avvaiku athiamaan nelli kodutha kathai

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
35,098
Likes
76,890
Location
Hosur
#2
Hi friend,

Here it is...


அதிசய நெல்லிக்கனி

அதியமான் நெடுமான் அஞ்சி, தகடூரை ஆண்ட பெரும் வீரன். இவர் ஒளவையிடம் அன்பு பாராட்டி அவரால் பல பாடல்கள் பாடப்பெற்ற நல்லவர், வல்லவராவர். வீரத்திலும், வள்ளல் குணத்திலும் மிகவும் புழ்பெற்றவர் இவர். ஒளவையின் அன்புக்குப் பாத்திரமானவர். அவரால் பல பாடல்கள் பாடப்பெரும் வாய்ப்புப் பெற்றவர்.

இவரின் புகழ்கண்டு பொறாமையுற்ற சேர, சோழ, பாண்டியரும் பிற குறுநில மன்னரும் ஒன்று கூடி மாநாடு நடத்தி இவர் மீது யுத்தம் நடத்த திட்டங்கள் தீட்டினர். அப்போது அங்கு யதேச்சையாக வந்த ஒளவை விடயம் அறிந்து அவர்களுக்கு அறிவுரை பகர்கின்றார். மிகவும் நல்லவனான அதியமான் நெடுமான் அஞ்சியை வஞ்சிப்பதன் மூலம் அவர்களுக்கு நன்மைகள் வரப்போவதில்லை, மாறாக ஒரு நல்லவனை அழித்த அவப்பெயர் மட்டுமே மிஞ்சும் எனப் பலவாறாக எடுத்துக்கூறி அவர்களின் போர்த்திட்டத்தைக் கைவிடச் செய்கிறார். ஒளவையின்பால் மதிப்புக்கொண்ட அவர்களும் உண்மையை உணர்ந்து போரிடும் எண்ணத்தைக் கைவிடுகின்றனர்.

இவ்வாறிருக்க மன்னன் அதியமான் நெடுமான் அஞ்சியைக் காண ஒரு நாள் ஒளவை தகடூருக்கு வருகிறார். ஒளவையை அன்போடு வரவேற்று உபசரிக்கின்றான் மன்னன் அதியமான். அப்போது மன்னன் ஒரு நெல்லிக்கனியை ஒளவைக்குத் தந்து உண்ணும்படி வற்புறுத்துகிறான். ஒளவையும் அக்கனியை உண்டார். அதன் வித்தியாசமான சுவையில் அதிசயித்த ஒளவை, அதியமானிடம் அக்கனியைப்பற்றி விசாரிக்க, அது ஓர் அற்புத நெல்லிக்கனி என்றும் அதை உண்ணும் பேறு பெற்றவர் நீண்ட நெடுங்காலம் மரணமிலாப் பெருவாழ்வு பெற்று வாழ்வார் எனும் உண்மையை உரைக்கின்றான். அதிசயித்த ஒளவை, "நீண்ட காலம் வாழ வேண்டிய மன்னனே, வயதான எனக்கு எதற்கு இக்கனி, நீயல்லவோ இக்கனியை உண்டு நெடுங்காலம் வாழ வேண்டும்" எனக் கேட்கிறார். அதற்கு மன்னன் அதியமான் கூறுகிறார், "ஒளவை பிராட்டியாரே! எனைப் போன்ற ஒரு மன்னன் நீண்ட காலம் வாழ்வதைக் காட்டிலும் உமைப் போன்றதொரு தமிழ்ப்புலவர் நெடுங்காலம் வாழ்ந்து தமிழுக்குத் தொண்டு செய்வதே சாலச் சிறந்தது" என்று. அதன் பின்னர் ஒளவை நெடுங்காலம் வாழ்ந்தார் என்று கூறப்படுகிறது, அவரோடு இன்றளவும் மாவீரனும், சிறந்த தமிழ் நெஞ்சனுமாகிய அரசன் அதியமான் நெடுமான் அஞ்சியின் புகழும் ஒளவையுடன் வாழ்கிறது.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.