Allow the Children to play Games which adds to the Success of Children's Studies-படிப்பின் வெற்றியில

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
படிப்பின் வெற்றியில் விளையாட்டுக்கும் பங்கு உண்டு!


கோடை விடுமுறையில் ஆடிப்பாடி, உற்றார், உறவினரைச் சந்தித்து, நண்பர்களோடு ஊர் சுற்றி, குதூகலித்து, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு குழந்தைகள் செல்ல ஆரம்பித்துவிட்டனர். இத்தருணத்தில், ‘என் குழந்தை படித்தால் மட்டுமே போதும்’ என எண்ணி, பல பெற்றோர் குழந்தைகளை ‘படி படி’ என 24 மணி நேரமும் நச்சரித்துக்கொண்டே இருப்பார்கள்.

இது இந்தத் தலைமுறையினருக்கு வெறுப்பையே உண்டாக்குகிறது. குழந்தைகளை படிப்பில் மட்டுமே ஈடுபடுத்தாமல், உடல் மற்றும் மன ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தி, ஏதேனும் ஒரு விளையாட்டிலும் ஈடுபடுத்த வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு வேண்டும்.

பாடப்புத்தகங்களைப் படிப்பதற்கு முன்பாக ஒரு சிறிய உடற்பயிற்சி அல்லது விளையாட்டு காரணமாக குழந்தைகளின் உடலும் உள்ளமும் தூய்மை அடைகிறது. இதன் காரணமாக அவர்களால் நன்றாக படிக்க முடிகிறது.

படித்த பாடங்களும் மனதில் நன்றாக பதிகிறது. விளையாட்டுத் துறை குழந்தைகளின் அறிவு வளர்ச்சி, உடல் வளர்ச்சி, மன வளர்ச்சியோடு, நல்ல ஒழுக்கமான வாழ்வு வாழவும் வழி வகுக்கிறது. போட்டி, பொறாமை, வஞ்சனை மிகுந்த இந்த சமுதாயத்தில் வெற்றிகரமான மனிதனாக, படிப்போடு கூடிய விளையாட்டுக்கு முக்கிய பங்கு உண்டு.

20 கிலோ புத்தகங்கள், 10 கிலோ நோட்டுப் புத்தகங்களை சேர்த்து வில் போல முதுகை வளைத்து சுமக்க வேண்டிய, மனப்பாடம் செய்ய வேண்டிய இன்றைய பள்ளி பாடத்திட்டத்தில் இது சாத்தியமா? பெற்றோர் கோபத்தோடு இப்படி கேட்பது நியாயம்தான். ‘மகாகவி பாரதி ‘மாலை முழுவதும் விளையாட்டு’ என பாடி விட்டுப் போய்விட்டார்.

அதன்படி குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தால், வீட்டுப் பாடங்களை யார் முடிப்பது? பரீட்சைக்கு யார் படிப்பது? அடுத்த வீட்டுப்பிள்ளை 96% மார்க் எடுத்துக்கொண்டிருக்கும்போது என் பிள்ளையை 98%க்கு மார்க் வாங்க நான் எப்படி தயார் செய்வது?’ - இவை பெற்றோரின் ஆதங்கம். இது போதாதென்று 300 டி.வி. சேனல்கள், இன்டர்நெட் ஆண்ட்ராய்டு மொபைல் போன்களோடு உட்கார்ந்த இடத்தைவிட்டு நகராத குழந்தைகள்...

இப்போதைய குழந்தைகள் மிகுந்த குண்டாகவோ, படு நோஞ்சானாகவோ உள்ளனர். உடற்பயிற்சி இல்லாமை, விளையாட்டுகளில் அறவே ஈடுபாடு இல்லாதவர்கள், சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளாதவர்கள் ஆகியோர் படுபலவீனமாக இருக்கிறார்கள். இதன் காரணமாகவே மனமும் பலவீனப்பட்டு, மன உளைச்சலுக்கும் மன அழுத்தத்துக்கும் உள்ளாகி தற்கொலை வரை முடிவெடுப்போரும் உண்டு.

மனிதனின் பிற்காலத்துக்கு படிப்பு அவசியம்தான். ஆனால், 365 நாட்களும் படிப்பு மட்டுமே என்றில்லாமல் விளையாட்டுத் துறையிலும் தினம் சிறிது நேரம் பயிற்சி பெறுவதால், இந்தக் குழந்தைகள் மற்றவர்களைவிட நிதானமாக, பொறுமையாக, உறுதியான மனதுடன் எல்லாவித குணநலன்களிலும் சிறப்பாக மாறுபட்டு நம்பர் 1 ஆக இருப்பார்கள். இவர்களின் மகிழ்ச்சியும் வெற்றிகரமான சிந்தனைகளும் நம்மை வியக்க வைக்கும்.

படிப்பு, விளையாட்டு, நண்பர்கள் என உள்ள குழந்தைகளின் உடல் வளர்ச்சி மிக ஆரோக்கியமானதாக இருக்கும். இவர்கள் வளர்ந்து பெரியவர் ஆகும்போது பக்குவப்பட்ட மனநிலையுடன் கூடிய சிறந்த மனிதர்களாக இருப்பார்கள். குழப்பமான நெருக்கடியான சூழ்நிலையிலும்கூட, பக்குவமாகச் சிந்தித்து உறுதியான முடிவெடுப்பார்கள். இவர்கள் பதற்றமாக எந்த ஒரு முடிவையும் எடுப்பது மிகவும் அரிது.

சிறு வயது முதலே உறுதியான சூழ்நிலையில் வளர்வதால், இவர்களை வெற்றி தானாகவே தேடி வருகிறது. வெற்றி மேல் வெற்றி வருவதால், மென்மேலும் மன உறுதி வலுத்து, சிறந்த மனிதனாக உருமாற முடிகிறது. விளையாட்டில் ஈடுபடும் குழந்தைகள், படிப்பிலும் மிகச்சிறந்து விளங்குவதாக இப்போதைய ஆராய்ச்சிகள் உறுதி செய்கின்றன. இக்குழந்தைகள் எப்போதும் தங்களின் மூளை, கண்கள், காதுகளை கூர்மையாக வைத்திருப்பதால், இவர்களால் மற்றவர்களைவிட அதிகமாக செய்திகளை, படங்களை சேகரித்து மனதில் பதிய வைக்க முடிகிறது.

விளையாட்டுகளில் வெற்றி பெறுவதற்காக பயிற்சியாளர்கள் பலவிதத் திட்டங்களை வகுத்து, அதன்படி செயல்பட குழந்தைகளை தயார்படுத்துவார்கள். இதுவே குழந்தைகள் பாடப்புத்தகங்களை படிக்கும்போதும், பரீட்சைக்கு தயாராகும்போதும் மிகவும் வெற்றிக்கு உதவுகிறது. பிற்காலத்தில் வாழ்க்கையிலும் வெற்றி பெற இது ஒரு முன்னோடியாகவும் முதல்படியாகவும் அமைகிறது.

குழந்தைகளின் மனநிலையை (Kids Psychology) ஆராய்ந்து பார்க்கும்போது, ‘கட்டாயப்படுத்தி செய்யும் எதையும் குழந்தைகள் விரும்புவதே இல்லை’ என்பது தெரிய வருகிறது. படிப்பு, விளையாட்டு, நண்பர்கள் என அவர்கள் போக்கிலே விடுவதுபோல விட்டு, ஆளாக்கி, வெற்றி பெறச் செய்வதே உங்களின்
புத்திசாலித்தனம்!

விளையாட்டில் ஈடுபடும் குழந்தைகள், படிப்பிலும் மிகச்சிறந்து விளங்குவதாக ஆராய்ச்சிகள் உறுதி செய்கின்றன. எப்போதும் மூளை, கண்கள், காதுகளை கூர்மையாக வைத்திருப்பதால், மற்றவர்களைவிட அதிகமாக மனதில் பதிய வைக்க முடிகிறது.குழந்தைகளின் மனநிலையை ஆராய்ந்து பார்க்கும்போது, ‘கட்டாயப்படுத்தி செய்யும் எதையும் குழந்தைகள் விரும்புவதே இல்லை’ என்பது தெரிய வருகிறது.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#2
Re: Playing Games adds to the Success of Children's Studies-படிப்பின் வெற்றியில் விளையாட&#3021

Absolutely true.
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.