Arthritis Diet - மூட்டுவலியைப் போக்கும் முறையான உணவு&#2990

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
மூட்டுவலியைப் போக்கும் முறையான உணவுமுறை


ஆயுர்வேத முறையில் மூட்டுவலி வாத நாடி உயர்வாலும், உடல் உஷ்ணம் அதிகரிப்ப தாலும், வயிற்று வாய்வுக் கோளாறுகளாலும் ஏற்படுகின்றது. எனவே மூட்டுவலிக்கு விடை கொடுத்திட வேண்டுமானால் அதற்கு ஏற்ப வயிற்றை பக்குவப்படுத்தி வாய்வுத் தொல்லை ஏற்படாமல் உடலில் நச்சுக்கள் எளிமையாக வெளியேறிடும் வகையில் தினசரி மலம் கழிக்க மூட்டுவலி முற்றிலும் மறைந்திடும். மூட்டுவலிக்கு ஏற்ற உணவுத்திட்டத்தை கீழே கொடுத்துள்ளோம்.


ஒரு நாள் உணவுத் திட்டம்


காலையில் எழுந்தவுடன் ஒன்று முதல் மூன்று டம்ளர் நீர் அருந்தவும். காலை 5 முதல் 7 மணி எளிய கால், மூட்டுப் பயிற்சிகள், யோகாசனங்கள்.


காலை 6 - 8 மணி


அருகம்புல் சாறு, முடக்கற்றான் சாறு, வெண் பூசணிச்சாறு, முளை கொள்ளுப்பால், கருவேப்பிலைச் சாறு மல்லிச்சாறு, நெல்லிச் சாறு, இவைகளில் ஏதேனும் ஒன்று 100 மி.லி. முதல் 200 மி.லி.


வெயில் காலமெனில் சத்துமாவு பானம், முடக்கற்றான் சூப், முருங்கை காய் சூப், முருங்கை கீரை சூப், கொத்தமல்லி சூப், பூண்டு சூப், மூலிகை டீ, கோஸ் சூப், காய்கறிகள் சூப், மூலிகைகள் சூப், கீரைகள் சூப் இவைகளில் ஏதேனும் ஒன்று 200 மி.லி.


காலை 9 மணி முதல் 11 மணி


1. முளை தானியங்கள் 10 கிராம் முதல் 100 கிராம் ஏதேனும் ஒன்று அல்லது கலப்பு:& கொள்ளு (கானம்), பச்சைப்பயறு, வேர்க்கடலை, மூக்குக்கடலை, கம்பு, கேழ்வரகு, கோதுமை, இவைகளுடன் சிறிது தேங்காய் துருவல், மல்லி, கருவேப்பிலை, வெங்காயம், காரட் வெள்ளரித் துருவல் சேர்த்து சாப்பிடலாம். சிறுவர்களுக்கு பேரீட்சை, வெல்லம் போன்ற இனிப்புக் கலந்தும் தரலாம். பல் இல்லாத அன்பர்கள் மிக்ஸியில் அரைத்து பால் எடுத்து சாப்பிடலாம்.


2. பழங்கள்:& 200 முதல் 500 கிராம் வரை ஒன்றோ பலவோ கலந்து - சாத்துக்குடி, பப்பாளி, அன்னாசி, மாதுளை, வாழை, திராட்சை, கொய்யா.


3. இவ்வுணவுகள் போதவில்லை எனில் விரும்பிய அளவு தேங்காய் சில்லுகள், துருவல் அல்லது 100 மி.லி. வரை தேங்காய்ப்பால் சாப்பிடலாம். மூட்டுகளுக்கு தேவையான பக்க விளைவைத் தராத எண்ணைச் சத்துக்கள் இதன் மூலம் கிட்டும்.


பழங்கள் சாப்பிட இயலாதவர்கள் அதற்குப் பதில் காய்கறிகள் சாலட் செய்து சாப்பிடலாம். சாலட் செய்யத் தேவையான காய்கறிகள் 250 முதல் 500 கிராம் தக்காளி, காரட், வெள்ளரி, வெங்காயம் இவைகளைக் கழுவி வட்டமாக வெட்டி அத்துடன் எலுமிச்சை சாறு பிழிந்து சாப்பிடலாம்.


மதிய உணவு (1 மணி முதல் மூன்று மணி)


பாதி அளவு சமையல் உணவு இருந்தால் போதுமானது. முதல் பாதி மதிய உணவுகள் பழங்கள் 500 கிராம் அல்லது காய்கறி சாலட் 200 கிராம் வரை சேர வேண்டும் அல்லது சமையல் காய்கறிகள் 300 முதல் 500 கிராம் வரை சேர்க்கலாம். அரிசி உணவிற்குப் பதில் கேழ்வரகு, கம்பு, கோதுமை உணவுகள் சேர்க்கலாம். வெஜிடபுள் அவல் சாதம், பூண்டு அவல் சாதம், தேங்காய் இனிப்பு அவல் சாதம், போன்ற கார் அவல் உணவுகள் செய்து சாப்பிடலாம் அத்துடன் பச்சடி, முளை தானியங்கள் கலக்கலாம்.


மாலை 4 - 5


ஏதேனும் சூப், மூலிகை டீ, சத்து மாவு பானம் தேவையெனில் சாப்பிடலாம் அல்லது இரவு உணவு 7 & 8 மணி பழச்சாறுகள் சாப்பிடலாம். இரவு உணவை 7 மணிக்குள் முடிப்பது சிறந்தது.


  • கனிகள்:& 300 கிராம் வரை & பேரீட்சை, கொய்யா, திராட்சை, மா, பலா, வாழை, பப்பாளி.
  • தேங்காய் சில்லுகள் தேவையான அளவு.
  • காய்கறிகள், முளை தானியங்கள் தேவையான அளவு அல்லது இயற்கை லட்டு சத்துமாவு லட்டுகள், மூலிகை லட்டுகள், சத்துமாவு பானம், காய்கறி சூப், மூலிகை டீ, இவைகளில் ஏதேனும் ஒன்று.

இவ்வுணவு கிடைத்திட இயலாதவர்கள் அரிசி தவிர்த்து கம்பு, கேழ்வரகு, கோதுமை போன்ற ஏதேனும் ஒரு மாவில் கலந்த தோசை அல்லது இத்துடன் வெஜிடபுள் கலந்த தோசைகளில் வேண்டிய அளவு சாப்பிடலாம். அல்லது சத்துமாவு பானம் அல்லது காய்கறி சாலட்டுடன் சுக்கா சப்பாத்தி சாப்பிடலாம். இவைகளுடன் விருப்பமான பழங்களையும் இணைத்துக் கொள்ளலாம் அல்லது பழக்கலவை சாப்பிடலாம். இரவில் படுக்கும் முன் ஒரு டீஸ்பூன் திரிபலா அல்லது முருங்கைப் பொடி அல்லது முடக்கற்றான் அல்லது வாதநாராயணன் பொடியை தேனில் அல்லது 100 மி.லி. நீரில் கலந்து சாப்பிடலாம்.


 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,083
Likes
106,942
Location
Atlanta, U.S

hathija

Citizen's of Penmai
Joined
Mar 17, 2013
Messages
671
Likes
424
Location
Mississauga Canada
#4
Re: மூட்டுவலியைப் போக்கும் முறையான உணவுமு&#299

Very useful info friend...
Hathija.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.