Auto News

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,892
Likes
20,801
Location
Germany
டெஸ்டிங்கில் சிக்கிய மஹேந்திரா எக்ஸ்யுவி700

1524336759094.png
மஹேந்திரா & மஹேந்திரா நிறுவனம் இந்தியாவில் புதிய ஆடம்பர எஸ்யுவி மாடலை வெளியிட திட்டமிட்டுள்ளது.

புதிய எஸ்யுவி ஆட்டோ எக்ஸ்போ 2018-இல் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்த மாடலின் பெயர் வெளியிடப்படாமல் இருக்கிறது. ஏழு பேர் அமரக்கூடிய ஆடம்பர் எஸ்யுவி இந்தியாவில் சோதனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது. அந்த வகையில் இதன் வெளியீடு விரைவில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஹேந்திரா புதிய காரின் பெயர் அறிவிக்கப்படாத நிலையில், இந்த கார் எக்ஸ்யுவி700 என அழைக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்தியாவில் எக்ஸ்யுவி500 பிரபலமாக இருப்பதால் புதிய மாடலின் பெயர் எக்ஸ்யுவி700 ஆக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



புதிய எக்ஸ்யுவி700 ரெக்ஸ்டன் ஜி4 மாடலின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட மாடலாகவும், சில அம்சங்கள் இந்தியாவுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. முந்தைய ரெக்ஸ்டன் மாடல் சங்யோங் பிரான்டு பெயரில் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இது இந்தியாவில் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை.

இதனால் புதிய காரினை எக்ஸ்யுவி பிரான்டிங் செய்ய மஹேந்திரா முடிவு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் புதிய எக்ஸ்யுவி700 இந்தியாவில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் எக்ஸ்யுவி700 மாடலில் 2.2 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் வழங்கப்படலாம். இந்த இன்ஜின் 178 பிஹெச்பி பவர், 420என்எம் டார்கியூ மற்றும் 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய காரில் 2-வீல் மற்றும் 4-வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,892
Likes
20,801
Location
Germany
மெர்சிடிஸ் பென்ஸ் சி-கிளாஸ் நைட்ஃபால் எடிஷன் அறிமுகம்

1526843190542.png

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் சி-கிளாஸ் ரேஞ்ச் புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நைட்ஃபால் எடிஷன் என்ற பெயரில் அறிமுகமாகியிருக்கும் புதிய கார் கூப், செடான் மற்றும் எஸ்டேட் வெர்ஷன்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நைட்ஃபால் எடிஷன் சி-கிளாஸ் மாடல்களை மேம்படுத்த வழி செய்யும் வகையில் அமைந்துள்ளது. புதிய எடிஷனில் பவுடர் கோட் செய்யப்பட்ட மேட் பிளாக் வீல்கள், கருப்பு நிற விங் விரர்கள், கிராஃபிக்ஸ் மற்றும் கார்பன் ரியர் ஸ்பாயிலர் பெற்றிருக்கிறது. மெர்சிடிஸ் பென்ஸ் சி-கிளாஸ் நைட்ஃபால் எடிஷன் இரிடியம் சில்வர், செலினெட் கிரே மற்ரும் ஆப்ஸ்டியன் பிளாக் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

சி-கிளாஸ் நைட்ஃபால் எடிஷன்கள் AMG வரிசையில் கிடைக்கின்றன. இதில் பிளாக் ஆஷ் வுட் ட்ரிம், AMG ஃபிளாட் பாட்டம் ஸ்டீரிங் வீல், AMG பாடி ஸ்டைலிங் மற்றும் ஸ்போர்ட்ஸ் சஸ்பென்ஷன் பெற்றிருக்கிறது. நைட்ஃபால் எடிஷன் மாடலில் 18 இன்ச் 5-ஸ்போக் அலாய் வீல்கள், பவுடர் கோட்டெட் மேட்-பிளாக் ஸ்கீம் மற்றும் டைமன்ட் கிரில் மற்றும் க்ரோம் பின்களை கொண்டுள்ளது.



உள்புறம் மெர்சிடிஸ் பென்ஸ் சி-கிளாஸ் நைட்ஃபால் எடிஷன் மாடலில் ஆம்பியன்ட் லைட்டிங், கீலெஸ்-கோ கம்ஃபர்ட் பேக்கேஜ், மெமரி பேக்கேஜ் மற்றும் பானரோமிக் கிளாஸ் சன்ரூஃப் மற்றும் பர்ம்ஸ்டெர் சரவுன்டு சிஸ்டம் மற்றும் கமான்ட் ஆன்லைன் உள்ளிட்டவை பெற்றிருக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் சி-கிளாஸ் ரேஞ்ச் நைட்ஃபால் எடிஷன் மாடலில் காஸ்மெடிக் மற்றும் ஃபீச்சர் அப்டேட்கள் தவிர மெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. புதிய எடிஷன் இரண்டு டீசல் இன்ஜின்கள் C 220d, C 250d மற்றும் C 200 பெட்ரோல் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
549
Location
chennai
இந்தியாவில் ஹூன்டாய் கிரெட்டா 2018 வெளியானது

1526990221495.png

இந்தியாவில் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கிரெட்டா 2018 காரினை ஹூன்டாய் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெளியாகி இருக்கும் புதிய கிரெட்டா ஐந்து ட்ரிம் மற்றும் மூன்று வித இன்ஜின் ஆப்ஷன்களுடன் விற்பனை செய்யப்படுகிறது.

புதிய கிரெட்டா காரில் முன்பக்கம் பெரிய கேஸ்கேட் கிரில், முன்பக்க பம்ப்பரில் ஃபாக் லேம்ப் சேர்க்கப்பட்டுள்ளது. பின்புற பம்ப்பர்கள் மற்றும் டெயில்லேம்ப்களில் புதிய வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் வெளிப்புறத்தில் டூயல்-டோன் ஃபினிஷ் செய்யப்பட்டு பின்புறம் முற்றிலும் புதிய பம்ப்பர் வழங்கப்பட்டுள்ளது.

உள்புறத்தின் ஹூன்டாய் கிரெட்டா 2018 மாடலில் அதிக மாற்றங்கள் மேற்கொள்ளப்படாத நிலையில், டாப் என்ட் மாடலில் மட்டும் சில வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளது. பேஸ் இ வேரியன்ட் மாடலில் ஓட்டுனர் இருக்கை உயரத்தை மாற்றும் வசதி வழங்கப்படுகிறது. டாப்-என்ட் SX (O) மாடலில் எலெக்ட்ரிக் சன்ரூஃப், க்ரூஸ் கன்ட்ரோல், ஓட்டுனர் இருக்கையை ஆறு விதங்களில் மாற்றும் வசதி, ஸ்மார்ட் கீ பேன்ட், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ஆறு ஏர்-பேக் வழங்கப்பட்டுள்ளது.



ஹூன்டாய் கிரெட்டா 2018 மாடலில் 1.4 லிட்டர் டீசல், 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.6 லிட்டர் டீசல் இன்ஜின்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் 1.54 லிட்டர் டீசல் இன்ஜின் 88.7 பிஹெச்பி பவர், 1.6 லிட்டர் பெட்ரோல் யூனிட் 121 பிஹெச்பி பவர் மற்றும் 1.6 லிட்டர் டீசல் யூனிட் 126 பிஹெச்பி பவர் வழங்கும் திறன் கொண்டுள்ளது.

1.4 லிட்டர் இன்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், 1.6 லிட்டர் இன்ஜின்கள் 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளன. டாப்-என்ட் SX (O) வேரியன்ட் மாடலில் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் அம்சம் வழங்கப்படவில்லை.



இந்தியாவில் ஹூன்டாய் கிரெட்டா 2018 பேஸ் வேரியன்ட் விலை ரூ.9.43 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) துவங்கி டாப் என்ட் வேரியன்ட் விலை ரூ.15.03 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய கிரெட்டா 2018 வைட், ஆரஞ்சு, பிளாக், சில்வர் புளு, ரெட், வைட்/பிளாக் (டூயல்-டோன் ) மற்றும் ஆரஞ்சு/பிளாக் (டூயல்-டோன்) என மொத்தம் ஏழு வெவ்வேறு நிறங்களில் கிடைக்கிறது.

ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஹூன்டாய் கிரெட்டா 2018 ஜீப் காம்பஸ், ரெனால்ட் கேப்டூர், டாடா ஹெக்சா மற்றும் மஹேந்திரா எக்ஸ்யுவி500 உள்ளிட்ட மாடல்களுடன் அடுத்த சில ஆண்டுகளில் வெளியாக இருக்கும் சில மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.