Autism is Treatable - ஆட்டிஸம் தீர்க்கக் கூடிய பிரச்னை தான

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#1
டியர் சார், நான் ஒரு தனியார் வங்கியில் மேலாளராக உள்ளேன். என் கணவரும் அதே வங்கியில் பணிபுரிகிறார். எங்களுக்கு ஒரே பையன். வயது 3. இவனைப் பார்த்துக் கொள்வதற்காகவே வாரத்தில் 2 நாட்கள் கட்டாய விடுப்பு எடுக்க வேண்டியுள்ளது. மேலும் அவனை எவ்வளவுதான் அக்கறையுடன் பார்த்துக் கொண்டாலும் அதற்கான சிறு பலனைக்கூட அவன் பெறுவதாக தெரியவில்லை. குறிப்பாக அவன் பிறந்ததிலிருந்து ஒரு 7 மாதங்கள் இயல்பாகவே சிரித்து, அழுதும் வயதிற்கேற்ற வளர்ச்சியுடனும் இருந்தான்.

அதன்பின்பு அவனது அறிவு வளர்ச்சி நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டே தான் போகிறது. உதாரணமாக அவன் தன் தேவைகளைக்கூட அடம்பிடித்து கேட்கும் அறிவில்லாமல் உள்ளான். கொஞ்சினாலும் சிரிப்பதில்லை, அவனை தனியே விட்டுச் சென்றாலும் அழுவதில்லை. எந்த உணர்வுகளுமற்ற ரோபோ போன்ற அவனது செயல்பாடுகள் எங்கள் குடும்ப சந்தோஷத்தை சுக்குநூறாக்கி வருகிறது. சில நேரங்களில் எவ்வளவுதான் சத்தம் போட்டுக் கூப்பிட்டாலும் திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை. பேச்சும் கேட்கும் கேள்விகளுக்கு சிறிதும் சம்பந்தமில்லாமல் வருகிறது.

நாங்களும் ஏதேனும் காதில் குறைபாடுகள் இருக்குமோ என சந்தேகித்து பல மருத்துவர்களை கலந்தாலோசித்தும் எல்லாம் சரியாகவே உள்ளதாகத் தெரிய வருகிறது. எங்களது குடும்ப மருத்துவரோ உங்கள் மகனை ஒரு மனநல ஆலோசகரிடம் கூட்டிச் செல்லுங்கள் என்கிறார். இதைக் கேட்டதிலிருந்து எங்களது குடும்ப சந்தோஷங்களும் எதிர்பார்ப்புகளும் முற்றிலும் தவிடுபொடியாகி நாங்கள் அனைவரும் நடைபிணங்களாகவே வாழ்ந்து வருகிறோம். அவனுக்கு என்ன தான் பிரச்னை..?

அன்புச் சகோதரி, உங்களது குழந்தைகளுக்கு இருக்கும் குறைபாடுகள் அனைத்தும் 100% ஆட்டிஸம் குறைபாட்டின் அறிகுறிகளாகவே தெரிகின்றன.இது, மூளையின் தகவல்களை சேகரித்து பின்பு வயது, சூழலுக்கு தேவையானபடி வெளியேற்றும் திறனில் ஏற்படக்கூடிய குறைபாடாகும். இதற்கான காரணத்தை இதுவரை மருத்துவ உலகம் கண்டறியவில்லை. இத்தகைய குறைபாட்டுடன் குழந்தை பிறந்தால் அது சாதாரணமாக 10 மாத வளர்ச்சிக்குப் பின்பே அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும்.

முதல் அறிகுறியாக நாம் ஏதேனும் குழந்தையிடம் பேசினால் அது நம் கண்களை பார்க்காமல் வேறு எங்கேனும் பார்த்துக் கொண்டிருக்கும். சாதாரணமாக 10 மாதத்திற்கு மேல் வரவேண்டிய மழலைப் பேச்சும் தாமதமாக வெளிப்படும். நாட்கள் ஆக ஆக பேச்சுத் திறன் வளர்ந்தாலும் சொல்லும் பதில்கள் முற்றிலும் முரண்பாடானதாகவே இருக்கும். 10 ஆயிரம் பேரில் 5 குழந்தைகளை பாதிக்கும் இது, பெண்களைக் காட்டிலும் ஆண் குழந்தைகளுக்கு அதிகம் பாதிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த நோயை வரும் முன் தடுப்பது நமது கையில் இல்லை. பிரசவகால ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் தொற்றுநோய் தாக்கங்கள் ஏற்படாமல் தற்காத்துக் கொள்வதும், மன அழுத்தம் ஏற்படாமல் தடுக்கும் வகையில் வாழ்க்கையை, சூழ்நிலையை தக்கவமைத்துக் கொண்டு, யோகா, தியானம் போன்றவற்றை செய்ய வேண்டும். கருவுற்ற 3வது மாதத்திலிருந்து சத்தான உணவை எடுத்து முறையான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு வரலாம். மீறி வந்து விட்டால் இதற்கான தற்போதைய மருத்துவ அறிவியல் படி இதற்கான முழு சிகிச்சை பயிற்சி மட்டுமே.

அதன் மூலம் குழந்தையை தனது வேலைகளை தானே செய்யும் வகையில் எளிதில் மாற்றலாம். மனநல மருத்துவர் அல்லது மனநல ஆலோசகரின் உதவியை நாடுங்கள். அவர்கள் வழிநடத்துகிறபடி, உங்கள் மகனது திறனை கண்டறிந்து அதை நோக்கி அவர்களை மடைகட்டி செலுத்தினால் சாதாரண மனிதனை தாண்டி சாதனையாளராக வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மனம் தளர வேண்டாம். எல்லாம் நலமாக வாழ்த்துகள்.

நன்றி:தினகரன்
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#3
Re: Autism is Treatable - ஆட்டிஸம் தீர்க்கக் கூடிய பிரச்னை தா&am

Thanks for the sharing Jaya.
U r most welcome sis.....
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.