Atm போறீங்களா... ஒரு நிமிடம்!...

Durgaramesh

Minister's of Penmai
Joined
Sep 12, 2015
Messages
3,258
Likes
5,359
Location
Puducherry
#1
யுவுஆ போறீங்களா!



யுவுஆ-களில் பணம் எடுக்கும் முன்பு, இது இந்த மாதத்தில் எத்தனையாவது முறை என்பதை கணக்கில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஏனென்றால், யுவுஆ-ல் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் ஜனவரி 1ம் தேதி முதல் மீண்டும் நடைமுறைக்கு வந்துவிட்டது. அதாவது, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு, வங்கிகளில் ஒரு வங்கிக் கணக்கில் இருந்து ஒரு நாளைக்கு 2500 ரூபாய் (தற்போது இது 4,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது) மட்டுமே எடுக்கலாம் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

அதே சமயம், பொது மக்களின் நலனுக்காக, யுவுஆ-களில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

இந்த தளர்வு, டிசம்பர் 31ம் தேதியோடு முடிவுக்கு வந்துள்ளது. எனவே, ஜனவரி 1ம் தேதியிலிருந்து கணக்கு வைத்துள்ள வங்கியின் யுவுஆ-கள் மூலம் மாதத்துக்கு 5 முறையும், பிற வங்கி யுவுஆ-ல் 3 முறையும் மட்டுமே பணம் எடுக்கலாம்.

அதற்கு மேல் பணம் எடுத்தால், ஒவ்வொரு முறையும் ரூ.20 உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படும். எனவே, அதிக அளவில் பணம் எடுக்க வேண்டிய அவசியம் இருப்பவர்கள், டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் செய்யவும், மின்சார கட்டணம், எல்பிஜி சிலிண்டருக்கான கட்டணங்களை இணையதளம் வாயிலாகக் கட்டுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அல்லது, நீங்கள் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்குச் சென்று பணம் எடுப்பதும் சிறந்தது.

திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் தேவையில்லா விரயங்களை தவிர;க்க முடியும்!...
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
98,810
Likes
141,549
Location
Madras @ சென்னை
#3
Tfs friend.

:thumbsup​
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.