Beauty Tips for Fairness in Tamil

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,534
Location
Coimbatore
#1
தோல் சீவிய உருளைக் கிழங்கை சிறிய துண்டுகளாக நறுக்கி வெயிலில் நன்றாக உலர்த்துங்கள். இதை மஞ்சள் அரைக்கும் மிஷினில் அரைத்துக் கொள்ளுங்கள்.

இந்தப் பவுடரை தண்ணீரில் குழைத்து தினமும் முகத்தில் பூசுங்கள். இது முகத்தில் உள்ள கருமை, திட்டுக்கள், புள்ளிகளை களைந்தெடுத்து முகத்தை பளிங்குபோல மாற்றிவிடும்.

  • பயத்தம் பருப்பு - 100 கிராம்
  • கடலைப்பருப்பு - 100 கிராம்
  • பூலான்கிழங்கு - 50 கிராம்
  • கஸ்தூரி மஞ்சள் - 50 கிராம்
  • வெள்ளரி விதை - 100 கிராம்
  • வெட்டிவேர் - 25 கிராம்

இவற்றை மிஷினில் அரைத்து தினமும் பூசி குளியுங்கள்.

வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும், இந்த குளியல் பவுடருடன் ஒரு சிட்டிகை முல்தானிமட்டி, எலுமிச்சை ஜூஸ் - 1 டீஸ்பூன், தேங்காய்ப் பால் - 1 டீஸ்பூன் சேர்த்து குளித்து வந்தால், சருமத்தில் உள்ள கருமை மறைந்து நிறம் கூடும்.

உடம்பில் சூடு அதிகமாகும்போது, தோலின் கருமையும் அதிகமாகிவிடும். அதனால் கீரை, பச்சைகாய்கறிகளை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. மோர், இளநீர், பழச்சாறு இவற்றை அருந்தி உடம்பை எப்போதும் குளுமையாக வைத்துக் கொண்டால், சிகப்பழகு ஓடிவந்து ஒட்டிக் கொள்ளும்.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.