Balanced diet for kids health-உணவில் என்ன சத்துக்கள் இருக்க வேண்&#

suganthiramesh

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Apr 4, 2012
Messages
5,017
Likes
14,861
Location
THENI,TN
#1
உங்கள் குழந்தை உண்ணும் உணவில் என்ன சத்துக்கள் இருக்க வேண்டும் ? health.jpg
food_pyramid_kids_veg.gif
இரும்புச் சத்து
ரத்தத்தில் உள்ள சிகப்பு ரத்த அணுக்களின் ஒரு முக்கிய பகுதியாகும். இரும்புச் சத்து மூளைக்கு பிராண வாயுவைக் கொண்டு சென்று அதனை சிறந்த முறையில் செயல் பட வைக்கிறது....

போலிக் அமிலம்
மூளை வளர்ச்சி மற்றும் மத்திய நரம்பு மண்டலத்தின் செயலாற்றலுக்கு துணை புரியும்...

அயோடின்
தைராயிட் ஹார்மோனை சரியான அளவில் சுரக்கச் செய்கிறது.... நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது...

புரதம்
உடலில் உள்ள தசைகள், திசுக்கள் மற்றும் ரத்தத்தை உருவாக்கும் அடிப்படை பொருளாகும்... ஹார்மோன்களின் ஒரு முக்கிய பகுதியாகவும் இருக்கிறது.... நோய் தொற்றுகளுக்கு எதிராக செயல்படுகிறது...

வைட்டமின் A
கண்பார்வைத் திறனை மேம்படுத்த உதவுகிறது....

வைட்டமின் B

உண்ணும் உணவின் சத்துக்களை உடலுக்கு தேவையான ஆற்றலாக மாற்றும் திறன் கொண்டது... எலும்பு மஜ்ஜை, திசுக்கள், செல்கள் என்ற ஒட்டுமொத்த உடல் வளர்ச்சிக்கும் அடிப்படையாக உள்ளது.

வைட்டமின் Cசளி, இருமல் போன்ற நோய் தொற்றுகள் ஏற்படாமல் இருக்க உதவுகிறது... தோலின் ஆரோக்கியத்திற்கும், கான்செர் போன்ற கடுமையான நோய்கள் அண்டாமல் இருக்கவும் துணை புரிகிறது....

வைட்டமின் D

உணவில் உள்ள கால்சியம் உடலில் உறிஞ்சப்படுவதற்கு துணை புரிகிறது...

வைட்டமின் E

antioxidants உள்ள இந்த வைட்டமின் இதயத்தின் வலுவான செயல்பாட்டிற்கும், செல்களின் வளர்ச்சிக்கும், முதுமை தோற்றத்தை தவிர்ப்பதற்கும் உதவுகிறது....

ஒமேகா 3
மூளையின் நினைவாற்றலையும், கண்களின் பார்வை திறனையும் மேம்படுத்தும்.

கால்சியம்
பற்கள் மற்றும் எலும்புகளின் உறுதிக்கு மிகவும் அவசியம்... இதயம், நரம்புகள் மற்றும் தசைகளையும் ஆரோக்கியமாக வைக்கிறது....

zinc
மரபணு கூறுகளின் முக்கிய பகுதியான இது குழந்தையின் உடல்சார் வளர்ச்சிக்கு மிக மிக முக்கியமானது... நோய் தொற்றுகளுக்கு எதிரான ஆற்றலைத் தருகிறது....

 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.