Autism - How to cure the this disorder ?-ஆட்டிசம் நோயை குணப்படுத்துவதற்க&#30

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
[h=3]ஆட்டிசம் நோயை குணப்படுத்துவதற்கான வழிமுறைகள்[/h]ஆட்டிசம் ஒரு நோய் அல்ல, மன வளர்ச்சி சம்பந்தப்பட்ட ஒரு கோளாறு என்று கூறலாம். இவர்கள் தன்னைச் சுற்றி நடக்கும் எதைப் பற்றியும் கவலைப்படாமல், தங்களுக்கென்று ஒரு தனி உலகத்தை உருவாக்கி கொண்டு அதில் மூழ்கி கிடப்பார்கள்.

மூளையின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்பட்டு தன்னைச் சுற்றியுள்ள உலகத்துடன் தொடர்பு கொள்ள இயலாது செய்யும் ஒரு குறைபாடு. ஸ்பெக்ட்ரல் டிஸ்ஆர்டர் என்று ஆங்கிலத்தில் இந்த நோய் அழைக்கப்படுகிறது.

இந்த நோய் பாதித்த குழந்தைகள் மற்றவர்களுடன் உறவைப் பேண முடியாது, மற்ற குழந்தைகளுடன் இணைந்து விளையாடுதல் போன்ற சாதாரண விஷயங்களில் கூட ஈடுபட முடியாது.

பொதுவாக ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு பேச்சு வருவதில் சிக்கல் ஏற்படும். சிலருக்கு நல்ல முறையில் பேச்சு வருவதும் உண்டு. ஆட்டிசம் பாதித்தவர்கள் இப்படித் தான் இருப்பார்கள் என்று எந்த ஒரு வரையறையும் இருப்பதில்லை.

மூளை வளர்ச்சி குறைபாடு: ஆட்டிசம் என்பது மூளை வளர்ச்சியில் ஏற்படும் குறைபாடாகும். மூளையின் முக்கிய செயல்பாடுகளாகிய பேச்சு திறன், சமுதாய தொடர்பு மற்றும் புலன் உணர்வு ஆகியவற்றை பாதிக்கும் நோய். மற்ற குழந்தைகளைப் போல் பேச முடியாது, நடக்க முடியாது, நாம் யார், எங்கு இருக்கிறோம் என்ற விவரங்கள் தெரியாது.

இதனால் அவர்களால் மற்றவர்களை போல் இயல்பு வாழ்க்கை வாழ முடியாது. ஆட்டிசம் பிறவி குறைபாடாக இருந்தாலும், பிறந்த உடனே கண்டுபிடிக்க முடியாது.

6 மாதம் முதல் 3 வயதுக்குள் ஆட்டிசம் குறைபாட்டை கண்டுபிடிக்க முடியும். இது குறித்து விழிப்புணர்வு இல்லாததால், பலர் 3 வயதுக்குள் கண்டுபிடிக்க தவறி விடுகின்றனர். 3 வயதுக்குள் கண்டுபிடித்தால் உரிய பயிற்சி அளித்து, ஓரளவு குறைபாட்டை சரி செய்து விடலாம்.

எதனால் ஆட்டிசம் குறைபாடு ஏற்படுகிறது என இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. குறைந்த எடையுடன் அல்லது குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகள், ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட வாய்ப்பு அதிகம். குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளில் 5 சதவீத குழந்தைகள் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

இயல்பான எடையுடன் பிறக்கும் குழந்தைகளில் 1 சதவீத குழந்தைகள் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்படுகின்றனர் என சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
Re: ஆட்டிசம் நோயை குணப்படுத்துவதற்கான வழி&#299

அறிகுறிகள்:

1. குழந்தை யார் முகத்தையும் பார்க்காதிருத்தல்,

2. தனியாக இருப்பதை விரும்புதல்,

3. காது கோளாறு போல் இருத்தல்,

4. காரணமின்றி மற்றவர்களை தாக்குதல்,

5. அதிக வலியை தாங்கிக் கொள்ளுதல்,

6. கை, கால்களை வேகமாக அசைத்து வித்தியாசமாக சத்தம் போடுதல்,

7. தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்ளுதல்,

8. பேச்சுத் திறன் குறைதல்,

9. விரல் சூப்புதல், நகம் கடித்தல்,

10. பதட்டநிலை,

11. அடம் பிடித்தல்.

மற்ற குழந்தைகளைப் போல் அல்லாமல் இக்குழந்தைகளின் பார்வை,கூரையையே வெறித்து பார்ப்பது போல், ஒரே இடத்தில் நிலைத்திருக்கும். நாம் ஒருவரிடம் பேசும் போது கண்ணைப் பார்த்து பேசுவது போல், ஆட்டிசம் குழந்தைகள் கண்ணைப் பார்த்து பேசாது. கைகளை உதறிக் கொண்டே இருக்கும்.

மற்ற குழந்தைகளை நாம் கட்டி அணைப்பது போல், இக்குழந்தைகளை கட்டிப் பிடித்தால் கோபம் வரும். சில குழந்தைகள் மூர்க்கமாக நடந்து கொள்வர். தண்ணீர் வேண்டும் என்றால் வாய் திறந்து கேட்காமல்,சைகை மூலம் கேட்பார்கள். சில குழந்தைகள் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

எதற்காக சிரிக்கிறார்கள். எதற்காக அழுகிறார்கள் என தெரியாது. வலி,சிறிய அளவில் இருந்தாலும் `ஓ' என அலறும். சில குழந்தைகள் கடும் வலி இருந்தாலும் வலியை உணர்வதில்லை.

செய்ய வேண்டியது என்ன: நம் வாழ்வின் அன்றாட பழக்க வழக்கங்களை கற்றுக் கொடுப்பது தான், ஆட்டிசம் குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் முதல் சிகிச்சை.

ஆம் இவர்களுக்கு ஆக்குபேஷனல் தெரபி, ஸ்பீச் தெரபி போன்ற பயிற்சி தான் சிகிச்சை. ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட எல்லா குழந்தைகளுக்கும், ஒரே மாதிரியான பிரச்சினை இருக்காது.

எனவே நம் குழந்தைக்கு என்ன விதமான குறைபாடு உள்ளது என முதலில் புரிந்து கொள்ள வேண்டும். எது வேண்டும், எது வேண்டாம் என சொல்ல தெரியாது.

ஒவ்வொரு குழந்தையையும் சரியாக புரிந்து கொண்டு அதற்கேற்ப பயிற்சிகளை வடிவமைக்க வேண்டும். அவர்களது செயல்களால் கோபப்படாமல், அவர்களை புரிந்து கொண்டு, பொறுமையாக பயிற்சி அளிக்க வேண்டும்.

இக்குழந்தைகள் வேண்டுமென்றே இதை செய்வதாக கருதி,மிரட்டக்கூடாது. இது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்,எக்காரணத்தை கொண்டும் எதற்கும் கட்டாயப்படுத்தக் கூடாது.

இவர்களுக்கு முதலில் கல்வி என்பது, அன்றாட பழக்க வழக்கங்களை கற்றுக் கொடுப்பது தான். ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப சொல்லிக் கொடுக்கும் போது, அவர்கள் அதைப் புரிந்து கொண்டு அதன்படி நடப்பர். மற்ற குழந்தைகளை போல் இவர்களால் பாடங்களை படிக்க முடியாது. எனவே இவர்களை சிறப்பு பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்கலாம்.

அதற்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம் கற்றுக் கொடுப்பது எளிதாக இருக்கும். இக் குழந்தைகள் சில அற்புதத் திறமைகளை கொண்டிருப்பர். அதைத் கண்டுபிடித்து ஊக்கப்படுத்த வேண்டும். மனதை ஒரு நிலைப்படுத்துவதற்கான பயிற்சிகளை அளிக்க வேண்டும்.

வண்ணம் தீட்டுவது, பேனா, பென்சில் கொடுத்து ஏதாவது கிறுக்க செய்வது என, பல்வேறு பயிற்சிகள் மூலம் அவர்களை அன்றாட வாழ்க்கைக்கு தயார்படுத்த வேண்டும்.

நரம்பியல் சிகிச்சை பலன் தரும்: ஆட்டிசம் குறைபாடு ஏற்படுவதற்கு தாய், தந்தையரின் பரம்பரையில் யாரேனும் பாதிக்கப்பட்டிருத்தல்,மெக்னீசியம், துத்தநாகம் போன்ற கனிமச் சத்துக்களின் குறைபாடு,சென்ரடின் என்ற ஹார்மோன் குறைபாடு என பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஆனால் ஆட்டிசம்' ஒரு நோய் அல்ல என்பது மட்டும் உறுதி.

ஆட்டிசம் இருப்பது தெரியவந்தால், அதற்கு உரிய நரம்பியல் மற்றும் மனநல சிகிச்சை முறைகளை மேற்கொண்டு, ஆட்டிசம் பாதித்தவர்களுக்கு மறு வாழ்வு அளிப்பதில் அக்கறை செலுத்த வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்கள் நடந்து கொள்ளும் முறையை முழுமையான பயிற்சிகள் மூலம் மாற்றி அமைத்து அவர்கள் வாழ்க்கையை முழுமையானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் செய்து கொள்ள உதவலாம்.

மருந்து: இந்த நோய்க்குநரம்பியல் மருத்துவ சிகிச்சை அவசியம். மூர்க்கத்தனமாக செயல்படும் குழந்தைகளை அமைதிப்படுத்த மனநல மருத்துவர்களால் சில மருந்துகள் கொடுக்கப்படுகின்றன.

 

Attachments

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#3
Re: How to cure the Autism disorder ?-ஆட்டிசம் நோயை குணப்படுத்துவதற்கா

Thanks for sharing.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#4
Re: How to cure the Autism disorder ?-ஆட்டிசம் நோயை குணப்படுத்துவதற்கா

ஆட்டிஸம் வகை குறைபாடுகள்
ரவி 2 வயதான ஆரோக்கியமான குழந்தை. ஆனால், இதே வயதில் அவன் அக்கா செய்த எந்த விஷயத்தையும் ரவி செய்யவில்லை என பெற்றோருக்கு ஆதங்கம். ரவி இன்னும் பேச ஆரம்பிக்கவில்லை... எனினும் பிறர் பேசும் வார்த்தைகளை அர்த்தமின்றி திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தான்.




பிறரிடம் பேசுவதற்காக வார்த்தைகளை உபயோகிக்காமல், அதன் சத்தத்தைக் கேட்பதில் மட்டும் ஆர்வம் காட்டினான். யாரேனும் பெயர் சொல்லிக் கூப்பிட்டாலும் திரும்பிப் பார்ப்பதில்லை. அவன் விளையாடுவதும் வினோதமாக இருந்தது. குழாயிலிருந்து தண்ணீர் சொட்டுவதை பலமணி நேரம் லயித்து பார்த்துக் கொண்டே இருப்பான்.

வீட்டில் எந்த ஒரு பொருள் சிறியதாக இடம் மாற்றி வைக்கப்பட்டிருந்தாலும் அல்லது வழக்கத்துக்கு மாறாக எது செய்தாலும், அதைக் குறித்து எரிச்சலும் கோபமும் அடைந்து ஆர்ப்பாட்டமும் செய்தான். இதனாலேயே, அவனின் விருப்பத்தை மீறி, அவன் பெற்றோர் எதை செய்வதற்கும் பயப்பட்டார்கள். அர்த்தமில்லாத வாசகங்களைச் சொல்லி முன்னும் பின்னும் ஆடிக் கொண்டும் சுழன்று கொண்டும் இருந்தான். குழந்தைத்தனமாக இருக்கின்றான் போகப் போக சரியாகிவிடுமென அவன் பெற்றோர் நினைத்தார்கள். ஆனால், 4 வயதாகியும் அவன் செயல்பாட்டில் முன்னேற்றம் எதுவுமில்லாமல் மோசம் தான் அடைந்து இருந்தது.

இப்படி வித்தியாசமாக செயல்படும் ரவிக்கு என்ன பிரச்னை? ஆம், ரவிக்கு ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் கோளாறுகளில் முக்கியமான ஒன்றான ஆட்டிஸம் கோளாறு உள்ளது. இது குழந்தைகளை தாக்கும் நரம்பியல் வளர்ச்சி சார்ந்த கோளாறுகளில் ஒன்று. இக்கோளாறு பெண்களைவிட ஆண்களைத்தான் அதிகம் பாதிக்கிறது. இவ்வகைக் கோளாறு, குழந்தையின் மொழி, பேச்சுத் திறன், சமூகத்திறன் மற்றும் செயல்பாட்டை வெகுவாக பாதிக்கிறது. ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரத்தில் நான்கு வகை குறைபாடுகள் உள்ளன.

1. ஆட்டிஸம் குறைபாடு (Autism).

2. அஸ்பெர்ஜர் குறைபாடு (Asperger’s Disorder).

3. குழந்தைப் பருவ சிதைக்கும் குறைபாடு (Childhood Disintegrative Disorder).

4. பிற குறிப்பிடப்படாத ஆட்டிஸ வகை குறைபாடுகள்.

இத்தகைய ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் குறைபாடுகள், குழந்தையின் பல்வேறு வளர்ச்சியை பாதிப்பதால் பெர்வேஸிவ் வளர்ச்சி சார்ந்த குறைபாடுகள் (Pervasive Developmental Disorders) எனவும் அழைக்கப்படுகிறது. இக்குறைபாட்டின் பாதிப்புகள், ஒருவரின் வாழ்நாள் முழுவதும் இருக்கும். சரியான நேரத்தில் கொடுக்கப்படும் உதவியால், ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், நிறைவான வாழ்வை வாழ உதவ முடியும்.

இந்த நான்கு வகைக் குறைபாடுகளில் ஆட்டிஸம் குறைபாடுதான் அதிகம் பரவலாக காணப்படுகிறது. இந்த நான்கு குறைபாடுகளின் அடிப்படை அறிகுறிகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் இருக்கும். ஆனால், அவற்றின் தாக்கம் மற்றும் தீவிரம் வெவ்வேறு விதமாக இருக்கும்.

ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட இரு குழந்தைகளிடையே கூட அறிகுறிகள் வெவ்வேறு விதமாக காணப்படும். மூன்று வயதுக்கு முன்னரே அறிகுறிகள் காணப்படும். ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் ஆற்றல், அறிவுத்திறன் மற்றும் செயல்பாடுகள் பரவலாக வேறுபட்டிருக்கும். (எ.டு.) சில குழந்தைகள் பேசவே மாட்டார்கள். சில குழந்தைகள் குறைவாகப் பேசுவார்கள்.

மேலும், சில குழந்தைகளின் பேச்சுத்திறன் ஓரளவு வளர்ச்சி அடைந்திருக்கும். மேலும், ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அறிவுத்திறன் குறைபாடும் (Intellectual Disability) சேர்ந்தே இருக்கலாம். ஆனால், இரண்டும் வெவ்வேறு நரம்பியல் வளர்ச்சி சார்ந்த குறைபாடுகள். ஏனெனில், ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட, பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகளின் அறிவுத்திறன் (மினி) சராசரி மற்றும் சராசரிக்கு மேலேகூட இருக்கும்.

மேலும், இவர்களுக்கு கணித கணக்கீடுகள், வரைகலை, இசைத்திறன் மற்றும் நினைவாற்றல் போன்ற விஷயங்களில் அபார சக்தி இருக்கும் வாய்ப்பு அதிகம். (எ.டு.) ஒரே ஒருமுறைக் கேட்டதுமே கூட, பியானோவை வாசிக்க கற்றுக்கொள்ளும் திறமை, கடினமான கணக்கை மனதிலேயே போட்டு முடித்து விடும் ஆற்றல், நன்றாக வரையும் திறமை... போன்றவை.

பெற்றோர் தங்கள் குழந்தை களிடத்தில் கவனிக்க வேண்டிய எச்சரிக்கை அறிகுறிகள்..எல்லோரையும் விட பெற்றோருக்குத்தான் தங்கள் குழந்தையின் வளர்ச்சி மற்றும் நடவடிக்கைகள் குறித்து மிக நன்றாகத் தெரிந்திருக்கும். தங்கள் குழந்தையின் வளர்ச்சியில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டாலோ, ஏதேனும் சந்தேகம் இருந்தாலோ, அதை உடனடியாக மருத்துவரின் கவனத்துக்கு கொண்டு சென்று தெளிவு பெற வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும் வளர்ச்சி மைல்கற்களை அடைவதில் சற்றே வித்தியாசங்கள் இருப்பது சகஜம்தான்.

ஆனால், பொதுவாக, “தானாக சரியாகிவிடும்”, ‘‘பொறுத்திருந்து பார்க்கலாம்”, போன்ற வாசகங்களைக் கேட்டு தாமதிக்காமல் சந்தேகத்தைத் தெளிவு செய்வது மிகவும் நல்லது. ஏனெனில், குழந்தைப் பருவத்திலேயே கண்டுபிடிக்கப்படும் இவ்வித குறைபாடுகளுக்கு தாமதிக்காமல், சரியான நேரத்தில் ஆரம்பக்கட்ட சிகிச்சை மேற்கொண்டால், அதனால் ஏற்படும் நன்மைகள் அதிகம். ஆட்டிஸத்தை 2 வயதுக்கு முன் கண்டறிவது கடினம்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#5
Re: How to cure the Autism disorder ?-ஆட்டிசம் நோயை குணப்படுத்துவதற்கா

ஆனால், 12-18 மாதங்களிலேயே இதன் அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும். ஆட்டிஸம் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தை பொதுவாக தனிமையை விரும்பும் என்பதால், பெற்றோர் தங்கள் குழந்தை மிகவும் சமர்த்து என எண்ணி, அறிகுறிகளைப் புறக்கணிக்க கூடும். ஆகவே, பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டிய ஆரம்பகால எச்சரிக்கை அறிகுறிகளைப் பற்றி பார்ப்போம்.

1.தாய் பாலூட்டும் போது, குழந்தை தாயின் கண்களைப் பார்க்காது.

2.முகம் பார்த்து சிரிக்காது.

3.பெயரைச் சொல்லி அழைக்கும் போது திரும்பிப் பார்க்காது.

4.கண்ணில் படும் பொருட்களை ஆர்வமாக பின்தொடர்ந்து செல்லாது.

5.டாட்டா காட்டி கையசைக்காது.

6.பிறர் கட்டியணைத்தாலும்,

எந்தவொரு உணர்ச்சியையும் காட்டாது.

7.பிறர் செய்யும் முகபாவனைகள் மற்றும் செயல்பாடுகளை திரும்ப செய்து பார்க்காது.

8.பிறரின் கவனத்தை ஈர்க்கும்படி எதுவும் செய்யாது (தூக்கச் சொல்லாது, ஒலி எழுப்பி தன்னைப் பார்க்க வைக்காது)

9.மற்றவர்களுடன் விளையாட எத்தனிக்காது.

10.பிறரிடம் சைகையில் பேச எந்த முயற்சியும் செய்யாது.


ஆரம்பக்கட்ட முக்கிய அறிகுறிகள்

1.ஆறு மாதம்: மகிழ்ச்சியை வெளிப்படுத்தி சிரிக்காமல் இருப்பது.

2.ஒன்பது மாதம்: ஒலியை ஏற்படுத்தி பிறருடன் சிரித்து விளையாடாமல் இருப்பது/முகபாவனைகள் செய்யாமல் இருப்பது.

3.12 மாதம்:

1) பெயர் சொல்லி அழைத்தால் திரும்பிப் பார்க்காதது.

2) மழலைப் பேச்சு பேசாமல் இருத்தல்.

4.16 மாதம்:

கொஞ்சம் கூட வார்த்தை

களைப் பயன்படுத்தாமல் இருப்பது.

5.24 மாதம்:
அர்த்தமுள்ள இரண்டு வார்த்தை சொற்றொடர்களை தானே உருவாக்கி பயன்படுத்த தெரியாமல் இருத்தல்.


மேலே பார்த்த வளர்ச்சி மைல்கற்களில் தாமதம் ஏற்பட்டால், உடனே குழந்தையை மனநல வல்லுநரிடம் ஆய்வுக்கு அழைத்து செல்வது மிகவும் அவசியம். ஒருசில அறிகுறிகளை வைத்து குழந்தைக்கு ஆட்டிஸம் உண்டு என கணித்து விட முடியாது. பல அறிகுறிகள் ஒருசேர இருந்து குழந்தையின் பேசும் திறன், சமூகத்திறன், கல்வித்திறன், விளையாட்டு, தினசரி செயல்பாடுகள் போன்றவற்றைப் பாதிக்கும் போதுதான் அது ஆட்டிஸமாக இருக்கக்கூடும்.

தேர்ச்சி பெற்ற வல்லுநர் பரிசோதித்து பார்த்தப் பின்னர் குழந்தைக்கு பல்வேறு விதமான ஆய்வுகள் செய்யப்படும். அதன் பிறகே, குழந்தைக்கு ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு உள்ளதா என்பதை தெரிந்துகொள்ள முடியும். ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பல குழந்தைகளின் அறிவுத்திறன் (மினி) சராசரி மற்றும் சராசரிக்கு மேலேகூட இருக்கும். இவர்கள் கணித கணக்கீடுகள், வரைகலை, இசைத்திறன் நினைவாற்றல் போன்ற விஷயங்களில் அபார சக்தியுடன் இருப்பார்கள்.
 
Last edited:

shrimathivenkat

Yuva's of Penmai
Joined
Sep 30, 2012
Messages
8,456
Likes
17,261
Location
chennai
#6
Re: How to cure the Autism disorder ?-ஆட்டிசம் நோயை குணப்படுத்துவதற்கா

arumaiyana pagirvu.nandri.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#7
Re: ஆட்டிஸம் வகை குறைபாடுகள்

இந்த நான்கு வகைக் குறைபாடுகளில் ஆட்டிஸம் குறைபாடுதான் அதிகம் பரவலாக காணப்படுகிறது. இந்த நான்கு குறைபாடுகளின் அடிப்படை அறிகுறிகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் இருக்கும். ஆனால், அவற்றின் தாக்கம் மற்றும் தீவிரம் வெவ்வேறு விதமாக இருக்கும்.

ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட இரு குழந்தைகளிடையே கூட அறிகுறிகள் வெவ்வேறு விதமாக காணப்படும். மூன்று வயதுக்கு முன்னரே அறிகுறிகள் காணப்படும். ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் ஆற்றல், அறிவுத்திறன் மற்றும் செயல்பாடுகள் பரவலாக வேறுபட்டிருக்கும். (எ.டு.) சில குழந்தைகள் பேசவே மாட்டார்கள். சில குழந்தைகள் குறைவாகப் பேசுவார்கள்.

மேலும், சில குழந்தைகளின் பேச்சுத்திறன் ஓரளவு வளர்ச்சி அடைந்திருக்கும். மேலும், ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அறிவுத்திறன் குறைபாடும் (Intellectual Disability) சேர்ந்தே இருக்கலாம். ஆனால், இரண்டும் வெவ்வேறு நரம்பியல் வளர்ச்சி சார்ந்த குறைபாடுகள். ஏனெனில், ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட, பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகளின் அறிவுத்திறன் (மினி) சராசரி மற்றும் சராசரிக்கு மேலேகூட இருக்கும்.

மேலும், இவர்களுக்கு கணித கணக்கீடுகள், வரைகலை, இசைத்திறன் மற்றும் நினைவாற்றல் போன்ற விஷயங்களில் அபார சக்தி இருக்கும் வாய்ப்பு அதிகம். (எ.டு.) ஒரே ஒருமுறைக் கேட்டதுமே கூட, பியானோவை வாசிக்க கற்றுக்கொள்ளும் திறமை, கடினமான கணக்கை மனதிலேயே போட்டு முடித்து விடும் ஆற்றல், நன்றாக வரையும் திறமை... போன்றவை.

பெற்றோர் தங்கள் குழந்தை களிடத்தில் கவனிக்க வேண்டிய எச்சரிக்கை அறிகுறிகள்..எல்லோரையும் விட பெற்றோருக்குத்தான் தங்கள் குழந்தையின் வளர்ச்சி மற்றும் நடவடிக்கைகள் குறித்து மிக நன்றாகத் தெரிந்திருக்கும். தங்கள் குழந்தையின் வளர்ச்சியில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டாலோ, ஏதேனும் சந்தேகம் இருந்தாலோ, அதை உடனடியாக மருத்துவரின் கவனத்துக்கு கொண்டு சென்று தெளிவு பெற வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும் வளர்ச்சி மைல்கற்களை அடைவதில் சற்றே வித்தியாசங்கள் இருப்பது சகஜம்தான்.

ஆனால், பொதுவாக, “தானாக சரியாகிவிடும்”, ‘‘பொறுத்திருந்து பார்க்கலாம்”, போன்ற வாசகங்களைக் கேட்டு தாமதிக்காமல் சந்தேகத்தைத் தெளிவு செய்வது மிகவும் நல்லது. ஏனெனில், குழந்தைப் பருவத்திலேயே கண்டுபிடிக்கப்படும் இவ்வித குறைபாடுகளுக்கு தாமதிக்காமல், சரியான நேரத்தில் ஆரம்பக்கட்ட சிகிச்சை மேற்கொண்டால், அதனால் ஏற்படும் நன்மைகள் அதிகம். ஆட்டிஸத்தை 2 வயதுக்கு முன் கண்டறிவது கடினம்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#8
Re: ஆட்டிஸம் வகை குறைபாடுகள்

Autism Spectrum Disorders

ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் குறைபாடுகளில், ‘ஆட்டிஸம்’தான் குழந்தைகளை அதிகமாக பாதிக்கிறது. அதோடு, அஸ்பெர்ஜர் குறைபாடு, குழந்தைப் பருவம் சிதைக்கும் நோய் ஆகியவை பற்றியும் அறிவோம்.

1. ஆட்டிஸம்

குழந்தை வளர வளர ஆட்டிஸம் குறைபாடு, குழந்தையின் பல்வேறு வளர்ச்சிகளையும் பாதிக்கும். முக்கியமாக, பின்வரும் திறன்கள் மற்றும் செயல்பாடுகளில் பாதிப்பு இருக்கும்...
*சமூகத் திறன்களில் பாதிப்பு.
*பேச்சு / மொழித் திறன்கள் மற்றும் சைகை மொழித் திறனில் பாதிப்பு.
*இயல்பற்ற செயல்பாடுகள்.
ஆட்டிஸம் பாதிக்கப்பட்ட குழந்தையின் சமூக ரீதியான பிரச்னை அறிகுறிகள்
*மற்றவர் என்ன செய்கிறார்கள்/தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதில் ஆர்வமின்மை.
*பிறருடன் எப்படிப் பேசுவது, விளையாடுவது மற்றும் ஒருவரை நண்பர் ஆக்கிக் கொள்வதில் பிரச்னை.
*பிறர் தொடுவதையோ/அரவணைப்பதையோ விரும்பாதது.
*குழுவாக பலருடன் சேர்ந்து விளையாடாதது.
*மற்றவர் உணர்வை புரிந்து கொள்ளவோ, தன் உணர்வை வெளிப்படுத்தவோ தெரியாதது.
*மற்றவர் பேசும் போது, அதைக் கேளாதது போல இருத்தல் (ஆனால், காது நன்றாகக் கேட்கும்).
*பிறரிடம் தன்னுடைய ஆர்வம் / வெற்றியைப் பகிர்ந்து கொள்ள தெரியாதது.

பேச்சு மொழி பிரச்னையின் அறிகுறிகள்

பொதுவாக, ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தாமதமாகவே பேச ஆரம்பிக்கும். அல்லது குறைபாடின் தன்மை/தீவிரத்தைப் பொறுத்து பேசாமலே கூட இருக்கக் கூடும்.

*அசாதாரண தொனியில் அல்லது வித்தியாசமாக பேசுவது...
*சொன்ன வார்த்தைகளையே திரும்ப திரும்ப பேசுவது (Echolalia)... கேள்வி கேட்டால், பதிலளிக்காமல், அதையே திருப்பிச் சொல்வது...
*தப்புத் தப்பாக வார்த்தைகளை உபயோகிப்பது / இலக்கண தவறு செய்வது...
*தனக்கு வேண்டியதை பேசித் தெரியப்படுத்துவதில் சிரமம்.
*எளிதான வழிமுறைகள், கேள்விகள், வாக்கியங்களைப் புரிந்து கொள்ள முடியாதது...
*கேலி / வேடிக்கையாக பேசுவதைப் புரிந்து கொள்ள முடியாதது...

சைகை மொழி பிரச்னையின் அறிகுறிகள்

பிறரின் சைகை மொழி மற்றும் குறிப்புகளைப் புரிந்து கொள்ள முடியாது. இதனால், பேச்சை பரிமாறிக் கொள்வதில் சிரமம் ஏற்படும்.

*கண்ணைப் பார்த்து பேசாதது.
*பேசுவதற்கும் முகபாவனைக்கும் சம்பந்தமில்லாதது.
*பிறரின் முகபாவனை, பேச்சு தொனி, கையசைவு போன்ற சைகை குறிப்புகளைப் புரிந்து கொள்ள முடியாது.
*அதிகமாக கையசைக்காது, ரோபோ போல தோற்றமளிக்கும்.
வித்தியாசமான விருப்பங்கள் மற்றும் வினோத செயல்பாடுகள்
ஆட்டிஸம் பாதித்த குழந்தைகளின் செயல்பாடுகள் மிகக் குறுகியதாகவும், திரும்பத் திரும்ப செய்வதாகவும், சூழ்நிலைக்கேற்ப மாற்றிக் கொள்ள முடியாத வண்ணமும் இருக்கும்.

*நடைமுறையில் சின்ன மாற்றத்தைக் கூட தாங்கிக் கொள்ள முடியாது. உதாரணம்: நாற்காலியை சிறியதாக மாற்றினால் கூட மிகவும் கோபமடைவது...
*தினசரி ஒரே மாதிரி செயல்முறைகளைக் கடைப்பிடித்தல் (தினசரி ஒரே ரூட்டில்தான் பள்ளிக்குச் செல்ல வேண்டும்... மாறினால் அடம்பிடித்து அழுவது...)
*வித்தியாசமான பொருட்கள் அல்லது விளையாட்டுப் பொருட்களுடன் அசாதாரணமாக ஒன்றி விளையாடுவது...
*குறிப்பிட்ட வரிசையில் விளையாட்டு பொருட்களை அடுக்கி வைத்து, அதனுடன் ஒரே மாதிரி மணிக்கணக்கில் விளையாடுதல்...

*நகரும் பொருட்கள் /பொருளின் ஒரு குறிப்பிட்ட பாகம் போன்றவற்றால் கவரப்பட்டு, அதையே பார்த்துக் கொண்டிருப்பது...
*ஒரு செயலையே திரும்பத் திரும்ப செய்வது.
*எண்கள்/குறியீடுகள் போன்ற குறிப்பிட்ட விஷயங்களில் சிந்தனையை செலுத்தி, அதையே மனப்பாடம் செய்து சொல்லிக் கொண்டே இருப்பது...
*இயல்பற்ற தோற்றம், வித்தியாசமாக நடப்பது.
*உணர்வைத் தூண்டும் காட்சிகள், ஒலிகள், சிலவகை உணவு போன்றவற்றை நுகரும் போது அதிகமாக உணர்ச்சிவசப்படுவது / எந்த உணர்ச்சியும் இல்லாமல் இருப்பார்கள்.

இந்தக் குழந்தைகளுக்கு உணர்ச்சியைக் கட்டுப்படுத்துவதிலும், அதை சரியாக வெளிக்காட்டுவதிலும் சிக்கல் இருக்கும். இவர்கள் மனஉளைச்சலில் இருந்தால் தொந்தரவு தரும் விதத்தில் ஆக்ரோஷமாக நடந்துகொள்வார்கள். பயப்பட வேண்டிய விஷயத்துக்கு பயப்படாமல், காரணமற்ற விஷயத்துக்கு அதிகமாக பயப்படுவார்கள். சிலருக்கு மோட்டார் திறனிலும் பாதிப்பு காணப்படலாம்.
 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#9
Re: ஆட்டிஸம் வகை குறைபாடுகள்

2. அஸ்பெர்ஜர் குறைபாடு (Asperger’s Disorder)

அஸ்பெர்ஜர் குறைபாடால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் அறிகுறிகள், சமூகத்திறன் மற்றும் செயல்பாடு அம்சங்களில் ஆட்டிஸம் போலவே இருக்கும். ஆட்டிஸம் அளவுக்குத் தீவிரமாக இருக்காது. குழந்தையின் அறிவுத்திறன் மற்றும் மொழித்திறனில் எந்தப் பாதிப்பும் இருக்காது. இக்குறைபாடுள்ள குழந்தைகள், ஆட்டிஸம் பாதித்த குழந்தை போல தனிமையை விரும்புவதில்லை.

பிறருடன் ஒன்றி பழகவே விருப்பப்படுவார்கள். பேசும் திறன் இருந்தாலும், இவர்களால் சமூகத்திறனுடன் மற்றவர்களுடன் பழகத் தெரியாது. வாழ்வில் பெரும்பாலான அம்சங்களில் இவர்கள் ஓரளவு நன்றாகச் செயல்படுவதால் அஸ்பெர்ஜர் குறைபாடை கண்டறிவது கடினம். பள்ளி சென்ற பிறகே, கிட்டத்தட்ட 59 வயதில்தான் இக்குறைபாடு உள்ளது அதிக அளவில் அறியப்படுகிறது. அறிகுறிகள்

*சமூகத்துடன் ஒன்றி பழகத் தெரியாது.
*தன்னைப் பற்றியே அதிகம் பேசிக் கொண்டிருப்பது அல்லது ரோபோ போன்ற பேச்சு.
*சமயோசித புத்தி குறைவாக இருக்கும்.
*எழுதுவதில், படிப்பதில் சிக்கல்.
*சிக்கலான விஷயங்களான, இசை/வடிவமைப்புகள் குறித்தே திரும்பத் திரும்ப நினைத்து அதிலேயே ஆழ்ந்திருப்பது...
*பேச்சறிவு திறனைக் காட்டிலும் சைகைத் திறன் குறைவாக இருக்கும்.
*நேர்த்தியற்ற தோற்றம், வித்தியாச நடை.
*வித்தியாசமான / விநோதமான செயல்பாடுகள் மற்றும் அசாதாரணமான புலனுணர்வு.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#10
Re: ஆட்டிஸம் வகை குறைபாடுகள்

3. குழந்தைப் பருவம் சிதைக்கும் நோய் (Childhood Disintegrative Disorder)

இதுவும் ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரத்தில் உள்ள ஒரு குறைபாடுதான். மிகவும் அரிதானது. இக்குறைபாடினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, 2 வயது வரை எல்லா வளர்ச்சியும் (பேச்சுத்திறன், சமூகத்திறன், வயதுக்குரிய செயல்பாடுகள்) இயல்பாக இருக்கும். திடீரென்றோ/சிறிது சிறிதாகவோ, 34 வயதளவில், இவர்களுக்கு ஆட்டிஸம் போன்ற அறிகுறிகள் தென்படத் தொடங்கும்.

10 வயதுக்கு முன்பே, ஏற்கெனவே வளர்ச்சி பெற்ற பல்வேறு திறன்களான மொழி/பேச்சுத்திறன், சமூகத்திறன், இயக்கத்திறன், செயல்பாடுகள் போன்றவற்றில் சரிவு இருக்கும். இக்குறைபாடு, மத்திய நரம்பு மண்டலத்தின் வளர்ச்சியில் சிதைவு ஏற்படுவதால் ஏற்படுகிறது. இதன் அறிகுறிகளும் ஆட்டிஸம் போலவே இருக்கும்.

காரணி மற்றும் சிகிச்சைபொதுவாக மரபணு மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளால் இக்குறைபாடு ஏற்படுகிறது. குழந்தை வயிற்றில் இருக்கும்போது, தாய்க்கு ஏற்படும் நோய்த் தொற்று, தாயின் ஊட்டச்சத்து குறைபாடுகள், தாய், தந்தையின் வயது, குழந்தை பிறக்கும்போதோ/பிறந்தவுடனோ ஏற்படும் சிக்கல்கள் (குழந்தையின் மூளையில் ஏற்படும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை), கருவுற்றிருக்கும் போது வேதிப்பொருட்களை சுவாசம் செய்தது போன்றவை சுற்றுச்சூழல் காரணிகளாகும்.

அஸ்பெர்ஜர் குறைபாட்டுக்கும், மரபணு மற்றும் மூளையின் அசாதாரண கட்டமைப்புகள் காரணமாகக் குறிப்பிடப்படுகிறது. காரணம் முழுமையாகக் கண்டறியப்படவில்லை. ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் குறைபாட்டைப் பூரணமாக குணப்படுத்த முடியாது. இதன் அறிகுறிகளைப் பொறுத்து பல்வேறு சிகிச்சைகள் பலனளிக்கும். ஆரம்பத்திலேயே, குழந்தையின் மூளை வளர்ந்து கொண்டிருக்கும் நிலையிலேயே கண்டறியப்பட்டால், குழந்தையின் கல்வி மற்றும் சமூக வாழ்வில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும்.

இக்குழந்தைகளின் முன்னேற்றத்தில் பெற்றோர், ஆசிரியர் மற்றும் பள்ளியின் பங்களிப்பு மிகவும் அவசியம். தினசரி வாழ்வில் பிறர் உதவியில்லாமல் தனித்து இயங்குவதற்கு தேவையான திறன்கள் இக்குழந்தைகளுக்கு கற்றுத் தரப்படுகிறது. ஆலோசகர்கள் இக்குழந்தைகளுக்கு தரும் பல்வேறு ஆரம்பக்கட்ட சிகிச்சையுடன் சில மருந்துகளும் இக்குறைபாட்டின் அறிகுறிகளைக் கட்டுப்படுத்த உதவும்.தனிப்பட்ட பயிற்சி வகுப்புகள், சிறப்புப் பள்ளியின் உதவிகள்,

தினசரி வாழ்வில் சில மாற்றங்கள், வேலையிடத்தில் சிறப்பு உதவிகள் போன்ற பல்வேறு துணைகளுடன் ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளும் ஆரோக்கியமாக படித்து, பணிபுரிந்து, இச்சமுதாயத்தில் முழுமையாகவே வாழ முடியும். ஏ.டி.எச்.டி. (ADHD) குறைபாடு குறித்து அடுத்த இதழில் பார்ப்போம்.

தனிப்பட்ட பயிற்சி வகுப்புகள், சிறப்புப் பள்ளியின் உதவிகள், தினசரி வாழ்வில் சில மாற்றங்கள், வேலையிடத்தில் சிறப்பு உதவிகள் போன்ற பல்வேறு துணைகளுடன் ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளும் ஆரோக்கியமாக படித்து, பணி புரிந்து, இச்சமுதாயத்தில் முழுமையாகவே வாழ முடியும்.

 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.