Beauty tips of Aloe vera - கிளியோபாட்ராவை கவர்ச்சியாக்கிய கற&#30

silentsounds

Guru's of Penmai
Moderator
Joined
Feb 5, 2011
Messages
6,347
Likes
13,490
Location
Chennai
#1
முகஅழகினையும், தோலையும் பாதுகாக்க பண்டைய காலம் தொட்டே பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு இயற்கை பொருள் கற்றாழை. எகிப்திய அழகி கிளியோபாட்ரா, தனது கவர்ச்சிக்கு கற்றாழையே காரணம் என்று குறிப்பிட்டுக்கிறார். வெப்பமண்டலப் பகுதிகளில் அதிகம் வளரும் இந்த கற்றாழை பல பருவங்கள் வாழக் கூடிய குறுஞ்செடி வகையைச் சார்ந்தது. இலைகள் தரையினை ஒட்டி ரோஜா இதழ்கள் போன்று கொத்தாக காணப்படும். சதைப்பற்று மிக்க இலைகள் மருத்துவப்பயன் கொண்டவை.
வசீகரத் தோற்றத்திற்கு
- இலைகளில் காணப்படும் ஜெல் இயற்கை முக அழகு கிரீமாக பயன்படுகிறது. தோலினை பளபளப்பாக்குவதில் இந்த இந்ந ஜெல் முக்கிய பங்கு வகிக்கிறது. ரசாயனம் கலந்த கிரீம்களை பயன்படுத்துவதை விட இந்த கற்றாழை ஜெல்லை பயன் படுத்துவதால் முகப்பொலிவு கூடும்.
- இது வகையான சருமத்திலும் பயன்படுத்தலாம். தோல் இருக்கத்திற்கு சுகமளிக்கும் அருமருந்து.
- இலையின் சோறு டை தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. தலையில் ஏற்படும் பொடுகு, தொல்லைகளை நீக்குகிறது.
- இலைகளில் காணப்படும் ஜெல் போன்ற பொருளில் ஆலோக்டின் B எனப்படும் வேதிப்பொருள் உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியினை தூண்டுகிறது.
தீப்புண்களை குணமாக்க
- கற்றாழை ஜெல்லில் காயங்களை குணப்படுத்தும் பண்புகள் உள்ளதாக அமெரிக்கா மற்றும் ரஷ்யாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளன.
- தீப்புண், சிராய்ப்புப் புண்கள், சூரிய ஒளியின் தாக்கம், ஆகியவற்றிர்க்கு முதலுதவி செய்வதில் பயன்படுகிறது.
- இலையினை உடைத்தால் வெளியேறும் ஜெல்லினை புண்கள் மீது தடவினால் அது காயங்களின் மீது ஒரு படலம் போல படர்ந்து புண்களை விரைவில் ஆற்றுகிறது.
- இது வகையான சருமத்திலும் பயன்படுத்தலாம். தோல் இருக்கத்திற்கு சுகமளிக்கும் அருமருந்து.
வயிற்று உபாதைகளுக்கு
- பெப்டிக் அல்சர், மற்றும் எரிச்சல் தரும் வயிற்று வலியினை குணப்படுத்துவதில் கற்றாழைக்கு முக்கிய பங்குண்டு.
- கற்றாழை இலையின் அடிப்பகுதியில் கிடைக்கும் மஞ்சள் வண்ண சாறு சேகரிக்கப்பட்டு உலர்த்தப்படுகிறது. இதனை 'ஆலோ கசப்பு" என்ற மருந்துப்பொருளாக பயன்படுத்தலாம்.
- இதில் உள்ள ஆந்ரோகுயின்கள் மலமிளக்கி பண்பினை கொண்டவை, பெருங்குடலை சுருங்கவைத்து மலம் வெளியேற உதவுகின்றன.
- ஒரு சில துளி உட்கொண்டால் ஜீரணத்தினை தூண்டும்.
- இந்திய மருத்துவத்தில் பேதி மருந்தாகவும், மாதவிடாய் திருத்தும் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.

-senthilvayal
 

Kavibhanu

Commander's of Penmai
Joined
Feb 27, 2011
Messages
1,952
Likes
1,333
Location
Trichy
#2
Re: கிளியோபாட்ராவை கவர்ச்சியாக்கிய கற்றா&#2996

இதன் சாறு சருமத்தின் ஈரப்பதத்தை சமன் செய்வதுடன் சரும நோய்களையும் குணப்படுத்துகிறது.

முகத்திலுள்ள கரும்புள்ளிகள் தழும்புகள் வெயில் பாதிப்புகள் உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாறை தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.

ஆண்கள் சவரம் செய்யும் பொழுது ஏற்படும் கீறல்கள் காயங்களுக்கும் உடனடி நிவாரணம் பெற கற்றாழைச் சாறை பயன்படுத்தலாம். தீக்காயங்களுக்கும் ‘உடனடி டாக்டர்’ கற்றாழைச் சாறுதான்.

இதன் சாறை இரவு வேளையில் முகத்தில் தேய்த்து காலையில் வெந்நீரால் கழுவ முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவு பெறும்.

கேசப் பராமரிப்பில் தலைக்கு கறுப்பிடவும் கேசத்தின் வளர்ச்சியைத் தூண்டவும் பயன்படுகிறது. தலையில் ஏற்படும் கேசப் பிரச்னைகள் மற்றும் பொடுகை நீக்குகிறது. தோல் இறுக்கத்திற்கு சுகமளிக்கும் மருந்தாகிறது. கற்றாழை சோறை தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வர கேசம் நன்கு செழித்து வளரும்.

நமது தோலில் நீரை விட நான்கு மடங்கு வேகமாக கற்றாழைச் சாறு ஊடுருவக் கூடியது. வைட்டமின் சி மற்றும் பி சத்துகளும் தாதுக்களும் நிறைந்தது இச்சாறு. சருமத்திலுள்ள கொலாஜன் எனப்படும் கொழுப்பு சத்தை குறைக்கக்கூடிய புரோட்டீன் கற்றாழையில் அதிகம் காணப்படுவதால் முகத்திலுள்ள சுருக்கம் வயோதிக தோற்றத்தை குணப்படுத்துகிறது.

இதில் உள்ள ஊட்டச் சத்துகள் நிறைந்த தண்ணீர் உடலில் குறைவாக உள்ள நீர்ச் சத்தை அதிகப்படுத்தி மூட்டுகள் சரியாக இயங்குவதற்குத் தேவையான கூழ் போன்ற திரவத்தை உற்பத்தி செய்ய உதவுகிறது.
 

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,534
Location
Coimbatore
#3
Re: கிளியோபாட்ராவை கவர்ச்சியாக்கிய கற்றா&#2996

கற்றாழை மருத்துவம் :

கற்றாழையின் சோற்றைத் தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்துக் குளிக்க தலையில் ஏற்படும் பொடுகு, சிரங்கு குணமாகும்.

சோற்றுக் கற்றாழை மடலை இரண்டாகப் பிளந்து உள்ளே சிறிதளவு வெந்தயத்தை வைத்து மூடி விடவும். இரண்டு நாட்கள் கழித்து ஊறிய அந்த வெந்தயத்தை எடுத்து தேங்காய் எண்ணெயில் போட்டு அதை தேய்த்து குளிக்க நரை முடியும் கறுப்பாகும்.

கற்றாழை மடலில் சிறு துண்டு எடுத்து இரண்டாக பிளந்து சோற்றுப் பகுதியை தீயில் வாட்டி உடல் பொறுக்கும் சூட்டில் அடிப்பட்ட இடத்தில் இதை வைத்து ஒத்தடம் கொடுக்க வலி, வீக்கம் மட்டுமல்ல இரத்தக் கட்டும் மாறும்.

இச் செடியின் மடலில் உள்ள சோற்றை எடுத்து தண்ணீரில் நன்கு அலசி அதை சாப்பிட்டு வர குடல் புண், மூல நோய் மாறும். மலச் சிக்கல் தீரும்.

மஞ்சள்காமாலை நோய்க்கும் சோற்றுக்கற்றாழை மருந்தாக பயன்படுகிறது. தவிர கூந்தல் தைலம், அழகு சாதனப் பொருள்களில் இது சேர்க்கப்படுவதால் பொருளின் தரமும், வீரியமும் மட்டுமல்ல மருத்துவதன்மையும் அதிகரிக்கிறது.
 

Angu Aparna

Minister's of Penmai
Moderator
Joined
Jul 4, 2011
Messages
4,749
Likes
8,370
Location
India
#4
Re: கிளியோபாட்ராவை கவர்ச்சியாக்கிய கற்றா&#

கூந்தல் வளர:

சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையின் சதைப் பகுதியச் சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து, இதில் சிறிது படிக்காரத் தூளைத் தூவி வத்திருந்தால், சோற்றுப் பகுதியில் உள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இந்த நீருக்குச் சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து நீர் சுண்டக் காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டு, தினசரி தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் நன்றாக வளரும். நல்ல தூக்கம் வரும்.

கற்றாழை சோறை தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வர கேசம் நன்கு செழித்து வளரும்.

குளிர்ச்சி தரும் குளியலுக்கு

மூலிகைக் குளியல் எண்ணெய் தயாரிக்க, சோற்றுக் கற்றாழை சோற்றுப் பகுதியை அரக்கிலோ தயாரித் ஒரு கிலோ நல்லெண்ணெய் சேர்த்து கடும் வெயிலில் 30 தினங்கள் வைத்து எடுத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். எண்ணெய் பசுமை நிறமாக மாறிவிடும். இதில் தேவையான வாசனையக் கலந்து வைத்துக் கொண்டு, குளியலுக்குப் பயன்படுத்தினால் குளிர்ச்சிதரும் ஆயில் ஆகும்.

தோலோடு கற்றாழையை பச்சை மஞ்சளோடு சேர்த்து மைய அரைத்து முகம் கழுத்து கை கால்களில் தடவி சில மணி நேரத்துக்குப் பின்னர் வெந்தய நுரை கொண்டு தேய்த்து குளித்தால் உடல் பளபளப்பாகும். தோல் நோய் வராது. கற்றாழை கழியைத் தலை முடியில் தடவி சீவினால் மடி கலையாது. தலையின் சூடும் குறையும். உடல் குளிர்ந்து காணப்படும்.

பிரயாணக் களைப்பினால் சோர்வுற்ற கால்களுக்கு கற்றாழை சாறைத் தடவலாம். சருமத்தில் ஏற்படும் எரிச்சலை அடக்கி சருமத்திற்கு குளிர்ச்சி தரும். திசுக்களைப் புதுப்பித்து ஈரப்பதம் அளிக்கும். எல்லா வகை சருமத்திற்கும் ஏற்றது. முகத்தின் சுருக்கங்களைப் போக்கி புத்துணர்ச்சியையும் இளமைப் பொலிவையும் தக்க வைத்துக் கொள்ள உதவும். குறிப்பாக வடுக்கள் இருந்த சுவடு தெரியாமல் மறையும்.

கண்நோய் கண் எரிச்சலுக்கு கற்றாழைச் சோற்றை கண்களின் மேல் வைக்கலாம். விளக்கெண்ணெயுடன் கற்றாழைச் சோறைக் காய்ச்சி காலை மாலை என இரு வேளை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர உடல் அனல் மாறி மேனி பளபளப்பாகத் தோன்றும். நீண்ட கால மலச்சிக்கல் நீங்கும். கல்லீரல் ஆரோக்கியமாக விளங்கும்.


தாம்பத்திய உறவு மேம்பட

சோற்றுக் கற்றாழை வேர்களை வெட்டி, சிறிய துண்டுகளாகச் செய்து சுத்தம் செய்து, இட்லிப் பானையில் பால்விட்டு வேர்களைத் தட்டில் வைத்துப் பால் ஆவியில் வேகவைத்து எடுத்து, நன்கு காயவைத்துப் பொடி செய்து வைத்க்து கொண்டு, தினசரி ஒரு தேக்கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், தாம்பத்திய உறவு மேம்படும். தாம்பத்திய உறவுக்கு நிகரற்ற மருந்தாகும்.

 
Last edited:

Angu Aparna

Minister's of Penmai
Moderator
Joined
Jul 4, 2011
Messages
4,749
Likes
8,370
Location
India
#5
Re: கிளியோபாட்ராவை கவர்ச்சியாக்கிய கற்றா&#2996

ஆனைக்கற்றாழை

1. ஆனைக்கற்றாழை மடலை வாட்டிப்பிழிந்த சாற்றில் போதுமான அளவு கேழ்வரகு மாவையோ மூசாம்பரப்பொடியையோ கலந்து கொதிக்க வைத்து வீக்கமுள்ள இடங்களில் பற்றுப்போட வீக்கம் கரையும்-.

2. 50 கிராம் மடலுடன் 25 கிராம் நன்னாரி வேரைப் பொடித்துச் சேர்த்து ஒரு லிட்டர் நீரிலிட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி காலை மதியம் மாலை 30 மி.லி யாகக் குடித்து வரப் பாலியல் நோயான கொறுக்குப் புண், கிரந்தி ஆகியவை தீரும்.

3. குருத்தின் கீழ் உள்ள மென்மையான கிழங்குப் பகுதியை எடுத்து சர்க்கரை கலந்து காலையில் மட்டும் சாப்பிட்டு வர வெள்ளை குணமாகும்.

4. ஆனைக்கற்றாழை வேரை 30 கிராம் நசுக்கி 1 லிட்டர் நீரிலிட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வடிகட்டிப் பாதிப்பாதியாய் காலை மாலை குடித்து வர சிறுநீரைத் தாராளமாக வெளிப்படுத்தும்.

5. மடலைக் குழகுழப்பாகுமாறு துவைத்து வலியுள்ள இடங்களில் வைத்துக்கட்ட வலி குணமாகும்.

6. மடல் சாற்றை அடிபட்ட காயங்களின் மீது தடவி வைக்க சீழ்ப்பிடிக்காமல் ஆறும்.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.