Ayurvedic Treatment for Hypertension - இரத்த அழுத்தம் குறைய

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
இரத்த அழுத்தம் குறைய


ஆயுர்வேதமும் உயர் இரத்த அழுத்தமும்


உயர் இரத்த அழுத்தத்தை ஆயுர்வேதம் ஒரு நோயாக மட்டும் கருதுவதில்லை. அதனுடன் சேர்ந்த, அதற்குக் காரணமான உறுப்புக் குறைபாட்டையும் கண்டு சேர்த்தே சிகிச்சை தருகிறது.


பி.ப்பி. என்னும் உயர் இரத்த அழுத்தம் இன்றைக்கு 30 வயது முதல் 40 வயது வரை உள்ள இளம் பிராயமுள்ளவர்களிடையேயும் காணப்படுவது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது. தமிழகத்தில் இன்றைக்கு ஏறத்தாழ ஒரு கோடிப் பேருக்கு மேல்பட்டவர்கள் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களாக உள்ளனர் என்பது அண்மைய மருத்துவக் கணிப்பாகும்.

BP பற்றிய சில முக்கிய விஷயங்கள்.

1. இரத்த அழுத்தம் தங்களுக்கு அதிகமாக இருக்கிறதென்பதைப் பலர் அறியாமல் இருக்கிறார்கள். இவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருக்கிறதென்பது மிகக் காலங்கடந்தோ அல்லது வேறு ஏதாவது நோய்க்கான பரிசோதனைகள் செய்யும் போதோதான் தெரிய வருகிறது.

2. இரத்தம் உயர்அழுத்த நிலைக்கு அருகில் இருக்கின்ற (ஙிஷீக்ஷீபீமீக்ஷீ றீவீஸீமீ) போது பலரும் அதை உயர் இரத்த அழுத்தம் உண்டாக வாய்ப்பிருக்கிறது என்று கருதுவதில்லை.

3. உயர் இரத்த அழுத்தத்திற்கு மருத்துவம் செய்து கொள்ள¢கின்றவர்களில் பெரும்பகுதியினர் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்று தெரிந்து கொள்வதில்லை.


ஆயுர்வேதத்தில் உயர் இரத்த அழுத்தத்தை தனிப்பட்ட ஒரு நோயாகக் கருதுவதில்லை. வேறு ஏதோ ஒரு உறுப்பின் கோளாறாகவே இது கருதப்படுகிறது. அதனாலேயே இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தினால் மட்டும் போதாது, அதற்குக் காரணமான உறுப்பையும் சிகிச்சை செய¢ய வேண்டுமென்று ஆயுர்வேதம் கூறுகிறது.

உடலில் உள்ள 107 பிரதானமான மர்மங்களுள் மிக முக்கியமான 3 மர்மங்கள் கூறப்படுகின்றன (த்ரிமர்மம்) (வஸ்தி, ஹ்ருதயம், சிரஸ் ) சிறுநீர்ப் பை, இதயம் மற்றும் தலை. இவற்றில் ஏதாவது ஒன்று பாதிக்கப்பட்டாலும் மற்ற இரண்டும் பாதிக்கப்படும். எனவே உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த மருந்து சாப்பிடுவது என்பது இரத்த அழுத்தத்திற்குத் தீர்வாகாது. பாதிக்கப்பட்ட அவயத்தைச் சீர் செய்வதோடு, வாழ்க்கை முறை மாற்றங்களையும் உணவுக் கட்டுப்பாட்டையும் மேற்கொள்ள வேண்டும்.

உயர் இரத்த அழுத்தத்தை வாதகம், பைதிகம் & கபஜம் என்று மூன்று வகையாகப் பிரித்துக் கூறுவார்கள். அதற்கேற்ப மருத்துவம் செய்யப்படும். வாரணாதி கஷாயம், வராதி கஷாயம், புனர்னவாதி கஷாயம், தசமூலஹரிதகி என்பன போன்ற பல மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. உடல் எடை மற்றும் திசுக் கொழுப்பு குறைந்தால் இரத்த அழுத்தம் குறையும். உடல் கொழுப்பைக் குறைப்பதில் பூண்டு நல்ல பலனளிக்கும். தவிர ஜடாமாஞ்சி, அமுக்கிரா, சர்ப்பகந்தி நெருஞ்சில், கடுக்காய்த் தோல், குக்குலு போன்ற மூலிகைகள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படுகின்ற குறிப்பாகக் கீழ்க்கண்ட முறைகளைப் பின்பற்றி இரத்த அழுத்தம் குறைக்கலாம்.

1. உப்பினைத் தவிர்க்க
உப்பு மற்றும் உப்பு சேர்த்த பொருள்களை இயன்ற வரை குறைக்கவும். உப்பு இரத்த அழுத்தத்தை உயர்த்தக் கூடியது.

2. மிகு எடை
உடல் எடை மிகுந்திருப்பது இரத்த நாளங்களையும், இரத்த ஓட்டத்தையும் வெகுவாகப் பாதிக்கும். எனவே எடையை தேவையான அளவு குறைக்கவும்.

3. மது குடிப்பதை தவிர்க்கவும்.
இரத்த அழுத்தத்தை உயர்த்துவதில் மது முக்கிய இடம் வகிக்கிறது. இது இரத்த அழுத்தத்தை உயர்த்துவதோடு இதயத்தையும் பாதிக்கிறது.

4. உடற் பயிற்சி.
தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வருவதன் மூலம் இரத்த அழுத்தத்தைச் சீரான நிலைக்கு கொண்டு வர முடியும்.

5. மன அமைதி
இயன்றவரை மனப்பதட்டம், அவசரம், மிகு ஆர்வம் போன்றவற்றைத் தவிர்க்கவும். கோபம் கொள்வதை அறவே மறந்து விட வேண்டும்.

6. உணவுக் கட்டுப்பாடு
எப்போதும் அரை வயிறு உணவு மட்டுமே உட்கொள்வது நல்லது. இயன்றவரை பச்சைக் காய்கறிகள், பழங்கள் உட்கொள்ளுங்கள்.

7. இரவில் காலம் கடந்து உணவு கொள்ளக் கூடாது. இயன்றவரை மாலை 7&8 மணிக்குள் இரவு உணவு உட்கொண்டுவிட வேண்டும்.
 
Last edited:

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.