Anaemia -ரத்தசோகை - பெண்களை அதிகம் தாக்கும் நோய்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
ரத்தசோகை பெண்களை அதிகம் தாக்கும் மற்றொரு நோய்!
அலட்சியம் வேண்டாம்
இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போல பரபரப்புக்கும் கடும் போட்டிக்கும் பஞ்சம் இல்லாத உலகம் இது. அடித்து ஆட வேண்டிய நேரத்தில் அசதியாக, ஆர்வமில்லாமல் ஒருவர் இருந்தால் என்ன ஆகும்? ரத்தசோகை இருப்பதற்கான முக்கிய அறிகுறியே இந்த அசதியும், ஆர்வமின்மையும்தான் என்கிறார்கள் மருத்துவர்கள். அதிலும், ரத்தசோகையினால் அதிகம் பாதிக்கப்படுகிறவர்கள் பெண் களே என்பதால் இது இன்னும் கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தி.ரத்தசோகை எதனால் வருகிறது என்பது முதல் எப்படி தவிர்ப்பது என்பது வரை பல்வேறு வழிமுறைகளை நம்மிடம் விளக்குகிறார் நோய்க்குறியியல் மருத்துவரான சாந்தாரவிஷங்கர். ‘‘நம் ரத்தத்தில் இருக்கும் சிவப்பு அணுக்களில் ஏற்படும் குறைபாடுகளையே ரத்தசோகை (Anemia) என்கிறோம்.

இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொன்னால், இந்த சிவப்பு அணுக்களில் ஹீமோகுளோபின் என்ற நிறமிகள் இருக்கின்றன. நம் உடலின் செயல்பாட்டுக்குத் தேவையான ஆக்சிஜனை திசுக்களுக்கு எடுத்துச் செல்வது இந்த ஹீமோகுளோபின்கள்தான். சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைந்து, அதனால் ஹீமோகுளோபினின் செயல்பாடும் குறைந்து, அதனால் ஆக்சிஜன் எடுத்துச் செல்லப்படுவதும் தடைபடும் நிலையையே ரத்தசோகை என்கிறோம்.

வழக்கமாக ஹீமோகுளோபின் அளவு ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என மூன்று தரப்புக்கும் சிறிது வித்தியாசப்படும். ஆண்களுக்கு சராசரியாக 14.5 முதல் 15.5gm/dl, பெண்களுக்கு 13.5 முதல் 14.5 ரீனீ/பீறீ இருக்க வேண்டும், குழந்தைகளுக்கு 16 முதல் 17 gm/dl என கொஞ்சம் அதிகமாக இருக்கும். (ஒரு லிட்டர் ரத்தத்தில் 10ல் ஒரு பாகத்தை எடுத்துக்கொண்டு, அதற்குள் எத்தனை கிராம் ஹீமோகுளோபின்கள் இருக்கின்றன என்பதைக் கணக்கிடுவார்கள். அதனால்தான் 10ல் ஒன்று என்ற அர்த்தத்தில் Grams per deci litre என்று கணக்கிடுகிறார்கள்.)

இந்த ஹீமோகுளோபின் அளவு குறைவதை வைத்து ரத்தசோகை எந்த நிலையில் இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கலாம். ஹீமோகுளோபின் 10 முதல் 11 கிராம் இருந்தால் அது லேசான ரத்தசோகை, 9 முதல் 10 கிராமாக இருந்தால் அது மிதமான ரத்தசோகை,8 கிராமுக்குக் கீழ் இருந்தால் அது தீவிர ரத்தசோகை என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

விபத்து, அறுவை சிகிச்சை, புற்றுநோய் போன்றவற்றால் உண்டாகும் ரத்த இழப்புகள், இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம், பி12 போன்ற சத்துகள் கிடைக்காமல் போவது, பரம்பரை குறைபாடு, என்சைம்களில் ஏற்படும் கோளாறு, சிவப்பு அணுவின் அளவு குறைவது அல்லது வடிவம் மாறுவது, மலேரியா காய்ச்சல், ரத்தம் தானம் பெறும்போது ரத்த வகை மாறிப்போவது போன்ற காரணங்களால் ரத்த சோகை உருவாகலாம்.

இந்தியாவில் இரும்புச்சத்து குறைபாடு காரணமாகவே பெரும்பாலானவர்கள் ரத்தசோகைக்கு ஆளாகிறார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று எல்லாத் தரப்பினருக்கும் ரத்தசோகை ஏற்படும் என்றாலும், பெண்கள்தான் இதில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பருவம் அடைவது, மாதவிலக்கு, பிரசவம் போன்றவற்றால் பெண்கள் இயல்பாகவே அதிக ரத்த இழப்பை சந்திக்கிறார்கள்.

தாய்ப்பால் கொடுக்கிற பெண்களுக்கு தேவைக்கேற்ற இரும்புச்சத்து கிடைக்காதபோதும் ரத்தசோகை ஏற்படுகிறது. இதனால் குழந்தைக்கும் போதுமான இரும்புச்சத்து கிடைக்காமல் போகும். அதனால், பெண்கள் கவனமாகத் தங்களைப் பார்த்துக்கொள்ள வேண்டும். குடும்பத்தினரும் இந்த விஷயத்தில் பெண் குழந்தைகளின் மேல் கூடுதல் அக்கறை காட்டுவது நல்லது.

சோர்வு, தூக்கம் வருவது போன்ற உணர்வு, பசியின்மை, எந்த செயலிலும் ஆர்வத்தோடு ஈடுபட முடியாதது, மூச்சு வாங்குவது, நாக்கு, கண்களின் கீழ் பகுதி, மேலண்ணம் போன்ற இடங்கள் சிவந்த நிறத்தை இழந்து வெளுப்பாக மாறிவிடுவது, விரல் நகம் மேடாக இல்லாமல் தட்டையாக காட்சியளிப்பது போன்ற அறிகுறிகள் ரத்தசோகை இருப்பவர்களிடம் வெளிப்படையாகத் தெரியும்.

ரத்தசோகையின் இந்த அறிகுறிகள் தெரிந்தால் ரத்தப் பரிசோதனை நிலையத்தில் சென்று பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ளலாம். காலையில்தான் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்பதோ, சாப்பிடுவதற்கு முன்புதான் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்பதோ கிடையாது.

எல்லாவற்றுக்கும் மேலாக சரிவிகித உணவு சாப்பிடுகிறவர்களுக்கு ரத்தசோகை வருவது இல்லை. கீரை வகைகள், முட்டை, பால், இறைச்சி, பேரீச்சம்பழம் போன்றவற்றை
உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்வதன் மூலம் ரத்தசோகை ஏற்படாமல் தடுக்க முடியும். குறிப்பிட்ட வயதுக்கு மேல் ஜீரண சக்தி குறையும்போது மாத்திரை, ஊசி வழியாகவும் அந்த குறைபாட்டை சமன்படுத்த முடியும்.’’
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#2
Re: ரத்தசோகை பெண்களை அதிகம் தாக்கும் மற்றொ&#29

Thanks for sharing.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#3
ரத்த சோகையா? சத்தான டிப்ஸ்

ரத்த சோகையா? சத்தான டிப்ஸ்!

[TABLE="align: right"]
[TR]
[TD][/TD]
[/TR]
[/TABLE]
'மாநிறமா இருந்த உன் பொண்ணு, சென்னைக்கு வேலைக்குப்போய்ட்டு, சிவப்பாயிட்டாளே!’ என்று ஊரார் வியந்து கேட்பதைப் பார்த்து, தாய்க்கே வியப்பாக இருக்கும். ஆனால், அந்தப் பெண் ஒருவேளை ரத்தசோகையால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பதுதான் அதிர்ச்சியான தகவல். பிழைப்புக்காக பெற்றோரைப் பிரிந்து விடுதியில் தங்கியிருக்கும் பெரும்பாலான டீன் ஏஜ் பெண்களுக்கு ரத்தசோகைப் பாதிப்பு இருக்கிறது என்கிறது மருத்துவ ஆராய்ச்சி.
சத்தான உணவை எடுத்துக்கொள்ளாததன் விளைவு,

இளம் பெண்கள் ரத்தசோகைப் பாதிப்புக்கு உள்ளாவது. ரத்த சோகையால் ஏற்படும் பாதிப்புகளையும், அதற்கான தீர்வுகளையும் அலசுகிறார் மதுரையைச் சேர்ந்த மருத்துவர் நல்லினி அருள். அவர் கூறிய தகவல்கள், நமக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும் அளிக்கிறது.'பொதுவாக நம் உடலினுள் இருக்கும் ரத்தத்தில் ஹீமோகுளோபின் ஆண்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவும், பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவும் இருக்கும். இந்த ஹீமோகுளோபினின் அளவு குறையும்போது, உடலில் ஏற்படும் பிரச்னைகள்தான் ரத்தசோகை (anemia). இன்றைய காலகட்டத்தில், டீன்-ஏஜ் பெண்களிடமும், திருமணம் முடிந்த பெண்களிடமும் ரத்தசோகைப் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. பொதுவாக, பெண்களுக்கு 10.5 g/dLஎன்ற அளவில் ரத்தத்தில் ஹீமோகுளோபின் இருக்க வேண்டும்.

 காரணங்கள்:
ரத்தசோகை ஏற்பட ஊட்டச்சத்துப் பற்றாக்குறை, ரத்த இழப்பு இந்த இரண்டும்தான் முக்கியக் காரணம்.

 காலில் சக்கரம் கட்டிக்கொண்டு பள்ளி, விளையாட்டு என ஓடும் டீன் ஏஜ் பெண்கள் பெரும்பாலும் சத்தான உணவு சாப்பிடுவது இல்லை. இரும்புச்சத்துக் குறைபாடு ரத்த சோகைக்கு வழிவகுக்கிறது. அதுவே, அவர்களுக்கு மகப்பேறு சமயத்தில் மிகப் பெரிய பிரச்னைகளை உருவாக்குகிறது.
ரத்த இழப்பில், குறுகிய கால ரத்த இழப்பு, நீண்ட கால ரத்த இழப்பு என இரண்டு வகைகள் உண்டு.

 அடிபட்டுக் காயம் ஏற்படுவது குறுகிய கால ரத்த இழப்பு. வயிற்றில் புழு, மாதவிடாய் பிரச்னைகள் போன்றவை நீண்ட கால ரத்த இழப்பை உண்டாக்கும். ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் உடைந்து அழிவதாலும் ரத்தசோகை உண்டாகும். கர்ப்பிணிப் பெண்களுக்கு 5-வது மாதத்தில் ரத்தசோகை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. குழந்தையின் வளர்ச்சி அதிகரிப்பதால், தாயிடம் உள்ள ரத்தம் குழந்தைக்குத் தேவைப்படும் இந்த நேரத்திலும் ரத்தசோகை ஏற்படலாம்.

 அறிகுறிகள்:

மிகவும் அசதியாக இருக்கும். எந்த ஒரு வேலையைச் செய்தாலும் உடல் சோர்வடைந்துவிடும். அதிகப் படபடப்பு ஏற்படும். தோலில் சுருக்கம் ஏற்பட்டு வெளிறிப்போகும். நோய் தொற்றுவதும் எளிது.

 அதீதமான விளைவுகள்:
உரிய நேரத்தில் சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் விட்டால், ரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபின் அளவு மிகவும் குறைந்து, ரத்தத்தின் அடர்த்தியும் குறையும். இதனால் இதயத்தின் துடிப்பு அதிகரிக்கும். ஒரு கட்டத்தில் இதயம் வீக்கம் அடைந்துவிடும். இதை ஹைபர்டிராஃபி என்பார்கள். நுரையீரல் பாதிக்கப்படும். உடலில் நீர் தங்கி, பாதத்தில் வீக்கம் (மீபீமீனீணீ) ஏற்படும். இதனால் மரணம் அடையும் வாய்ப்பும் அதிகரித்துவிடும்.

 சிகிச்சைகள்:
 ஹீமோகுளோபின் அளவு 9 – 10 இருந்தால், உணவு முறையிலேயே மாற்றம்செய்து குணப்படுத்தலாம்.

 ஹீமோகுளோபின் 7 – 9 தாக இருந்தால், ஊசி, மருந்துகள் மூலம் குணப்படுத்தலாம்.

 7-க்கும் குறைவாக இருந்தால், ரத்த மாற்றம்தான் தீர்வு. புதிதாக ரத்தம், மாற்றம் செய்யப்படும்.

 ரத்த சோகைக்குத் தீர்வு:

 மாதவிடாய் காலத்தில் இரும்புச் சத்து உள்ள உணவுகள் உட்கொள்ள வேண்டும். அது ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவைக் கட்டுப்படுத்தும்.

 உரிய வயதை எட்டுவதற்கு முன்பு திருமணம் செய்யக் கூடாது. ஒரு குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் போதுமான இடைவெளி இருக்க வேண்டும்.

 ரத்தசோகை வராமல் தடுக்கவும், வந்த பிறகு என்ன மாதிரியான இயற்கை உணவுகளைச் சாப்பிடலாம் என்பது பற்றி சித்த மருத்துவர் கார்த்திகேயன் சொல்கிறார்...

 இயற்கை உணவு வகைகள்தான் பெஸ்ட். முருங்கைக் கீரை, முருங்கைக் காய் இவற்றில் இரும்புச் சத்து அதிகம் இருக்கிறது.

 
Last edited:

sharamsn

Commander's of Penmai
Joined
Aug 4, 2015
Messages
1,344
Likes
2,124
Location
puducherry
#5
Re: ரத்த சோகையா? சத்தான டிப்ஸ்

Useful share
 
Joined
Aug 9, 2014
Messages
83
Likes
112
Location
salem
#6
Re: ரத்த சோகையா? சத்தான டிப்ஸ்

nyc info................
 

kkmathy

Minister's of Penmai
Joined
Jun 9, 2012
Messages
3,189
Likes
6,652
Location
Malaysia
#7
Re: ரத்த சோகையா? சத்தான டிப்ஸ்

Very good info,Latchumi.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.