7 Day Weight Loss Tips in Tamil

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
35,366
Likes
77,417
Location
Hosur
#1
முதல் நாள்: சூப் டயட் முதல் நாளில் சூப் டயட்டை பின்பற்ற வேண்டும். நாள் முழுவதும் உங்களுக்கு பிடித்த எந்த சூப்பை வேண்டுமானாலும் குடிக்கலாம். ஆனால் அசைவ சூப் குடிக்கும் போது மட்டன் சூப் மட்டும் குடிக்க வேண்டும். குறிப்பாக சூப்பில் உப்பை அதிகம் சேர்க்காமல், முடிந்தால் உப்பு சேர்க்காமல் குடிப்பது நல்லது.

இரண்டாம் நாள்: முட்டைக்கோஸ் டயட் உடல் எடையை குறைக்க முட்டைக்கோஸ் பெரிதும் உதவியாக இருக்கும். எனவே இரண்டாம் நாளில் முட்டைக்கோஸை பலவாறு செய்து சாப்பிட வேண்டும். இதனால் முட்டைக்கோஸ் உடலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றிவிடும். மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.

மூன்றாம் நாள்: கிரேப் ஃபுரூட் டயட்கிரேப் ஃபுரூட்டில் கொழுப்புக்களை கரைக்கும் நொதிகள் அதிகம் இருப்பதால், மூன்றாம் நாளில் கிரேப்ஃபுரூட் டயட்டை பின்பற்றுங்கள். இதனை அப்படியே அல்லது ஜூஸ் என்று எப்படிவேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம்.

நான்காம் நாள்:
ஜூஸ் டயட் ஆம், வெறும் பழங்களை சாப்பிட்டாலும் உடல் எடையில் மாற்றம் தெரியும். அதற்கு நான்காம் நாளில் விருப்பமான பழங்களை அப்படியே அல்லது ஜூஸ் போட்டு நாள் முழுவதும் சாப்பிடுங்கள்.

ஐந்தாம் நாள்: காய்கறி டயட்காய்கறிகளில் வைட்டமின்கள், புரோட்டீன்கள் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருக்கிறது. எனவே ஐந்தாம்நாளில் பசலைக்கீரை, கேரட் மற்றும் உருளைக்கிழங்கு என்று வெறும் காய்கறிகளை விரும்பியவாறு செய்துசாப்பிடுங்கள். குறிப்பாக அப்படி சமைத்து சாப்பிடும் போது உப்பை அதிகம் சேர்க்கவேண்டாம். மேலும் வேக வைத்தோ அல்லது பச்சையாகவோ தான் சாப்பிட வேண்டும்.

ஆறாம் நாள்: தண்ணீர் டயட் ஆறாம் நாளில் உடலில் தங்கியுள்ள டாக்ஸின்கள் அனைத்தையும் வெளியேற்ற வேண்டும். எனவே ஆறாம் நாளில் பழங்கள் மற்றும் காய்கறிகளுடன், சுடுநீரை குறைந்தது 6-8 லிட்டராவது குடித்து விட வேண்டும். இதனால் சுடுநீரானது கொழுப்புக்களை கரைத்துவிடும்.

ஏழாம் நாள்: விருந்துணவு ஏழாம் நாளில் நல்ல விருந்துணவு சாப்பிட வேண்டும். முக்கியமாக அப்படி விருப்பமான உணவுகளை உட்கொள்ளும் போது, அளவுக்கு அதிகமாக வயிறு நிறைந்து வழியும் அளவு சாப்பிட வேண்டாம். மேலும் உப்பு, எண்ணெய் போன்றவற்றை அதிகம் சேர்க்க வேண்டாம்.

குறிப்பு:

மேற்கூறியவாறு ஒரு வாரம் செய்து வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றம் காணலாம். ஆனால் எந்த ஒரு செயலை செய்யும் போது, நம்பிக்கை வைத்து மேற்கொண்டால், அந்த செயல் வெற்றி பெறும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

அதுமட்டுமட்டுமின்றி பலருக்கு இந்த டயட் ஒர்க் அவுட் ஆகாது, ஏனெனில் இதை மட்டும் எப்படி சாப்பிட்டால் எப்படி உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று கேட்கலாம். ஆனால் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும் உடலுக்கு வேண்டிய சத்துக்களை வழங்கக்கூடியவை. எனவே நம்பி மேற்கொள்ளலாம்.


 

diyaa

Citizen's of Penmai
Joined
Oct 3, 2014
Messages
625
Likes
2,532
Location
Secunderabad
#2
நான் 7 days GM diet பத்தி தான் படிச்சு இருக்கேன்

இது ரெம்ப புதுமையா இருக்கு

இந்த மாறி டயட் கொடுத்தா நான் வருஷம் 365 நாளும்

சாப்பிடுவேன்

சாதம் தான் எனக்கு புடிக்கவே புடிக்காது

with luv

Diya
 

Durgaramesh

Minister's of Penmai
Joined
Sep 12, 2015
Messages
3,258
Likes
5,334
Location
Puducherry
#3
something different and easy diet Thank you friend for useful sharing:rockon:Hi 5
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.