Banana Face Masks For Glowing Skin - சருமம் மின்ன

#1
சருமம் மின்ன

வாழைப்பழ ஃபேஸியல் :
பழுத்த வாழைப்பழத்தை மசித்து அதனுடன் தேன் சேர்த்து சில துளி எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் வட்ட வடிவமாக ஃபேஸியல் செய்து பாருங்கள். சருமம் சுருக்கமின்றி அழகாய் மின்னும்.





கருமை நீங்க:
புதினா ஒரு கப் எடுத்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் கடலை மாவை 2 ஸ்பூன் கலந்து முகத்தில் பேக் போட்டால் வெயிலினால் உண்டாகும் கருமை அலர்ஜி ஆகிய்வை மறைந்து நிறம் பெறும்.

கரும்புள்ளி மறைய :
வேர்கடலையை அரைத்து அதனுடன் சிறிது பால் கலந்து முகத்தில் ஃபேஸியல் மாஸ்க் போல் போடுங்கள். காய்ந்ததும் கழுவவும். இவ்வாறு வாரம் இருமுறை செய்தால் கரும்புள்ளி நீங்கி விடும்.

சுருக்கம் மறைய :
தேங்காய் எண்ணெய், ரோஸ் வாட்டர் மற்றும் தயிர் சம அளவு எடுத்து மூன்றையும் நன்றாக கலந்து முகத்தில் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். இவ்வாறு வாரம் 3 முறை செய்தால் சுருக்கங்கள் காணாமல் போகும்.


 

gkarti

Super Moderator
Staff member
#2
Ithoda Banana + Honey Semaya Work Out aagum! But Face ku Apply Seirapo, thappi thavari Lip la Patruchu nna Pochu.. :p Apuram Face Pack lam Poda Mattom, eduthu Saptruvom.. ;)