ADHD-Attention Deficit Hyperactivity Disorder-அலட்சியப்படுத்தினால் ஆபத்து!

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
ADHD அலட்சியப்படுத்தினால் ஆபத்து!
கவனம்
குழந்தை சொன்ன பேச்சையே கேட்பதில்லை... ஓர் இடத்தில் நிற்பதில்லை... இது பல அம்மாக்களின் புலம்பலாக இருக்கும். ‘குழந்தைன்னா அப்படித்தான் இருக்கும்’ என்று ஆறுதல் சொல்லி தேற்றுவார்கள். துறுதுறுப்பும் குறும்புத்தனங்களும் நிறைந்ததுதான் மழலைப் பருவம். இருந்தாலும் அதற்கும் ஓர் எல்லை உண்டு.

உங்கள் குழந்தை சொன்ன பேச்சையே கேட்பதில்லையா? எந்த ஒரு விஷயத்திலும் முழுமையான கவனம் செலுத்துவதில்லையா? கால் ஓர் இடத்தில் தங்காமல் எந்நேரமும் துறு துறுவென அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டிருக்கிறதா? ‘குழந்தைதானே’ என அலட்சியமாக விட்டு விடாதீர்கள். அது கிஞிபிஞி பிரச்னையாக கூட இருக்கலாம். மரபியல் ரீதியாகவும்  ரசாயன மாற்றங்களாலும் குழந்தைகளுக்கு ஏற்படும் மன நலப் பிரச்னைகளில் இதுவும் ஒன்று. இந்தப் பிரச்னையின் தன்மை குறித்து விளக்குகிறார் மன நல
மருத்துவர் கவிதா.

“Attention Deficit Hyperactivity Disorder என்பதே ADHD யின் விரிவாக்கம். இதன் பெயரிலேயே இந்தப் பிரச்னைக்கான தன்மை அடங்கியிருக்கிறது. Attention Deficit என்றால் கவனித்தல் திறன் குறைபாடு. Hyperactivity என்றால் எந்நேரமும் துறுதுறுவென இயங்கிக் கொண்டிருப்பது. இதில் மூன்று வகைகள் உள்ளன. முதலாவது கவனித்தல் திறன் குறைபாடு மட்டும் இருத்தல்.

இரண்டாவது ஒரு நிலையில் இல்லாமல் இயங்கிக் கொண்டிருத்தல், இவை இரண்டும் ஒருசேர இருப்பது மூன்றாவது வகை. 3 முதல் 6 வயதுக்குள் இதற்கான அறிகுறிகள் தெரிய வரும். குழந்தை நாம் சொல்வதையே உள்வாங்கிக் கொள்ளாமல் தன்னிச்சையாக ஏதேனும் ஒரு செயலில் ஈடுபடும். ஒரு செயலை முழுமையாக செய்யாமலேயே, வேறு ஏதேனும் செயலை செய்ய ஆரம்பித்து விடும். இப்படியாக நிலையில்லாத மனநிலையில் குழந்தைகள் இருந்தால், அதைக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்படி உள்ள குழந்தைகள் எல்லோருக்கும் ADHD குறைபாடு என்று பொருள் கொள்ளக்கூடாது. ஆலோசனைக்கு அழைத்துச் சென்று குழந்தையிடம் பேசும்போது மட்டுமே அதை உறுதிப்படுத்த முடியும். இக்குறைபாடுள்ள குழந்தைகள் நிலையில்லாத மனநிலையோடு இருப்பதால் அவர்களின் எதிர்காலம் மிகப்பெரும் கேள்விக்கு உள்ளாகும். கரு உருவாகும்போது மூளை உருவாக்கத்தில் ஏற்படும் கோளாறுதான் இப்பிரச்னைக்கு அடிப்படை காரணம். கருவுற்ற பிறகு ஆல்கஹால், சிகரெட் பயன்படுத்தினாலும் இப்பிரச்னை ஏற்படும். மரபியல் ரீதியாகவும் இப்பிரச்னை வரலாம்.

உடற்கூறு மட்டுமல்ல... சுற்றுப்புறச் சூழ்நிலைகளும் கூட காரணமாகலாம். குழந்தை கருவில் இருக்கும்போதும் பிறந்து தாயின் அரவணைப்பில் இருக்கும்போதும் தாய் மகிழ்ச்சியான மனநிலையில் இருக்க வேண்டும். நல்ல ஆரோக்கியமான சூழலை குழந்தைக்கு உருவாக்கிக் கொடுக்க வேண்டும். பெற்றோருக்கு இடையிலான சண்டை, போதுமான கவனிப்பின்மை ஆகியவை குழந்தையை மன ரீதியாக பாதிக்கும்.

இந்தப் பிரச்னைக்கு முழுமையான தீர்வு இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும் சைக்கோ தெரபி மூலம் இதனை கட்டுப்படுத்த முடியும். பெற்றோர் இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை புரிந்துகொண்டு நடந்து கொள்வது அவசியம். பள்ளி ஆசிரியர்களிடம் குழந்தைக்கு இருக்கும் பிரச்னை குறித்து தெளிவாக விளக்க வேண்டும். இல்லையென்றால், எல்லா மாணவர்களைப் போலவும் குழந்தைகளை நடத்த நேரிடும்.

விளக்கிச் சொல்கிற போது இக்குழந்தை மீது தனி கவனம் செலுத்தப்படும். குழந்தை எப்படி நடந்து கொள்ள வேண்டும், குடும்பத்தார் குழந்தையை எப்படி வழிநடத்த வேண்டும் என்பன சைக்கோ தெரபி மூலம் கற்றுத்தரப்படும்.அமெரிக்கன் சைக்காலஜி அசோசியேஷன் கணக்கெடுப்பின்படி உலக அளவில் 2003ம் ஆண்டு 7.8%, 2007ம் ஆண்டு 9.5%, 2011ம் ஆண்டு 11% குழந்தைகள் இப்பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுள் 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 6% குழந்தைகள் மட்டுமே மருத்துவ சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளே இப்பிரச்னையில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். குழந்தைப் பருவத்திலேயே இப்பிரச்னையைக் கண்டறிந்து அதனைக் களைவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் பெரியவர்களானாலும் இந்நிலை தொடரும் அபாயம் இருக்கிறது.

குழந்தை கருவில் இருக்கும்போதும் பிறந்து தாயின் அரவணைப்பில் இருக்கும்போதும் தாய் மகிழ்ச்சியான மனநிலையில் இருக்க வேண்டும்...
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#3
ஏ.டி.எச்.டி. (ADHD)

டாக்டர் சித்ரா அரவிந்த்

பொதுவாக குழந்தைகள் என்றாலே, துறுதுறுவென இங்கும் அங்கும் ஓடிக் கொண்டு இருப்பார்கள்... அவ்வப்பொழுது வீட்டுப் பாடத்தை செய்ய மறப்பார்கள்... வகுப்பில் பகல் கனவில் ஆழ்ந்திருப்பார்கள்... யோசிக்காமல் உடனுக்குடன் செயல்படுவார்கள்... உட்காரும் போது படபடத்துக் கொண்டே இருப்பார்கள். இப்படிப்பட்ட குழந்தைகள், ‘சொல்பேச்சு கேளாதவன்', ‘சோம்பேறி', ‘மரியாதை தெரியாதவன்', ‘சரியாக வளர்க்கப்படவில்லை' எனப் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாவது வழக்கம். ஆனால், தங்கள் வயதொத்த குழந்தைகள் போல அல்லாமல், இப்படித் தொடர்ந்து செயல்பட்டால், அது AdHD (Attention Deficit Hyperactivity Disorder) யின் அறிகுறியாகவும் இருக்கலாம்.


ADHDயின் முக்கிய தன்மைகள்...


கவனமின்மை (Inattention)
அதீத இயக்கம் (Hyperactivity)
உணர்ச்சி வேக செயல்பாடுகள் (Impulsivity)

இது போன்றவை ADHDயின்முக்கிய தன்மைகள். ADHD என்னும் நரம்பியல் வளர்ச்சிக் கோளாறின் அறிகுறிகள் குழந்தைப் பருவத்திலேயே ஆரம்பித்து, வாழ்நாள் முழுவதும் நீடிக்கக்கூடிய ஒரு பிரச்னை. குழந்தைக்கு 12 வயது ஆவதற்கு முன்னரே இதன் அறிகுறிகள் காணப்படும். இது பெரும்பாலும் குழந்தையின் படிப்பு மற்றும் சமூக வாழ்க்கையை வெகுவாக பாதிக்கின்றது.

இது பெரியவர்களிடத்திலும் காணப்பட்டாலும், அது அவர்களின் குழந்தைப் பருவத்திலேயே ஆரம்பித்து இருந்திருக்கும். சரியான சிகிச்சை எடுக்கவில்லை என்றால் இதன் அறிகுறிகள் (சற்றே வேறுவிதமாக) குழந்தை வளர்ந்து பெரியவர் ஆன பின்னரும் நீடித்தே காணப்படும். சிகிச்சையளிக்கப்படாத ADHD, பல்வேறு விதமான மனநல பிரச்னைகளை பெரியவர்களானதும் ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது. பலர் தங்களுக்கு ADHD இருக்கிறது எனத் தெரியாமலேயே கஷ்டத்துடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

ADHD பற்றிய தவறான கண்ணோட்டங்கள்...

*தவறான நம்பிக்கை

ADHD உள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் மிகையான இயக்கம் (Hyperactivity) இருக்கும்.

*உண்மை

ADHD உள்ள சில குழந்தைகளே மிகையான இயக்கத்துடன் காணப்படுவர். ஆனால், கவனமின்மை வகை (ADD) பாதிப்பு உள்ள குழந்தைகள் பலர் மந்தமாகவும் தனிமையாகவும் காணப்படுவர்.

* தவறான நம்பிக்கை

AdHD உள்ள குழந்தைகளால் எதிலும் கவனம் செலுத்தவே முடியாது.

*உண்மை

பொதுவாக பிடித்த விஷயங்களில் இவர்களால் நன்றாகவே கவனம் செலுத்த முடியும். ஆனால், எவ்வளவு முயற்சித்தாலும், சுவாரஸ்யமில்லாத மற்றும் திரும்பத் திரும்ப (Repetitive) செய்யும் விஷயங்களில் கவனம் செலுத்த முடியாது.

* தவறான நம்பிக்கை

முயற்சித்தால் இவர்களால் ஒழுங்காக நடந்து கொள்ள முடியும்.

*உண்மை

பார்ப்பதற்கு அடங்காதவர்களாகக் காணப்பட்டாலும், அவர்கள் அப்படி வேண்டுமென்றே செய்வதில்லை. அவர்கள் எவ்வளவு முயற்சித்தாலும், அவர்களால், ஓரிடத்தில்
உட்காரவோ, அமைதியாக இருக்கவோ, கவனம் செலுத்தவோ முடியாது என்பதே நிஜம்.

* தவறான நம்பிக்கை

குழந்தை வளர்ந்த பின்னர், தானாகவே கிஞிபிஞி சரியாகிவிடும்.
உண்மை

ADHD பெரியவர் ஆனப் பின்பும் நீடிக்கும். தகுந்த சிகிச்சை கொடுத்தால்தான் அறிகுறிகளை குறைக்கவும் சமாளிக்கவும் முடியும்.
* தவறான நம்பிக்கை

மருந்துதான் ADHDக்கு சரியான தீர்வு உண்மைபொதுவாக ADHDக்கு மருந்துகளை பரிந்துரைப்பது சகஜம். ஆனால், உங்கள் குழந்தைக்கு அதுமட்டுமே சரியான தீர்வாக அமையாது. கல்வி, நடத்தை சிகிச்சை (Behavior therapy), குடும்பம்/பள்ளியின் ஆதரவு, உடற்பயிற்சி, தகுந்த ஊட்டச்சத்து போன்றவையும் சேர்ந்து கொடுக்கப்பட்டால் தான், அது பயனுள்ள முழுமையான சிகிச்சையாக அமையும்.

ADHDயின் வகைகள்...

1.அதீத இயக்க வகை மட்டும் (Hyperactivity ADHD)
2.கவனமின்மை மட்டும் (Inattention ADD)
3.அதீத இயக்கம் மற்றும் கவனமின்மை இரண்டும் கலந்த வகை (அதிகமாக காணப்படும் வகை இதுதான்) ADHD.


குழந்தையிடம் எந்த பண்பு கள் (அதீத இயக்கம்/ கவனமின்மை) முதன்மையாகக் காணப்படுகின்றதோ, அதைப் பொறுத்தே, அறிகுறிகளும் வேறுபடும்.ADHDயுடன் சேர்ந்து காணப்படும் வேறு பிற நரம்பியல் வளர்ச்சி குறைபாடுகள்...பொதுவாக குழந்தைக்கு ADHD இருந்தால், வேறுசில மனநலக் கோளாறுகளும் சேர்ந்தே காணப்படும் வாய்ப்புள்ளது. முக்கியமாக, கற்றல் குறைபாடுதான், ADHDயுடன் பெரும்பாலும் காணப்படும். நடத்தைக் கோளாறு (Conduct Disorders), டூரெட்ஸ் கோளாறு, மனப்பதற்றம், மனச்சோர்வு, ஆட்டிஸம் போன்றவையும் ADHDயுடன் சேர்ந்து தாக்கும் வாய்ப்புள்ளது.

பெற்றோருக்கு ஓர் எச்சரிக்கை...

ADHD/LD என்னும் வார்த்தை இப்போது பள்ளி மற்றும் குடும்பங்களிலும் சகஜமாகிவிட்டது. குழந்தை கொஞ்சம் துறுதுறுவென ஓடிக் கொண்டிருந்தாலோ/சரியாக படிக்கவில்லை என்றாலோ, உடனே ADHD/LD என்று முத்திரை குத்தப்படுகிறது. குழந்தைக்கு பிரச்னை இருக்கிறது என ஒருசில அறிகுறிகளை வைத்து முடிவுக்கு வந்துவிடக் கூடாது. இப்படிக் கொடுக்கப்படும் அடையாளம் தவறாக இருப்பின், அக்குழந்தையின் எதிர்காலத்தையே பாதித்து விடும்.

குழந்தைக்கு இப்படி ஒரு பிரச்னை இருக்கிறது என நிர்ணயம் செய்வதே, சரியான சிகிச்சை எடுப்பதற்கு வழிவகுக்கத்தானே ஒழிய, ஒரு குழந்தையை சமுதாயத்திலிருந்து பிரித்து வைப்பதற்கு இல்லை என்பதை பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகம் உணர வேண்டும். ADHD யின் அறிகுறிகள் மற்றும் அதைக் குறித்த பிற தகவல்களை வரும் இதழில் பார்ப்போம்.

துறுதுறு மோகனுக்கு என்ன துன்பம்?

மோகன் ஏழாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான். அவன் வகுப்பில் ஆசிரியை பாடத்தைப் படிக்க சொன்னாலோ, அமைதியாக உட்கார்ந்து பாடத்தை எழுதச் சொன்னாலோ, அதைக் கேட்காமல் பிறருடன் பேசிக் கொண்டே இருந்தான். ஒரு வேலை சொல்லி, அதை செய்து கொண்டிருக்கும் போதே, அதை முழுவதும் முடிக்காமல் அடுத்த வேலையை செய்ய போய்விடுவான். பள்ளியில் அமைதியற்ற சூழல் இருப்பதால், அவனின் கவனம் எளிதில் திசை திரும்பியது. வீட்டில், அவன் அம்மா, அதட்டி உட்காரச் சொன்னாலும், ‘போரடிக்குது' எனச் சொல்லி வீடு முழுக்க ஓடிக்கொண்டே இருப்பான். பரீட்சையின் போது அவன் அம்மா அமைதியான சூழலில் அவனைப் படிக்க வைத்தாலும், தொலைபேசி ஒலித்தவுடன், உடனே அவனுக்கு கவனம் சிதறி விடும்.

அவனால் வகுப்பில் கவனம் செலுத்த முடியாமையால், அடிப்படை கருத்துகள் புரியாமல், மதிப்பெண் குறைவாக எடுக்க ஆரம்பித்தான். ஆனால், அவனுக்கு பிடித்த வீடியோ கேம்ஸ், செல்போன் கேம்ஸ் போன்றவற்றில் அருமையாக விளையாடுவான். எல்லோரும் அவனை பொதுவாக அறிவாளி என்றே கூறுவார்கள். எனவே, அவன் பெற்றோர், வேண்டுமென்றே படிக்கவில்லை என அவனை எப்போதும் திட்டிக் கொண்டே இருந்தார்கள்.

இதற்கிடையில், பள்ளியிலும் பாடம் கடினமாக ஆரம்பிக்கவே, அடிப்படை கருத்துப் புரியாததால், கணிதம், மற்றும் எழுதும் திறனில் பின்தங்கினான். அவன் கல்வி கற்கும் திறன் மற்றும் பள்ளிப் படிப்பும் பாதித்தது. ஆசிரியர்களும் அவனைத் திட்ட ஆரம்பித்தனர். இதனால், தன்னால் படிக்கவே முடியாது என எண்ணி தன்னம்பிக்கையை இழக்க ஆரம்பித்தான் மோகன்.

எதை எப்போது, யாரிடம் பேச வேண்டும் எனத் தெரியாததால், அவன் சகமாணவர் களாலும் ஒதுக்கப்பட்டான். மோகனின் அம்மா இதனால் மிகவும் பாதிக்கப்பட்டார். உறவினர் மற்றும் நண்பர்கள், அவரையும் அவரின் வளர்ப்பு முறையையும் அதிகம் விமர்சிக்க ஆரம்பித்தனர். மோகனைக் கவனித்து வளர்ப்பதின் கஷ்டத்தைக் காட்டிலும் உறவினரின் கடுமையான விமர்சனம் அவரை மிகுந்த கவலைக்கு உள்ளாக்கியது.உளவியல் ஆலோசனைக்கு அழைத்துச் சென்ற பின்னரே அவனுக்கு கிஞிபிஞி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதை அறிந்த அவன் அம்மாவுக்கு அவன் செயல்களுக்கு காரணம் கிடைத்த ஒரு சிறு நிம்மதி கிடைத் தாலும், எதிர்காலம் குறித்த பயம் அதிகமானது.

ஆனால், ஆலோசகரின், வழிகாட்டுதலின் மேல் தகுந்த சிகிச்சை எடுத்துக் கொண்டபிறகு, அவனின் அறிகுறிகள் குறைந்து, இப்போது குடும்பத்தில் நிம்மதி நிலவுகிறது. முக்கியமாக மோகனுக்கு, தனக்கு கிஞிபிஞி இருக்கிறது என்னும் எண்ணம் ஆழமாக பதியாத வண்ணம் பார்த்து கொள்ளும் படி, அவன் அம்மா ஆலோசகரால் வலியுறுத்தப்பட்டார்.

குழந்தைக்கு பிரச்னை இருக்கிறது என ஒருசில அறிகுறிகளை வைத்து முடிவுக்கு வந்துவிடக் கூடாது. இப்படிக் கொடுக்கப்படும் அடையாளம், தவறாக இருப்பின், அக்குழந்தையின் எதிர்காலத்தையே பாதித்துவிடும்.

 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#4
ஏ.டி.எச் .டி. (ADHD)


டாக்டர் சித்ரா அரவிந்த்
ADHD என்னும் நரம்பியல் வளர்ச்சி குறைபாடு ஒரு குழந்தைக்கு இருக்கிறதா/இல்லையா என்பதை எப்படி தெரிந்து கொள்ளலாம்? கீழ்க்காணும் அறிகுறிகளில், அதிகபட்ச அறிகுறிகள் குழந்தையிடம் காணப்பட்டால், அது ADHDயாக இருக்கலாம். இது தொடர்பாக, உளவியல் நிபுணரிடமோ (Consultant Psychologist) / குழந்தை நல சிறப்பு மருத்துவரிடமோ (Neurodevelopmental Pediatrician) தெளிவு செய்து கொள்வது நல்லது.1.கவனமின்மை அறிகுறிகள்

விவரங்களை சரியாக கவனிக்க தவறுதல்.
பள்ளி அல்லது பிற வேலைகளில் கவனக் குறைவாக தவறுகள் செய்தல்.
ஒரு வேலையில் தொடா்ந்து கவனம் செலுத்துவதில் கஷ்டம்.

நேரடியாக அவர்களிடம் பேசும் போதும், அதை அவா்கள் கேட்பது போலவே தெரியாது.
ஒருவா் சொல்லும் வழிமுறைகளைப் பின்பற்ற முடியாமல் இருத்தல் மற்றும் கொடுத்த பணியை செய்து முடிக்க முடியாத நிலை.
செயல்பாடு மற்றும் பணிகளை ஒழுங்கு பட சீரமைத்து செய்வதில் சிரமம்.நீடித்த கவனம் தேவைப்படும் விஷயங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்தல் / தயக்கம் காட்டுதல்.
ஒரு வேலை செய்து முடிக்க தேவைப்படும் விஷயங்களை கவனமின்றி தொலைப்பது (எ.டு) புத்தகம், பொம்மை, வீட்டுப்பாடம்.
பிற தூண்டுதல்களால் (Any distraction) எளிதில் கவனம் சிதறுதல்.

தினசரி செயல்பாடுகளில் மறதி.
"கவனமின்மை” முதன்மையாக காணப்படும் ADHD வகையைச் சேர்ந்த இக்குறைபாட்டினால் ஏற்படும் விளைவு கள் பல. இவர்கள், வழிமுறைகளை சரியாக பின்பற்ற முடியாத காரணத்தினால், பெற்றோர் மற்றும் ஆசிரியரின் கோபத்துக்கு அடிக்கடி ஆளாவார்கள். மேலும், பள்ளியில் செயல்திறன் பாதிப் படைவதுடன் மற்ற குழந்தைகளுடன் அடிக்கடி தகராறு ஏற்படும் வாய்ப்பும் அதிகம்.

2. அதீத இயக்க/உணா–்ச்சிவேக அறிகுறிகள்

அதீத இயக்கம்கை மற்றும் கால்களை படபடவென பொறுமையின்றி அசைப்பது அல்லது இருக்கையில் நெளிவது.
உட்கார சொன்னாலும், இருக்கையை விட்டு நகா்ந்து செல்வது (எ.டு.பள்ளி நேரத்தில் இருக்கையில் அமராமல் நகா்ந்து கொண்டே இருப்பது).
சம்பந்தமேயில்லாத சூழ்நிலையில் அதிகமாக நகருவது/ஓடுவது (எ-டு. புது உறவினர் வீடு/ஏதேனும் அமைதியான சூழலிலும் ஓடுவது).
சத்தமின்றி விளையாடுவது மற்றும் ஓய்வெடுப்பதில் சிரமம்.

எப்போதுமே இயங்கிக்கொண்டு இருப்பதுபோல் காட்சியளித்தல்.அதிக பேச்சு, உணா்ச்சிவேக செயல்பாடுகள்.கேள்வி கேட்டு முடிப்பதற்குள் பதில் சொல்வது.அவா்களின் முறை வரும் வரை காத்திருக்க பொறுமையின்மை.மற்றவா–்கள் பேசும்போதோ/
விளையாட்டின்போதோ நாகரிகமின்றி குறுக்கிடுதல்.

சுயக்கட்டுப்பாடு இல்லாமை - எளிதில் தூண்டப்பட்டு சிந்திக்காமல் செயல்படுவார்கள்.இவ்வகை அறிகுறிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட அமைப்புகளில் காணப்படவேண்டும். எ.டு. குழந்தை வீட்டில் மட்டுமே இங்ஙனம் நடந்து கொண்டு பள்ளியில் இயல்பாக இருந்தால், அது ADHDயாக இருக்காது. எனவே, பள்ளி, வீடு மற்றும் பிற அமைப்புகளிலும் ஒரே மாதிரியாக குழந்தை நடந்து கொண்டால் அது ADHDயாக இருக்கக்கூடும்.

மேலும், இந்த அறிகுறிகள், வேறு மனநல கோளாறுகளான ஆளுமை கோளாறு, அறிவுத்திறன் குறைபாடு அல்லது மனநோய் (Psychotic disorder) போன்றவற்றால் ஏற்பட்டிருந்தால் அது ADHDயாக இருக்க வாய்ப்பு குறைவு. அதுமட்டுமின்றி, குழந்தைக்கு சமீபத்தில் ஏதேனும் மனஉளைச்சல் தரும் சம்பவம் ஏற்பட்டதா அல்லது தைராய்டு நரம்பியல் கோளாறு, வலிப்பு, தூக்க கோளாறு கள் இருக்கின்றனவா என்பதும் உறுதி செய்யப்பட வேண்டும். ஏனெனில் இது போன்ற பிற பிரச்னைகளும், ADHDயை போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடும்.

ADHDயால் ஏற்படும் நல்ல விளைவுகள்

ADHD என்றால் சாபம் என நினைக்கும் சூழலில், அதனால் சில நன்மைகளும் உண்டு என்பதை அறிவது, பெற்றோருக்கு ஒரு சின்ன சந்தோஷத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தும்.

1. படைப்பாற்றல் ADHD உள்ள குழந்தைகள் அபாரமாக படைப்பாற்றல் சக்தியுடன் மற்றும் கற்பனைத் திறனுடன் திகழ்வார்கள். பகல்கனவு காணும் இக்குழந்தைகள் ஒரே நேரத்தில் பலவிதமாக சிந்திப்பார்கள். இதனால் இவர்கள் புதிய விஷயத்தை படைக்கும் கலைஞர்களாக ஆகும் வாய்ப்பு அதிகம். பொதுவாக, யாரும் கவனிக்காத விஷயத்தையும் கூட இவர்களால் பார்க்க முடியும்.

2. வளைந்து கொடுக்கும் தன்மை ஒரே நேரத்தில் வெவ்வேறு வழிமுறைகளை இவர்கள் எண்ணிப் பார்ப்பதால், ஒரு தீர்விலேயே ஒன்றிவிடாமல் வித்தியாசமான கருத்துகளையும் ஆர்வமாக ஏற்றுக் கொள்வார்கள்.

3. அதிக உற்சாகம் எப்போதும் உற்சாகமாகக் காணப்படுவதால், இவர்கள் பழகுவதற்கு, சுவாரஸ்யமானவர்களாக இருப்பார்கள், குறிப்பாக, ஒத்த ஆர்வமுள்ளவர்களு டன்.

4. உந்து சக்தி இவர்களுக்கு தகுந்த ஊக்கமளித்தால், படிப்பிலும், விளையாட்டிலும் கடினமாக உழைத்து வெற்றி பெறுவர். பிடித்த செயல்பாட்டில்/விஷயத்தில் ஈடுபடும்போது, இவா்களை அவ்வளவு எளிதில் திசை திருப்ப முடியாது.

கீழ்க்காணும் அறிகுறிகள் 6 மாத காலத்துக்கும் மேலாக, 12 வயது உட்பட்ட குழந்தைகளிடத்தில் காணப்பட்டு, மேலும், அவர்களின் குடும்பம் மற்றும் பள்ளி வாழ்க்கையை பாதிக்கும் போதுதான், அது ADHD ஆக இருக்கக் கூடும். மேலும், இதே அறிகுறிகள், சிறு குழந்தைகளிடையே காணப்பட்டாலும், அது அவர்கள் வயதுக்கு இயல்பானதொன்றே என்பதால் வெளியே தெரியாது.

ஆனால், குழந்தைக்கு கிட்டத்தட்ட 5 வயது ஆனபோதும், பள்ளிக்கு போன பின்னரும் அதே செயல்பாடுகள் தொடரும் போதுதான் மருத்துவரின் கவனத்துக்கு பெரும்பாலும் கொண்டு வரப்படுகிறது. மேலும், கவனமின்மை வகையைக் காட்டிலும் அதீத இயக்க வகை ADHDதான் மருத்துவரின் கவனத்துக்கு அதிகம் கொண்டு வரப்படுகிறது. ஏனெனில், இதன் அறிகுறிகள் வெளிப்படையாக எல்லோருக்கும் தெரிந்து விடுகிறது.
ADHD உள்ள குழந்தைகளிடத்தில் காணப்படும் பல்வேறு நடத்தை பாதிப்புகள்

1. நடத்தையை மட்டுப்படுத்துதல்

சட்டென்று, சொல்ல வந்ததை கட்டுப்படுத்திக் கொள்வதில் சிரமம் மற்றும் நடந்துகொண்டிருக்கும் செயல்பாடுகளை தடங்கல் செய்தல். எ.டு. மற்றவா் பேசிக் கொண்டிருக்கையில், அடக்கமுடியாமல் இடைமறித்து பேசுவது.

2. நினைவாற்றல்

நிகழ்வுகளை மனதில் தக்கவைத்துக் கொள்வது மற்றும் சிக்கல்களை எதிர்நோக்குவது/சிக்கலான செயல்பாட்டைப் பின்பற்றி செய்து காட்டுவதில் சிரமம்.

3. சுயக்கட்டுப்பாடு

உணா்ச்சி/செயல்பாட்டை கட்டுப்படுத்துவது மற்றும் ஒரு விஷயத்தை முன்னும் பின்னும் யோசிப்பதில் சிரமம்.

4. இலக்கு வைத்தல்

இலக்கை நிச்சயித்தல் மற்றும் அதை மனதில் தக்க வைத்துக் கொள்வதில் சிரமம்.

5. புரிந்து கொள்ளுதல்

தன் செயல்பாடுகளை, அது தரும் விளைவுகளை கவனத்தில் கொண்டு அதற்கு தகுந்தவாறு திட்டமிட்டு எதிர்காலத்தில் செயல்படுத்துவதில் சிரமம்.
இதனால், அடிக்கடி பிரச்னையில் மாட்டிக் கொள்ள நேரிடும்.

ADHDயின் விளைவுகள்

ADHD முக்கியமாக குழந்தையின் கல்வித்திறன் மற்றும் சமூகத்திறனை அதிகம் பாதிக்கிறது. மேலும், அக்குடும்பத்துக்கே இது பெரிய மனஉளைச்சலை ஏற்படுத்தி விடுகிறது. பெரியவர்களுக்கு ADHD இருக்கும்போது, அவர்களின் சமூக நலம், வேலைத்திறன் மற்றும் குடும்ப வாழ்க்கையை வெகுவாக பாதிக்கிறது. படிப்பை பாதிப்பதால், குழந்தையின் தன்னம்பிக்கையையும் குறைக்கிறது. தன்னால் எதையும் சாதிக்க முடியாது என்ற பயமும் தொற்றிக் கொள்கிறது.

மேலும், ADHD பிற மனநலப் பிரச்னையுடன் சேர்ந்து பாதிக்கும் போது, அது ஏற்படுத்தும் விளைவுகள் பெரிது. (எ.டு.) ADHDயும், ODDயும்(Oppositional Defiant Disorder) சேர்ந்து காணப்பட்டால், அக்குழந்தை அடிக்கடி சட்டத்தின் பார்வையில் சிக்கிக் கொள்ளவும் வாய்ப்புகள் அதிகம். மேலும், யாராலும் கட்டுப்படுத்த முடியாத நிலையும் ஏற்பட்டுவிடக் கூடும்.

காரணி மற்றும் சிகிச்சை

பிற நரம்பியல் வளர்ச்சிக் கோளாறுகள் போலவே, ADHDயின் காரணியும் சரியாக கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், மரபணுக்கூறு சுற்றுச்சூழல், மூளையின் செயல்பாடுகள், நியூரோட்ரான்ஸ்மிட்டர்ஸின் (Neurotransmitters) செயல்பாட்டின் அளவு போன்றவை காரணமாக இருக்கலாம் என பல்வேறு ஆய்வுகளின் முடிவுகள் தெரிவிக்கின்றது.

சிகிச்சை: நடத்தை சிகிச்சை, மருந்துகள் மற்றும் முக்கியமாக பள்ளியிலும் வீட்டிலும் குழந்தைக்கு கிடைக்கும் ஆதரவு போன்றவை ஒருங்கிணைத்து சிகிச்சையாக அளிக்கப்படும் போது, ADHDயின் அறிகுறிகளை நன்றாக சமாளிக்கும் திறன் குழந்தையிடம் ஏற்படுகிறது.பெற்றோர் செய்ய வேண்டியவைகுழந்தை சரியாக “கவனம் செலுத்தும் போதும், விதிகள்/வழிமுறைகளை பின்பற்றும் போதும், உணர்ச்சி வேகத்தில் செயல்படாமல் இருக்கும் போதும், பள்ளிப்பாடத்தை கற்க முயலும் போதும், மற்றவரிடம் சரியான முறையில் பழகும் போதும்”, அதை வலுவூட்டும் விதத்தில் அவர்களை சரியான முறையில் வழிகாட்டுதல் நல்ல பலனைக் கொடுக்கும்.

ADHD உள்ள பிரபலங்கள்

புகழ்பெற்ற ஜிம் கேரி (ஹாலிவுட் நடிகர்), பாரிஸ் ஹல்டன் (அமெரிக்க தொழிலதிபர்), மைக்கேல் பெல்ப்ஸ் (புகழ்பெற்ற நீச்சல் வீரர்), ரிச்சர்ட் பிரான்சன் (பிரிட்டன் தொழிலதிபர்) போன்ற பலர்ADHD பிரச்னை இருந்தும் வாழ்க்கையில் சாதித்து காட்டியவர்கள். எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு ADHD இருக்கின்றது என வருத்தப்படாமல், அதை ஆக்கப்பூர்வமாகவும் சவாலாகவும் எடுத்துக் கொண்டு தகுந்த வழிகாட்டலை அளித்தால் மிக்க நல்லது
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.