Aadi Perukku - வளங்களை அள்ளித் தரும் ஆடிப்பெருக்கு!

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
35,337
Likes
77,337
Location
Hosur
#1
images.jpg

தமிழகத்திலுள்ள நீர் நிலைகளில் ஆடி மாதத்தில் நீர் வரத்து அதிகமாகி பெருக்கெடுத்து ஓடும். நதிகளும் நீர் நிரம்பி காணப்படும். பயிர் செழிக்க வளம் அருளும் அன்னை காவிரிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ஆடி 18-ல் பதினெட்டாம் பெருக்கு விழா, நதிக்கரைகளிலும் ஆற்றங்கரைகளிலும் கொண்டாடப்படுகிறது. இதனை பதினெட்டாம் பெருக்கு என்றும் கூறுவார்கள். தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர். உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர்.


"ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவேரி வாடியம்மா எங்களுக்கு வழித்துணையாக, எம்மை வாழவைக்க வேண்டுமம்மா சுமங்கலியாக'' என்று காவிரி நதியை அன்னையாக பாவித்து பாடினார் கவிஞர் கண்ணதாசன்.

வீடுகளில் விரதமிருந்து பெண்கள், முளைப்பாரியை கைகளில் ஏந்திக் கொண்டு காவிரி ஆற்றுக்கு வருவார்கள். எல்லா வளமும் பெருக வேண்டும் என்று இளம்பெண்கள் பூஜை செய்து முளைப்பாரியை காவிரியில் விட்டு விட்டு கோவிலுக்கு சென்று வழிபடுவார்கள். விவசாயம் செழிக்க வேண்டி விவசாயிகள் காவிரி அன்னைக்கு மலர்தூவி வணங்குவார்கள்.

அது மட்டும் அல்லாமல் தங்கள் வீட்டில் பலவிதமான கலப்பு சாதங்கள் (தேங்காய் சாதம், சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சம்பழம் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம்) செய்து அதை ஏதாவது ஆற்றங்கரையில் வைத்து குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சேர்ந்து குதூகலமாக உணவை சாப்பிடுவார்கள். காவிரியாற்றின் கரையில் திருச்சியில் இவ்விழா மிகவும் புகழ்பெற்றது.

வீட்டிலேயே செய்யலாம் ஆடிப்பெருக்கு பூஜை: காவிரிக்கரையோரம் உள்ளவர்கள் மட்டுமே ஆடிப்பெருக்கைக் கொண்டாட வேண்டும் என்பதில்லை. ஆடிப்பெருக்கு பூஜையை நம் வீட்டிலும் எளிய முறையில் செய்யலாம். ஒரு செம்பில் அரைத்த மஞ்சளை சிறிதளவு போடவேண்டும். நிறைகுடத்திலிருந்து அந்த செம்பில் நீர் எடுத்ததும், மஞ்சள் கரைந்துவிடும். திருவிளக்கேற்றி அந்த நீரை விளக்கின் முன் வைக்க வேண்டும். தண்ணீரில் உதிரிப் பூக்களைப் போட வேண்டும். கற்பூர ஆரத்தி அல்லது நெய்தீபம் காட்டி கங்கை, யமுனை, நர்மதை, காவிரி, வைகை உள்ளிட்ட புண்ணிய தீர்த்தங்களை மனதில் நினைத்து, முன்னொரு காலத்தில் எங்களை மூதாதையர் உங்களை புனிதமாகக் கருதி வழிபட்டதுபோல் எங்களுக்கும் அத்தகைய மனநிலையைத் தாருங்கள் என்று வேண்டுங்கள். காவிரியையும் தாமிரபரணியையும் நமக்களித்த அகத்திய முனிவரை மனதார வணங்குங்கள். பூஜை முடிந்ததும் செம்பிலுள்ள நீரைச் செடி, கொடிகளில் ஊற்றி விட வேண்டும். அன்று சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை.

காவேரிக்கு பெருமாள் தரும் சீர்வரிசை: இவ்வூருக்கு சகோதரர்கள் தங்கள் சகோதரிகளையும், மைத்துனர்களையும் வீட்டிற்கு வரவழைத்து சீர் கொடுக்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது. தம்பதியரை இங்குள்ள ஆதிமாரியம்மன் கோயிலுக்கும் அழைத்துச் செல்வர். இவள் சமயபுரம் மாரியம்மனின் சகோதரியாக கருதப்படுகிறாள். சாதாரண மக்களே, இவ்வாறு சீர்கொடுக்கும் போது, இங்கே கோயில் கொண்டிருக்கும் ரங்கநாதர் சும்மா இருப்பாரா! தன் தங்கை காவரிக்கு சீர் கொடுக்க அவர் அம்மா மண்டபப் படித்துறைக்கு எழுந்தருள்வார். அங்கு சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கும். மாலை வரை பெருமாள் அங்கு வீற்றிருப்பார்.

பெருமாளின் சீதனமாக தாலிப்பொட்டு, பட்டு மற்றும் மங்களப் பொருட்கள் ஆற்றில் விடப்படும். காவிரிக்கு பெருமாள் சீர்வரிசை அளிக்கும் இக்காட்சியைக் கண்டால் கோடி புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு நாளில் கொல்லிமலை சென்று அங்குள்ள ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் நீராடி அரப்பளிசுவரரை தொழுவது வழக்கம். ஆடிப்பெருக்கு நாளில் தமிழக அரசு போக்குவரத்து கழகத்தினர் நாமக்கல், சேலம் மற்றும் ராசிபுரத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்குவது வழக்கம்.

காவிரியில் ராமன்: ராமபிரான் அசுரர்களை வதம் செய்த பாவம் நீங்க, வசிஷ்ட முனிவரிடம் வழி கேட்டார். வசிஷ்டர், அறுபத்தாறு கோடி தீர்த்தங்களைத் தன்னிடம் கொண்ட காவிரிக்கு, தட்சிண கங்கை என்று பெயர். அந்நதியில் நீராடினால் உன் பாவ உணர்வுகள் நீங்கும் என்று கூறினார். அதன்படி ராமச்சந்திரன் காவிரியில் நீராடிய நாள் ஆடிப்பெருக்கு என்று ஒரு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

மங்களச் சரடு: புதுமணத் தம்பதிகள் குடும்பத்தினருடன் வந்து படையலிட்டு சாமி கும்பிடுவார்கள். அதேபோல மணமாகாத பெண்களும் நல்ல கணவர் கிடைக்க வேண்டும் என்று வேண்டி பனை ஓலையில் செய்யப்பட்ட தோடுகளை வைத்தும், கருகமணி, காப்பரிசி வைத்தும் வணங்குவார்கள். பவானி கூடுதுறை, திருச்சி, கரூர், ஈரோடு, பவானி உள்ளிட்ட காவிரிப் பகுதிகளில் உற்சாகத்துடன் ஆடிப்பெருக்கு விழாவை மக்கள் கொண்டாடுவார்கள். குழந்தை செல்வம், நீடித்த ஆயுள், வாழ்வில் சுபிட்சம் பெற ஆடிப்பெருக்கன்று பெண்கள் ஆற்றங்கரைக்குச் சென்று சிறப்பு வழிபாடு நடத்துவார்கள். சுமங்கலிப் பெண்கள் மாங்கல்ய பூஜை செய்து தாலிச்சரடை மாற்றிக்கொள்வார்கள். கன்னிப்பெண்கள் தங்களுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டி சிறப்பு பூஜைகள் செய்து கைகளில் மஞ்சள் கயிறுகளை கட்டிக் கொள்வார்கள்.

அம்மனுக்குரிய மாதம்: தமிழ் மாதங்களில் ஒன்றான `ஆடி' அம்மனுக்குரிய மாதமாக போற்றப்படுகிறது. பூமாதேவி அம்மனாக பூமியில் அவதரித்தது ஆடிமாதத்தில் என்பதால் இம்மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் அதிகம் முக்கியத்துவம் பெறுகின்றன.

தை மாதம் முதல் ஆனி மாதம் வரை பூமத்திய ரேகைக்கு வடக்கில் பயணம் செய்து வந்த சூரியன் அடுத்த ஆறு மாத காலத்திற்கு (ஆடி முதல் மார்கழி வரை) தன் பயணத்தை பூமத்திய ரேகைக்கு தெற்கில் தொடங்குகிறான். இக்காலம் தட்சிணாயண புண்ணிய காலம் என்று அழைக்கப்படுகிறது. இறைவனை அடைய அன்னை பராசக்தி கடும் தவம் இருந்தது ஆடி மாதத்தில் தான். இதை நினைவு கூரும் விதத்தில் `ஆடித்தபசு' நிகழ்ச்சி நெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலில் இன்றும் விழாவாக கொண்டாடப்படுகிறது.

முற்காலத்தில் அரியும், சிவனும் ஒன்று என்பதை உலகிற்கு உணர்த்துவதற்காக பார்வதி தேவி, புன்னை வனத்தில் தவம் இருந்தார். அவரது தவத்தை பாராட்டி சிவனும், விஷ்ணுவும் ஆடி மாத பவுர்ணமியன்று சங்கர நாராயணராக காட்சி அளித்தனர். அம்பிகை தவம் இருந்த இடம் சங்கரன் கோவில் ஆகும். இது திருநெல்வேலியில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு சுவாமி சங்கரலிங்க மூர்த்தியாக எழுந்தருளி அம்பிகையை மணந்து கொண்டார். அம்மன் தவம் இருந்து பலனை அடைந்ததால் இங்கு பக்தர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறி நலன் பெறுகின்றனர். பார்வதி தேவியின் தவத்தை மெச்சிய பரமசிவன் ஆடிமாதம் அம்மன் மாதமாக இருக்க வேண்டும் என்று வரம் கொடுத்தார். காற்றும், மழையும் ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். காற்றை காளியும், மழையை மாரியம்மனும் கட்டுப்படுத்துகின்றனர். இதனால் அம்மன் அருள் வேண்டி ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்பிகை வழிபாடு நடைபெறுகிறது.

நகை வாங்க நல்ல நாள்: அட்சய திரிதியையை விட, ஆடிப்பெருக்கு நன்னாள் நகை வாங்க உயர்ந்த நன்னாளாகக் கருதப்படுகிறது. இந்நாளில் நகை மட்டுமின்றி பிற பொருட்களும் வாங்கலாம். நாம் செய்கின்ற நற்செயல்களால், புண்ணியம் எப்படி பெருகுகிறதோ, அதுபோல் இந்நாளில் துவங்கும் சேமிப்பும் பல மடங்காய் பெருகும் என்பர். ஆடிமாதத்தில் பொதுவாக புதுத்தொழில் துவங்குவதில்லை என்பர். ஆனால், ஆடிப்பெருக்கு மட்டும் விதிவிலக்காகும்.

ஆடி பதினெட்டாம் நாள் காவிரியில் புதுவெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவரும்.

Moderator Note:

This Article has been published in Penmai eMagazine Jul 2013. You Can download & Read the magazines
HERE.
 
Last edited by a moderator:

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
24,372
Likes
34,329
Location
mysore
#2
ஆடிப்பெருக்கு திருவிழா பற்றி அரிய பல செய்திகளை தந்துள்ளீர்கள். மிக்க நன்றி.
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
35,337
Likes
77,337
Location
Hosur
#6
Gud sharing sumi akka.

chinna vayasula chappara thatti izhuthuttu jolly ah poi padaippom,
group ah porathu super ah irukkum.
thanks for shring this akka!!

Hi Kuzhali!

How is your health da? Thanks & welcome dear.
 

vijivedachalam

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 16, 2012
Messages
10,965
Likes
25,792
Location
villupuram
#8
hi akka,,romba useful ahana info solli irukinga..naanum annaikku saami kumbidren akka.............
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
35,337
Likes
77,337
Location
Hosur
#9
Health is ok now akka, almost normal aagiduchi ellam. :)
thanks!!

Happy to hear that you are normal now... take care dear.

hi akka,,romba useful ahana info solli irukinga..naanum annaikku saami kumbidren akka.............
Mmmmmmm... nalla sami kumbittu, adutha varusham aadi perukku varadhukkulla unga veetla oru kutti Viji or kutti Bala vandhu irukkanumnu vendikko Viji dear.:preggers:
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.