3 மாதத்தில் இந்த ஒரு பானத்தால் பாதி உடல் எ&amp

honey rose

Ruler's of Penmai
Joined
Aug 27, 2013
Messages
10,217
Likes
12,697
Location
chennai
#1
3 மாதத்தில் இந்த ஒரு பானத்தால் பாதி உடல் எடையைக் குறைத்து அதிசயமாக மாறிய பெண்!


நிறைய பேர் உடல் பருமனால் அவஸ்தைப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக பெண்கள் தான் உடல் பருமன் பிரச்சனையால் மிகுதியாக கஷ்டப்படுகிறார்கள். இதற்காக தங்களது உடல் எடையைக் குறைக்க பல்வேறு டயட் மற்றும் உடல் எடையைக் குறைக்க கடைகளில் விற்கப்படும் பொருட்களையெல்லாம் முயற்சித்திருப்பார்கள்.

மேலும் இதுவரை நாம் எத்தனையோ உடல் எடையைக் குறைக்க உதவும் வழிகளைப் பற்றி பார்த்திருப்போம். ஆனால் இன்று இக்கட்டுரையில் நாம் பார்க்கப் போவது, உடல் பருமனால் அவஸ்தைப்பட்டு வந்த ஓர் பெண், தினமும் ஒரு பானத்தை பருகி வந்து, தன் உடல் எடையில் இருந்து பாதியைக் குறைத்து பலரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் மாறியிருப்பது பற்றி தான்.

பயன்படுத்திய
பொருட்கள்


உடல் எடையைக் குறைக்க இந்த பெண் பட்டை மற்றும் தேனைப் பயன்படுத்தியுள்ளார். மேலும் தன் உடல் எடை குறைவதற்கு முக்கிய காரணமாக இந்த இரண்டு இரண்டு பொருட்களையும் கூறுகிறார். அதுமட்டுமின்றி, இந்த வழியால் உடல் எடை குறைந்ததோடு, அவரது உடல் ஆரோக்கியமும் மேம்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

பானம் செய்ய தேவையான பொருட்கள்


பட்டைத் தூள் - 1 டீஸ்பூன்
தேன் - 2 டீஸ்பூன்
தண்ணீர் - 250 மிலி

செய்யும் முறைமுதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் 1 டீஸ்பூன் பட்டைத் தூள் சேர்த்து கலந்து கொதிக்க வைத்து இறக்கி, குளிர வைக்க வேண்டும். திரவம் குளிர்ந்ததும், அதில் தேனை சேர்த்து கலந்துப் பருக வேண்டும்.

எப்போது பருக வேண்டும்?


இந்த பானத்தை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளரும், இரவில் படுக்கும் முன் ஒரு டம்ளரும் பருகி வர வேண்டும். இந்த முறையை தொடர்ந்து ஒரு மாதம் பின்பற்றினால், உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம். இந்த பெண் இந்த பானத்தை மூன்று மாதம் பருகி வந்ததில், தன் உடல் எடையில் இருந்து பாதியைக் குறைத்துள்ளார்.

குறிப்பு


இந்த வழியைப் பின்பற்றும் போது, ஜங்க் உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் இதர ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்களுக்கு முழுக்கு போட வேண்டும். மேலும் தினமும் உடற்பயிற்சி செய்வதுடன், பழங்கள் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்து வர வேண்டும்.
 
Last edited:

honey rose

Ruler's of Penmai
Joined
Aug 27, 2013
Messages
10,217
Likes
12,697
Location
chennai
#2
Re: 3 மாதத்தில் இந்த ஒரு பானத்தால் பாதி உடல் எ

செரிமானம் மேம்படும்

இந்த பானத்தைப் பருகுவதன் மூலம், குடலில் உள்ள டாக்ஸின்கள் வெளியேற்றப்பட்டு, குடல் ஆரோக்கியமாக செயல்படும். மேலும் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் அளவும் மேம்பட்டு, செரிமானம் சீராக நடைபெறும்.

ஆரோக்கியமான
இதயம்

பட்டை மற்றும் தேன் கலந்த பானத்தைப் பருகுவதால், இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாய்களில் கொழுப்புக்கள் படிவது தடுக்கப்பட்டு, இரத்த ஓட்டம் சீராக இருந்து, இதய நோய்கள் வருவது தடுக்கப்படும்.

ஆற்றலை
மேம்படுத்தும்

தேனில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்ள் அதிகம் உள்ளது. அதேப் போல் பட்டையில் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் கே, மாங்கனீசு மற்றும் நார்ச்சத்து உள்ளது. இவை இரண்டையும் ஒன்றாக எடுக்கும் போது, நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, உடலின் ஆற்றலும் மேம்படுத்தப்பட்டு, நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட உதவும்.

கொலஸ்ட்ரால் குறையும்

சுடுநீரில் பட்டையுடன் தேனைக் கலந்து பருகும் போது, உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறையும். இதனால் இரத்த அழுத்த பிரச்சனைகள் ஏற்படுவதும் தடுக்கப்படும்.

நோயெதிர்ப்பு
சக்தி அதிகரிக்கும்

நோயெதிர்ப்பு சக்தி வலிமையுடன் இருந்தால் தான், நோய்கள் அண்டாமல் இருக்கும். தேனிலும், பட்டையிலும் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரல் பொருட்கள் அதிகம் உள்ளதால், இந்த கலவையை உட்கொள்வதால், உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும்.
 

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#3
Re: 3 மாதத்தில் இந்த ஒரு பானத்தால் பாதி உடல் எ

Very nice sharing Divi :thumbsup
 

shrimathivenkat

Yuva's of Penmai
Joined
Sep 30, 2012
Messages
8,456
Likes
17,261
Location
chennai
#4
Re: 3 மாதத்தில் இந்த ஒரு பானத்தால் பாதி உடல் எ

நல்ல பகிரவுமா.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.