Apple increases your Life span - ஆப்பிள் சாப்பிட்டால் ஆயுள் கூடும்! !

lekha20

Citizen's of Penmai
Joined
Nov 14, 2013
Messages
622
Likes
1,125
Location
bangalore
#1
ஆப்பிள் சாப்பிட்டால் ஆயுள் கூடும்! ! ! !



பொதுவாக உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை பார்க்க செல்லும்போது, ஆப்பிள் கொடுப்பது வழக்கம். அந்த அளவுக்கு ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தியும், ஊட்டச் சத்தும் நிறைந்திருக்கிறது.
ஆப்பிள் குறித்து மேற்கொள்ளப்பட்ட புதிய ஆராய்ச்சியில் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது, நோயில் இருந்து பாதுகாப்பு அளிப்பதுடன் நீண்ட ஆயுளை அளிக்கும் என்பது தெரியவந்துள்ளது.
சீனாவை சேர்ந்த ஹாங்காங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஸென் யூ சென் தலைமையில் மேற்கொண்ட ஆராய்ச்சியின் வெளிப்பாடு இது.
ஆப்பிளில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், சாராசரியாக மனித ஆயுளை 10 சதவீதம் அதிகரிப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
பழங்களை, குறிப்பாக ஆப்பிளை தேடிச்செல்லும் வண்டுகள் உள்ளிட்ட பூச்சிகளிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவற்றின் உடலில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அளவு அதிகமாக இருப்பதன் மூலமும் இது உறுதியாகியுள்ளது.
இது குறித்து தலைமை ஆராய்ச்சியாளர் ஸென் யூ சென் கூறியதாவது;- “ஆப்பிளில் உள்ள பாலிபெனால் என்ற அதிக சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட், உடலில் உள்ள நோய்க்கிருமிகளை பெருமளவில் அழிக்கிறது. இதனால் நோயில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறத
காய்கறி மற்றும் பழங்களை அதிக அளவில் எடுத்துக் கொள்வதால் ஆரோக்கியத்துடன் உடல் பருமன் குறைவது உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் கிடைப்பதை ஏராளமான ஆய்வுகள் வலியுறுத்தி வருகின்றன. அதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வும் அதையே வலியுறுத்தியுள்ளது.
தக்காளி, ப்ராகலி, ப்ளூபெரி, ஆப்பிள் உள்ளிட்ட பழங்களில் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும் ஆன்டிஆக்சிடன்ட்ஸ் அதிக அளவு உள்ளது. அவற்றில் பாலிபெனால் என்ற அதிக சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட், நோயில் இருந்து பாதுகாப்பு அளிப்பதுடன், ஆயுளையும் அதிகரிக்கிறது.
இது ஆப்பிளில் மிக அதிக அளவில் உள்ளது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து உடல் மற்றும் மூளைச் செல்களின் செயல்பாட்டையும் தூண்டுகிறது.









 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Re: ஆப்பிள் சாப்பிட்டால் ஆயுள் கூடும்! ! ! !

Thank you for bringing out the benefits of Apple!
 
Joined
Sep 10, 2011
Messages
99
Likes
32
Location
Germany
#4
Re: Apple increases your Life span - ஆப்பிள் சாப்பிட்டால் ஆயுள் கூடும்

Thanks for useful information
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.