Balanced diet for healthy life - சரிவிகித உணவு உட்கொண்டால் நோய்கள் &#2

kamatchi devi

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 4, 2013
Messages
1,498
Likes
2,591
Location
Vellore
#1
இப்போதைக்கு உள்ள அவசர வாழ்க்கை முறையில் உடலுக்கு தேவையானதை முறையாக தேடி சேமித்து உண்ணும் வழக்கம் நம்மிடையே இல்லாமல் போய் விட்டது. அதற்கு நேரமும் கிடைப்பதில்லை. முறையான சரி விகித உணவு என்றால் என்ன? எந்த விழுக்காட்டில் எந்த உணவை எப்படி உண்பது? என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

சர்க்கரை சத்து:

மாவு சத்து என்றும், சர்க்கரை சத்து என்றும் அழைக்கப்படும். இந்த உணவே நமது பெரும்பான்மையான உணவு என்று கூறலாம். உடலுக்கு தேவையான அதிவிரைவான சக்தியை இந்த சர்க்கரை சத்து தருகிறது. அதனால் தான் இந்த உணவை நாம் தேடி எடுத்துக்கொள்கிறோம். இந்த சக்தி இனிப்பில் இருந்து மட்டுமல்லாமல் தானியங்கள், கிழங்கு வகைகள் போன்றவற்றில் இருந்தும் பெறப்படுகிறது. இந்த உணவுகள் இரைப்பையில் சென்ற உடன் நொதிக்கப்பட்டும், உடைக்கப்பட்டும் குளுக்கோசாகமாற்றப்பட்டு மனிதன் என்ற இயந்திரம் சிறப்பாக இயங்க எரியூட்ட படுகிறது. இந்த குளுக்கோஸ் உயிர் அணுக்களில் விரைந்து புகுந்து சக்தியாக மாறி மனிதனை இயக்குகிறது. இதனால் தான் உடலுக்கு (நோயிலிருக்கும்போது) விரைந்து சக்தி தர குளுக்கோசு தரப்படுகிறது. ஒரு கிராம் சர்க்கரை சக்தியில் இருந்து நான்கு கலோரி வெப்பம் கிடைப்பதாக கணக்கிட்டு உள்ளனர். ஒரு கிராம் தண்ணீரை ஒரு டிகிரி செல்சியசு அளவு சூடு படுத்த தேவைப்படும் வெப்பமே ஒரு கலோரி எனப்படும். சர்க்கரையை விட வெல்லமே சிறந்த உணவாகும்.

கொழுப்பு சத்து:

நிலைத்திணை (தாவர), மாமிச, எண்ணைகள் ஆகியவற்றில் இருந்து நமக்கு கிடைக்கிறது. கொழுப்பு சத்துக்களில் கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன் ஆகிய மூன்றும் மற்றும் பாசுபரஸ், கந்தகம், நைட்ரஜன் போன்ற வையும் உள்ளது. உணவு முறைகளில் நாம், கொழுப்பு வகை உணவையே அதிகளவில் உட்கொள்கிறோம். ஒரு கிராம் கொழுப்பில் இருந்து ஒன்பது கலோரி சக்தி கிடைப்பதாக கணக்கிட்டு உள்ளனர். உடலுக்கு சக்தி வெளியில் இருந்து கிடைக்காத போது சேமித்து வைக்கப்பட்டு இருக்கும் கொழுப்பில் இருந்து எடுத்து கொள்ளபடுகிறது. மாமிசம், தேங்காய், எள், நிலக்கடலை, பனை, சூரியகாந்தி, கடுகு, சோயா, ஆமணக்கு, வெண்ணை, நெய், அரிசிதவிடு ஆகியவை கொழுப்பு சிறந்த உணவுகளாகும்.

புரதம்:

சர்க்கரையும், கொழுப் பும் சக்தியை தருகிறது. அனால் புரதம் தான் உடலின் வளர்ச்சிக்கும், உடலின் வளர்ச்சி நிலைக்கவும் தேவைப்படுகிறது. பின்தங்கிய இடங்களில் இந்த புரத பற்றாக்குறை நோய் பெரிதாக காணப்படுகிறது. இந்த புரத பற்றாக்குறை காரணமாகவே அதிகளவில் நோய்கள் ஏற்படுகிறது. நம்முடைய உடல் கோடிகணக்கான உயிர் அணுக்களினால் ஆனது. இந்த உயிர் அணுக்களின் அமைப்பில் முக்கியமானதாக இந்த புரத சத்து தான். ஒரு கிராம் புரத்தத்தில் நான்கு கலோரி வெப்பசக்தி கிடைப்பதாக கணக்கிட்டு உள்ளனர். அரிசி மற்றும் பருப்பு வகைகளில் உள்ள புரதத்தில் லைசின், மித்தியோனின் குறைந்தே இருந்தே உள்ளது. இந்த இரு வகைகள் சேர்த்து உண்ணுவதால் சக்தி ஈடு செய்யபடுகிறது. தாவர உணவு உண்ணுபவர்கள் பலவித தானிய வகைகள், பழ வகைகள், கீரைகள், பால் போன்றவை சாப்பிடுவதால் அவற்றில் இருந்து தரமான புரதம் கிடைக்கிறது. மொச்சை, குதிரை மசால், பாசிபயறு, வேர்கடலை, பருத்தி சோளம் ஆகியவற்றில் அதிகளவில் புரத சத்து உள்ளது.

நார் சத்து:

இந்த நார் சத்தை பொறுத்த வரை உடலுக்கு எந்த சக்தியையும் கொடுப்பதில்லை என்றாலும் நாம் அதை அதிகளவில் உண்ணுகிறோம். மாவு சத்து ஒட்டும் தன்மை கொண்டதால், மலம் வெளியேறுவதில் சிக்கல் உண்டாகும். இதனால் நார் சத்து உணவுகளை சாப்பிட்டதால், அதிகளவில் கொழுப்பை வெளியேற்றும் என்பதால் நார் சத்து தேவைப்படுகிது. எனவே நார் சத்து நிறைந்த உணவு எடுக்க வேண்டியதும் மிகவும் அவசியம்.

உயிர் சத்துகள்:

உடலின் சீரான வளர், சிதை மாற்றத்திற்கு உயிர் சத்து துணை செய்கிறது. இது நம் உணவில் சேர்க்கவேண்டிய வேதிபொருலாகும். இந்த பொருட்கள் உணவில் குறைந்தால் எந்த பொருள் பற்றாக்குறை உண்டாகிறதோ, அதற்கு ஏற்ற உணவு பற்றாக்குறை நோய் உண்டாகிறது. வைட்டமின் பி 1 தான் உயிர் சத்தின் குறியீட்டதாக உள்ளது. இது கைகுத்தல் அரிசி, மாமிசம் போன்றவற்றில் அதிகளவில் உள்ளது.

a
 

kiruthividhya

Friends's of Penmai
Joined
Apr 18, 2013
Messages
362
Likes
859
Location
chennai
#2
Re: சரிவிகித உணவு உட்கொண்டால் நோய்கள் வராத&#30

Nice share......................
 

SBS

Commander's of Penmai
Joined
Aug 20, 2013
Messages
1,275
Likes
2,098
Location
Coimbatore
#4
Re: Balanced diet for healthy life - சரிவிகித உணவு உட்கொண்டால் நோய்கள்

Nice share frnd :thumbsup
 

kamatchi devi

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 4, 2013
Messages
1,498
Likes
2,591
Location
Vellore
#6
Re: Balanced diet for healthy life - சரிவிகித உணவு உட்கொண்டால் நோய்கள்

Useful sharing friend, thanks.

தேங்க்ஸ் சுமதி அக்கா..........
 

kamatchi devi

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 4, 2013
Messages
1,498
Likes
2,591
Location
Vellore
#7
Re: Balanced diet for healthy life - சரிவிகித உணவு உட்கொண்டால் நோய்கள்

Nice share frnd :thumbsup

தேங்க்ஸ் கவி ............
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.