தவர்களிடமிருந்து ஓரளவு உதவிகளைப்பெறுவர். தெய்வீகப்பணிகளில் சிறப்பாகச் செயலாற்று, இறைவனின் அருளைப்பெறுவர் என்பதாகும்.

10 ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாயுடன் சனிபகவான் இணைந்திருந்தால் ஜாதகர் சட்டத்திற்குப் புறம்பான காரியங்களைச் செய்வர். காவல் துறையினரால் அடிக்கடி பலவிதமான இன்னல்களை அடைவர். சில சமயம் சிறைவாசமும் அடைவர். தண்ணீர் நெருப்பினால் ஆபத்துக்கள் ஏற்படல் குடும்பத்தில் மகிழ்ச்சி/வசதிகள் அதிகரித்தல் ஆகியவை அடையப்பெறுவர்.

11 ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாயுடன் இராகு இணைந்திருந்தால் ஜாதகர் திருவியம் தேடும்பொருட்டு, பல ஊர்களுக்குச் செல்வர். எவ்வளவுதான் சம்பாதித்தாலும், அனைத்தும் விரயமாகும். போதைப்பழக்கத்திற்கு அடிமையாவர். சிற்றின்பத்தில் அதிக நாட்டம் உண்மாகும். நல்ல நண்பர்களை பகைத்துக்கொள்வர். நிம்மதியற்ற வாழ்க்கை வாழ்தல் ஆகியவை அடையப்பெறுவர் என்பதாகும்.

12 ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாயுடன் கேது எஇணைந்திருந்தால் ஜாதகர் மிகுதியான தெய்வபக்தி மனதில் இருக்கும். வெளிமாநிலங்கள்/வெளிநாடுகளைச்சேர்ந்த மனிதர்களிடமிருந்து நல்லவிதமான உதவிகளை அடைதல் பொதுநலசேவைகள் செய்து பலருடைய பாராட்டு, புகழ், வாழ்க்கை வசதி நிறைந்த மகிழ்ச்சி ஆகியவை அடையப்பெறுவர் என்பதாகும்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,042
Likes
3,158
Location
India
#5
பிறந்த நாளை ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாடுவதில் இவ்வளவு நன்மைகளா?


பாரம்பரியமிக்க குடும்பங்களில் குழந்தைக்கு முதல் பிறந்த நாள் அன்று ஆயுஷ்ய ஹோமம் செய்வதை பார்க்கலாம். ஆனால் இன்று பல குடும்பங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிறந்தநாள் என்ற பெயரில் கேக் வெட்டி கேண்டில் அனைத்து கேக்கை முகத்தில் பூசி கொண்டாட்டம் என்ற பெயரில் சமுதாய சீர்கேட்டினை செய்து வருகிறார்கள்.
அப்த பூர்த்தி

குழந்தை பிறந்து 12 மாதங்கள் முடிந்து 13வது மாதம் குழந்தை பிறந்த அதே தமிழ் மாதமாகும். அந்த மாதத்தில் குழந்தை பிறந்த அதே நக்ஷத்திரம் வரும் தினத்தில் சுபவேளையில் அப்தபூர்த்தி ஆயுஷ்ய ஹோமம் செய்யப்படுகிறது. அப்த என்றால் ஒன்று, பூர்த்தி என்றால் நிறைவு. எனவே அப்த பூர்த்தி என்பதை 'ஆண்டு நிறைவு” என்றும் சொல்வார்கள்.

ஜென்ம நக்ஷத்திரம்
ஜன்ம நக்ஷத்திரத்தில் குழந்தைக்கு புண்ணிய தீர்த்தங்களைக் கொண்டு ஸ்நானம் செய்து வைத்து, புது ஆடைகள் அணிவித்து, ஆபரணங்களைக் கொண்டு அலங்காரம் செய்வித்து, குழந்தையின் அம்மான் குழந்தையைத் தோளில் தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் பிரவேசிக்க வேண்டும். பின்னர் ஹோமம் வளர்த்து, 'ஆயுஷ்ய சூக்தம்” என்னும் மந்திரத்தைக் கொண்டு ஆயிரத்தெட்டு முறை நல்ல நெய்யைக் கொண்டு ஹோமம் செய்ய வேண்டும். 'மிருத்யூ” பயமின்றி குழந்தை தீர்க்காயுளாக வளர வேண்டுமென்பதற்காகச் செய்யப்படும் ஹோமமாகும். இதனால் 'ஆயுஷ்ய ஹோமம்” என்று இது பெயர் பெற்றது.

ஆயுள் அபிவிருத்திக்கு சர்வேஸ்வரனை வேண்டிச் செய்யும் ஹோமமாகும். இத்துடன் கலசத்தால் கும்பம் அமைத்து, வருணனையும், குழந்தையின் நக்ஷத்திர தேவதையையும் ஆவாஹனம் செய்து நக்ஷத்திர சூக்தம் எனும் 27 நக்ஷத்திரங்களை போற்றும் மந்திரங்களைச் ஜெபித்து அக்கலச தீர்த்தத்தை குழந்தைக்கு அபிஷேகம் செய்வித்து தீர்த்தத்தை உள்ளுக்கும் கொடுக்க வேண்டும். ஹோமம் செய்த நெய்யின் மிச்சத்தில் அன்னத்தைக் கலந்து அதை மந்திர பூர்வமாக குழந்தைக்கு கொடுக்க வேண்டும்.

இந்த ஆண்டுநிறைவு, நடப்பு மாதத்தில் இரு நக்ஷத்திரங்கள் வருமானால் பின் வருகிற (இரண்டாவதாக வருகின்ற) நக்ஷத்திரத்திலேயே இதைச் செய்ய வேண்டுமென்று கூறப்பட்டிருக்கிறது. சில சமயம் ஒரே நக்ஷத்திரம் இரண்டு தினங்களில் வரும். இதனால் என்று அனுஷ்டிப்பது என்ற குழப்பமும் வரும். என்றைய தினத்தில் சூரிய உதயத்திலிருந்து உச்சிப் பொழுதுக்குள் குறைந்தது 12 நாழிகை அதாவது 4மணி 48 நிமிட நேரம் என்று நக்ஷத்திரம் இருக்கிறதோ அன்றைய தினம் அனுஷ்டிக்க வேண்டும்.

இதே முறையில்தான் ஒவ்வொரு பிறந்தநாளையும் அனுஷ்டிக்க வேண்டும். வருடா வருடம் பிறந்தநாளில் ஆயுஷ்ய ஹோமம் செய்யும்பொழுது குடும்பத்தோடு சிறிய அளவில் செய்துகொள்ளலாம். என்றாலும் கீழ்க்கண்ட வயதுகளில் பெரிய அளவில் நண்பர்கள் உறவினர்கள் சூழ பெரியார் ஆசிபெற செய்துகொள்வது சிறப்பாகும்.

1. பீம சாந்தி = 55ஆவது வயது ஆரம்பம்.
2. உக்ரரத சாந்தி = 60ஆவது வயது ஆரம்பம்,
3. ஷஷ்டியப்த பூர்த்தி சாந்தி = 61ஆவது வயது ஆரம்பம்.
4. பீமரத சாந்தி = 70ஆவது வயது ஆரம்பம்.
5. ரத சாந்தி = 72ஆவது வயது ஆரம்பம்.
6. விஜய சாந்தி = 78ஆவது வயது ஆரம்பம்.
7. சதாபிஷேகம் = 80 வருஷம் 8 மாதம் முடிந்து உத்தராயண சுக்லபக்ஷம் நல்லநாளில்.
8. ப்ரபௌத்ர ஜனன சாந்தி (கனகாபிஷேகம்) = பௌத்ரனுக்கு புத்ரன் பிறந்தால்.
9. ம்ருத்யுஞ்ஜய சாந்தி = 85ஆவது முதல் 90க்குள்.
10. பூர்ணாபிஷேகம் = 100ஆவது வயதில் சுபதினத்தில்.

ஜென்ம நக்ஷத்திரத்தில் கொண்டாடுவதால் என்ன பலன்?
ஆத்ம காரகனாகிய சூரியன் பிறந்த ஜாதக சூரியனை தொடுவதால் சூரியனின் பரிபூரன அந்த மாதம் முழுவதும் ஆசி நிலவும். சந்திரன் ஜென்ம நக்ஷத்தில் நிற்பதால் சந்திரனின் ஆசியும் கிடைத்துவிடும். சூரியனும் சந்திரனும் முறையே பித்ருகாரகனாகவும் சந்திரன் மாத்ருகாரகனாகவும் இருப்பதால் பெற்றொரின் பரிபூரன அன்பும் ஆசியும் குழந்தைக்கு கிடைத்துவிடும்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,042
Likes
3,158
Location
India
#6

ஆயுஷ்ய ஹோமங்கள் செய்யும்போது ஸ்வாஹா தேவி சஹிதம் அக்னி பகவானை வணங்குவதால் செவ்வாய் மற்றும் முருகனின் அருள் கிட்டும். மாமன்மார்கள் தோள் தூக்குவது மற்றும் ஆசீர்வதிப்பதால் புதன் அருள் நிறையும். புரோஹிதர்கள் எனும் அந்தனர்களை கொண்டு ஹோமங்கள் செய்வதாலும் பெரியவர்கள் ஆசி பெறுவதாலும் குரு அருள் வற்றாமல் கிடைக்கும்.

கலஸாபிஷேகம் மற்றும் புதுத்துணி விருந்துணவால் சுக்கிரன் அருள் நிறைய கிடைக்கும். எண்ணைத் தேய்த்து குளிப்பதால் சனைஸ்வரன் அருள் கிட்டிவிடும். அம்மாவழி தாத்தா பாட்டிகள் மற்றும் அப்பா வழி தாத்தா பாட்டிகளின் ஆசிகளால் ராகு கேதுகளின் ஆசிகளும் கிட்டிவிடும். நவக்கிரகங்களோடு ஆயுர்தேவதையின் ஆசியும் அளவில்லாமல் கிட்டும்.

பாலாரிஷ்டம்

ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து 12 வயது வரை ஜாதகம் பார்க்க கூடாது என ஜோதிட சாஸ்திரம் வலியுறுத்துகிறது. குழந்தையின் முதல் நான்கு வயது வரை தாயின் பாப கர்மத்தையும் ஐந்து வயது முதல் எட்டு வயது வரை தந்தையின் பாப கர்மத்தையும் ஒன்பது வயது முதல் பன்னிரெண்டு வயது வரை தனது சுய பாப கர்மத்தையும் அனுபவிக்கும் காலமாகும். எனவே எந்த வயதில் ஒருவருக்கு நோய் ஏற்பட்டுள்ளது என்பதை பொருத்து கர்ம வினையை தீர்மானிக்கலாம். என்றாலும் பன்னிரெண்டு வயது வரை பாலாரிஷ்ட தோஷங்களை அறிய ஜோதிடம் தடை செய்யவில்லை. ஒரு குழந்தையை பாலரிஷ்ட தோஷம் தாக்கும் காலம் 12வது வரையே ஆகும். எனவே குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 12 வயது வரை கட்டாயம் ஆயுஷ்ய ஹோமம் செய்வது குழந்தையின் ஆயுள் வளர்க்கும் பரிகாரங்களாகும்.

ஆங்கில தேதி பிறந்தநாள் அவசியமா?

இதையெல்லாம் இழந்துவிட்டு ஆங்கில தேதியில் கொண்டாடுவது காலம் காலமாக கடைபிடிக்கும் நமது உன்னதமான மரபுகளையும் கலாசாரத்தையும் விட்டொழித்து அன்னிய கலாசாரத்தில் ஊறி திளைப்பது சரியா? சிந்திப்பீர்! மேலும் நேர்மறை எண்ணங்கள் நிறைந்த பிறந்த தினத்தில் எதிர்மறையை பரப்பும் விதமாக மைதாவில் செய்த கேக்கை வெட்டுவதும் மெழுகு வர்த்தியை ஊதி அனைப்பதும் என்ன நன்மையை தரப்போகிறது?

மேலும் ஆங்கில கலாசாரபடி பிறந்தாலும் மணந்தாலும் விவாகரத்தானாலும், காதலித்தாலும், காதல் பிரிவு நேர்ந்தாலும் வெற்றி பெற்றாலும், தோல்வியுற்றாலும் கேக் வெட்டி கேண்டில் அனைத்து கொண்டாடுகின்றனர். இதனால் ஏதாவது நன்மை பயக்குமா?

இன்னும் சில கார்பரேட் அலுவலகங்களில் பிறந்த நாள் கொண்டாடுகிறேன் பேர்வழி என கூற கேக்கை வெட்டி முகம் மற்றும் தலைகளில் பூசி மகிழ்கின்றனர். நமக்கு ஆயுளை கூட்டும் தெய்வங்களுக்கு இப்படிதான் நன்றி கூறுவதா?

எங்கள் குடும்பத்தில் அனைவரும் ஜென்ம நக்ஷத்திரத்தில் தான் எனது பிறந்த நாளை கொண்டாடுகிறோம். அப்ப நீங்களும் தயார்தானே? உங்களுக்கு ஜென்ம நக்ஷத்திரம் தெரியவில்லையெனில் உங்கள் பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த ஊர் போன்ற விவரங்களுடன் என்னை (அஸ்ட்ரோ சுந்தரராஜன்) அனுகினால் உங்கள் ஜாதகம் (ஒரு பக்கம்) இலவசமாக அனுப்பி வைக்கப்படும்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,042
Likes
3,158
Location
India
#7
⁠⁠⁠ராஜயோகம் தரும் ராகு பகவான் - தோஷங்களும் பரிகாரங்களும்!


`யோகக்காரகன் என்று போற்றப்படும் ராகு பகவான் செல்வத்தைக் கண்மூடித்தனமாக அள்ளித்தரும் அற்புத வள்ளல்’’ என்கிறார் ஜோதிட முனைவர் கே.பி.வித்யாதரன். கூடவே, ராகு தோஷமும் அதற்குரிய பரிகாரங்களும் என்னென்ன என்பதையும் விளக்குகிறார்.மண்ணுலகில் பிறந்த மனிதர்களனைவரும் செல்வச் செழிப்புடன் வாழவே விரும்புகிறோம். ஆனால், ஒரு சிலருக்கு மட்டுமே அப்படி செல்வத்துடனும் செல்வாக்குடனும் வாழும் வாழ்க்கை கிடைக்கிறது. கடைக்கோடி நிலையில் இருந்தவர்கள் திடீரென வேகமாக முன்னேற்றம் அடைவதைக் காண்கிறோம். அதற்குக் காரணம் என்னவென்று ஆய்வுசெய்து பார்த்தால், அவர்களின் ஜாதகத்தில் ஏதேனும் ஒரு கிரகம் வலுப்பெற்று, அவருடைய தசாபுக்தி நடைபெறும்போது முன்னேற்றம் ஏற்படும். ஆனால், ஒரு சிலருக்கு திடீரென அவர்கள் நினைத்துப் பார்த்திடாதபடி ராஜயோகம் அமையப்பெறுவதையும் காணலாம். `
யோகக்காரகன்’ என்று போற்றப்படும் ராகு பகவான் செல்வத்தைக் கண்மூடித்தனமாக அள்ளித்தரும் அற்புத வள்ளல்.


தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து, அமுதம் எடுத்து, அதை உண்டபோது, தேவர்களுக்கு மத்தியில், ராகு எவரும் அறியாதவாறு தேவர்போல வேடந்தரித்து, அமுதத்தை அருந்தச் சென்றார். அப்படி அவர் அமுதத்தை அருந்தும் நேரத்தில் சூரியன், சந்திரனால் கண்டுபிடிக்கப்பட்டார். 'அமுதம்' பரிமாறிக்கொண்டிருந்த மகாவிஷ்ணு, மிகவும் சினமுற்று தமது சக்கரத்தினால் அவரது சிரத்தைக் கொய்துவிட்டார். எனவே, அவரது உடல் தலை வேறு, உடல் வேறு என இரண்டு துண்டுகளாக ஆகிப்போனது.


ஆனால், அமுது உண்டதால் இறவா வரம் பெற்ற ராகு, மகாவிஷ்ணுவை நோக்கி கடுந்தவம் புரியலானார். உடனே, மகாவிஷ்ணு அவர் முன் தோன்றி, ராகுவின் தவத்தைப் புகழ்ந்து, நவ கோள்களில் ஒருவனாக மனிதனின் சிரசும் (தலை), பாம்பின் உடலுடன் கருமை நிறம் கொண்டவராக இருந்து அருள்புரிய ஆணையிட்டார். மேலும், தென்மேற்கு திசைக்கு அதிபதியாக, கிரகங்களில் பெண் கிரகமாகவும், நிறங்களில் கருமை நிறமாகவும் வடிவத்தில் உயரமானவனாகவும், கிரக அவயங்களில் தொடை, பாதம், கணுக்காலுக்கு உரியவராகவும், உலோகப் பொருளில் கருங்கல்லாகவும் இருக்கும் ராகுதான் அந்நிய பாஷை களுக்கும் காரகத்துவம் பெறுகிறார்.

ரத்தினங்களில் கோமேதகத்துக்கும், வஸ்திரங்களில் கருமை நிறத்துக்கும், வாகனங்களில் ஆடாகவும், சமித்தில் அருகாகவும், சுவையில் புளிப்பாகவும், உளுந்து அன்னத்தில் விருப்பம் கொண்டவராகவும், பஞ்ச பூதங்களில் ஆகாய கிரகமாகவும், நாடியில் பித்த நாடி உடையவராகவும் திகழ்கிறார்.


இவரின் அதிதேவதைகள் காளி, துர்கை, கருமாரியம்மன். குணங்களில் 'தாமஸ குணம்' கொண்டவராகவும், திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரங்களுக்கு அதிபதியாகவும் இருக்கிறார்.


ஒவ்வொரு ராசியிலும் சுமார் ஒன்றரை ஆண்டுகள் சஞ்சரிக்கிறார். இவரது தசாபுக்தி 18 ஆண்டுகளாகும். ‘ராகுவைப் போல் கொடுப்பவரும் இல்லை... ராகுவைப் போல் கெடுப்பவரும் இல்லை’ என்று இவ்வுலகம் புகழ்ந்து போற்றும்படியாகச் செயல்படுபவர் ராகு மட்டுமே.
சாயா கிரகமான ராகு அனைத்து ஜீவராசிகளிலும் அருளாட்சி புரிந்துவருகிறார். எனினும், மானிடர்களாகிய நமக்கு அவரவர் லக்னப்படி சில இடங்களில் சாதாரண பலன்களும், சில இடங்களில் மிகப் பிரபலமான ராஜயோகத்தையும் அள்ளித் தருகிறார்.


* லக்னத்தில் ராகு இருந்தால், ஜாதகர் தேகபலன் உடையவராகவும், பிடிவாத குணம் கொண்டவராகவும், வறட்டு வேதாந்தம் பேசுபவராகவும் இருப்பார்.
* 2-ம் இடத்தில் இருந்தால், முன்கோபம் கொண்டவர். சுடுசொல் சொல்பவராக இருப்பார். ஆடம்பரச் செலவு செய்வதில் ஆர்வம் இருக்கும். தனக்கு சரியெனப் படுவதை மட்டுமே செய்வார்.
* 3 - ம் இடத்தில் இருந்தால், சகோதரி உடல் நலியும். அகால போஜனமும் ஏற்படும். சதா பிரயாணமும் செய்பவராக ஜாதகர் இருப்பார். பொன் நகைகள் சேரும் பாக்கியம் உண்டு.
* 4 - ம் இடத்தில் இருந்தால், தாயாருக்கு  உடல் நலிவு ஏற்படும். அகால போஜனமும் சதா பிரயாணமும் செய்பவர். பொன் நகைகள் சேரும் பாக்கியம் உண்டு.

* 5 - ம் இடத்தில் இருந்தால், புத்திரத் தடைகளும், தோஷமும் உண்டு. பூர்வ புண்ணியத்தில் தடை இருக்கும்.
* 6 - ம் இடத்தில் இருந்தால், நல்லறமான இல்லறம், செல்வம் செல்வாக்கு, தீர்க்காயுள் உண்டு.
* 7 - ம் இடத்தில் இருந்தால், திருமணத்தடை, கலப்பு மணம், வீண் பழிச்சொல் ஏற்படும். திடீர் யோகமும் உண்டு.
* 8 - ம் இடத்தில் இருந்தால், கடின மனம் கொண்டவராக இருப்பார். ஆயுள் விருத்தி உண்டு.
* 9 - ம் இடத்தில் இருந்தால், தந்தைக்கு நஷ்டம் ஏற்படும். பிதுர் சொத்துக்களில் வில்லங்கம் உண்டாகும். ஆனாலும், ஜாதகருக்கு பூமி, பொருள் சேர்க்கை உண்டு.
* 10 - ம் இடத்தில் இருந்தால், கோடீஸ்வரர். பெண்கள் மூலம் பொருள் சேரும். நவரத்தினங்கள் சேரும். யோகமான வாழ்வு ஏற்படும். வெளிநாடு செல்வார்.
* 11 - ம் இடத்தில் இருந்தால், பிதுர் தோஷம் உண்டு. ஜாதகருக்கு திடீர் தனவரவு உண்டு. அசையா சொத்துக்களான நிலத்தின் மூலம் யோகம் கிடைக்கும்.
* 12 - ம் இடத்தில் இருந்தால் தூக்கம் கெடும். சதா சிந்தித்துக் கொண்டே இருப்பார். அதிகச் செலவுகள் செய்பவர். சர்ப்ப தோஷமும் உண்டு.
இவரது வீடான கன்னியில் ஆட்சியுடனும், விருச்சிகத்தில் உச்சமாகவும் இருப்பார். ராகு பகவான் பலன் தரக்கூடிய இடங்களாவன. கேந்திரஸ்தானங்களான 1, 4, 7, 10 -ம் இடங்களிலோ திரிகோண ஸ்தானங்களான 1, 5, 9 -ம் இடங்களிலோ சுபக் கிரகங்களுடன் சேர்ந்தோ, சுபக்கிரகங்களால் பார்வையைப் பெற்று இருந்தாலோ, அவரது தசா புக்தி காலங்களில் திடீர் யோகம் ஏற்பட்டு ஜாதகர் பெரும் செல்வந்தராவார்.


ஜாதகத்தில் லக்னம் மற்றும் ராசி ஆகிய இடங்களிலிருந்து 2,4, 5, 7, 8, 12-ம் இடங்களில் இருப்பது நாகதோஷமாகும். நாகதோஷம் இருந்தால் திருமணத்தடை ஏற்படுத்தும்.
திருமணத்தின் போது எத்தகைய ஜாதகங்களைச் சேர்க்கலாம்?
* ஜாதகத்தில் ஆண் பெண் இருவருக்கும் நாக தோஷம் இருந்தால், அத்தகைய ஜாதகங்களைச் சேர்க்கலாம்.
* ஒருவருக்கு ஜாதகத்தில் நாகதோஷம் இருந்து, மற்றவருக்கு நாகதோஷம் இல்லாவிட்டால் பொருத்தக்கூடாது.
* ஆண், பெண் இருவர் ஜாதகத்திலும் சுபர் பார்வையினால் நாகதோஷம் நீங்குமானால் அத்தகைய அமைப்புள்ள ஜாதகத்தை சேர்க்கலாம்.
அசுவினி, மகம், மூலம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு கேது தசை ஜன்ம நட்சத்திர தசையாக வருவதால் இவர்களுக்கு பாதிப்பு கிடையாது.

* திருவாதிரை சுவாதி, சதயம் ஆகிய 3 நட்சத்திரங்களும் ஜன்ம நட்சத்திரமாக இருந்தால், தோஷமாகாது.
ராகு தோஷமுள்ளவர்கள், திருநாகேஸ்வரம், காளஹஸ்தி ஆகிய இடங்களுக்குச் சென்று பரிகார பூஜை செய்து வரலாம். ராகு காயத்ரி மந்திரத்தை காலை மாலை வேளைகளில் சொல்லி வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.
ராகு காயத்ரி மந்திரம்:
ஓம் நாகத்வஜாய வித்மஹே
பத்ம அஸ்தாய தீமஹி
தன்னோ ராகு ப்ரசோதயாத்
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,042
Likes
3,158
Location
India
#8
சித்தர்களும்... நட்சத்திரமும்.. பிரச்சனைகளும்

1527404176842.png

மனிதர்கள் யாவரும் ஏதாவது ஒரு திதியில் நட்சத்திரத்தில் பிறந்திருப்பார்கள். இதை அவரவர் ஜாதகத்தில் அறியலாம். பலரும் தன் பாவ வினையால் எவ்வளவு முயற்சித்தும் தெய்வ அருளை பெறமுடியாமல் இருப்பார்கள். அவர்கள் தங்கள் திதியிலோ அல்லது நட்சத்திரத்திலோ பிறந்த சித்தர்களைக் கண்டு வணங்கினால் பிரச்சினை தீர வழிபிறக்கும்.

ஒரு முறையாவது உங்களுக்குரிய சித்தர் ஜீவ சமாதிக்கு நேரில் சென்று, ஜென்ம நட்சத்திரத்திலோ, திதியிலோ சென்று தரிசித்துவிட்டு பின்பு வீட்டிலேயே மறுமுறையில் அந்த குறிப்பிட்ட நாளில் மாதந்தோறும் உபவாசம் இருந்து வணங்கி வந்தால் பல மாறுதலான பலன்களை காண முடியும்.

சித்தர்கள் எந்த திதியில் பிறந்தார்கள் என்பதை வரலாறு சரியாக குறிப்பிடவில்லை. ஆனால் நட்சத்திரங்களையும், பிறந்த தமிழ் மாதங்களையும் குறிப்பிட்டுள்ளார்கள். அவற்றை இங்கே கொடுத்திருக்கிறோம். அதன்படி சென்று வழிபட்டு நலம் காணுங்கள். பெரும்பாலும் சித்தர்கள் ஜீவ சமாதி, சிவாலயமாகவே இருக்கும்.

* அஸ்வினி நட்சத்திரத்திற்கு உரிய சித்தரின் பெயர் காளங்கிநாதர். இவரது சமாதி மற்றும் சக்தி அலைகள் கஞ்சமலை மற்றும் திருக்கடையூர் ஆகிய தலங்களில் உள்ளது. அவரவருக்கு பெயரே மந்திரம். எனவே சித்தர்களின் பெயரை மரியாதையாக உச்சரித்தலே போதும். ‘ஓம் குருவே சரணம்’ என மூன்றுமுறை கூறி, ‘ஓம் ஸ்ரீ காளங்கிநாதர் சித்த குருசுவாமியே சரணம்.. சரணம்..’ என முடிந்தளவு கூறலாம்.

மற்ற நட்சத்திரக்காரர்களும் இதே முறையில் தான் மந்திரம் கூற வேண்டும். காளங்கிநாதர் என்ற பெயரை நீக்கி உங்கள் சித்தருக்கான பெயரை சேர்த்துக்கொள்ளவும்.

* பரணி நட்சத்திரத்திற்கு உரிய சித்தர் போகர் ஆவார். இவருக்கு பழனி முருகன் சன்னிதியில் சமாதி உள்ளது.

* கார்த்திகை நட்சத்திரம் ரோமரிஷி சித்தருக்கு உரியது. இவருக்கு சமாதியும் இல்லை. இவரது உடல் அழியவும் இல்லை. நேரடியாக கயிலாயத்திற்கு சென்றுவிட்டார் என வரலாறு கூறுகிறது. இவரை திங்கட்கிழமை வெள்ளை ஆடை அணிந்து, வடக்கு நோக்கி திருக்கயிலை இருப்பதாக பாவித்து வணங்கவும்.

* ரோகிணி நட்சத்திரத்திற்கு உரியவர் சித்தர் மச்சமுனி ஆவார். இவர் ஜீவ சமாதி திருப்பரங்குன்றத்தில் உள்ளது.

* மிருகசீரிஷம் நட்சத்திரத்திற்குரியவராக இரண்டு சித்தர்கள் இருக்கிறார்கள். ஒருவர் பாம்பாட்டி சித்தர். மற்றொருவர் சட்டமுனி சித்தர். இதில் பாம்பாட்டி சித்தரின் ஜீவ சமாதி சங்கரன்கோவிலில் உள்ளது. சட்டமுனி சித்தரின் சமாதி ஸ்ரீரங்கத்தில் இருக்கிறது.

* திருவாதிரை நட்சத்திரம் சித்தர் இடைக்காடாருக்கு உரியது. இவரது ஜீவசமாதி, நெருப்பு பிழம்பாக ஈசன் நின்ற திருவண்ணாமலையில் அமைந்துள்ளது.* புனர்பூச நட்சத்திரத்திற்குரியவர் சித்தர் தன்வந்தரி ஆவார். இவர் வைத்தீஸ்வரன் கோவிலில் ஜீவ சமாதி ஆனவர்.

* பூசம் நட்சத்திரம் கமல முனி சித்தருக்கு உரியது. இவர் திருவாரூரில் ஜீவ சமாதி அடைந்துள்ளார்.

* ஆயில்யம் நட்சத்திரத்திற்கான சித்தர் அகத்தியர். இவரது ஒளிவட்டம் குற்றாலப் பொதிகை மலையில் உள்ளது. சமாதி கேரள தலைநகரம் திருவனந்தபுரத்தில் இருக்கிறது.

* மகம் நட்சத்திரத்தில் அவதரித்தவர் சிவ வாக்கிய சித்தர் ஆவார். இவரது ஜீவ சமாதி கும்பகோணத்தில் உள்ளது.

* பூரம் நட்சத்திரத்தில் தோன்றியவர் ராமதேவ சித்தர். இவரது ஜீவ சமாதி அரபு நாடான மெக்காவில் உள்ளது. இவர் ஒளிவந்து போகும் இடம் அழகர்மலை. நம் நாட்டினர் இவரை வழிபட அழகர் மலைக்குத் தான் செல்வார்கள். பூரம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்டாளையும் வழிபடலாம். அவரை ஸ்ரீவில்லிபுத்தூரில் வழிபட வேண்டும்.

* உத்திரம் நட்சத்திரம் சித்தர் காகபுஜண்டருக்கு உரியது. இவர் ஜீவசமாதி அடைந்த இடம் திருச்சி உறையூரில் உள்ளது.

* ஹஸ்தம் நட்சத்திரம் சித்தர் கருவூராருக்கு உரியது. இவர் சமாதி கரூரில் உள்ளது. இவரது ஒளிவட்டம் வந்து செல்லும் இடம் தஞ்சாவூர் பெரிய கோவில் ஆகும்.

* சித்திரை நட்சத்திரத்திற்கு உரியவர், சித்தர் புண்ணாக்கீசர் ஆவார். நண்ணா சேர் என்ற இடத்தில் இவரது ஜீவ சமாதி உள்ளது.

* சுவாதி நட்சத்திரத்திற்கான சித்தர் புலிப்பாணி ஆவார். இவரது சமாதி பழனிக்கு அருகில் உள்ள வைகாவூர் என்ற இடத்தில் இருக்கிறது.

* விசாகம் நட்சத்திரத்திற்கான சித்தர் நந்தீசர் மற்றும் குதம்பை சித்தர் ஆவர். நந்தீசர் காசி நகரத்திலும் (பனாரஸ்), குதம்பை சித்தர் மாயவரத்திலும் ஜீவசமாதி அடைந்துள்ளனர்.

* அனுஷம் நட்சத்திரம் சித்தர் வால்மீகிக்கு உரியது. இவருக்கு எட்டுக்குடியில் ஜீவசமாதி உள்ளது.

* கேட்டை நட்சத்திரம் பகவான் வியாசருக்கு உரியது. இவர் உடல் அழிவற்றது. எனவே காற்றோடு காற்றாக கலந்து இருப்பார். இவரை நினைத்தாலே போதும். அவ்விடம் வருவார்.* மூலம் நட்சத்திரத்திற்கான சித்தர் பதஞ்சலி ஆவார். இவர் சமாதி ராமேஸ்வரத்தில் உள்ளது.

* பூராடம் நட்சத்திரத்திற்குரியவரும் ராமேதவர் சித்தரே. இவரது ஜீவ ஒளியை அழகர்மலையில் தரிசிக்கலாம்.

* உத்திராடம் நட்சத்திரத்திற்கான சித்தபிரான் கொங்கணர். இவர் ஜீவசமாதி திருப்பதி ஆகும்.

* திருவோணம் நட்சத்திரம் சித்தர் தட்சிணாமூர்த்திக்கு உரியது. இவர் சமாதி புதுச்சேரி அடுத்து உள்ள பள்ளித்தென்னல் என்ற இடத்தில் உள்ளது.

* அவிட்டம் நட்சத்திரம் சித்தர் திருமூலருக்கு உரியது. இவர் சிதம்பரத்தில் ஜீவசமாதி அடைந்திருக்கிறார்.

* சதயம் நட்சத்திரத்திற்கு உரியவர் கவுபாலர். இவரின் சமாதி எங்கிருக்கிறது என்பதற்கான தெளிவான குறிப்புகள் இல்லை. எனினும் மன ஒழுக்கத்தோடு இவரை நினைத்தாலே தேடிவந்து அருள்புரிவார்.

* பூரட்டாதி நட்சத்திரத்திற்கான சித்தர் ஜோதிமுனி ஆவார். இவர் ஜோதி வடிவிலே ஜீவனாக உள்ளவர். அதனால் இவருக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் அங்கு அருள்பாலிப்பார்.

* உத்திரட்டாதி இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் டமரகர் சித்தர் ஆவார். இவரும் நேரிடையாக காற்றில் ஐக்கியமாகி கலந்துவிட்டார் என்று வரலாறு கூறுகிறது. இவர் சிவாலயத்தில் ஒலிக்கும் இசை வாத்தியங்களில் ஏழாம் ஓசையின் ஒலியாக வந்து, இறைவனுக்கு இசை முழக்கத்தால் சேவை செய்வார் எனக் குறிப்பிடுகிறார்கள். இவரை வீட்டிலேயே சிறு மணி ஓசையில் வரவழைத்து வணங்கலாம்.

* ரேவதி நட்சத்திரத்திற்கான சித்தர் சுந்தரானந்தர் ஆவார். இவர் ஜீவசமாதி கோவில் மதுரையில் உள்ளது.

மனத்தூய்மையும், உடல் தூய்மையும், கர்ம தூய்மையும் (பாவமற்ற கர்மாவைத் தொடர்தல்) தனிஅறையும் கொண்டு, ஒற்றை தீபம் மட்டும் ஏற்றி மன ஒருநிலைப்பாட்டோடு உங்கள் சித்தரை வணங்கி வாருங்கள். நிச்சயம் அவர்கள் அருளை தர தவறமாட்டார்கள்.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,227
Likes
543
Location
chennai
#9
விசாகம் நட்சத்திர வாழ்க்கை ரகசியம்

இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் பதினோராவது இடத்தை பெறுவது விசாக நட்சத்திரமாகும். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இதன் அதிபதி தேவகுருவான குருபகவானாவார். இதன் 1, 2, 3ம் பாதங்கள் துலாம் ராசிக்கும், 4-ம் பாதம் விருச்சிக ராசிக்கும் உரியதாகும்.

விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தான தருமங்கள் செய்வதில் வல்லவராக, வேண்டியவர், வேண்டாதவர் என பிரித்து பார்க்காதவராக இருப்பார்கள். முன் கோபம் இருந்தாலும் நல்ல குணம் கொண்டவராகவும், அறிவாற்றல் மிக்கவராகவும் இருப்பார்கள். நியாய அநியாயங்களை பயப்படாமல் எடுத்துரைப்பார்கள். வசீகரமான முக அமைப்பும், கட்டாண உடல்வாகும் சிவந்த கண்களும் உடையவர்கள், மக்களிடம் அடக்கமாகவும் அன்பாகவும் பேசக்கூடியவராகவும் இருப்பார்கள்.

விசாக நட்சத்திரகாரர்கள் நல்ல கல்வி பெற்று, அறிவாற்றல் உடையவராக இருப்பதால் மனநோய் மருத்துவராகவும், கோவில் அறநிலையத்துறையில் பணிபுரிபவராகவும் மேடை பேச்சாளர்களாகவும் அரசியல் மற்றும் அரசு துறைகளில் பணிபுரிபவர்களாகவும் இருப்பார்கள். பல இடங்களில் உயர் பதவிகளை வகிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். கலை கணிதம் போன்றவற்றிலும் ஈடுபாடு அதிகம் இருக்கும்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,042
Likes
3,158
Location
India
#10
மேஷ லக்னத்துக்குரிய சுப அசுப கிரகங்கள்!


மேஷ லக்னத்துக்குச் சனி, புதன், சுக்கிரன் இவர்கள் பாபிகள். குரு சூரியன் இவர்கள் சுபர்கள். சனி, குரு இவர்களின் சேர்க்கையால் மட்டும் சுபம் என்ற ராஜயோகம் உண்டாவதில்லை.

அந்தச் சனியின் சேர்க்கையால் குருவுக்குப் பாபியாயிருக்கும் தன்மையும் உண்டாகிறது. மாரகனாகக் கூறப்பட்ட சுக்கிரன் நேரில் மாரகனாக ஆகிறான்.

சனி, புதன், சுக்கிரன் என்ற இந்தப் பாபக் கிரகங்களும் மாரகர்களாகவே ஆகின்றனர். ஆகவே மேஷ லக்கின ஜாதகனுக்கு இங்கு கூறியதைக் கொண்டு சுபாசுப பலன்களை யூகித்து அறியலாம்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.