40 தொடக்கத்தில் ஆண்களுக்கும் வரும் நோய்க&#2995

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
40 தொடக்கத்தில் ஆண்களுக்கும் வரும் நோய்கள்

ஆண்களில் 15 வயதில் மது மற்றும் சிகரெட் பழக்கம் ஆரம்பித்தவர்களுக்கு, 40 வயதில் கல்லீரல் சிதைவடைய ஆரம்பிக்கும். கண் பார்வை மங்கும். நோய் எதிர்ப்புச் சக்தி பெருமளவு குறையும். நுரையீரல் செயல்திறன் குறையும். சிலருக்கு நுரையீரலிலும், தொண்டையிலும் புற்றுநோய் செல்கள் வளர ஆரம்பிக்கும்.

மது மற்றும் புகைப்பிடித்தல் ஆகிய இரண்டு பழக்கமும் இருந்தால், உணவுக் குழாய் தொடங்கி, மலக்குடல், ஆசனவாய் வரை உள்ள உறுப்புகளில் எதில் வேண்டுமானாலும் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். மரபியல் காரணிகளுடன், தவறான உணவுப்பழக்கம் மற்றும் தவறான வாழ்வியல்முறையைப் பின்பற்றும்போது, சர்க்கரை நோய், உடல் பருமன் வந்துவிடும்.

சர்க்கரை நோயைத் தொடர்ந்து, உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரகச் செயலிழப்பு போன்ற பல பிரச்சனைகள் வரிசை கட்டி நிற்கும். இந்த சமயத்தில் பதின் பருவத்தைப் போலவே மிருகத்தனம் தலைதூக்கும். தனது செயல்களை எதிர்த்து யாரும் எந்தக் கேள்வியும் கேட்கக் கூடாது என்ற எண்ணம் இருக்கும். ஈகோ அதிகரிக்கும்.

யாராவது ஏதாவது கேள்வி கேட்டுவிட்டால், கேள்வி கேட்ட நபர் மீது மிகுந்த கோபம் ஏற்படும். செக்ஸ் ஆர்வம் அதிகமாக இருக்கும். ஆனால், மனைவியுடனான தாம்பத்திய வாழ்க்கையில் ஈர்ப்பு குறையும். எனவேதான், 40 வயதைத் தாண்டிய சில ஆண்கள், மற்றொரு பெண்ணுடனான உறவு எனப் பாதை மாறுகின்றனர். இவை அனைத்தும் மனதளவில் ஏற்படும் மாற்றங்கள்.
 

shrimathivenkat

Yuva's of Penmai
Joined
Sep 30, 2012
Messages
8,456
Likes
17,261
Location
chennai
#2
Re: 40 தொடக்கத்தில் ஆண்களுக்கும் வரும் நோய்க&a

innum ondru iron counts kuraiyum.ethanal theriyathu.athaiyum serthukunga.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.