Anti Bribery day - இன்று ஊழல் ஒழிப்பு தினம்

sudhar

Commander's of Penmai
Joined
Apr 4, 2011
Messages
2,044
Likes
1,023
Location
chennai
#1
இன்றைய உலகில் ஒவ்வொரு நாட்டிற்கும், குறிப்பாக இந்தியாவுக்கு ஆபத்தாக இருக்கக்கூடிய பிரச்னைகளில் முதலிடத்தை பிடித்திருப்பது ஊழல். இது நாட்டின் பொருளாதார, சமூக, அரசியல் முன்னேற்றத்தையே பாதிக்கக்கூடியது. ஊழல் ஒரு கடுமையான குற்றம். ஊழல் பரவாமல் தடுக்கக்கூடிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் டிச., 9ம் தேதி, சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

அரசு நிறுவனங்கள் மட்டுமின்றி, தனியார் தொழில் நிறுவனங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் என்று ஊழல் "எங்கேயும் எப்போதும்' என பரவி விட்டது. "டிரான்ஸ்பிரன்சி இன்டர்நேஷன்ல்' 2011ம் ஆண்டுக்கான ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. 183 நாடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் இந்தியா 95வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்தாண்டு இந்தியா 87வது இடத்தில் இருந்தது.

எது ஊழல்: "பொது சொத்தை, தனியாரின் கைகளுக்கு போக விடுவது, அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது' ஆகியவை தான் ஊழல். இது பல வழிகளில் நடக்கிறது. லஞ்சம், மோசடி, டெண்டர்களில் விரும்பியவர்களுக்கு வளைந்து கொடுப்பது, சட்ட விதிகளை பின்பற்ற மறுப்பது ஆகியவற்றின் மூலம் ஊழல் பெருகுகிறது.

வேலை அல்ல குற்றம்: அரசு நிறுவனத்துக்கு ஒருவர் சான்றிதழ் பெறுவதற்காக செல்கிறார். அந்த சான்றிதழுக்கு தேவையான ஆவணங்கள் அவரிடம் உள்ளன. ஆனாலும் அவருக்கு சான்றிதழ் மறுக்கப்படுகிறது. காரணம், "லஞ்சம்' என்ற முக்கிய ஆவணம் அதில் விடுபட்டுள்ளது. அதை கொடுத்தால் தான் அவருக்கு சான்றிதழ் கிடைக்கிறது. இதே போல உரிய ஆவணங்கள் இல்லாமல், "லஞ்சம்' என்ற ஆவணத்தை மட்டும் கொடுப்பவர்களுக்கும் சான்றிதழ் கிடைக்கிறது. இரண்டுமே மிகப்பெரிய குற்றம். லஞ்சம் வாங்குவதை அதிகாரிகள் ஒரு தொழிலாகவே பழகிவிட்டனர். மக்களும் அதனை பழகிக்கொண்டு விட்டனர். அதிகாரிகள் எதற்காக லஞ்சம் வாங்க வேண்டும். மக்கள் பணத்திலிருந்தே சம்பளம் வாங்கிக்கொண்டு, மக்களிடமே லஞ்சத்தை வாங்குவது எவ்வகையில் நியாயம். லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம் என்று சட்டம் இருந்தாலும், இதனால் தண்டனை பெற்ற அதிகாரிகள் மற்றும் மக்களின் எண்ணிக்கை குறைவே.
 

sudhar

Commander's of Penmai
Joined
Apr 4, 2011
Messages
2,044
Likes
1,023
Location
chennai
#2
Re: இன்று ஊழல் ஒழிப்பு தினம்

வேலியே பயிரை மேயலாமா! நாட்டை ஆளும் அரசியல்வாதிகள் ஊழலின் பிறப்பிடமாக இருக்கின்றனர். உயர்மட்ட பதவிகளில் இருந்து வார்டு உறுப்பினர்கள் வரை தங்களது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவன் மூலம் மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிக்கின்றனர். கல்விக்கடன், முதியோர் உதவித்தொகை, லைசென்ஸ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை பெற லஞ்சம் ஒரு தடைக்கல்லாக மாறிவிட்டது. அரசு வேலைகளில் சேர்வதற்கும் லஞ்சம் கேட்கம் அவலம் இந்தியாவில் தான் உள்ளது. அரசு ஒரு திட்டத்தை உருவாக்குகிறது என்றால் அதனை வெற்றிகரமாக செயல்படுத்துவது அதிகாரிகளின் கைகளிலேயே உள்ளது. ஆனால் இந்த அதிகாரிகளே தவறு செய்யும் போது, மக்களின் வரிப்பணம் ஊழல் என்ற பெயரில் தனிநபரின் பாக்கெட்டுக்கு செல்கிறது. ஊழல், லஞ்சத்தை ஒழிப்பவர்களே, ஊழல் செய்தால் எப்படி ஊழலை ஒழிக்க முடியும்.

எப்படி தடுப்பது: ஒவ்வொரு அரசு அலுவலங்களிலும், லஞ்ச ஒழிப்பு துறையினரின் முகவரி, தொலைபேசி எண்களை தெளிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும். தேவைப்பட்டால் முக்கிய பொது இடங்களிலும் இதனை விளம்பரப்படுத்தலாம். அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் மக்கள் தைரியமாக புகார் செய்ய மனநிலை வர வேண்டும். லஞ்சம் வாங்கி கைது செய்யப்படும் அதிகாரிகளுக்கு கடுமையான தண்டனைகள் கிடைக்க வேண்டும். அதன் விவரமும் பொது இடங்களில் விளம்பரப்படுத்த வேண்டும். ஊழல் செய்தவர்களின் சொத்துகளை முழுமையாக அரசுடமையாக்க வேண்டும். ஊழல்வாதிகளை தண்டிக்க வகை செய்யும் "லோக்பால்' மசோதவை இன்றாவது நிறைவேற்ற மத்திய அரசு முன்வரவேண்டும். ஊழலை ஒழிக்க நமது வீட்டிலிருந்து புறப்படுவோம், ஊழல் இல்லா சமூகம் படைக்க ஒன்றுபடுவோம்.

-dinamalar
 

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,075
Location
coimbatore
#3
Re: இன்று ஊழல் ஒழிப்பு தினம்

இன்றைய ஊழல் ஒழிப்பு தினத்தில் இருந்தாவது ஊழல் குறைய இறைவனை வேண்டி லஞ்சம் வாங்கவும் கூடாது கொடுக்கவும் கூடாது என்று உறுதியாய் நிற்போம்.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.