A Kids wish for her birthday ! - You can't control your laugh!

Rudhraa

Commander's of Penmai
Moderator
Joined
Apr 26, 2012
Messages
1,886
Likes
3,735
Location
The World
#1
friends just read in net now.. you can't control your laugh after reading this... put your comments abt that cute Akshaya!

குழந்தையும் தெய்வமும் ஒன்று என நிரூபித்த மற்றுமொரு சம்பவம் .மகளின் chess வகுப்பில் சில மணி நேரங்கள் காத்திருக்க வேண்டுமென்பதால் ,பெற்றோர்களுக்கென திறந்தவெளியில் ஒரு குட்டி நூலகம் அமைக்கப்பட்டிருக்கும்.பெரும்பாலும் அங்கே நடப்பது அரட்டை கச்சேரி தான் .அக்க்ஷயா என்றொரு குட்டிப் பெண்ணை பற்றி அவர் அம்மா விவரிக்க ஆரம்பித்தார் .அவள் முதலாம் வகுப்பு படிக்கும்பொழுது ,

"அம்மா ஏன் முதல்ல காக்காவுக்கு வச்சுட்டு அப்புறமா நாம சாப்பிடுறோம் ?"

"ம்ம் அதுதான் ஐதீகம் "

"ஓகே ஆனா நாம சாப்பிடும்போதுதானே தெரியும் ,சாப்பாட்டுல உப்பு காரம் சரியா இல்லன்னு ....அப்போ காக்கா நம்மள திட்டிக்கிட்டே சாப்பிடாதா ? இனிமே நீ ஒரு வாய் டேஸ்ட் பண்ணிட்டு அப்புறம் காக்காவுக்கு குடு"
" அதுசரி ...."

பின் அக்க்ஷயா வளர்ந்து நான்காம் வகுப்பு வந்ததும் ,அவளது பிறந்தநாள் வந்தது .எப்பொழுதும் விமரிசையாக அதனை கொண்டாடும் வழக்கம் உள்ள அவளது பெற்றோர்கள் ,அந்த வருடத்திலிருந்து சிம்பிளாக கொண்டாடலாம் என முடிவு செய்து அக்க்ஷயாவை அழைத்து "குட்டி இப்போ நீ big girl ஆய்ட்ட ...அதனால உன் பர்த் டேவை வீட்டளவில் மட்டும் கொண்டாடலாம்ன்னு நானும் அப்பாவும் decide பண்ணியிருக்கோம் .."

"அப்போ என் ப்ரெண்ட்ஸ் எல்லாம் invite பண்ணலையா ?"

"இல்லடா "

சற்று யோசித்து விட்டு "ஓகே .ஆனா என்னோட ப்ரெண்ட் பிரசன்னாவை மட்டும் கூப்பிடலாம் "

அப்பாவும் அம்மாவும் கலந்தாலோசித்து "ஒரே ஒரு ப்ரெண்ட் தானே ஓகே "என்று சம்மதித்திருக்கிறார்கள்

பிறந்தநாளன்று அக்க்ஷயாவின் அம்மா அவளிடம் "பிரசன்னாவுக்கு என்ன பிடிக்கும்?"

" ம்ம்ம் ....சக்கரைப் பொங்கல் ,கடலை அப்புறம் fruits என்றிருக்கிறாள்"

"ஓ ... பரவாயில்லையே... உன்ன மாதிரி அடம் பண்ணாம fruits எல்லாம் சாப்பிட்டு பழகி இருக்கானே" என்றவாரே சாதம் சாம்பார் ,காய்கறி கூட்டு அப்புறம் பிரசன்னாவிற்கு பிடித்த சக்கரை பொங்கல் ,கடலை செய்து வைத்து காத்திருந்தனர் அவர்கள்.

"ஹே ...பிரசன்னாவுக்கு வீடு தெரியுமா?அப்பாவை போய் அழைச்சுட்டு வர சொல்லட்டுமா ?"

"வேண்டாம் மம்மி அட்ரஸ் தந்திருக்கேன் .அவனோட servant அவனை பத்திரமா கூட்டிட்டு வந்துடுவான் ."

பிரசன்னா வந்தான் .அவன் அந்த தெருவினுள்ளேயே நுழைய இயலவில்லை .ஏனென்றால் பிரசன்னா என்பது ஒரு "யானை"-கரிய -பெரிய யானை

பள்ளி செல்லும் வழியில் அருகிலிருந்த ஐயப்பன் கோவில் திருநாள் ஒன்றிற்காக ஒரு மாதம் விருந்தினன் ஆக வந்தவன் தான் பிரசன்னா .அண்ணாமலை படத்தில் நடித்த நடிகன் வேறு .அவனை தோழனாக்கி வீட்டிற்கும் அழைத்துவிட்டாள் அந்த சுட்டி ..இவள் என்ன சொல்லி அந்த பாகன் இத்தனை தூரம் வர சம்மதித்தான் எனத் தெரியவில்லை .அவள் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் மயக்கம் வராத குறைதான் .திருப்பி அனுப்பலாம் என்றால் அவள் தரையில் படுத்து அழுது புரள்கிராளாம் .சமைத்த உணவு பிரசன்னாவின் கடைவாய் பல்லிற்கு கூட பற்றாது .அவசரம் அவசரமாக அடுத்த வீட்டு மனிதர்களின் உதவியுடன் கிலோ கணக்கில் சமைத்து முடித்தனராம் .

"அம்மா நீ பிரசன்னாவுக்கு ஊட்டு நான் போட்டோ எடுத்து என் ப்ரெண்ட்ஸ் க்கு காட்டனும் "என்று குழந்தை சொன்னதும் எப்படி இருந்திருக்கும் அவள் அம்மாவிற்கு ??!! .இதில் ஹை லைட் என்னவென்றால் "நான் ஊர்வசியையும் கூப்பிடலாம் என்றிருந்தேன் தெரியுமா ?"

"அது யாருடீ ?"

"பிரசன்னவோட ப்ரெண்ட் .இன்னொரு யானை ."

அக்க்ஷயா அப்பா சொன்னாராம் "உன் பொண்ணு இனி யாரையாவது வீட்டுக்கு கூட்டிட்டு வரேன்னு சொன்னா full Bio-data attached with a photo வாங்கு .ஏன்னா அடுத்த தடவை ராஜா வை கூட்டிட்டு வரேன்னு பாம்பை அழைச்சுட்டு வந்தாலும் வருவா ...."

My God...வாழ்க்கைல இப்படி சிரிச்சது இல்ல..
- Sabitha Sabi

 
Last edited:

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,640
Likes
140,723
Location
Madras @ சென்னை
#2
Haa Haa..
Super Rudhraa..

red-neck-laughing-smiley-emoticon.gif

 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#6
Sema comedy dhaan, indha Akshaya kutti......ella kutties um paduthum, aana indha alavukka......bayapada vaikkum:rolleyes:
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.