A short tamil story-பொன், பொருள், பதவி, அந்தஸ்து

suganthiramesh

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Apr 4, 2012
Messages
5,017
Likes
14,861
Location
THENI,TN
#1
ஒரு நாட்டை ஆண்ட அரசன் ஆடு மேய்ப்பவன் ஒருவனின் புத்திசாலித் தனத்தை மெச்சி அவனை தன் மந்திரி ஆக்கிக் கொண்டான்...

அரண்மனையில் இருந்த பலருக்கு இது பிடிக்கவில்லை... அந்த ஆடுமேயப்பவன் எப்போதும் தன கையில் ஒரு சிறு பெட்டி வைத்திருந்தான்...

அதில் ஏதோ ரகசிய ஆயுதத்தை பதுக்கி வைத்து இருப்பதாக மற்றவர்கள் அரசனிடம் கோள் மூட்டினர் .... அரசனும் ஒரு நாள் மறைந்திருந்து பார்த்தான்...

தன்னுடைய பழைய சட்டையை அந்த பெட்டியில் இருந்து எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்த மந்திரியிடம்
"இன்னும் இந்த பழைய சட்டையை எதற்காக வைத்திருக்கிறாய் " என்று அரசன் கேட்க ....

"மன்னா... பொன், பொருள், பதவி, அந்தஸ்து எல்லாம் திடீரென்று எனக்கு கிடைத்தது.. அதே போல திடீரென்று பறிபோகவும் வாய்ப்பு உள்ளது .... அந்த நேரத்தில் என் பழைய வாழ்க்கையை நான் மறந்துவிடக் கூடாது.... அதற்காகத் தான் பத்திரமாக வைத்திருக்கிறேன் " என்று ஆடு மேய்த்தவன் பதில் சொன்னான்...

இதை கேட்ட அரசர் மனம் நெகிழ்ந்து அவனுக்கு மேலும் பொன்னும், பொருளும் அள்ளிக் கொடுத்து பாராட்டினார்...
 
Last edited:

kirthika99

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 18, 2011
Messages
5,062
Likes
8,257
Location
saudi arabia
#3
Gud thought suganthi!!! thanks pa for sharing
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.