Back Pain - முதுகுவலியைப் பற்றி முழுமையாக தெரிந்&#29

saveetha1982

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 16, 2014
Messages
7,552
Likes
21,853
Location
Chennai
#1
முதுகுவலியைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்:-பரவலாக அதிகரித்து வரும் நோய் முதுகுவலி. . . தினம் தினம் இது தீராப்பிரச்சினை! டூ வீலர் ஓட்டுபவர்கள். . . ஓய்வாக டி.வி. பார்ப்பவர்கள். . . கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்கள். . . வீட்டு வேலை செய்யும் பெண்கள். . . ஏன் `ஹோம் ஒர்க்' செய்யும் குழந்தைகள் கூட முதுகுவலி என்று கூறுகின்றனர்.

முதுகு வலிக்கு ஏதேனும் தைலத்தையோ வலி நிவாரணிகளையோ தேய்த்தால் அப்போதைக்கு வலி போய்விடும். ஆனால். . . அதன் அடிப்படைக் காரணம் என்ன? ஏன் வருகிறது. அதற்கு நிரந்தரத் தீர்வு என்ன? என்பது பற்றி எல்லாம் தீவிரமாக ஆராய்ந்து சிகிச்சை எடுக்க வேண்டும்.

சிக்கல் இல்லாத. . . நிரந்தரத் தீர்வுதரக் கூடிய சிகிச்சை எடுக்கவேண்டும்.

எதை முதுகு வலி என்கிறோம்?

மருத்துவ ரீதியாகச் சொல்வதனால் முதுகுத் தண்டின் கீழ்ப்பகுதியில் ஏற்படும் ஓர் அசௌகரியம் தான் வலியாகிறது.

இது ஒரு வியாதியல்ல. . . ஆனால் வெளிப்படாமல் அமுங்கியுள்ள ஒரு காரணத்தின் அறிகுறி.

முதுகுவலியின் மூல காரணத்தை ஆராய்வோம்:

1. இடுப்பின் வழியாக உச்சந்தலை வரை செல்லும் தண்டுவடம் 24 எலும்புகளால் ஆனது. ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது இது.

2. முதுகெலும்பின் முதல் ஏழு எலும்புகள் மண்டை ஓட்டின் கீழ்ப்புறத்தில் உள்ள கழுத்தில் அமைந்துள்ளன. இவை தலையை விரிவான அளவில் சுழற்றுவதற்கு ஏற்றவாறு திருப்ப அனுமதிக்கின்றன.

3. கழுத்தெலும்பின் கீழே உள்ளது நடுமுதுகு எலும்புகள் (ஆனை-bடினல ளுயீiநே) இவை 12 ஆகும். விலா எலும்புகள் இவற்றோடு இணைந்துள்ளன. இவை உண்மையில் அசையாதவை தான். எனினும் இந்த நிலைத்த தன்மை கழுத்தின் கூடுதல் அசைவிற்கு ஊக்கமளிக்கிறது.

4. அதற்கும் கீழே ஐந்து பெரிய எலும்புகள் அடிமுதுகு எலும்பின் (டுரஅயெச ளுயீiநே) பகுதியாக ஐந்து பெரிய எலும்புகள் உள்ளன. இந்தப்பகுதி தான் பெரும்பாலான முதுகுவலித் தொல்லைகளின் காரணியாகும்.

5. இந்த அடிமுதுகுப் பகுதி திடீர் அசைவிற்கும் உடல் கனம் அல்லது பளுச் சுமையின் அழுத்தத்திற்கும் ஆளாகக் கூடியது. முதுகெலும்புக்கும் முதுகுத் தசைகளுக்கும் மாமூலாக ஏராளமான அழுத்தங்களை இப்பகுதியே உருவாக்குகிறது.

முதுகுவலி எந்த வயதில் வரும்?

வாழ்வில் 5-ல் 3 பேர் மோசமான முதுகுவலியால் பாதிக்கப்படுகிறார்கள்.

சமீபத்திய சர்வே (ஆய்வுக் கண்ணோட்டம்) ஒன்றின்படி வேலையில் இருந்து விடுபடுவதற்கு முக்கிய காரணமாகக் காட்டப்படுவது முதுகு வலி தான்.

இளமைப் பருவத்தில் இது அவ்வளவு கடுமையாக இருப்பதில்லை. சீக்கிரம் போய்விடுகிறது. ஆனால் முதுகு வலி அடிக்கடி வருமானால் கவனிக்காமல் விடப்பட்டால் ஒருவரது முப்பதாவது மற்றும் நாற்பதாவது வயதுகளில் பெரிய பிரச்னை ஆகிவிடும்.

முதுமைப்பருவத்தில் செயல்பாடு இழத்தல், பெருமளவில் நேரிடும். இந்தியாவில் பள்ளிக் குழந்தைகள் கனமான புத்தக மூட்டைகளை முதுகில் சுமந்து செல்வதால் முதுகு வலி அதிகரித்து வருவதைக் கண்டுபிடித்துள்ளனர்.

முதுகுவலி எப்படி - ஏன் வருகிறது?

நவீன வாழ்க்கையில் உள்ள அழுத்தம் (ளுவசநளள) தான் முதுகுவலியின் முதற்பெரும் காரணமாகக் கூறலாம். எப்போதுமே நாம் தலைதெறிக்க ஓடும் அவசரத்திலும் பல்வகைச் சூழ்நிலை அழுத்தங்களுக்கு ஆளாகி இருக்கிறோம்.

எதிர்பாராமல் அதிகப் பளுவை ஒருவர் தூக்க முயலும்போது முதுகெலும்பை நிலை நிறுத்தியுள்ள தசைகள் போதிய இணக்கத்தைத் தரத் தவறிவிடுகின்றன. அது முதுகைப் பாதித்து வலியில் முடிகிறது.

முதுகைக் குனியவைத்த நிலையில் பொருள்களைத் தரையில் இருந்து தூக்க முயற்சிப்பது, அதிக உயரத்தில் இருந்து குதித்து சடாலென்று தரையில் இறங்குவது,இவை இரண்டுமே அபாயகரமானவை.

திடீரென்று திரும்புவது, அதுவும் ஒரு கனமான பொருளை வைத்த நிலையில் திரும்புவது முதுகுவலிக்கு வழி வகுக்கும்.

சிலரது பணிகள் (வேலை நிலை) முதுகுவலி வரக் காரணமாகி விடுகின்றன. அதுவும் முதுகிற்கு அதிகத் தொல்லை தரும் பணி செய்பவர்களுக்கே இந்த வலி வந்துவிடும்.

உயர்மட்ட நிர்வாக அதிகாரிகள், டைப்பிஸ்டுகள், கீ-போர்டு ஆபரேட்டர்கள், போர்ட்டர்கள் முதலியோரைக் கூறலாம்.

தொடர்ந்து ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது முதுகெலும்பைத் தாங்கும் தசைகள் பலவீனமுற வாய்ப்பளிக்கின்றன.

பொருத்தமற்ற நாற்காலியில் அமர்வதில் இருந்து இசகு பிசகான முறையில் உட்கார்ந்தே நின்ற படியோ (உதாரணங்கள் : பீடி சுற்றுவோர், கண்டக்டர்கள்) வேலை செய்வது வரை முதுகு வலி வரக் காரணங்களாகிவிடும்.

எப்படி வெளிப்படுகிறது?

முதலித் தசைத்துடிப்பு லேசான வலி தென்படும். இது தாங்க முடியாத நிலை வருவதற்கு முந்திய கட்டம்.

வழக்கத்துக்கு மாறான ஒரு கடினமான வேலையில் முதுகுவலியின் தாக்குதல் முழு வேகத்தில் இருக்கும்போது வலி மிகவும் கடுமையாக இருக்கும்.

நிற்கிற இடத்திலேயே உறைந்துவிட்டது போல் நகரவே முடியாத நிலை ஏற்படும்.

உடலே வித்தியாசமான முறையில் வளைந்து முறுக்கிக் கொண்டது போல் தோற்றமளிக்கும். இந்த நிலை இரண்டு அல்லது மூன்று வாரங்கள் நீடிக்கலாம்.

முதுகின் கீழ்ப்பகுதியில் தான் முதலில் இது தோன்றும்.

முதுகின் மேற்பகுதி மரத்துப்போதல், பளிச் பளிச்சென்று விட்டுவிட்டு வலித்தல் காணப்படும்.

***

திருகுவலியாகும் முதுகுவலி:

1. அதிகநேரம் சேரில் உட்கார்ந்திருப்பவர்கள், அதிகம் பயணிப்பவர்கள், ஓயாமல் வீட்டு வேலை செய்யும் பெண்கள், வகுப்பறையில் நிமிர்ந்து உட்கார்ந்திருக்கும் குழந்தைகள், முதியவர்கள் என வயது வித்தியாசமின்றி தாக்கும் நோய்களில் முதலிடம் வகிப்பதும் முதுகுவலி தான்.

2. முதுகு விஷயத்தில் அலட்சியம் காட்டினால் உயிருக்கே ஆபத்து நேரலாம் என்றும் எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

3. தோள்பட்டை, மார்பு, இடுப்பு, வயிறு என எல்லாபகுதி தசைகளும் முதுகோடு இணைந் திருக்கின்றன. அரக்கப் பரக்க வேலை செய்யும் போது இந்த தசைகள் இறுகி விடுகின்றன.

4. வேலை முடிந்து ரிலாக்ஸ் ஆகும் போது இவை இறுக்கம் தளர்ந்து இயல்பு நிலைக்கு திரும்பப் பார்க்கின்றன. இதன் விளைவே முதுகு வலி.

5. முதுகுவலி வந்துவிட்டால் அதற்கு பல காரணங்கள் இருக்கும். அதன் தாக்கமும் பல விதத்தில் இருக்கும். ஆதலால் சரியான நிபுணர்களிடம் சென்று, சிகிச்சை பெறு வதே சிறந்த வழி.

6. மேலும் வேலைகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வது, கவுன்சிலிங் ஆகியவைதான் இந்த முதுகு வலிக்கான சிகிச்சை. அதே போல் அளவுக்கு மீறிய வேலைகளைச் சுமந்து கொண்டு மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறவர்களுக்கும் முதுகு வலி வரும்.

சில எளிய வழிகள்:

1. முதுகுவலியில் இருந்து தப்பிக்க சில எளிய வழிகளும் உண்டு.

2. மல்லாந்து, கவிழ்ந்து படுக்காமல் ஒருபுறமாக ஒருக்களித்து படுப்பது நல்லது. முழங்காலை வளைத்து முன்னே கொண்டு வரவும். சிலருக்கு குப்புறப்படுத்தால் தான் தூக்கம் வரும்.

3. அப்படி படுக்கும்போது தலையணையை தலைக்கு வைக்காமல், இடுப்புக்கு கீழே வைத்து படுப்பது சிறந்தது. அதிக கடினமாகவும், அதிக மென்மையாகவும் இல்லாத மெத்தையை பயன்படுத்துவது நல்லது.

4. முதுகுவலி ஏற்படாமல் இருக்க, உட்காருவது மிகவும் முக்கியம். நாற்காலியில் உட்காரும்போது முதுகு நன்றாக நாற்காலியோடு ஒட்டும்படி அமரவும்.

5. கீழே சின்னதாக ஒரு பலகை போட்டு அதன்மீது இரண்டு கால்களையும் வைக்கவும். இப்படி செய்வதன் மூலம் முழங்கால் மூட்டு இடுப்பை விட உயரமான நிலையில் இருக்கும்.

6. உட்காருவதில் இதுதான் சிறந்த முறை. தொடர்ந்து பல மணி நேரம் உட்காராமல் ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை எழுந்து சில நிமிடங்கள் நடப்பது நல்லது.

7. எல்லாப் பொருட்களையும் மேஜையில் எட்டக்கூடிய இடத்தில் வைக்கவும். இடுப்பை அடிக்கடி திருப்ப வேண்டாம். அப்படி ஒரு சூழல் அமைந்தால், உடலில் தலை முதல் கால் வரை அனைத்து பாகங்களையும் அதாவது உடம்பு முழுவதையும் திருப்பவும்.

8. அதேபோல் கனமான பொருட்களை தூக்கும்போது இடுப்பை வளைக்காமல் தூக்கவும். எப்போதும் தலையை நிமிர்த்தி நடக்க வேண்டும். நடக்கும்போது கால் விரல்களும் நேராக இருக்க வேண்டும்.

9. மிருதுவான, மெல்லிய குஷன்களை கொண்ட காலணிகளை அணிவது நல்லது. மிகவும் உயரமான ஹீல்ஸ் காலணி முதுகுவலியை உண்டாக்கும்.

10. நீண்ட நேரம் நிற்பது கூடாது. அப்படியே நிற்க நேர்ந்தாலும், பாதங்களில் ஒன்றை மற்றதை விட உயரமாக வைக்கவும். அடிக்கடி நிற்கும் நிலையை மாற்றவும். கைகளை நன்றாக வீசி நடக்க வேண்டும். சாதாரண முதுகுவலிக்கு ஓய்வும், உடற்பயிற்சியும்தான் தீர்வு.
 

Attachments

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.