Are the Parents responsible for Children's Adamency? குழந்தைகளுக்கு பிடிவாத குணம் அ&#298

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
குழந்தைகளுக்கு பிடிவாத குணம் அதிகரிக்க பெற்றோர் காரணமா

'எப்போ பாரு படி படின்னு நச்சுப் பண்ணாதீங்க... அப்புறம் நான் எங்காவது ஓடிப் போயிடுவேன்னு மிரட்டுறான் என் பையன்' என, பீதியடையும் அம்மாக்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இது, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய வீட்டில் மட்டும் நடக்கும் விஷயமில்லை. நடுத்தர, வசதியுடையவர்கள் வீட்டிலும், சர்வசாதாரணமாய் நடக்கும் ஒரு சமுதாய சீர்கேடு.

'ஒரு பொருள் வேண்டுமென்றால், அது இன்றே, இப்போதே கிடைக்க வேண்டும்' எனுமளவிற்கு, சமீப காலமாக, குழந்தைகளின் பிடிவாத குணம் அதிகரித்து இருப்பதை கவனிக்க முடிகிறது. பிள்ளைகளைக் கேட்டால், 'ஆமாம்... எங்களிடம் உட்கார்ந்து பேசவோ, எங்களுக்கு என்று நேரம் ஒதுக்கவோ, கதைகள் சொல்லவோ, வெளியில் கூட்டிப் போகவோ அப்பா, அம்மா என யாருமே கூட இருப்பதில்லை. ஆனால், அவர்கள் நினைப்பதையெல்லாம், எதிர்பார்ப்பையெல்லாம் எங்கள் மீது திணிக்கின்றனர். ஒரு கட்டத்திற்கு மேல் வெறுப்பாகி நாங்கள் மிரட்டுகிறோம்' என காரணம் கூறுகின்றனர்.
இந்த நிலை ஏன்?

எழுத்தாளர் லதா சரவணன் கூறியதாவது:

குழந்தை வளர்ப்பு, ஒரு கலை. ஆனால், இந்த இயந்திர யுகத்தில், சரிவர செய்ய முடியவில்லை. நமக்கு கிடைக்காதது எல்லாமே, நம் குழந்தைகளுக்குக் கிடைக்க வேண்டும் என்று பொருளாதார ரீதியாக நினைக்கிறோமே தவிர, பிள்ளைகளுக்கு அன்பு சரிவர கிடைக்கிறதா, நம் நோக்கத்தை புரிந்து கொள்கின்றனரா என்ற நினைப்பே, நமக்கு வருவதில்லை.
அவர்களுடன் செலவிடும் நேரத்தை தவிர்க்க, சாக்லேட், ஐஸ்கிரீம் என தரப்படுகிற லஞ்சம் எல்லாமே, நம்மை அவர்கள் மிரட்டி வாங்க, நாமே தரும் வாய்ப்புகள் தான்.

'அம்மா... எனக்கு கதை சொல்லேன்' என்று குழந்தை கேட்கிறது. ஆனால், அலுவலக களைப்போ, வீட்டு வேலையின் பாரமோ அல்லது தொலைக்காட்சி சீரியலில் முடங்கும் நேரமோ... நாம் அவர்களைத் தவிர்க்க, எதையோ தந்து சமாளிக்கிறோம். அது பணமோ, மற்ற ஏதாவதோ கூட இருக்கலாம்.

நாளடைவில் பிள்ளைகள், அதைத் தான் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். அவர்கள் விருப்பப்படுகிற பொருள் தேவையா, இல்லையா என்பதையெல்லாம், அவர்கள் உணர்வதுமில்லை; உணர வைப்பதற்கான நேரமும் நமக்கு இல்லை.

சூழ்நிலைக் கைதிகளாக எத்தனையோ பெற்றோர், வளர்ந்து விட்ட தன் பிள்ளைகளிடம் உள்ள தவறுகளைக் கூட தட்டிக் கேட்க பயப்படுகின்றனர்.
ஏன், எதற்கு என்று கேட்காமலேயே பணம் தரும் பெற்றோர் அதிகம். இந்த நிலையிலிருந்து, பெற்றோர் மாற வேண்டும்.

மாதாமாதம் அடிப்படை தேவைகளுக்கு நாம் செலவிடும் தொகை என கணக்கு வழக்குகள் அனைத்துமே, குழந்தைகள் முன்னிலையிலேயே பெற்றோர் விவாதிப்பது நல்லது. இன்றைய விலைவாசி ஏற்றங்களுக்கு மத்தியில், குடும்பத்திற்காக எத்தனை தியாகங்களை பெற்றோர் செய்கின்றனர் என்பதை புரிய வைத்தல் வேண்டும்.

தாய், தந்தையின் இயல்பான கடினங்களை, தமக்காக அவர்கள் மெனக்கெடும் சந்தர்ப்பங்களை அவர்களுக்கு உணர்த்த வேண்டியது, பெற்றோரின் கடமை. பிள்ளைகளிடம் வெளிப்படையாக எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டாலே, அவர்கள் நம்மை மிரட்டும் சூழ்நிலை வராது.

அடிப்பது, திட்டுவது, தண்டிப்பது இதெல்லாம் இன்னும் அவர்களின் பிடிவாதத்தை அதிகமாக்குமே தவிர குறைக்காது. முடிந்தால், உங்கள் அலுவலகங்களுக்கு கூட்டிச் செல்லுங்கள்; ஒரு மாத வருமானம் பெற, பெற்றோர் படும் சிரமங்கள் தெரியும்.

அதற்காக பிள்ளைகளிடம், ஒரேயடியாக பஞ்சப்பாட்டும் பாடக்கூடாது. 'நான் பட்ட கஷ்டம் நீ படக்கூடாது' என்று சொல்வதை விட, 'என்னை விட, வாழ்க்கையை உன்னால் திறம்பட கொண்டு செல்ல முடியும். அதற்கான வழிமுறைகள் இவை தான்' என்று பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுங்கள்; அவர்களையும் பெரிய மனிதனாக பாருங்கள். பிள்ளைகளின் போக்கில் மாற்றம் அவசியம் தெரியும்.இவ்வாறு அவர் கூறினார்.

முதலில் எதை மையமாக வைத்து மிரட்டுகின்றனர் என்பதை பரிசீலிக்க வேண்டும். சமூக நிலையை மனதில் வைத்து தான், அவர்களை திருத்தி நல்வழிக்கு கொண்டு வர முயற்சிக்க வேண்டும். அதிகமான கட்டுப்பாடு விதித்தால், விபரீத விளைவுகளை ஏற்படுத்தும். மிக சாதுர்யமாகக் கையாள வேண்டிய பிரச்னை இது. நடந்த, நடக்கின்ற சீர்கேடுகளை கோடிட்டு, சாதாரணமாய் சொல்வது போல் சொல்லலாம். ஒற்றைப் பெற்றோரிடம் வளரும் பிள்ளைகள், அதிகபட்சமாக மிரட்டுகின்றனர்.
நாகலக்ஷ்மி, நடிகை

முதல் முறை இப்படி மிரட்டும் போதே, திட்டி, அடிக்காமல் விட்டு விடணும். சமயம் பார்த்து மெதுவாக, ஒரு வேளை சாப்பாடு கூட இல்லாமல், படிக்கும் வசதியில்லாமல், லட்சக்கணக்கில் அல்லல்படும் குழந்தைகளை சுட்டிக் காட்டி எடுத்துக் கூறுவது, ஓரளவு தீர்வை தரும். அம்மா உணர்வு பூர்வமாக பயப்படுவாள் என்பதை குழந்தைகள் தெரிந்து வைத்திருக்கின்றன. அப்படி ஒரு சூழ்நிலை வராமல் நடந்து கொள்வது, நம் கையில் தான் உள்ளது.

உமா கண்ணன், பள்ளி முதல்வர்

இதற்கு பெற்றோரின் திடீர் பொருளாதார வளர்ச்சியும் ஒரு காரணி தான். உதாரணமாக, 1980ம்- ஆண்டுகளில் ஒரு சின்ன விளையாட்டுப் பொருளைக் கேட்டு அடம் பிடித்தால் கூட, பெற்றோருக்கு அதை வாங்கிக் கொடுக்கும் பொருளாதார சக்தி இருப்பினும், கொஞ்சம் தாக்கு காட்டி, சாக்கு சொல்லி, சில நாட்களேனும் தள்ளிப் போட்ட பிறகே, அதை வாங்கித் தருவர்.

அஞ்சனா அனில்குமார், வழக்கறிஞர்


இன்றைய நுகர்வு கலாசார வலைக்குள் சிக்கிக் கொண்டிருக்கும் பெற்றோர், நவீன குழந்தைகளை விடவும் பரிதாபத்துக்குரியவர்கள். தங்கள் குழந்தைகளின் விருப்பங்களை உடனே நிறைவேற்றித் தருவதன் மூலம், தங்கள் பொருளாதார பலத்தை, தம் சுற்றத்தாருக்கு உரக்க அறிவிக்க விரும்புகின்றனர். இதனால் ஒரு கட்டத்தில், தங்கள் பலத்தை மீறிய ஒன்றை, குழந்தைகள் கேட்டு அடம் பிடிக்கும் போது, அதை எதிர்கொள்ள முடியாமல் தோற்றும் போகின்றனர்.

குழந்தைகள் கேட்பதை உடனே வாங்கிக் கொடுப்பதன் மூலம், நீங்கள் அவர்களை பலவீனப்படுத்துகிறீர்கள். குழந்தைகள் கேட்கும் எதையுமே செய்ய மறுப்பதன் மூலம், நீங்கள் அவர்களை மன அழுத்தத்திற்கு ஆளாக்குகிறீர்கள். உங்களது நிஜமான பொருளாதார பலம் என்ன என்பதை, உங்களது குழந்தைகள் புரிந்து கொள்ளும் படியாக உங்கள் செயல்களை அமைத்துக் கொள்வதன் மூலம் மட்டுமே, ஒரு ஆரோக்கியமான சுயசிந்தனையுடைய குழந்தைகளை நீங்கள் வளர்த்தெடுக்க முடியும்.

- ஆர்.வைத்தீஸ்வரி
 
Last edited:

sharamsn

Commander's of Penmai
Joined
Aug 4, 2015
Messages
1,344
Likes
2,124
Location
puducherry
#2
Re: குழந்தைகளுக்கு பிடிவாத குணம் அதிகரிக்&#296

nice info...it should be implement and kept in every parents mind...
TFS :thumbsup​
 

ilakkikarthi

Citizen's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 27, 2014
Messages
882
Likes
2,180
Location
delhi
#3
Re: குழந்தைகளுக்கு பிடிவாத குணம் அதிகரிக்&#296

useful info fnd thanks to sharing......................
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#4
Re: Are the Parents responsible for Children's Adamency? குழந்தைகளுக்கு பிடிவாத குணம் அ&

Thanks for the useful suggestions.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.