65 of top 100 rankers choose to study in IIT-Bombay, Delhi next

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,922
Likes
20,802
Location
Germany
#71
ஐ.ஐ.டி.,யில் மாணவர் சேர்க்கை:பெண்களுக்கு கூடுதலாக 20 சதவீதம் இட ஒதுக்கீடு

நாடு முழுவதும் ஐ.ஐ.டி., மாணவர் சேர்க்கையில் பெண்களுக்கு கூடுதலாக 20 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பெண்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து ஐ.ஐ.டி மாணவர் சேர்க்கை வாரியம் கூறியிருப்ப தாவது: திமோதி கன்சால் வேஸ் குழு பரிந்துரையை ஏற்று மாணவர் சேர்க்கை வாரியம் பெண்களுக்கு கூடுதலாக 20 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் வரும் 2018-ம் ஆண்டு முதல் பெண்களின் சேர்க்கை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது.


ஆண்டுதோறும் மாற்றி அமைக்க முடிவு



ஐ.ஐ.டி.,யில் பெண்கள் சேரும் எண்ணிக்கை குறைந்து வருவதையொட்டி இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த கூடுதல் இட ஒதுக்கீடு ஆண்டுதோறும் மாற்றி அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஓதுக்கீட்டால் மாணவர்கள் எண்ணிக்கை பாதிக்காது என தெரிவித்துள்ளது.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,212
Likes
3,170
Location
India
#72
[h=1]ஐஐடி-யில் பாடமாக்கப்படும் ‘வாஸ்து சாஸ்திரம்’[/h]


கட்டடக்கலைப் படிப்பில், வாஸ்து சாஸ்திரத்தை ஒரு பாடமாக்க, ஐஐடி கார்க்பூர் முடிவுசெய்துள்ளது. கட்டடக்கலை மாணவர் ஒவ்வொருவரும் வாஸ்து சாஸ்திரம் அறிய ஏற்பாடு செய்துவருகிறது.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள காரக்பூர் கல்வி நிறுவனத்தில் (ஐஐடி), ‘வாஸ்து சாஸ்திரம்’ பாடத்தைக் கட்டாயமாக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அங்கு, 'கட்டடக்கலை பயிலும் ஒவ்வொரு மாணவருக்கும் வாஸ்து சாஸ்திரம் தெரிந்திருக்க வேண்டும்' என்று விரும்புவதாக, ஐஐடி தெரிவித்துள்ளது. இதனால் கட்டடக்கலைப் பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு கட்டாயப் பாடமாக இந்தக் கல்வி வழங்கப்படும் எனக் கூறியுள்ளது.
பல்வேறு தொழில்நுட்பங்கள் வளர்ந்துவரும் இந்தக் காலத்தில், சர்வதேச அளவிலான நுட்பங்களைக் கற்றுவரும் கட்டடக்கலைப் பிரிவு மாணவர்கள், இந்தியப் பாரம்பர்யமான வாஸ்து சாஸ்திரத்தைக் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டுமென ஐஐடி கார்க்பூர் தெரிவித்துள்ளது.
மேலும் அந்த நிறுவனம் கூறுகையில், வாஸ்து சாஸ்திரம் என்பது மதம் சார்ந்த பிரிவுப்பாடம் அல்ல என்றும், கட்டடக்கலையை மேலும் அறிந்துகொள்வதற்கான பாரம்பர்ய கல்வியாகும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்தியாவிலேயே மிகவும் பழைமையான கல்வி நிறுவனமான ஐஐடி காரக்பூர், ‘வாஸ்து சாஸ்திரம்’ அறியாமல் நல்ல கட்டடக் கலைஞராக உருவாக முடியாது எனத் தீர்க்கமாக நம்புவதாக அறிவித்துள்ளது.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,212
Likes
3,170
Location
India
#73
[h=1]சூப்பர் ஓவர் தெரியும்.. ஐஐடி சூப்பர் 30 தெரியுமா?[/h]




ஐஐடி நுழைவுத் தேர்வு Joint Entrance Examination (JEE) முடிகள் நேற்று வெளியிடப்பட்டது. அரசுத் தேர்வில் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெறுவது போல, ஐஐடி நுழைவுத் தேர்வில், ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த 30 மாணவர்களும் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர். தெருவில் முட்டை விற்பவர் மகன் முதல் விவசாயி மகன் வரை ஐஐடியன் ஆகப் போகின்றனர். ஏழை மாணவர்களின் இத்தகைய வெற்றிக்கு காரணம் தனியொரு மனிதர். பாட்னாவைச் சேர்ந்த அவரது பெயர் ஆனந்த்குமார். மிகச்சிறந்த கணிதப் பேராசிரியர். கடந்த 2002 ஆம் ஆண்டு ஆனந்த்குமார், 'Ramanujan School of Mathematics ' என்ற பெயரில் ஐஐடி-க்கான பயிற்சி மையம் தொடங்கினார்.

இவர் வகுத்த திட்டம்தான் 'சூப்பர் 30'. ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் பயிற்சி எடுக்க வசதியில்லாத ஏழை மாணவர்கள் 30 பேரைத் தேர்வு செய்வார் ஆனந்த்குமார்.

பயிற்சித் திட்டம் பற்றி, இணையதளத்தில் விவரங்கள் வெளியிடப்படும். அதேவேளையில், அந்தப் பயிற்சி... இந்தப் பயிற்சி என மாணவர்களிடம் பணத்தை கறக்கும் மையங்களில் இருந்து வித்தியாசமானது Ramanujan School of Mathematics . தகுதியுடைய மாணவர்கள் பெட்டியை எடுத்துக்கொண்டு ஆனந்த்குமாரிடம் வந்து விட்டால் போதும்... தங்கும் வசதியில் இருந்து உணவு வரை இலவசமாக வழங்கப்படும். ஆனந்த்குமாரின் தாய்., மாணவர்களுக்குத் தேவையான உணவை சமைக்கும் பணியை மேற்கொள்கிறார். சகோதரர் பிரணவ் பயிற்சி மையம் தொடர்பான பிற விஷயங்களைப் பார்த்துக் கொள்வார்.


பயிற்சிக்காக எந்த மாணவர்களிடம் இருந்தும் ஆனந்த்குமார் சல்லிக்காசு பெறுவதில்லை. பின்னர் எப்படி செலவுகளை அவர் சமாளிக்கிறார்?. அறிந்தால் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். உண்மையில் , 'ஓய்வறியா சூரியன்' என்ற வார்த்தை அப்படியே ஆனந்த்குமாருக்கு அப்படியே பொருந்தும்.

உறங்குவது தினமும் 4 மணி நேரம் மட்டும்தான். காலை 4 மணிக்கு எழுந்தார் என்றால் இரவு 11 மணி வரை பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் பணக்கார வீட்டு மாணவர்களுக்கு டியூசன் எடுப்பார். இடைப்பட்ட நேரத்தில் JEE நுழைவுத் தேர்வு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வேலை.

டியூசனில் கிடைக்கும் வருவாயைக் கொண்டே பயிற்சி மையச் செலவுகளை பார்த்துக் கொள்கிறார். இதுதவிர, மையத்தில் படித்து தற்போது உயர்ந்த நிலையில் இருப்பவர்களும் உதவுகின்றனர். ஆனந்த்குமாரின் குடும்பத்தினர் மற்றும் முன்னாள் மாணவர்களின் உதவியாலும் ஐஐடியன்களை உருவாக்கும் பணியில் ஆனந்த்குமாரால் தங்கு தடையின்றி இயங்க முடிகிறது. இவரது மையத்தைச் சேர்ந்த 30 மாணவர்களும் ஐஐடி நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுவது இது முதல்முறையல்ல.


கடந்த 2008,09,10 ஆண்டுகளில் இது போல் 30 பேரும் தேர்ச்சி பெற்று ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தியிருக்கின்றனர். கடந்த 15 ஆண்டுகளில் 396 பேரை ஐஐடிக்கு ' Ramanujan School of Mathematics 'அனுப்பியிருக்கிறது. ஐஐடியில் சேரவுள்ள கெல்வினின் தந்தைக்கு நிரந்தரப் பணி கிடையாது. தந்தை ஒரு யோகா ஆசிரியர். சொற்ப வருமானத்தில் ப்ளஸ் 2 வரை மகனை படிக்க வைத்ததே பெரிய விஷயம். தகுதியும் திறமையும் வாய்ந்த கெல்வின், பேராசிரியர் ஆனந்த்குமார் பற்றி கேள்விபட்டு, பெட்டியுடன் வந்து சேர்ந்து இப்போது தேர்ச்சியும் பெற்று விட்டார்.


ஆனந்த் குமார் என்கிற தனி மனிதரால் JEE நுழைவுத் தேர்வில் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களை சாதனையாளர்களாக மாற்ற முடியும்போது, ஒரு அரசால் முடியாதா?. தமிழகத்திலும் ஐஐடி நுழைவுத் தேர்வு மையத்தை மாவட்டத் தலைநகரங்களில் தொடங்க வேண்டும் என்பது கல்வியாளர்களின் கோரிக்கை. உணவு , உறைவிட வசதியுடன் பயிற்சி அளித்தால், ஏழை மாணவர்களுக்கு உதவிகரமாக இருக்கும். ஆனால், தமிழக அரசு எங்கே இதுபோன்ற விஷயங்களில் கவனம் செலுத்தப் போகிறது?.
 
Joined
Jun 14, 2017
Messages
1
Likes
0
Location
Chennai
#74
Why Most Of Top IIT-JEE Rankers At IIT Bombai and IIT Delhi

Why IIT-B and IIT-D and not others? well there is no doubt the rankers choosing IIT-B and IIT-D because both institutes are situated in metropolitan region of our country. From placement point of view IIT-B is highest among both, which offers 44 lakhs /year - 70 lakhs/year. Students also choose IIT-B because it has many opportunities and functions compared to other cities of India. In Mumbai even hostilities has many option for eat, entertainment and many other part time jobs. The techfest of IIT Bombay are among the best.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,922
Likes
20,802
Location
Germany
#77
[h=1]நாடு முழுவதும் உள்ள அனைத்து ஐஐடி-க்களிலும் மாணவர் சேர்க்கைக்குத் தடை![/h]


நாடு முழுவதும் உள்ள அனைத்து ஐஐடி கல்வி நிறுவனங்களிலும் மாணவர் சேர்க்கை மற்றும் கலந்தாய்வுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். நடந்து முடிந்த ஐஐடி படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வின்போது, இந்தி வினாத்தாளில் கேள்வி ஒன்று தவறாகக் கேட்கப்பட்டிருந்தது. இதற்காக அக்கேள்விக்கு பதிலளித்த அனைத்து மாணவர்களுக்கும் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இதற்கு எதிராக தமிழகத்தைச் சேர்ந்த பல்ராம் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதன்மேல் விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம் அனைத்து ஐஐடி கல்வி நிறுவனங்களிலும் மாணவர் சேர்க்கை மற்றும் கலந்தாய்வுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது, மேலும், கீழ் நீதிமன்றங்கள் ஐஐடி மாணவர் சேர்க்கை, கலந்தாய்வு தொடர்பான வழக்குகளை விசாரிக்க வேண்டாம் என்றும் உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும்வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும். வழக்கின் அடுத்த கட்ட விசாரணை திங்களன்று நடைபெற இருக்கிறது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,922
Likes
20,802
Location
Germany
#79
[h=1]JEE Advanced 2018 syllabus released, check jeeadv.ac.in[/h]


Indian Institute of Technology (IIT) Kanpur has released syllabus for JEE Advanced 2018.

Candidates who wish to appear for the prestigious exams can log into official website jeeadv.ac.in to access the syllabus.


The examination will be held on May 20, 2018. The entire JEE (Advanced) 2018 Examination will be conducted in fully computer-based test mode. The exam consists of two papers, Paper 1 and Paper 2, each of three hours' duration, and will be held in two sessions. Both the papers are compulsory.


Candidates should have been born on or after October 1, 1993. Five years relaxation is given to SC, ST and PwD candidates, ie, these candidates should have been born on or after October 1, 1988.
A candidate can attempt JEE (Advanced) a maximum of two times in consecutive years.


A candidate should have appeared for the Class XII (or equivalent) examination for the first time in either 2017 or 2018.


A candidate should NOT have been admitted in an IIT irrespective of whether or not he/she continued in the program OR accepted an IIT seat by reporting at a reporting centre in the past. Candidates whose admission at IITs was cancelled after joining any IIT are also NOT eligible to appear in JEE (Advanced) 2018.


The candidates must have secured at least 75 percent aggregate marks in the Class XII (or equivalent) Board examination. The aggregate marks for SC, ST and PwD candidates should be at least 65 percent.


He/she must be within the category-wise top 20 percentile of successful candidates in their respective Class XII (or equivalent) board examination.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,922
Likes
20,802
Location
Germany
#80
[h=1]Placements begin at IIT-Guwahati[/h]
The campus placement drive for 2017-18 session began at IIT Guwahati on Friday. Less than 200 companies have registered for the first round of recruitment.

The first phase of the placement drive is expected to continue till mid-December and the second phase will begin from mid-January next year.

The highest offer from a foreign company on the first day was a package of USD 130,000 per year, while the best package offered by an Indian company was Rs 35 lakh per annum. 85 students were placed in the recruitment drive till this evening. Authorities said they were expecting another 60-70 placements to take place in the last leg.

Kaustubha Mohanty, head of the centre for career development at IIT Guwahati, told TOI that the latest trends in recruitment this year have been encouraging with some of the biggest companies showing a desire to recuit from the institute. "For the first time, tech-giant Apple has come to scout for talents here, which is heartening for all of us. On the first day of the campus recruitment, students got more job offers from the government sector," he said.

Mohanty said the institute has received 110 pre-placement offers and the campus drive was going on as expected from the early hours on Friday. He added that most of the jobs offered on the first day of the campus placement were software-based.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.