50 வயதை கடந்த ஆண்களுக்கான சில ஹெல்த் டிப்ஸ&#30

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
[h=1][/h][h=1]50 வயதை கடந்த ஆண்களுக்கான சில ஹெல்த் டிப்ஸ்...![/h]50 வயதை கடந்த ஆண்கள் ஆரோக்கியமான உணவுகளை உண்ணுவதால் அதிகரிக்கும் புத்திக்கூர்மை, சுகவீனம் மற்றும் நோய்களில் இருந்து எதிர்ப்பு, கூடுதல் ஆற்றல் திறன், வேகமாக குணமடையும் தன்மை மற்றும் தீவிர உடல்நல பிரச்சனைகளை சிறப்பாக மேம்படுத்துதல் போன்ற பல வித உடல்நல நன்மைகளைப் பெறலாம்.

நமக்கு வயது ஏற ஏற, உண்ணும் பழக்கமும் ஆரோக்கியமானதாக மாற வேண்டும். அதனால் நேர்மறையான மன நிலைப் பாங்குடன் விளங்கவும், உணர்ச்சி ரீதியாக சமநிலையுடன் இருக்கவும் இது உதவும். வயது ஏறும் போது, ஆண்களின் ஊட்டச்சத்து தேவைகளும் மாறிவிடும். வயது ஏறும் போது கலோரிகளை எரிக்கும் அவர்களின் தன்மையும் மெதுவாகும்.

அதனால் உங்களுக்கு பசியின்மை உண்டாகி, அதனால் நீங்கள் உண்ணும் உணவின் அளவு குறையக் கூடும். சரி, அப்போ என்ன செய்ய வேண்டும்? 50 வயதை கடக்கும் போது, அந்த வயதிற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை நீங்கள் உட்கொள்ளும் போது, இந்த பிரச்சனை குறையும். அவைகளை பற்றி சற்று விரிவாக தெரிந்து கொள்வோமா? சில ஆண்கள் நோய்வாய் படுவதற்கான பொதுவான சில காரணங்கள் உள்ளது; அதுவும் குறிப்பாக அவர்களுக்கு வயது ஏறும் போது.

புகைப்பிடிப்பது, போதிய உடற்பயிற்சி செய்யாதது மற்றும் முறையற்ற உணவுகளை தேர்வு செய்தல் ஆகிய சில தான் அந்த காரணங்கள். சரியான நேரத்தில் நீங்கள் செயல்பட்டால், இந்த பிரச்சனைகளில் சரிசெய்ய வாய்ப்புகள் உள்ளது. உயரிய ஊட்டச்சத்துக்கள் கொண்ட உணவுகள் உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

இது போக நேர்மறையான வாழ்வு முறையையும் பராமரிக்க உதவும். ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள் நேரடியாக உடல் எடையை அதிகரிக்க செய்து விடும். இதனால் கடுமையான சுகவீனங்கள் ஏற்பட்டு, வயதாகும் உங்கள் உடலை மேலும் பாதிக்கும். வயது ஏறும் போது, நோயிலிருந்து மீண்டு வரும் தன்மை குறையத் தொடங்கும். இதனால் ஆண்களுக்கு 50 வயது தாண்டும் போது, அவர்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

அப்போது தான் தேவையற்ற சுகவீனங்கள் நீங்கும். பல வித நிறங்கள் மற்றும் வகைகளான காய்கறி மற்றும் பழங்களை உண்ணுவது மிகவும் அவசியமாகும். அதே போல் நீங்கள் உண்ணும் தானியங்களில் பாதிக்கு மேல் முழு தானியங்களாக இருக்க வேண்டும். நீங்கள் அசைவ விரும்பியென்றால், வாரம் இருமுறை கடல் உணவுகளை உண்ணுங்கள்.

பி12 மாத்திரைகளை கருதலாம் ஆரோக்கியமான நரம்பு மற்றும் இரத்த அணுக்களுக்கு வைட்டமின் பி12-ன் உதவி தேவைப்படும். Dna உருவாக்கத்திற்கும் இது தேவைப்படும். உணவில் உள்ள புரதத்துடன் பி12 இணைப்பாக இருக்கும். வயிற்றில் செரிமானம் நடக்கும் போது புரதத்தில் இருந்து பெப்சின் மூலமாக அது வெளிப்படும்.

வயது ஏறும் போது, நம் வயிற்றில் உள்ள அமிலத்தின் அளவு குறைந்து விடும். இதனால் பி12 உட்பட சில ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச அது சிரமப்படும். மீன் மற்றும் இறைச்சியில் பி12 முதன்மையான பொருளாக உள்ளது. சைவ உணவுகளை உண்ணுபவர்கள் மாத்திரை வடிவில் விற்கும் பி12-ஐ உண்ணலாம்.

கால்சியம் மற்றும் வைட்டமின் டி இரைப்பை அமிலம் மற்றும் ஹார்மோன் மாற்றங்களால், 40 வயதை அடையும் போது வைட்டமின் டி மற்றும் கால்சியம் உறிஞ்சுதல் தொய்வடையும். 30 வயது வரை போதுமான அளவில் கால்சியத்தை உட்கொள்ள வேண்டியது அவசியமான ஒன்றே.

அதனை சரியாக செய்யவில்லை என்றால் வருத்தம் வேண்டாம். கால்சியம் வழமையாக உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். மத்தி மீன், கீரை, பச்சை பூக்கோசு, பரட்டைக்கீரை மற்றும் குறைந்த கொழுப்பு அல்லது கொழுப்பில்லாத பால் மற்றும் தயிர் போன்ற உணவுகளை இவை வளமையாக உள்ளது.

மீன் மீனில் ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் உள்ளதால் உங்கள் உணவில் அதனை சீரான முறையில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

மனித உடலுக்கு மிக முக்கியமாக தேவைப்படும் அமிலம் இது என்றாலும், இதனை நம் உடலால் உற்பத்தி செய்ய முடியாது. சால்மன் ட்யூனா, ஹாலிபட் போன்ற மீன்கள் மற்றும் பாசிகள், இறால் போன்ற இதர கடல் உணவுகளில் ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் வளமையாக உள்ளது.

பழங்கள் உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள பழங்களை உங்கள் தினசரி உணவில் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ளுங்கள். பருவத்தில் கிடைக்கும் பல பழங்களும் சுலபமாக கிடைக்ககூடியவை தான்.

அவைகள் வேகமாக செரிமானம் ஆகவும் செய்யும். நீங்கள் 50 வயதை கடக்கும் போது இது மிகவும் தேவைப்படும். இவை சர்க்கரையை சேர்க்காது. இனிப்பான பழங்களை உண்ணும் போது கூட சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

ஜூஸ் 50 வயதை கடக்கும் போது ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் முக்கியத்துவத்தை பெறுகிறது. கடினமான உணவுகளை நிறுத்திக் கொள்வது முக்கியமானதாகும்.

அதனை சரிகட்டும் விதமாக நற்பதமான பழச்சாறுகளை குடியுங்கள். இதனால் நீங்கள் உணவும் உணவு வேகமாக செரிமானமாகும். மேலும் உடலில் நீர்ச்சத்தும் நிறைந்திருக்கும். பழச்சாறுகளை உங்கள் உடல் வேகமாக உறிஞ்சிடும்.

முழு தானிய உணவு முடிந்த வரை பாலிஷ் செய்யப்பட்ட அரிசி மற்றும் அன்றாடம் பயன்படுத்தும் மாவுகளுக்கு பதில் முழு தானிய உணவுகளை உண்ணுங்கள்.

கொழுமை மற்றும் பழுப்பு அரிசி போன்ற முழு தானிய உணவுகளை உட்கொண்டால், பசியை சீர்படுத்தும். மேலும் உடலுக்கு சர்க்கரையை மெதுவாகவும் நிதானமாகவும் செலுத்தும். அதிகமாக உண்ணுதல், அதிகமாக பசியெடுத்தல் மற்றும் அதிகமான சர்க்கரை அளவு ஆகிய இடர்பாடுகளும் நீங்கும்.
 

Mary Daisy

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Dec 28, 2011
Messages
5,048
Likes
12,482
Location
Ever green city
#2
Re: 50 வயதை கடந்த ஆண்களுக்கான சில ஹெல்த் டிப்ஸ

useful info...........
 

hathija

Citizen's of Penmai
Joined
Mar 17, 2013
Messages
671
Likes
424
Location
Mississauga Canada
#3
Re: 50 வயதை கடந்த ஆண்களுக்கான சில ஹெல்த் டிப்ஸ

Very useful info...
Hathija.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.