Beauty - ஆச்சரியம் தரும் அழகு

silentsounds

Guru's of Penmai
Moderator
Joined
Feb 5, 2011
Messages
6,349
Likes
13,492
Location
Chennai
#1
பண்டிகைகள் தொடர்ந்து வரும் காலம் இது. பண்டிகை காலத்தில் பகட்டாக உடை உடுத்தி, பளிச்சென உலா வர எல்லா பெண்களுமே விரும்புகிறார்கள். ஏன்என்றால் பண் டிகை காலங்களில் ஒவ்வொருவர் பார்வையும் அடுத்தவர்கள் மீது பதிகிறது. அப்போது தானும் அழகுதான் என்று ஒவ்வொரு பெண்ணும் அடையாளம் காட்ட வேண்டியிருக்கிறது.[/FONT]
நீங்களும் அழகாகத் தோன்றவேண்டும் என்றால், இதைப் படியுங்கள்...[/FONT]
* பண்டிகைக் காலத்தில் பளிச்சென தெரிய, அடர்த்தியான `மேக்-அப்' போட்டு விடக்கூடாது. இயல்பாக `லைட்டாக' போடப்படும் அலங்காரம் தான் நேர்த்தியாக இருக்கும். பவுண்ட்டேஷன் லைட்டாக போடுங்கள். பவுண்ட்டேஷன் போடும் போது காதுகளையும், கழுத்தையும் மறந்து விடாமல் அவைகளையும் மேக்-அப் மூலம் சரிசெய்யுங்கள்.[/FONT]

* லிப்ஸ்டிக் கொஞ்சமாக போடுங்கள். பெரிய உதடுகளாக இருந்தால், உதடுகளின் உள்புறத் தில் மேல் நோக்கி `லிப் லைனர்' மூலம் வரை யுங்கள். லைனரின் வெளிப்பகுதி கறுப்பாகத் தெரிந்தால் பவுண்டேஷனோ, கண்சீலரோ பூசுங் கள்.[/FONT]
* கண்களில் காஜல் ஸ்டிக் மூலம் வரையுங் கள். ஸ்டிக்கில் கண்மை படாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். ஐ லைனர் போட விரும்பு கிறவர்கள் மேல் கண் இமையில் மிக மெலிதாக வரைந்துகொள்ளவேண்டும்.[/FONT]
*பண்டிகை காலங்களில் பெண்கள் மல்லிகை, முல்லைப்பூ சூடிக்கொள்கிறார்கள். புடவை கட்டி இந்த பூக்களை வைத்துக்கொள்ளும்போது கூந்தலை அவிழ்த்துவிட்டால் நன்றாக இருக்கும். குளிக்கும்போது ஷாம்பு போட்டு, கண்டிஷனரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போது கூந்தல் சில்க்கியாக, தனித்தனியாகத் தெரியும்.[/FONT]
* முகத்தில் புள்ளி, படை போன்று தெரியும் பெண்கள் பண்டிகைகால அழகுக்காக சில நாட்களுக்கு முன்பே தயாராக வேண்டும். முகத்தில் புள்ளிகள், படைகளை போக்க சில வகை அழகு சிகிச்சைகளை அவர்கள் செய்துகொள்ளவேண்டும்.[/FONT]
* இரவு தூங்கச் செல்வதற்கு முன்னால் மேக்-அப்பை முழுமையாக நீக்கிவிடவேண்டும். அதற்காக உங்கள் சருமத்திற்கு பொருத்தமான `பேஸ் வாஷை' தேர்ந்தெடுக்கவேண்டும். வறண்ட சருமத்தை கொண்டவர்கள் கடலைமாவுடன், பாலாடையைக் கலந்து முகத்தில் பூசவேண்டும். பயணம் முடிந்து வீடு திரும்பியதும் தயிரை பஞ்சில் முக்கி முகத்தில் பூசி கழுவவேண்டும்.
[/FONT]
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.