Agathi Keerai - Medicinal Benefits

Aswathikarthick

Friends's of Penmai
Joined
Oct 18, 2012
Messages
136
Likes
121
Location
Qatar
#1
அகத்திக் கீரை மருத்துவப் பயன்கள்

அகத்திக் கீரையில் இலையும், பூவும், காயும், பட்டையும், வேரும் மருந்தாகப் பயன்படுகின்றன. இது காய்ச்சலைக் குறைத்து உடல்சூட்டை சமபடுத்தும் தன்மை கொண்டது.

அகத்தி கீரை சாப்பிடுவதால் குடல் புண் குணமாகும்.

அகத்திக்கீரையைப் பச்சையாக சாப்பிட தொண்டைப் புண் மற்றும் தொண்டைவலிக் குணமாகும்.

இரத்தப் பித்தம் மற்றும் இரத்த கொதிப்பு இவற்றிற்கு அகத்தி கீரை அருமருந்தாகும்.

வெயில் காலங்களில் வாரத்திற்கு ஒருமுறை அகத்திக் கீரையை உணவில் சேர்க்க வேண்டும். இதனால் வெயிலில் அலைவதால் ஏற்படும் உடல் வெப்பம், மலச்சிக்கல் போன்றவற்றை தவிர்க்க முடியும்.

இக்கீரையில் சுண்ணாம்புச் சத்து, வைட்டமின் ஏ நிரம்பி உள்ளது. குழந்தைகளுக்கு தேவையான பால் சுரக்காத தாய்மார்கள் வாரத்திற்கு இருமுறை அகத்திக் கீரையைச் சாப்பிட நன்கு பால் சுரக்கும். இக்கீரை சமைக்கும்போது நன்றாக வேக வைத்து உண்ண வேண்டும்
 

Aswathikarthick

Friends's of Penmai
Joined
Oct 18, 2012
Messages
136
Likes
121
Location
Qatar
#2
அகத்தி கீரை சிறிது உப்பு சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டதாகும். இது மருந்து முறிவு கீரையாகும். எனவே வேறு மருந்துகள் உண்ணும் காலங்களில் அகத்திக்கீரையை சாப்பிடக் கூடாது.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.