An apple a day keeps the doctor away

tnkesaven

Yuva's of Penmai
Joined
Jun 28, 2012
Messages
7,996
Likes
9,397
Location
puducherry
#1
ஆப்பிள்


சத்துக்கள்?


புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், நார், இரும்புசத்து, பாஸ்பேட், சர்க்கரை, பொட்டாசியம், சோடியம், பெக்டின், மேலிக் யூரிக் அமிலங்கள், வைட்டமின் A-B1-B2 மற்றும் சி ஆகியவை உள்ளன.


கலோரிகளில் குறைவானது ஆப்பிள்.
140 கிராம் எடை கொண்ட ஒரு ஆப்பிளில் 90 கலோரிகளே உள்ளன.
மேலும் கரைபடக்கூடிய நார்ச்சத்துக்கள் ஆப்பிள்களில் அதிகம்


ஆப்பிள் பழத்தில் பெக்டின், பாலிபினால்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இது இரத்தத்தில் கலந்துள்ள கொழுப்புகளை தடுத்து ஆக்ஸிஜனேற்றம் அடைவதற்கான அடர்த்தியுள்ள லிபோபுரோட்டீன் (LDL) கொண்டுள்ளது


பலனகள்


நரம்பு மண்டலத்துக்கும் மூளைக்கும் நல்ல சக்தி கிடைக்கிறது.


செரிமான மண்டலம் சீராக இயங்கச் செய்கிறது.
gகால்சியம் உடலில் சேமிக்கச் செய்கிறது.


சருமத்துக்கு மிகவும் நல்லது. பொலிவான* உடல் தோற்றத்தையும் ஆரோக்கியமான உடல் நலனையும் தரும்


கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு ஆப்பிளை கட்டாயமாக சாப்பிட வேண்டும். கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிகள் ஆப்பிள் சாப்பிட்டால் இரத்தத்தில் காணப்படும் சர்க்கரையின் அளவை கட்டுபாட்டுக்குள் வைத்துக்கொள்ளும்.
ஆனால் அதில் உள்ள பெக்டின் என்னும் கார்போஹைட்ரேட், வாயுத் தொல்லையை உண்டாக்கும்.
எனவே கர்ப்பிணிகள் இதனை அளவாக சாப்பிடுவது நல்லது.


பைட்டோ கெமிக்கல்ஸ் ஆப்பிள்களில் அதிகம் காணப்படுகிறது.
அதாவது குறிப்பாக `குவர்செடின்' அதிகமாக இருப்பதால், இருதய நோயையும், புற்றுநோயையும் தடுக்கிறது.
வயிற்றுப் போக்கு, குன்மம், சீதபேதி, சிறுநீரகக் கோளாறுகள், இதய நோய்கள், இரத்த அழுத்தம் ஆகியவைகளுக்கு நல்லது.


குடலில் உள்ள கிருமிகளை அழிக்க உதவுகிறது. குழந்தைகளுக்குப் பேதி கண்டால் ஆப்பிள் பழத்தைஆவியில் வேகவைத்து பிசைந்து கொடுத்தால் வயிற்றுப்போக்கு குணமாகும்

an apple a day keeps the doctor away----proverb

courtesy:""doctor vikatan/fb
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.