Beauty Tips for Eyelids - கண் இமைகள் அழகாக...

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,531
Location
Hosur
#1
கண் இமைகள் அழகாக...

இமைகள் அழகாக இருந்தால் தான், கண்ணின் அழகு வெளிப்படும்.

கண் இமைகள் அடர்த்தி குறைவாக இருந்தால், தினமும் அவற்றின் மீது கிளிசரின் மற்றும் விளக்கெண்ணெய் சம அளவில் கலந்து தடவி வரவும். இதன் மூலம், நாளடைவில் இமைகள் நீளமாக, அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும். இதைத் தடவும்போது, கைகளால் தடவாமல், பிரஷ்ஷால் தடவினால், கண்களிலிருந்து நீர் வடியாமலும், இமைகள் முடி உதிராமலும் இருக்கும்.

தலையில் பொடுகுப் பிரச்சனை உள்ளவர்கள், உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், பொடுகு அதிகமாகி, கண் இமைமுடிகள் பாதிக்கப்படலாம். அதனால், இமைமுடி உதிரவும் கூடும்.

கண்களுக்கு லென்ஸ் அணியும் பழக்கம் உள்ளவர்களாக இருந்தால், முதலில் இமைகள் மீது மஸ்காரா தடவி விட்டு, பின் லென்ஸ் அணியலாம்.

சைனா கிராஸ் அடங்கிய உணவு வகைகள், சூப்புகள் போன்றவை, இமைமுடி வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகின்றன. எனவே, இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

தூங்கச் செல்வதற்கு முன், மஸ்காராவை அழித்து விடவேண்டும். இல்லையெனில், நிறமிழந்து வெடித்து, அழகற்றுப் போய்விடும்.
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Very good suggestions you have given for beautifying our eyebrows. thank you very much Sumathi Srini
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.