baby food 8 months

Joined
Dec 19, 2015
Messages
1
Likes
0
Location
chennai
#1
my baby is now 8month old. now in chennai, tamil nadu. i want to know what food i have to give her to make her healthy.

what are the food i have to avoid please tell that too.
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,540
Location
Hosur
#2
Hi @valli amuthan,

Welcome to 'Penmai'.

Pls. read out here...

7 மாதத்திற்கு மேல், இட்லி, தோசை, சாதம் இவைகளைக் கொடுக்க ஆரம்பிக்கலாம். சப்பாத்தியை , பாலில் ஊறவைத்து, துளி துளியாகக் கொடுக்கலாம். பிஸ்கட் வகைகளைக் கொடுக்கலாம் .

மொத்தத்தில் நாம் சாப்பிடும் அனைத்து வகைகளையும் பழக்கப்படுத்த வேண்டும்.

இந்தப் பருவத்திலேயே, சர்க்கரைக்குப் ,
தேனைப் பழக்கப் படுத்துவது நல்லது. சர்க்கரை உபயோகிப்பதால், தீமைதான் விளையும் . தேன் எப்போதும் உடலுக்கு மிகவும் நல்லது. இப்போதே பழக்கமாகி விட்டால், கொஞ்சம் பெரியவர்களாக ஆன பின், கஷ்டப் பட்டு சர்க்கரைப் பழக்கத்தை மாற்றிக் கொள்வது கஷ் டமாக இருக்கும் .

ஒரு வயதிற்கு மேல், நாம் கொடுக்கும் கஞ்சி மாவில் பல மாற்றங்கள் செய்ய வேண்டும்.

தேவையான பொருட்கள் :

ராகி - 1/2 கிலோ
பச்சை பயறு - 1/2 கிலோ
கம்பு -100 கிராம்
வேர்கடலை - 1/4 கிலோ
பொட்டுக்கடலை - 1/4 கிலோ
பாதாம் பருப்பு - 100 கிராம்
கோதுமை - 1/4 கிலோ

செய்முறை :

இவற்றில் ராகியை மட்டும் முளை கட்டி , அதை உபயோகிக்கவும் .எல்லாவற்றையும் ஒன்றாகப் போட்டு ( இதில் , பொட்டுகடலை, பாதாம், இவற்றை மட்டும் வறுக்க வேண்டாம்),வெற்று வாணலியில் நன்றாகப் பச்சை வாசனை போகும் வரை வறுத்து, நல்ல நைசாக அரைத்து வைத்துக் கொண்டு, ஒரு காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைத்து விடவும். வேண்டுமானால், சிறிது வெளியில் வைத்துக் கொண்டு, பாக்கியை , ப்ரீசர் இல் வைத்து விடவும் (2 அல்லது 3 கவர் போட்டு ).

இதை இப்போது, ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் போட்டு, 1 டம்ளர் தண்ணீர் விட்டு, நன்றாக கலக்கி, அடுப்பில் வைத்துக் கிளறி, கெட்டியாக ஆகுமுன் இறக்கி விடவும். இதில் சிறிது பால், விட்டு, தேன் அல்லது சர்க்கரைப் போட்டுக் கலந்து , காபி, டீ போன்று (அதற்கு பதில் ) கொடுக்கவும்.

நிறைய தானியங்கள் சேர்வதால், உடலுக்கு வேண்டிய கால்சியம், ப்ரோடீன் , minerals,carbohydrate எல்லாம் இதன் மூலமே கிடைத்து விடும் .
Moderator's Note:This Article has been published in Penmai eMagazine February 2016. You Can download & Read the magazines HERE.
 
Last edited:

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.