3 வகை உடல் 6 வகை பருமன்!

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
3 வகை உடல் 6 வகை பருமன்!
முனைவர் மு.ஸ்டாலின் நாகராஜன்

உலகத்திலேயே மிகவும் முக்கியமானது ஆரோக்கியமான உடல்தான்! ஆனால், அந்த ஆரோக்கியத்தைக் கட்டிக்காக்க முடியாமல் பலவித நோய்களால் கஷ்டப்பட்டு, எல்லாம் இருந்தும் அவற்றை அனுபவிக்க முடியாத எத்தனையோ பேரை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆரோக்கியமான உடல்நலத்துக்கு மிக அவசியம் அளவான எடை. பருமன் என்கிற பிரச்னையே பலவித பயங்கர நோய்களுக்கும் அடிப்படை.

மனிதர்கள், அவர்கள் பிறக்கும் தருணத்தில் இருந்து சிறிது காலம் வரை பரம்பரை (Genetics) வழியில் 3 வகை உடல் அமைப்பை பெறுவார்கள். இவையே அடிப்படை உடல் அமைப்புகள்.

1. மிக மெலிந்த உடல்வாகு (Ectomorph)‘என்னப்பா இது... இந்த ஆளைப் பார்த்தா ஒரு மாதம் எதுவும் சாப்பிடாமல் பட்டினி கிடந்தாற்போல, வாடிப்போய் எலும்பும் தோலுமாக இருக்கானே’ என்று சொல்லும்படி உள்ளவர்கள்... பார்ப்பதற்கு எந்த நேரமும் ஒடிந்து, முறிந்து விடுவது போல இருப்பார்கள். சிறிய மெல்லிய எலும்புகள், எலும்போடு ஒட்டிய தசைகள் என சற்று வலிமை குறைந்தவர்களாகவே காணப்படுவர்.

2. கட்டுக்கோப்பான உடல்வாகு (Mesomorph) உடற்பயிற்சியே செய்யாத உடல். ஆனால், தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்வதைப் போன்ற ஒரு கட்டுக்கோப்பான உடல் அமைப்பு. அளவான மெலிந்த உடம்பு, சராசரியான ஜீரண சக்தி, சராசரியான எலும்பு, தசை அமைப்புகள். நல்ல வலிமையான உடல் இந்த வகை உடல்வாகின் சிறப்பம்சமாகும். இவர்களை பொதுவாக Naturally athletic என குறிப்பிடலாம்.

3. குண்டான உடல்வாகு (Endomorph)குண்டான தோற்றமுடைய இந்த உடல்வாகு உள்ளவர்களை சற்று ஜீரண சக்தி குறைந்தவர்களாகவே விஞ்ஞானிகள் உறுதி செய்கின்றனர். அதிக எடையும் நல்ல வலிமையும் உடையவர்கள், சாப்பாட்டு பிரியர்கள். அவர்களின் பசியின் எண்ணத்தில் எதையும் எந்த நேரத்திலும் சாப்பிடத் தயாரானவர்கள். தடித்த எலும்புகள் மற்றும் தசைகளை உடையவர்கள்.

6 வகை பருமன் (Six Types of Obesity)

1. குடிப்பழக்கத்துக்கு அடிமையான இளைஞர்கள்.
2. வாழ்க்கையில் சந்தோஷம் அற்ற நடுத்தர வயதினர்.
3. சந்தோஷமான வயோதிகர்கள்.
4. நல்ல ஆரோக்கியம் உள்ள இளம்பெண்கள்.
5. நல்ல பணவசதி படைத்தவர்கள்.
6. மிகவும் மோசமான/ஆரோக்கியமற்றவர்கள்.

அறவே குடிப்பழக்கத்தை நிறுத்துவது அல்லது சிறிது சிறிதாக குறைத்துக் கொள்வதே இளைஞர்கள் அதிக பருமனைக் குறைக்க ஒரே வழி. அதிக கவலை, மன உளைச்சல், ஏராளமான எதிர்பார்ப்புகள், அளவுக்கு அதிகமான பேராசை, பணத்திமிர், ‘நான் சந்தோஷத்தின் உச்சியில் இருக்கிறேன்’ என்ற அகம்பாவம், தன் உடலைப் பற்றியோ, எதைப் பற்றியுமோ கவலைப்படாத நபர்கள் என மேலே கூறப்பட்ட அனைவருக்கும் நல்ல உடற்பயிற்சியோடு கூடிய மனோதத்துவ சிகிச்சையும் (Increasing Exercise Mixed With Psycho -Social Counselling) அளிக்க வேண்டியது மிக அவசியம் என விஞ்ஞானிகள்
வற்புறுத்துகின்றனர்.

பருமனில் இருந்து ஆரோக்கியமுள்ள இளைஞர்கள் மீண்டும் சராசரி உடல்நிலைக்கு திரும்புவது கடினமான காரியமல்ல. உடற்பயிற்சியோடு கூடிய உணவுக் கட்டுப்பாடுதான் பருமனை குறைக்க அருமையான அற்புதமான வழி!நல்ல உடற்பயிற்சி செய்யாத காரணத்தால்தான் உடல் பருமனாகி விட்டது என்று கூறுவது முட்டாள்தனமான வாதம். மோசமான உணவுப் பழக்கத்தையே நாம் சாட வேண்டியுள்ளது.

இதோடு கூடிய, உட்கார்ந்த இடத்தை விட்டு அணு அளவு கூட அசையாத தற்கால வாழ்க்கைமுறையும் அதிக பருமன் அடைய முக்கிய காரணமாக அமைகிறது. அடிப்படை உடல் உழைப்புடன் கூடிய அளவான, தேவையான உணவே, உடலை வலிமையுடனும் அழகான தோற்றத்தோடும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.

கடந்த 30 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு பருமன் ஆசாமிகளின் எண்ணிக்கை பன்மடங்காக உயர்ந்திருக்கிறது. கண்ட நேரங்களில், தேவைக்கு அதிக உணவு வகைகளை அடைப்பதால் மனிதர்களின் இடுப்புப் பகுதி பெருத்துக் கொண்டே செல்கிறது. உடலுக்கு வேண்டிய, அவசியமான, அளவான உணவே அனைவருக்கும் தேவை. உண்ட உணவு செரிக்க அடிப்படை உடல் உழைப்பு மிகவும் முக்கியம். நல்ல உணவும் அடிப்படை உடல் உழைப்பும் நமது அழகான, ஆரோக்கியமான உடலை பேணிப் பாதுகாக்கும்! உடற்பயிற்சியோடு கூடிய உணவுக் கட்டுப்பாடுதான் பருமனை குறைக்க அருமையான அற்புதமான வழி!
 

kkmathy

Minister's of Penmai
Joined
Jun 9, 2012
Messages
3,189
Likes
6,652
Location
Malaysia
#2
Very good info, Latchmy.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.