Beauty Tips - சின்ன சின்ன அழகு குறிப்புகள்....

smahi

Guru's of Penmai
Joined
Apr 9, 2012
Messages
6,163
Likes
14,020
Location
Toronto
#1

brownmustardseeds6.jpg


கண்களுக்கு கீழே பை தொங்குகிறதா? கடுகைப் பொடி செய்து சலித்து அதை தேங்காய் எண்ணெயில் குழைத்து கண்களுக்கு கீழே தடவுங்கள்.

கடுகு எண்ணெய் 6 சொட்டுகள் எடுத்து சூடாக்கி அதை அரிப்பு, தோல் உதிரும் இடங்களில் தடவி மசாஜ் செய்தால் அரிப்பு பறந்துவிடும். ஒரு வாரம் வரை கூட இதனை செய்யலாம்.

கறுத்த முகத்தை ஜொலிக்க வைக்க கொஞ்சம் கடுகு கொஞ்சம் பயத்தம்பருப்பை தயிரில் கலந்து ஊறவைத்து அரைத்து முகத்தில் தடவி வரலாம்.

முட்டிப் பகுதிகளின் கருமையைப் போக்க சிறிதளவு கடுகை நீரில் ஊறவைத்து குழைத்து தடவி வரவும்.

கர்ப்பகால வயிற்று வரிகளை ஒழிக்க சூடான கடுகு எண்ணெயுடன் வெண்ணெயை கலந்து தினமும் வயிற்றில் தடவி வரவும்.

எலும்புகள் உறுதிபட கடுகு எண்ணெயை சூடாக்கி உடல் முழுதும் தடவி கடலை மாவு தேய்த்து குளிக்கவும்.

கடுகு எண்ணெயை சூடாக்கி பாதம் முழுக்க தடவவும், பிறகு இளஞ்சூட்டு நீரில் கால்களை வைத்திருந்தால் வெடிப்புகள் மறையும்.

தலை முடிக்கு ஷாம்பூ வேண்டாம்! கடுகு 100, சீயக்காய் ஒரு கிலோ, துவரை 100 கிராம், வெந்தயம் அரை கிலோ அரைத்துப் பொடி செய்து கொண்டு தலைக்கு பயன்படுத்தவும். தலை முடி நிலைக்கும்.
 

naliniselva

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 28, 2012
Messages
7,444
Likes
22,271
Location
canada
#2
very nice mahi....:cheer:thanks for sharing....:thumbsup
 

smahi

Guru's of Penmai
Joined
Apr 9, 2012
Messages
6,163
Likes
14,020
Location
Toronto
#3
பெண்கள் என்றால் அழகு என்று கவிஞர்கள் பாடுகின்றனர். ஆனால், இன்றைய பெண்கள் வீட்டு வேலையுடன் அலுவலக வேலையையும் சேர்த்து செய்வதால், அவர்கள் தங்களின் அழகை பேணிப் பராமரிக்க நேரம் இல்லாமல் அவதிக்குள்ளாகிறார்கள். அதனால், சுலபமாக எளிதாகக் கடைபிடிக்ககூடிய அழகுக்குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

கூந்தலை அலசும்போது கடைசியில் சிறிதளவு வினிகரை ஒரு கப் தண்ணீரில் கலந்து அலசினால், கூந்தல் பளபளப்பாகும்.

இரவில் தூங்கச் செல்லும்முன் முகம், கை மற்றும் கால்களை நன்றாகக் கழுவி சுத்தம் செய்யவும். கை மற்றும் கால்களில் சிறிதளவு பாதாம் எண்ணெய் அல்லது மாய்ஸ்சரைசரைக் கொண்டு மசாஜ் செய்தால் மென்மையாகவும், நல்ல நிறமாகவும் இருக்கும்.

பாலில் சிறிதளவு மஞ்சள் மற்றும் கடலை மாவைக் கலந்து குளித்து வந்தால் நல்ல நிறம் கிடைக்கும்.

கை முட்டிகளில் உள்ள கருமை நீங்க, எலுமிச்சைப்பழத்தின் சாறைத் தேய்க்க வேண்டும்.

உருளைக்கிழங்கின் சாறை முகத்தில் தடவினால், பிளீச்சிங் செய்த பலன் கிடைக்கும்.

கண் இமைகளில் பாதாம் அல்லது விளக்கெண்ணெயை இரண்டு துளிகள் விட்டுத் தூங்கினால், கண் இமை கருப்பாக நீண்டு வளரும்.

குளித்தபின் கைகளில், கிளிசரின் மற்றும் பன்னீர் கலந்து தடவினால் கைகள் மென்மையாக மாறும்.

உதடுகளில் பாலாடையைத் தடவி வந்தால், வறண்டு போன உதடுகள் மென்மையாக மாறும்.

களைப்படைந்த கால்களை மிதமான உப்புக் கலந்த சுடுநீரில் 5 நிமிடம் ஊறவைத்து, பின் சிறிதளவு தேங்காய் எண்ணெயைத் தடவி விட்டு தூங்கினால் இரவில் ஆழ்ந்த உறக்கம் வரும்.

தேங்காய் எண்ணெயில் சிறிதளவு கருவேப்பிலை, காய்ந்த நெல்லிக்காய் மற்றும் செம்பருத்தி இலை ஆகியவற்றைக் கலந்து, கொதிக்கவைத்து, பின்னர் ஆற விடவும். இதனை தினமும் கூந்தலுக்குத் தடவிவர கருமையாக, பளபளப்பாக மாறும்.
 

smahi

Guru's of Penmai
Joined
Apr 9, 2012
Messages
6,163
Likes
14,020
Location
Toronto
#4
சிலருக்கு எவ்வளவுதான் சோப்பு போட்டு முகம் கழுவினாலும் முகத்தில் எண்ணெய் பசை மாறாது. மேலும் மேக்கப் செய்த சிறிது நேரத்தில் முகத்தில் எண்ணெய் வழியும். கெமிக்கல் கலந்த முகப் பூச்சுகளால் அலர்ஜி உண்டாகுமே தவிர முழுமையான பலன் கிடைக்காது.

இவர்கள் கடைந்த மோரை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி சிறிது நேரம் அதாவது 15 நிமிடங்கள் ஊறவைத்து பின் இளம்சூடான நீரில் கழுவி வந்தால் எண்ணெய் வழியும் சருமம் மாறும்.

மேலும் தினமும் உணவில் கீரைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அஜீரணக் கோளாறு மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.

அதேபோல் வாயுவை அதிகரிக்கக் கூடிய உணவுகளையும் தவிர்ப்பது நல்லது. எளிதில் ஜீரணமாகும் உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிக கெமிக்கல் அல்லாத மூலிகை சோப்புகளை பயன்படுத்துவது நல்லது.
 

smahi

Guru's of Penmai
Joined
Apr 9, 2012
Messages
6,163
Likes
14,020
Location
Toronto
#5
முகத்தை அழகாகவும், இளமையாகவும் வைத்திருக்க “மாஸ்க்” மிக முக்கியமானது. இது முகப் பொலிவைக் கொண்டு வருவதுடன் ஒரு வெளிப்படையான நிற மாறுதலையும் கொண்டு வரும்.

அது மட்டுமில்லாமல் உங்கள் முகத்தில் ஒரு மென்மையையும் புத்துயிரையும் கொடுக்கும். இதனை சரியாக மற்றும் பொருத்தமான அளவில் பயன்படுத்துவதால் முகத்தில் தெரியும் குறைகள் நீங்குகின்றன.

மார்க்கெட்டில் ஏராள “மாஸ்க்” வகைகள் உள்ளன. உங்கள் முகத்தைப் பொறுத்து பொருத்தமான “மாஸ்க்”கை தேர்ந்தெடுத்து அதையே கடைசி வரை கடைபிடிக்கவும். நீங்கள் விரும்பினால் வீட்டிலுள்ள பொருட்களைக் கொண்டே மாஸ்க்கை தயாரிக்கலாம்.

சொர சொரப்பான சருமத்திற்கு

முட்டையின் மஞ்சள் கருவை பாதி தேக்கரண்டி தேனுடன் கலந்து அதனுடன் ஒரு தேக்கரண்டி பால் பவுடர் போட்டு கலந்து “பேஸ்ட்’ மாதிரி உருவாக்கி முகத்தில் சீராகத் தடவவும். 20 நிமிடத்திற்கு பிறகு நீரால் முகத்தைக் கழுவிக் கொள்ளவும்.

பிசுபிசுப்பான (எண்ணெய்ப் பசை) சருமத்திற்கு

முட்டையின் வெள்ளைக் கருவை பாதி தேக்கரண்டி தேனுடன் கலந்து அதில் பாதி தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து “பேஸ்ட்” மாதிரி செய்து கொண்டு முகத்தில் சீராகத் தடவவும். 20 நிமிடத்திற்குப் பிறகு முகத்தை நீரால் கழுவிக் கொள்ளவும்.

ஆழமான துளைகள் கொண்ட சருமத்திற்கு

சோள மாவுடன் பால் கலந்து அடிதல் சிறிது எலுமிச்சை சாறு கலந்து “பேஸ்ட்” செய்து அதை முகத்தில் உடனே தடவிக் கொள்ளவும். மூல்தானி மிட்டி ஒரு “மாஸ்க்’காக பயன்படுகிறது. எண்ணெய் பிசுபிசுப்பு முகம் மற்றும் காம்பினேஷன் முகத்திற்கும் இதை பயன்படுத்தலாம்.

கருப்பு மருக்களைக் கொண்ட சருமத்திற்கு

முட்டையின் வெள்ளைக் கருவை சோள மாவுடன் கலந்து பேஸ்ட் ஆக்கி இதைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது அரை மணி நேரம் வரை தடவவும். பிறகு தூய்மையான நீரில் தேய்த்துத் தேய்த்துக் கழுவவும்.

எல்லாவித சருமத்திற்கும்


வெள்ளரி பேஸ்ட்டை செய்து முழு முகத்திலும் தடவவும். வெள்ளரி சாறு கண்களின் ஓரங்களில் உள்ள கரு வளையங்களை நீக்க உதவும். இது பொலிவை ஊட்டுவதோடு குளிர்ச்சியையும் தருகிறது.

மாஸ்க் தடவும் முறை

முடியை கெட்டியாக முடிந்து கொள்ளவும். தூய்மையான நீரைக் கொண்டு நன்றாக முகத்தைக் கழுவிக் கொள்ளவும். அகன்ற பாத்திரம் மற்றும் மிருதுவான பிரஷ்ஷை உபயோகிக்கவும். “மாஸ்” கை முகத்தின் மென்மையான பாகங்களான கண்களின் ஓரம், இமைகள் மற்றும் உதடுகள் ஆகியவற்றில் தடவுவதை தவிர்க்கவும்.

“மாஸ்க்” தடவிய பிறகு குறைந்தது அரை மணி நேரம் காய வைக்கவும். “மாஸ்கை" அகற்றும் போது கவனத்துடன் அகற்றவும். மீண்டும் தூய்மையான நீரால் நன்றாக முகத்தைத் துடைத்துக் கழுவவும்.
 

NivetaMohan

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 4, 2011
Messages
5,453
Likes
26,327
Location
Madurai
#6
Goodmorning mahiiiiiiiiiiiiiiii eppidi irukinga nalls tipss..naa itha try paniparthutu solurean okk
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#8
Thank you smahi, super ideas. very easy to follow. very easy to get the benefit. thanks for sharing such valuable beauty tips.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.