3 வேளை உணவே சிறந்த உணவு பழக்கம்! (3 meals a day, a better way to diet)

silentsounds

Guru's of Penmai
Moderator
Joined
Feb 5, 2011
Messages
6,347
Likes
13,490
Location
Chennai
#1
3 வேளை உணவே சிறந்த உணவு பழக்கம்! (3 meals a day, a better way to diet)
இன்றைய அவசர யுகத்தின் தவிர்க்க முடியாத பிரச்சனையாகி விட்ட உடல் பருமன் மற்றும் தொப்பை ஏற்படக் காரணமான கொழுப்பை விரட்ட, உணவு பழக்கம் மிக முக்கியமான ஒன்றாக உள்ளது.
ஒரு சில ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள், உணவை ஒரு நாளைக்கு சிறிது சிறிதாக ஆறு வேளைக்கு உண்பது அதிக கொழுப்பு சேர வழி வகுக்காது என்று கூறியிருந்தனர்.
இந்நிலையில் ஆறு வேளை வேண்டாம்; நாளொன்றுக்கு 3 வேளை உணவே சிறந்தது என்ற புதிய ஆய்வறிக்கை ஒன்றை அமெரிக்கவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள புர்டியு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக உடல் பருமனான நபர்கள் 6 வேளை உண்பதற்குப் பதிலாக, 3 வேளை மட்டும் கலோரி குறைந்த, புரதச்சத்து நிறைந்த உணவு நல்லது என்றும், அது அவர்களுக்கு பசியை குறைத்து, திருப்திகரமான உணர்வை தரும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
நாம் மேற்கூறியபடி உணவை சிறிது சிறிதாக அதிக அளவு உண்பது நல்லது என்ற எண்ணம் பரவலாக ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அந்த ஆராய்ச்சியாளர்கள், 3 வேளை உணவுதான் சிறந்தது என்றும், இந்த "மினி மீல்ஸ்" பழக்கம் எவ்வித பலனையும் தராது என்று அடித்துக்கூறுகின்றனர்.
அதிக உடல் எடை கொண்ட 27 பேர்களை அதிக புரத சத்து கொண்ட உணவுகளையோ அல்லது வழக்கமான புரத சத்து கொண்ட உணவுகளையோ சாப்பிட செய்து இந்த ஆராய்ச்சியாளர்கள் அவ்வப்போது கண்காணித்தனர்.
இவ்வாறு சாப்பிட கொடுத்த உணவை ஐந்து அல்லது ஆறு பாகங்களாக பிரித்துக்கொடுத்து அவற்றை நாள் முழுவதும் ஐந்து அல்லது ஆறு வேளைக்கு சாப்பிட சொல்லியுள்ளனர்.
அதன் பின்னர் சில நாட்கள் கழித்து இவர்களுக்கே மேற்கூறிய உணவை மூன்று வேளையாக பிரித்துக் கொடுத்து, தொடர்ந்து 3 நாட்கள் அவ்வாறு சாப்பிட சொல்லியுள்ளனர்.
இதில் அடிக்கடி அதாவது ஐந்து அல்லது ஆறு வேளை சாப்பிட்டபோது ஏற்பட்டதைக் காட்டிலும், மூன்று வேளை சாப்பிட்டபோது மாலை அல்லது இரவு வரை அதிக திருப்திகரமான உணர்வோடு இருந்ததாக ஆராய்ச்சியில் பங்கேற்ற அதிக உடல் பருமன் கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதே சமயம் இதுதான் சரியான சம விகித உணவு என்று கூறவில்லை.மேற்கூறிய புரத மற்றும் கலோரி அளவு உணவுகளுடன் நார்ச்சத்து மிகுந்த பழங்கள் மற்றும் காய்கறிகளையும் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறது அந்த ஆய்வறிக்கை!

-tamil.webdunia
 

ashaaherb

Friends's of Penmai
Joined
May 29, 2011
Messages
275
Likes
336
Location
Dubai
#3
saapidama sethavan romba kammi... romba saapitu sethavan thaan jaasthi..so control ur tougue to lead a healthy life..health is wealth..can earn wealth with ur health but can't earn health with ur wealth..remember my dear friends :)
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.