Anemia

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#1
1. ரத்தசோகையால் (Anemia) பெண்கள் தான் அதிகமான பாதிப்புக்கு உள்ளாகி றார்கள். அதீத உதிரப்போக்கால், குழந்தைக்கு பால் கொடுப்பதால் சத்து பற்றாக்குறை ஏற்பட்டு இரத்தசோகை உண்டாகும்.

aneamia.jpg

பீட்ரூட், அவரை, புடலை, வெண்டை, பூசணி, பீர்க்கங்காய், முருங்கை, காலிஃப்ளவர் நெல்லிக்காய் மற்றும் கீரை வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
3. பீன்ஸ், எள் ஆகியவற்றில் இரும்புச் சத்தும், பருப்பில் புரதமும் உள்ளதால் இது உடலுக்கு மிகவும் நல்லது.
4. ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க புரதமும், இரும்பு சத்தும் மிக அவசியம். புரதச்சத்து உணவு களான பால், பருப்பு, பயறு வகைகள், பழங்கள், பேரீச்சம் பழம் மற்றும் கீரை வகைகளை தினமும் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
5. இரும்புச் சத்துள்ள உணவுகளைச் சாப்பிடும் போது அந்த சத்துக்களை உடல் கிரகித்துக் கொள்ள வைட்டமின் சி, தாது உப்புகள், B12 அமிலத்தன்மை, ஃபோலிக் அமிலம் நிறைந்த உணவுகளையும் கூடவே சேர்த்துக் கொள்ள வேண்டும்.
6. முட்டையின் மஞ்சள் கருவில் இரும்பு, புரதம், ஃபோலிக் அமிலம், B12 போன்ற எல்லாச் சத்துகளும் அடங்கியுள்ளன.
7. அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு ரத்த சோகை உண்டாகின்ற வாய்ப்புகள் குறைவு.


imagesanm food.jpg
 

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#2
இரத்த சோகை என்றால் என்ன?

a1.jpeg

இரத்தத்தில் சிகப்பணுக்குள் ஹீமோகுளோபின் உள்ளது. இதன் அளவு குறையும் போது இரத்த சோகை உண்டாகிறது. உடலில் உள்ள எல்லா திசுக்களுக்கும் போதிய பிராணவாயு எடுத்துச் செல்ல உதவுவது இரத்தத்தில் உள்ள சிகப்பணுக்கள், அதிலும் சிகப்பணுக்களில் அடங்கியுள்ள ஹீமோகுளோபின் என்பது இரும்புச்சத்தும் புரதச்சத்தும் கலந்த ஒரு பொருள் ஆகும். அது குறையும் போது திசுக்களுக்குக் கிடைக்கும் பிராண வாயு குறைந்தது. அதனால் இரத்த சோகை உண்டாகி பல தொல்லைகள் ஏற்படுகின்றன. பெரும்பாலான இரத்த சோகை வகைகள் நிவர்த்தி செய்யக்கூடியவையே! பல உயிரிழப்புகளும் பின் விளைவுகளும் தடுக்கக் கூடியவைகளே!


a2.jpeg


மனிதன் சுவாசிக்கையில் மூச்சை உள்ளே இழுக்கும் போது காற்றில் உள்ள பிராணவாயு நுரையீரலுக்குச் சென்று, சென்று அங்கிருந்து இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினால் ஈர்க்கப்படுகிறது. இவை திசுக்களுக்கு செல்லும்போது தன்னிடம் உள்ள பிராண வாயுவைக் கொடுத்துவிட்டு கழிவுப்பொருளாக உள்ள கரியமில வாயு ( co2) எடுத்துக்கொண்டு மீண்டும் நுரையீரலை வந்தடைகிறது. வெளிமூச்சு விடும்பொது இந்த கரியமில வாயு வெளிமூச்சில் வெளியேற்றப்படுகிறது. மீண்டும் உள் மூச்சின் போது பிராண வாயு உள்ளே இழுக்கப்பட்டு திசுக்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
 

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#3
a3.jpeg


இரத்தத்தில் Hb ( ஹீமோகுளோபின் ) அளவு என்ன? எப்போது இரத்த சோகை உள்ளதா என எண்ணப்படுகிறது?

சாதாரணமாக ஆண்களுக்கு 14.5 gms%-15.5 gms% பெண்களுக்கு 13.5gms%-14.5gms% இருக்க வேண்டும். “இரத்த சோகையின் அறிகுறிகள்” எப்போதும் தெரியவரும் என்ற வரைமுறை இல்லை. வயதானவர்களுக்கு சமயங்களில் 10gms% குறைவாக இருந்தால் கூட எந்த தொந்தரவும் தெரியாது. சாதாரணமாக 50% கீழே Hb இருந்து அதன் விளைவாக தொந்தரவுகளும் இருந்தால் இரத்த சோகை இருப்பதாக கொள்ளலாம்.

WHO(உலக சுகாதார அமைப்பு) வின் அறிவுரையின்படி கீழ்க்கண்ட அட்டவணையில் குறிப்பிட்ட அளவிற்கு கீழே ஹீமோகுளோபின் இருந்தால் இரத்த சோகை இருப்பதாக கருதப்பட வேண்டும்.

ஆண்கள் 13 gms %

பெண்கள் 12 gms %

கர்ப்பிணிகள் 11 gms %

குழந்தைகள் 6 முதல்
6 வருடம் வரை 11 gms %

குழந்தைகள் 6 முதல்
11 வருடம் வரை 12 gms %
 

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#4
சிலவகை இரத்த சோகைகள் தனிப்பட்ட வியாதியாக உருவாவதில்லை. பல சமயங்களில் வேறு “வியாதிகளின்” பின் விளைவாக ஹீமோகுளோபின் குறைந்து இரத்த சோகை உண்டாகிறது. ஹீமோகுளோபின் மற்றும் B12 Folic acid போன்ற வைட்டமின்கள் தேவை. உணவில் இந்த சத்துகள் குறைவதாலே (அ) இந்த சத்துகளை குடல் மற்றும் இரைப்பையிலிருந்து கிரகித்துக்கொள்ள தேவைப்படுகின்ற சக்திகள் உடலில் சுரக்காததாலோ, இந்த அடிப்படை சத்துகளின் பற்றாக்குறை உருவாக்கி விடுகிறது. அதன் விளைவாக ஹீமோகுளோபின் உற்பத்தி பாதிக்கப்பட்டு இரத்த சோகை உண்டாகிறது. (உ.ம்) குடல் ,பெருங்குடல் சம்பந்தப்பட்ட வியாதிகள் சிறுநீரகம் பழுதடைதல் குடல் பூச்சிகள் குடற்புண் முதலியன.
 

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#5
இரத்த சோகையால் நோயாளிகளுக்கு ஏற்படும் தொந்தரவுகள்:

1. படிப்படியாக அதிகரித்து வரும் களைப்பு, எடைக்குறைவு பசியின்மை.


aa1.jpeg


2. கண்கள், உதடுகள், நகங்கள், நாக்கு வெளுத்துப்போதல்


aa2.jpeg

. வாய்ப்புண், பிறப்பு உறுப்புகளில் புண்கள்.
4. மாதவிடாய் காரணமின்றி தள்ளிப்போதல்.
5. சோர்வு, அடிக்கடி கோபப்படுதல்
6. குறைப்பிரசவம், எடை குறைந்த குழந்தைப் பிரசவம்
7. மேல் மூச்சு வாங்குதல்.
8. கால், முகம் வீக்கம்.
9. மயக்கம், தலைசுற்றல்.

aa3.jpg



aa4.jpg


10. மஞ்சள் காமாலை.
11. வயிற்றுவலி.
12. வியர்த்துக் கொட்டுதல்.
13. மயக்கமுடன் வாந்தி.
14. புண்கள் ஆறாமல் இருத்தல்.
15. அடிக்கடி உடல் நலம் குறைதல்.
16. விழுங்குதில் சிரமம்.
17. காரணமற்ற தலைவலி.
18. படபடப்பு
19. கை, கால் குடைச்சல்.
20. குழப்பமான மனநிலை

aa5.jpg
 

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#6
மருத்துவரால் அறியப்படுபவை

aas.jpeg

1. அதிக நாடித்துடிப்பு.
2. இமைகள், நகங்கள், உதடுகள், நாக்கு வெளுத்துப் போதல்.
3. இருதய செயல்திறன் குறைவிற்கு உண்டான அறிகுறிகள்.
4. சிறிது தூரம் நடந்தால் மேல் மூச்சு - பிறகு உட்கார்ந்திருக்கும் போதோ, படுத்தாலோ மேல்மூச்சு.
5. இருதயத் துடிப்பு அதிகம்.

aas1.jpeg


6. இரத்த அழுத்தம் குறைதல்.
7. வயிறு வீக்கம், கால் வீக்கம்.
8. மண்ணீரல் வீக்கம்.
 

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#7
இரத்த பரிசோதனைகள் மூலம் அறியப்படுபவை:

aat1.jpeg

1. இரத்ததில் சிகப்பணுக்களின் எண்ணிக்கை ( RBC Count )
2. இரத்த சிகப்பணுக்களின் Hb யின் அளவு.
3. இரத்தத்தில் இரும்புச் சத்தின் அளவு
4. Hb Electro Phoresis: இயல்புமாறிய Hb கண்டுபிடிப்பது.

aahp.jpeg


5. Bone Marrow-Biopsy: எலும்புக் குருத்து பரிசோதனை இவைகள் மூலம் இரத்த சிகப்பணுக்கள் சரியான முறையில் உற்பத்தியாகின்றனவா, முழு வளர்ச்சி உள்ளதா என்பதையும் கண்காணிக்கலாம். இரத்தப்புற்று நோய்களையும் அறியலாம்.
6. ஸ்கேன் மூலம் மண்ணீரல் வீக்கம் அறிதல்.
 

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#8
இரத்த சோகையை உண்டாக்கும் கார்ணங்களை இரண்டு பிரிவுகளின் கீழ் அறியலாம்.

1. குழந்தைகளில் உண்டாகும் இரத்த சோகை.
2. இளம் வயதில் உண்டாகும் இரத்த சோகை.
3. முதிய வயதில் உண்டாகும் இரத்த சோகை.
4. பெண்களுக்கு உண்டாகும் இரத்த சோகை.

எனப் பிரித்துக் கொள்ளலாம். அல்லது.

1. இரத்த சிகப்பணுக்கள் உற்பத்தி திறனில் குறைபாடு காரணமாக
2. இரத்தின் உள்ள இரும்புச் சத்து குறைவினால் உண்டாவது.
3. உணவில் Vitamin B12 Folic Acid பற்றாக்குறைவால் மற்றும் சத்துக் குறைவினால் உண்டாகும் இரத்த சோகை.
4. இரத்த இழப்பினால் உண்டாகும் இரத்த சோகை என பிரித்து அறியலாம்.
 

yuvan_nan@yahoo

Friends's of Penmai
Joined
Feb 3, 2012
Messages
391
Likes
478
Location
coimbatore
#9
Yoki..

Migavum payanulla seidhigal...
Mikka nandri..
 

yuvan_nan@yahoo

Friends's of Penmai
Joined
Feb 3, 2012
Messages
391
Likes
478
Location
coimbatore
#10
Yoki..

Can you send all the things in one attachment as PDF...
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.