4th Month Of Pregnancy Diet - நான்காம் மாதத் தொடக்கத்தில் என்ன ச&#3006

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
[h=1]நான்காம் மாதத் தொடக்கத்தில் என்ன சாப்பிடலாம்?[/h]
தாய்மையின் முதல் மூன்று மாதங்கள் அனேகப் பெண்களுக்கு தவிப்பான மாதங்கள். கரு நல்லபடியாகத் தேறி வளர வேண்டுமே என்கிற பயம் ஒரு பக்கமும், வாந்தி, மயக்கம், தலைசுற்றல் என மசக்கை தரும் இம்சை இன்னொரு பக்கமுமாக 3 மாதங்களைக் கடப்பதற்குள் ‘போதும் போதும்’ என்றாகி விடும்.

நான்காம் மாதத் தொடக்கத்தில்...

நிலைமை கொஞ்சம் சீரடையும். மூன்றாம் மாதம் வரை தண்ணீர் குடித்தால் கூட வாந்தி எடுத்துக் கொண்டிருந்தவர்கள், மசக்கை நின்றதும், உணவில் கவனம் செலுத்த வேண்டும். 4-5-6 மாதங்களில் இரும்புச்சத்துக் குறைபாடு சற்று அதிகமாகக் காணப்படும். இரும்புச்சத்து நிறைய சேர்த்துக் கொண்டால் குழந்தை கருப்பாகப் பிறக்குமோ என்கிற பயம், படித்த பெண்களுக்கே உண்டு.

இரும்புச்சத்தால் குழந்தை கருப்பாகவோ, குங்குமப்பூவால் சிவப்பாகவோ பிறப்பதில்லை. குழந்தையின் நிறம் என்பது தாய், தந்தையின் மரபினைப் பொருத்து அமைவது. இரும்புச்சத்து அதிகமுள்ள உணவுகளை உட்கொண்டால்தான் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் அதிகரித்து, குழந்தையின் வளர்ச்சி மேம்படும். இரும்புச்சத்து குறைவாக உள்ள கர்ப்பிணிகளுக்கு கருச்சிதைவோ, குறைமாதப் பிரசவமோ ஏற்படலாம்.

முதல் 3 மாதங்கள் தாயின் கருவறையில் அமைதி காத்த சிசு, அடுத்தடுத்த மாதங்களில் தனது கராத்தே உதை களால் உள்ளே தன் இருப்பை தாய்க்கு உணர்த்த ஆரம்பிக்கிறது. அதிக ரத்த ஓட்டம் காரணமாக, கர்ப்பிணிகளின் பல், ஈறு, மூக்கு துவாரப் பாதைகள் மென்மையாக மாறும். கர்ப்பிணிகளின் இயல்பான ரத்த அழுத்தம் 140/90 என இருந்தால், இம்மாதங்களில் அது 110/70 என மாறும்.

குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மயக்கம் வரும். காலை எழுந்ததும், இயற்கையான பழச்சாறு குடித்துவிட்டு, பிறகு சற்று நேரம் ஓய்வெடுத்தால் இது சரியாகும். கருவின் வளர்ச்சி அதிகமாக உள்ள இம்மாதங்களில், தாய், சேய் இருவருக்கும் கால்சியம் மற்றும் இரும்புச் சத்து தேவை அவசியமாகிறது.

பச்சைப்பயறு வெல்ல சுண்டல்


என்னென்ன தேவை?
பச்சைப்பயறு - 3 கப்,
காய்ந்த மிளகாய் - 2,
தேங்காய் - 1 மூடி,
கடுகு - 1 டீஸ்பூன்,
உப்பு - ஒன்றரை டீஸ்பூன்,
வெல்லம் - 150 கிராம்,
எண்ணெய் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பச்சைப்பயறை வெறும் கடாயில் லேசாக வறுத்து, உப்பு சேர்த்து வேக வைத்து வடிகட்டவும். மறுபடி கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து, பச்சைப் பயறைக் கொட்டி, வெல்லத்தைப் பொடித்துச் சேர்க்கவும். சுண்டல் நன்கு சேர்ந்து வந்ததும், தேங்காய்த் துருவல் போட்டுக் கிளறி இறக்கவும். பச்சைப்பயறில் கால்சியம் மற்றும் அனைத்து வைட்டமின்கள், நார்ச்சத்து உள்ளது. வெல்லத்தில் அதிகளவு இரும்புச் சத்து உள்ளது.
வாரம் 3 முறை இதைச் சாப்பிடலாம்.

பால், கேழ்வரகு, உளுந்து, கீரைகள், உலர் அத்திப்பழம், கறிவேப்பிலை, பாதாம், சோயா பீன்ஸ், முளைகட்டிய பச்சைப்பயறு, அவரை, பீன்ஸ், பீர்க்கங்காய், கொய்யா, ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, சாத்துக்குடி போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார் சித்த மருத்துவர் ஜெயபாதுரி
 
Joined
Mar 17, 2015
Messages
12
Likes
13
Location
Hyderabad
#2
Re: 4th Month Of Pregnancy Diet - நான்காம் மாதத் தொடக்கத்தில் என்ன ச&a

During 4th month of pregnancy, it is very important to take High fiber foods like whole grains, oats and green vegetables.
 

mercyanburaj

Friends's of Penmai
Joined
Apr 25, 2012
Messages
172
Likes
134
Location
sharjah
#3
Re: 4th Month Of Pregnancy Diet - நான்காம் மாதத் தொடக்கத்தில் என்ன ச&a

Tnx fr d info
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.