Appam-Coconut Milk /ஆப்பம் -தேங்காய் பால்

repplyuma

Guru's of Penmai
Joined
Mar 16, 2012
Messages
6,240
Likes
29,264
Location
Canada
#1
ஆப்பம் -தேங்காய் பால்
20180330_202012.jpg


தேவையான பொருள்கள் :

இட்லி அரிசி - 1 கப்

பச்சரிசி - 1 கப்

வெந்தயம் - 1 ஸ்பூன்

அவல் - 1 கை பிடி (அவல் இல்லைனா ஒரு கை பிடி வடிச்சு சாதம் எடுத்துக்கலாம் .)

புளித்த இட்லி மாவு - 4 - 5 கரண்டி

தேங்காய் துருவல் - 1 /2 மூடி (இது optional வேண்டாம் என்றால் இதை தவிரித்திடலாம் .சேர்த்தால் ஆப்பம் கொஞ்சம் மிருதுவா கொஞ்சம் வாசனையா இருக்கும் )

உப்பு ருசிக்கேற்ப


செய்முறை:

அரிசி , கழுவி அவல் , வெந்தயம் சேர்த்து 3 - 4 மணி நேரம் ஊரவச்சிகோங்க .

பிறகு ஊறவைத்த பொருள்களுடன் தேங்காய் துருவல் சேர்த்து கிரைண்டர் ல/மிக்சியில் அரைச்சி எடுத்துக்கோங்க.மாவு கொஞ்சம் கொரகொரப்பா இருந்தா ஆப்பம் மொறு மொறுன்னு இருக்கும். மாவு கைல எடுத்து பார்த்தா லைட்டா நற நறன்னு இருக்கணும் .

அதில் உப்பு , புளித்த இட்லி மாவு சேர்த்து 8 மணி நேரம் புளிக்க வச்சிடுங்க .

ஆப்ப மாவு ரெடி . அடுப்பில் வாணலி வைத்து (non -stick வானல் என்றால் எண்ணெய் தேவை இல்லை ) எண்ணெய் துணியால் துடைத்து இரண்டு கரண்டி மாவு விட்டு வாணலியை மாவு சைடுல பரவும் வரை மெதுவா சுத்துங்க .அப்புறம் மிதமான தீயில் மூடி போட்டு மூடி வச்சிடுங்க .தேவை என்றால் தோசைக்கு ஊற்றுவது போல ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டுக்கோங்க .

இரண்டு அல்லது மூன்று நிமிடத்தில் வெந்துவிடும் .ஆப்பம் ஓரம் சிவந்து வரும் போது எடுத்திடுங்க .சுட சுட செய்து சாப்பிட்டா நல்லா இருக்கும் .

ஆபத்தில் சில பேருக்கு நடுவில் மொத்தமா இருக்கறது பிடிக்காது .(எனக்கு பிடிக்காது ).அப்படி இருக்கறவங்களுக்கு ஒன்றரை கரண்டி மாவு மட்டும் சேர்த்து செய்ங்க .முழுதும் மெலிசா மொறு மொறுனு இருக்கும் .குழந்தைகளுக்கு இப்படி ரொம்ப பிடிக்கும் .

தேங்காய் பால் :

20180330_202359.jpg

இரண்டு மூடி தேங்காய் துருவலில் , 4 ஏலக்காய் சேர்த்து அரைத்து 2 அல்லது 3 தடவ பால் எடுத்து , சர்க்கரை சேர்த்து கலந்தால் தேங்காய் பால் ரெடி .

சர்க்கரை சேர்க்கலாம் அல்லது வெல்லமும் சேர்க்கலாம் .
 

Attachments

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
35,098
Likes
76,890
Location
Hosur
#3
மிகவும் அருமை உமா... ஆப்பத்தை பார்க்கும் போதே சாப்பிடத் தோணுது :).

எனக்கு ஒரு டவுட் உமா... இதில் உளுந்து சேர்த்து அரைக்கவேண்டாமா?
 

repplyuma

Guru's of Penmai
Joined
Mar 16, 2012
Messages
6,240
Likes
29,264
Location
Canada
#5
மிகவும் அருமை உமா... ஆப்பத்தை பார்க்கும் போதே சாப்பிடத் தோணுது :).

எனக்கு ஒரு டவுட் உமா... இதில் உளுந்து சேர்த்து அரைக்கவேண்டாமா?
நன்றி சுமதி அக்கா ..உளுந்து தனியா வேண்டாம் அக்கா ..அதான் இட்லி மாவு சேர்க்கறோம் இல்ல ..அது போதும் .. .

தேங்காய் பால் உடம்புக்கு ரொம்ப நல்லதுன்னு சொல்றாங்கா .இரவை விட காலையில் சாப்பிடுவது நல்லது ..அதனால் எங்க வீட்டில் வாரம் ஒரு முறை காலை சாப்பாடு ஆப்பம் தேங்காய் பால் ..
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,303
Likes
83,912
Location
Bangalore
#6
எனக்கு ஆப்பம் ரொம்ப பிடிக்கும் உமா . இந்த வித்தியாசமான (இட்லி மாவு சேர்ப்பது ) ரெஸிபிக்கு நன்றி உமா . படங்களும் சூப்பர் .
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
35,098
Likes
76,890
Location
Hosur
#7
நன்றி சுமதி அக்கா ..உளுந்து தனியா வேண்டாம் அக்கா ..அதான் இட்லி மாவு சேர்க்கறோம் இல்ல ..அது போதும் .. .

தேங்காய் பால் உடம்புக்கு ரொம்ப நல்லதுன்னு சொல்றாங்கா .இரவை விட காலையில் சாப்பிடுவது நல்லது ..அதனால் எங்க வீட்டில் வாரம் ஒரு முறை காலை சாப்பாடு ஆப்பம் தேங்காய் பால் ..
ஓ... ஓகே, ஓகே... ஒரு முறை ட்ரை பண்ணி பார்க்கிறேன் உமா.
 

repplyuma

Guru's of Penmai
Joined
Mar 16, 2012
Messages
6,240
Likes
29,264
Location
Canada
#8
எனக்கு ஆப்பம் ரொம்ப பிடிக்கும் உமா . இந்த வித்தியாசமான (இட்லி மாவு சேர்ப்பது ) ரெஸிபிக்கு நன்றி உமா . படங்களும் சூப்பர் .
நன்றி அக்கா .செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க .
 

repplyuma

Guru's of Penmai
Joined
Mar 16, 2012
Messages
6,240
Likes
29,264
Location
Canada
#9
ஓ... ஓகே, ஓகே... ஒரு முறை ட்ரை பண்ணி பார்க்கிறேன் உமா.
ஓகே அக்கா ....ட்ரை பண்ணி பார்த்துவிட்டு சொல்லுங்க ...
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.