Avoid White coloured foods

narayani80

Commander's of Penmai
Joined
Jun 9, 2010
Messages
1,745
Likes
2,598
Location
Bangalore
#1
நாம் உண்ணும் ஏழு வெள்ளை நிற தீங்குதரும் உணவுகள் !!! மரணமில்லாப் பெரு வாழ்விற்கு உணவு நெறி மிகவும் முக்கியம். எனவே உணவை சீரமைத்தால்தான் மரணமிலாப் பெருவாழ்வைப் பற்றி சிந்திக்க முடியும்.
உலக மக்கள் அனைவருமே அறிந்தும், அறியாமலும் கீழே குறிப்பிட்டுள்ள ஏழு வெள்ளை நிற உணவுகளை தினமும் சாப்பிட்டும் அருந்தியும் வருகிறார்கள். மரணமிலாப் பெருவாழ்விற்கு இந்த ஏழு வெள்ளை நிற உணவுகளை நாம் அன்றாட உணவிலிருந்து முற்றிலும் நூறு விழுக்காடு, அல்லது படிப்படியாகக் குறைத்து அதை முற்றிலும் தவிர்த்துவிடுவது நல்லது. இதையே தான்இயற்கை நெறியும் இறைநெறியும் வலியுறுத்துகிறது.
அந்த ஏழு வெள்ளை நிற உணவுகள் எவை என்று பார்ப்போமா?
உப்பு (Salt)
வெள்ளைச் சர்கரை (White Sugar)
பால் மற்றும் பால் பொருட்கள் (Milk and Milk products)
முட்டை (Egg)
மைதா மாவு (Flour)
தீட்டிய வெள்ளை அரிசி (Polished Rice)
வேதியியல் கலந்த ஆங்கில மருந்து வில்லைகள் (Allopathy Pills)
 

narayani80

Commander's of Penmai
Joined
Jun 9, 2010
Messages
1,745
Likes
2,598
Location
Bangalore
#2
1. உப்பு
‘உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான். தப்பு செய்தவன் தண்டனை அடைவான்.’ இது ஒரு பழமொழி. எனவே உப்பு தப்பு என்று நமக்கே தெரிகின்றது. உலகில் உப்பைத் தின்னும் ஒரே உயிரினம் நம் மானிட உயிரினம் தான். புழு கூட உப்பிட்ட ஊறுகாயைச் சாப்பிடாது. உப்பிடாத ஊறுகாயையும், கருவாட்டையும் உண்ணும். ஏன்? உப்பில் குளோரின் எனும் உயிரைக் கொல்லக் கூடிய நஞ்சு உள்ளதை புழு அறிந்து உப்பைத் தின்பதில்லை. உலகில் பாரசீக வளைகுடாவில் உள்ள கடல் நீரில் உப்பின் அடர்த்தி, இதர கடல் நீரைவிட மிக மிக அதிகமாக இருப்பதால், நண்டு, மீன் உள்ளிட்ட அக்கடல் வாழ் உயிரனங்கள் அனைத்தும் மற்றும் கடல் பாசி போன்ற தாவர வகைகளும் அந்தக் கடலில் இல்லை. அதனால் அக்கடலுக்கு ‘மரணக் கடல்’ (Dead Sea) எனப் பெயர் வந்துள்ளது. பழங்கள், பச்சைக் காய்கறிகள், மற்றும் இதர பச்சை உணவில் (Raw Food) தாது உப்பு (Mineral salt) எனும் இயற்ஐ உப்பு உள்ளது. இத்தகைய தாது உப்பு தான் நமக்கு உயிர் வாழத் தேவை. இந்த தாது உப்பு நெருப்பில் சமைப்பதால், அழிந்துவிடும். தாது உப்பு இல்லாத சமையலுணவிற்கு ஈடு செய்ய சோடியம் குளோரைடு எனும் கடல் உப்பை உண்ண நம்மைத் தவறாகப் பழக்கிவிட்டார்கள். தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறைக்கு அருகில், உப்பிலியப்பன் ஆலயத்தில் இன்றும் உப்பில்லாத நைவேத்தியம்தான் இறைவனுக்குப் படைத்து வருகிறார்கள். அக்கால நாட்டு வைத்தியர் நம்மை உப்பில்லாப் பத்திய உணவை உண்ணக் கூறியதை நினைவு கூறுவோம். எனவே மரணமிலாப் பெருவாழ்வு நிலைக்குச் செல்லும் நாம், நமது உணவில் உப்பை உதற உந்துவோம்!

2. வெள்ளைச் சர்க்கரை
காபியிலிருந்து தயாரிக்கப்படும் கறுப்பு நிற சர்க்கரையைத் தீட்டி, வெள்ளை நிற சர்க்கரையாக மாற்றியுள்ளனர். எனவே நாம் உயிர் வாழ, வெள்ளை நிற சர்க்கரையை வேண்டாம் எனக் கூறுவோம். மாறாக, கறுப்பு நிற கரும்பு சர்க்கரை, பனங்கருப்புக் கட்டி, பனங்கற்கண்டு போன்ற நாட்டு சர்க்கரையைப் பயன்படுத்தலாம்.
 

narayani80

Commander's of Penmai
Joined
Jun 9, 2010
Messages
1,745
Likes
2,598
Location
Bangalore
#3
3. பால், மற்றும் பால் பொருட்கள் பால், மற்றும் பால் பொருட்களான தயிர், மோர், வெண்ணை, நெய் ஆகியன நமது இதயத்தைப் பழுதாக்கி, நமது உயிரை மாய்க்கும் எமன் உணவுகளே! இவற்றில் மிருகப் புரதச் சத்து (Animal protein) உள்ளது. ஆனால் நமக்குத் தாவரப் புரதச் சத்துதான் (Vegetative protein) தேவை. மேலும், நமக்குத் தாவர கொழுப்பு தான் தேவை. மிருகக் கொழுப்புச் சத்து தேவை இல்லை. அவ்வாறாயின், தாவரப் புரதச் சத்து, தாவரக் கொழுப்புச் சத்து அடங்கிய தேங்காயை நாம் நமது உணவில் பச்சையாக உண்டு வரலாம். தேங்காய்ப் பச்சைப் பாலில், எலுமிச்சம் பழச்சாறை உரை மோராக ஊற்றி கிடைக்கும் தேங்காய்த் தயிர், தேங்காய் மோரைப் பயன்படுத்தலாம்.

4. முட்டை
முட்டையும் நமது உயிரை மாய்க்கும் வெள்ளை நிற நஞ்சு உணவே! முட்டையிலுள்ள வெள்ளைக் கரு, மஞ்சள் கரு எதுவுமே நாம் உண்ணாதிருந்தால், மரணமிலாப் பெருவாழ்வு வாழ நாம் தகுதியுடையவராகிறோம்!
 

narayani80

Commander's of Penmai
Joined
Jun 9, 2010
Messages
1,745
Likes
2,598
Location
Bangalore
#4
5. மைதா மாவு கோதுமை மாவை நன்கு தீட்டி, தவிடுச்சத்து – நார்ச்சத்து இல்லாது, கிடைக்கும் கோதுமை மாவே மைதா மாவு என்கிறார்கள். மைதா மாவு பசை போன்று மிகவும் ஒட்டும் தன்மையுடையது. எனவே நாம் நலமாக உயிர்வாழ, மைதா மாவை இமைப்பொழுதில் கூட நினைக்க வேண்டாம்.6. தீட்டிய வெள்ளை அரிசி
அரிசியைத் தவிடுச் சத்து – நார்ச்சத்து இல்லாமல் அரிசி ஆலையில் நன்கு தீட்டி கிடைப்பதே பிச்சிப் பூ போன்ற வெள்ளை அரிசி. எனவே தீட்டிய வெள்ளை அரிசி நமது உயிரைத் தீட்டிவிடும் எனக் கருத்தில் கொண்டு, கைக்குத்தல் அரிசி போன்ற வெள்ளை இல்லாத அரிசியைப் பயன்படுத்தலாம்.7. ஆங்கில மருந்து வில்லைகள்
தவறான உணவுப் பழக்கத்தாலும், போதிய உடலுழைப்பின்மையும், சுற்றுச் சூழல் கேடுற்றதாலும் நமக்கு நோயும், மரணமும் விரைந்து ஏற்படுகின்றது. இவ்விதம் வந்த நோய்க்கும் நாம் ஆங்கில மருத்துவரை நாடுகிறோம். அவர் பரிந்துரை செய்த ஆங்கில மருந்துகளை நோய் நீங்கும் பொருட்டு மருந்தாகத் தவறாது உண்டு வருகிறோம். ஆங்கில மருந்துகளின் பக்க விளைவுகளால், மேலும் பல நோய்களுக்கு ஆளாகி, நோயிலிருந்து மீள இயலாது, மரணத்தை தழுவுகிறோம். மாத்திரை யாத்திரைக்கு வழிகாட்டும். உலகில் நோயால் இறப்பவர்களைவிட, மருந்து மாத்திரைகளால் இறப்பவர்கள்தான் அதிகம். எனவே மரணமிலாப் பெரு வாழ்விற்கு மாத்திரைகளை உண்பதை விடுத்து, இயற்கை உணவுக்கு மாறி, நோயிலிருந்து மீண்டு, மரணமிலாப் பெருவாழ்வு வாழும் முயற்சியில் ஈடுபட்டு வெல்வோம்.


எனவே, நன்றே செய்யின் இன்றே செய்க; இப்போதே செய்க எனும் தேவ வாக்குப்படி, நம்மை அழித்து வரும் உணவுகளான உப்பு, வெள்ளை சர்க்கரை, பால், மற்றும் பால் பொருட்கள், முட்டை, மைதா மாவு, தீட்டிய வெள்ளை அரிசி, ஆங்கில மருந்துகள் ஆகிய ஏழு வெள்ளை நிறமுடைய உணவுகளை உண்பதைத் தவிர்த்து, நோயில்லா மரணமிலாப் பெருவாழ்வு வாழ முயல்வோம்! ஆரோக்கியத் தமிழகம், இந்தியா மற்றும் உலகை உருவாக்குவோம். பழ உணவு உண்போர் சமுதாயம் உலகில் பல்கிப் பெருகி, சாதி, சமய, சச்சரவற்ற அமைதி உலகை – சாந்தி உலகை உருவாக்குவோம்!
By டாக்டர் அப்பன்
 

Similar threads

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.