Beauty Products in your Kitchen - சமையலறையில் இருக்கும் 12 அழகுப் பொரு

divideva

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Jan 29, 2013
Messages
1,662
Likes
5,487
Location
Mysore
#1
மஞ்சள்

மஞ்சளில் ஆன்டி-செப்டிக் பொருள் அதிமாக உள்ளது. இதனைக் கிருமிநாசினிப் பொருள் என்றும்
சொல்லாம். எனவே இத்தகையப் பொருளை பயன்படுத்தினால்,
சருமத்தில் ஏற்படும் சரும நோய்கள் மற்றும் கருமையான திட்டுக்களைப் போக்கலாம்.

தக்காளி

தக்காளியில் சிட்ரஸ் உள்ளதால், இதனை பழுப்பு நிற சருமம் உள்ளவர்கள் பயன்படுத்தினால், நீக்கிவிடலாம். அதற்கு தக்காளியின் ஒரு துண்டை சருமத்தில் தேய்த்து, ஊற வைத்து கழுவ வேண்டும்.
 

divideva

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Jan 29, 2013
Messages
1,662
Likes
5,487
Location
Mysore
#2
Re: சமையலறையில் இருக்கும் 12 அழகுப் பொருட்கள&a

பால்

பால் நிறைய அழகு சிகிச்சையில் பயன்படுகிறது. ஏனெனில் பாலை சருமத்திற்குப் பயன்படுத்தினால், சரும வறட்சியை தடுப்பதோடு, சருமத்தை மென்மையாகவும், பட்டுப் போன்றும் மின்னச் செய்யும்.

உப்பு

உப்பை ஸ்கரப் போன்றும் பயன்படுத்தலாம். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்களைப் போக்கிவிடுவதோடு, சருமத்தில் உள்ள சத்துக்களை தக்க வைக்கலாம்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில் சமையலிலும், அழகுப் பராமரிப்பிலும் பயன்படுகிறது. அதிலும் இதனை சருமத்தில் பயன்படுத்தும் போது, அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், முதுமைத் தோற்றத்தை தடுக்கும்.
 

divideva

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Jan 29, 2013
Messages
1,662
Likes
5,487
Location
Mysore
#3
Re: சமையலறையில் இருக்கும் 12 அழகுப் பொருட்கள&a

வெங்காயம்

வெங்காயத்தில் ஜிங்க் அதிகம் உள்ளதால், சருமத்திற்கு மிகவும் ஏற்றது. ஜிங்க் ஒரு ஆன்டி-பாக்டீரியல் பொருள் என்பதால், அது சருமத்தில் ஏற்படும் நோய்களை தடுக்க வல்லது.

சர்க்கரை

சர்க்கரையும் உப்பைப் போன்றே ஸ்கரப் செய்ய வல்லது. இது ஒரு சிறந்த ஸ்கரப் ரெசிபியில் ஒன்று. வேண்டுமெனில் இதனை வீட்டிலேயே செய்யப்படும் ஃபேஷியலுக்கும் சிறந்தது. இவ்வாறு செய்வதால், சருமத்தில் வளரும் முடியைத் தடுக்கலாம்.

க்ரீம்

ஃப்ரஷ் க்ரீம்மை பயன்படுத்தி ஃபேஸ் பேக் செய்தால், சருமம் மென்மையாகும். அதிலும் இதனை செய்வதால், சருமம் நன்கு புத்துணர்ச்சியுடன் பொலிவோடு இருக்கும்.

எலுமிச்சை

சிட்ரஸ் பழங்களுள் எலுமிச்சை சருமத்திற்கு மிகவும் சிறந்தது. இதிலும் இதனை ப்ளீச்சிங் மற்றும் ஃபேஸ் பேக் போட்டால், சரும நோய்கள் மற்றும் பழுப்பு நிற சருமத்தை தடுக்கலாம்.
 

divideva

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Jan 29, 2013
Messages
1,662
Likes
5,487
Location
Mysore
#4
Re: சமையலறையில் இருக்கும் 12 அழகுப் பொருட்கள&a

ஓட்ஸ்

ஓட்ஸ் சொரசொரப்புடன் இருப்பதால், இது ஸ்கரப் செய்வதற்கு ஏற்ற ஒரு அழகுப் பொருள். இதனை சருமத்திற்கு பயன்படுத்தினால், சருமத் துளைகளில் உள்ள அழுக்குகளை நீக்குவதோடு, சருமத் துளைகள் நன்கு சுவாசிக்கவும் செய்யும். மேலும் இது பருக்களை குறைக்கவும் உதவும்.

தயிர்

தயிர் பால் பொருட்களில் ஒன்றாக இருப்பதால், இதுவும் சருமத்தை மென்மையாக்க உதவும். அதிலும் இது புளிப்புடன் இருப்பதால், இதில் வைட்டமின் சி அதிகம் இருக்கும். ஆகவே இது சருமத்தை ஈரப்பசையுடன் வைப்பதோடு, பழுப்பு நிற சருமத்தை தடுக்கும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயில் குளிர்ச்சித்தன்மை அதிகம் உள்ளது. எனவே முகத்திற்கு ஃபேஸ் பேக் போடும் போது, கண்களுக்கு வெள்ளரிக்காய் துண்டுகளை வைத்தால், கண்கள் குளிர்ச்சியடைவதோடு, புத்துணர்ச்சியுடன் இருக்கும். மேலும் கண்களைச் சுற்றி, கருவளையங்கள் மற்றும் சுருக்கங்கள் வராமல் தடுக்கும்.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#5
Re: சமையலறையில் இருக்கும் 12 அழகுப் பொருட்கள&a

​உபயோகமான தகவல்களைத் தந்தமைக்கு மிக்க நன்றி தியா
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#6
Re: சமையலறையில் இருக்கும் 12 அழகுப் பொருட்கள&a

சமையல் அறையில் உள்ள நாம் நாள்தோறும் பயன்படுத்தும் பொருட்களை கொண்டே நம் அழகினையும் பராமரிக்கும் பாங்கான வழி சொல்லி கொடுத்த திவ்யா தோழிக்கு மிக்க நன்றி.
 

divideva

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Jan 29, 2013
Messages
1,662
Likes
5,487
Location
Mysore
#7
Re: சமையலறையில் இருக்கும் 12 அழகுப் பொருட்கள&a

​உபயோகமான தகவல்களைத் தந்தமைக்கு மிக்க நன்றி தியா
Thanks aunty.....
 

Nishahameetha

Ruler's of Penmai
Joined
Jul 5, 2011
Messages
18,266
Likes
28,602
Location
Trichy
#10
Re: Beauty Products in your Kitchen - சமையலறையில் இருக்கும் 12 அழகுப் பொர&#3

Nice tips Divi.... Thanks for sharing ma....
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.