Basic Guidelines for Healthy life - ஆரோக்கியமான வாழ்க்கை வாழ கட்டாயம்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
ஆரோக்கியமான வாழ்க்கை வாழ கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்!!




ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ சில அடிப்படை ஆரோக்கிய குறிப்புகளை தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

ஆரோக்கியமாக வாழ்வதற்கு உணவுகள் மட்டுமின்றி, பழக்கவழக்கங்களும் மிகவும் முக்கியமானது. அதிலும் அடிப்படை ஆரோக்கிய குறிப்புக்களை தெரிந்து கொண்டு, அவற்றை பின்பற்றி வந்தாலே ஆரோக்கியமாக இருக்கலாம்.


இங்கு ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில அடிப்படை ஆரோக்கிய குறிப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

* தண்ணீரை பகலில் அதிகமாகவும், இரவு நேரத்தில் குறைவாகவும் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளவும்.

* உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு இரவு 10 மணிக்கு தூங்கி, அதிகாலையில் 4 மணிக்கு எழுந்து, உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

* உணவை உண்ட உடனேயே தூங்கும் பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.

* மாலை 5 மணிக்கு மேல் வயிறு நிறைய சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

* எப்போதும் மாத்திரைகளை குளிர்ந்த நீரில் எடுத்துக் கொள்வதைத் தவிர்த்து, வெதுவெதுப்பான நீரில் எடுக்கும் பழக்கத்தைக் கொள்ள வேண்டும்.

* எப்போதும் போன் பேசும் போது, இடது புற காதில் வைத்து பேச வேண்டும்.

* போனை சார்ஜ் போட்டிருக்கும் போது, பேசும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும். ஏனெனில் சார்ஜ் போட்டிருக்கும் போது, கதிர்வீச்சுக்களின் அளவு 1000 மடங்கு அதிகமாக இருக்கும்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.