Beans benefits..

Angu Aparna

Minister's of Penmai
Moderator
Joined
Jul 4, 2011
Messages
4,749
Likes
8,370
Location
India
#1


இதயத்தை பாதுகாக்கும் காய்கறிகளில் நாம் பார்க்கபோவது பீன்ஸ்.


இருதய படபடப்பு, மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் பீன்ஸை உணவில் சேர்த்துக்கொள்வதால் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகித்து உயர் ரத்த அழுத்தம் மற்றும் இருதய படபடப்பை நீக்கி உடலை பாதுகாத்துக்கொள்ளும். கொழுப்பின் அளவு ரத்தத்தில் அதிகம் உள்ளவர்கள் பீன்ஸை பொரியலை செய்து தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் பீன்ஸில் உள்ள லெசித்தின் எனும் நார்ப்பொருள் இருதய டானிக்காக செயல்படுவதோடு ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைத்து ரத்தத்தை சுத்தமாக்கும்.

[/FONT]மேலும் ரத்தகுழாய்களில் ஏற்பட்டிருக்கும் அடைப்பை நீக்கி இருதய அடைப்பு மற்றும் இருதய சம்பந்தமான நோயிலிருந்து உடலை பாதுகாக்கலாம். மேலும் நீரிழிவால் அவதிபடுபவர்கள் உணவில் அடிக்கடி பீன்ஸை எடுத்துக்கொள்வதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுபடுத்தப்படும். இதனால் நோயின் தாக்கம் குறையும்.

Moderator's Note:This Article has been published in Penmai eMagazine February 2016. You Can download & Read the magazines HERE.
 

Attachments

Last edited by a moderator:

Angu Aparna

Minister's of Penmai
Moderator
Joined
Jul 4, 2011
Messages
4,749
Likes
8,370
Location
India
#2
பீன்ஸ் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஃப்ளேவோனாய்டுகள் புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைத் தடுக்கும்.

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைப்பதற்கு பீன்ஸ் பெரிதும் உதவியாக இருக்கும். ஏனெனில் அதில் உள்ள கார்போஹைட்ரேட் மெதுவாக கரைவதால், அது இரத்தத்தில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை சேர்வதைத் தடுக்கும்.


பீன்ஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், புரோட்டீன், நார்ச்சத்து, காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களான பொட்டாசியம், ஃபோலேட், காப்பர், இரும்புச்சத்து, மாங்கனீசு, பாஸ்பரஸ் மற்றும் மக்னீசியம் இருப்பதால், இது உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதைத் தடுத்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.

[/FONT]
[/FONT]
[/FONT]பீன்ஸில் போலேட் என்னும் கருவில் வளரும் சிசுவிற்கு தேவையான வைட்டமின் இருப்பதால், கர்ப்பிணிகள் இதனை சாப்பிடுவது நல்லது.

[/FONT]Moderator's Note:This Article has been published in Penmai eMagazine February 2016. You Can download & Read the magazines HERE.
 
Last edited by a moderator:

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.